TNPSC Thervupettagam

உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு (எம்டிபிஐ)

July 30 , 2023 531 days 1119 0

(For English version to this, please click here)

உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு

  • 100க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளில் உள்ள கடுமையான பல பரிமாண வறுமையை அளவிடும் ஒரு முக்கிய சர்வதேச ஆதாரமாக இந்தக் குறியீடு உள்ளது.
  • இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) கீழ் உள்ள மனித மேம்பாட்டு அறிக்கை அலுவலகத்தால் தொடங்கப்பட்டது.
  • பல பரிமாண வறுமைக் குறியீடானது (MPI) உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய 10 குறிகாட்டிகளில் நிலவும் பற்றாக்குறையைக் கண்காணிக்கிறது.
  • இது நிகழ்வுகள் மற்றும் வறுமையின் தீவிரம் இரண்டையும் உள்ளடக்கியது.
  • ஆரம்பம் முதல் இது ஆண்டுதோறும் OPHI மற்றும் HDR அமைப்புகளால் வெளியிடப் படுகிறது.

பல பரிமாண வறுமைக் குறியீட்டின் குறிகாட்டிகள் மற்றும் பரிமாணங்கள்

  • அளவிடப் பட்டுள்ள குறிகாட்டிகளில் (பத்து குறிகாட்டிகளில்) மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கு மேற்பட்டதில் (அதாவது 33% அல்லது அதற்கும் அதிகமானதில்) அவர் அதைக் கொண்டிராதிருந்தால் ஒரு நபர் பல பரிமாணங்களில் ஏழ்மையானவர்.
  • அளவிடப் பட்டுள்ள குறிகாட்டிகளில் ஒரு பாதி அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அதனைக் கொண்டு இல்லாதவர்கள் தீவிரப் பல பரிமாண வறுமையில் வாழ்பவர்களாகக் கருதப் படுகிறார்கள்.

http://drishtiias.com/images/uploads/1689166152_image9.png

  • இது 6.1 பில்லியன் மக்களை உள்ளடக்கிய 110 வளரும் நாடுகளில் இருந்து தரவுகளைத் தொகுக்கிறது.
  • இது வளரும் நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் 92 சதவீதம் பேர் ஆகும்.
  • உலகில் வறுமை எவ்வளவு அதிகமாக உள்ளது என்பது பற்றிய முக்கியமான மற்றும் தொடர்ச்சியான கதையை இது எடுத்துரைக்கிறது.
  • இது ஏழை மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வியல் இழப்புகள் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.
  • மேலும் இது வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தெரிவிப்பதும் துரிதப் படுத்துவதும் அவர்களின் வறுமையை எவ்வாறு தீவிரப்படுத்துகிறது என்பதைப் பற்றியும் விவரிக்கிறது.
  • கரோனா (COVID-19) தொற்றுநோய்க்குப் பிறகு இன்னும் சில நாடுகளில் மட்டுமே தரவு இருப்பதால், இந்த அறிக்கை வெகு அவசரமாக ஒரு புதுப்பிக்கப்பட்ட பல பரிமாண வறுமைத் தரவைக் கோருகிறது.
  • உலகளாவிய வறுமையின் நிதானமான வருடாந்திர நிலைமைகளை வழங்கும் அதே சமயம், ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெற்றிக்கான பல்வேறு உதாரணங்களையும் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

  • பல பரிமாண வறுமைக் குறியீடானது, தனிநபர் மட்டத்தில் வறுமையை மதிப்பிடுகிறது.
  • ஒரு நபர் பத்து (அளவிடப் பட்ட) குறிகாட்டிகளில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவினைக் கொண்டு இல்லாதிருந்தால், உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடானது அவர்களை பல பரிமாண வறுமைக் குறியீடு ஏழைகள்என்று அடையாளப் படுத்துகிறது.
  • அவர்களின் வறுமையின் அளவு அல்லது தீவிரம் என்பது அவர்கள் அனுபவிக்கும் பற்றாக்குறையின் சதவீதத்தின் மூலம் அளவிடப்படுகிறது.
  • உலகளாவிய MPI ஆனது யார் ஏழைகள் மற்றும் அவர்கள் எப்படி ஏழைகள் ஆனார்கள் என்பதைக் காட்டுகிறது.
  • இதனை வறுமையில் வாழும் மக்களைப் பற்றிய ஒரு விரிவான விளக்கப் படத்தை உருவாக்கப் பயன்படுத்தலாம்.
  • இது நாடுகள் மற்றும் உலகப் பகுதிகள் மற்றும் நாடுகளுக்குள்ளேயே இனக்குழு, நகர்ப்புறப் பகுதி / கிராமப்புற பகுதி, துணை தேசியப் பகுதி மற்றும் வயதுக் குழு ஆகியவற்றையும், அத்துடன் பிற முக்கியக் கூறுகளான குடும்பம் மற்றும் சமூகப் பண்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது.
  • ஒவ்வொரு குழுவிற்கும் மற்றும் ஒட்டு மொத்த நாடுகளுக்கும், 10 குறிகாட்டிகளில் ஒவ்வொன்றின் மீதான MPI குறியீட்டின் உள்ளடக்கமானது மக்கள் எப்படி ஏழைகள் என்பதைக் காட்டுகிறது.
  • இது MPI மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தகவல் தளத்தை மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை, அதாவது ஏழைகளிலும் மிகுந்த ஏழைகளை, நாடுகளுக்குள்ளேயே ஏழ்மையின் போக்கினை வெளிக்காட்ட உதவும் வகையில் அடையாளம் காணும் ஒரு பகுப்பாய்வுக் கருவியாக விலை மதிப்பற்றதாக ஆக்குகிறது.
  • காலப்போக்கில், கொள்கை வகுப்பாளர்களை வளங்களை இலக்காகக் கொள்ளவும், கொள்கைகளை மிகவும் திறம்பட வடிவமைக்கவும் இது உதவுகிறது.

முக்கியக் கண்டுபிடிப்புகள்

ஏழை மக்கள் எங்கே வாழ்கிறார்கள்?

  • 110 நாடுகளில் உள்ள 6.1 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் மக்கள் ஏழைகள் – அதாவது 18%க்கும் அதிகமானோர் கடுமையான பல பரிமாண வறுமையில் வாழ்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 1.1 பில்லியன் ஏழைகளில் 534 மில்லியன் பேர் – அதாவது மொத்த ஏழைகளில் பாதி பேர் - துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர்.
  • மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 389 மில்லியன் மக்கள் தெற்காசியாவில் வாழ்கின்றனர்.
  • 730 மில்லியன் – அதாவது கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஏழை மக்கள் - நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர்.
  • குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு ஏழைகள், அதாவது 387 மில்லியன் மக்கள், வசிக்கின்றனர்.

ஏழைகள் யார்?

  • வறுமையின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தால், ஏழை மக்கள் அனுபவிக்கும் வறுமையின் தீவிரமும் அதிகமாகும்.
  • 110 நாடுகளில் 485 மில்லியன் ஏழைகள் 50-100% எடை இழப்புகளை அனுபவிக்கின்ற நிலையில் மிகவும் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர்.
  • 99 மில்லியன் ஏழைகள் முப்பரிமாணத்திலும் பற்றாக்குறையை அனுபவிக்கின்றனர் (70-100% அளவிடப் பட்டுள்ள குறைபாடுகள்).
  • 12 மில்லியன் ஏழை மக்களில் 10 மில்லியன் பேர் அதிக அளவிலான இழப்புடன் (90-100%) துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர்.

எந்தக் குழுக்கள் மிகுந்த ஏழைகள்?

  • துணை-தேசியப் பகுதிகள் இரண்டு வழிகளில் பிற்படுத்தப் படுகின்றன: அவை வறுமை பரவலாக இருக்கும் இடத்திலும் மற்றும் வறுமை மிகவும் தீவிரமான இடத்திலும் ஆகும்.
  • 1.1 பில்லியன் ஏழைகளில் பாதி பேர் (அதாவது 566 மில்லியன்) 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
  • 84% ஏழை மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
  • ஒவ்வொரு உலகப் பிராந்தியத்திலும் உள்ள நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்கள் ஏழ்மையானவை.

ஏழை மக்கள் என்ன இன்னல்களைச் சந்திக்கிறார்கள்?

  • 1,1 பில்லியன் ஏழை மக்களில் 824–991 மில்லியன் மக்களுக்குப் போதுமான சுகாதாரம், வீடு அல்லது சமையல் எரிபொருள் இல்லை.
  • 600 மில்லியன் ஏழைகள் தங்கள் வீட்டில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள ஒருவருடன் வாழ்கின்றனர்.
  • பள்ளிப் படிப்பின் ஆண்டுகளில் இடைவெளி என்பது ஒரு குறுக்கு பிராந்தியப் பிரச்சினை: ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும், ஏறக்குறைய பாதி ஏழைகளின் குடும்பத்தில் ஆறு ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்த ஒரு உறுப்பினர் கூட இல்லை.

பணவியல் மற்றும் பல பரிமாண வறுமை எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?

  • 61 நாடுகளில் 42 நாடுகளின் மக்கள்தொகையில் அதிகமான மக்கள் பல பரிமாண வறுமையில் வாழ்கின்றனர்.
  • உலக வங்கியின் உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் ஒரு நாளைக்கு $2.15 என்ற அளவீட்டின் படி, தீவிரப் பண வறுமையில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

வறுமை எப்படி மாறி விட்டது?

  • 81 நாடுகளில் 72 நாடுகளின் மக்கள்தொகை 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது.
  • ஆனால் கிட்டத்தட்ட இந்த எல்லாத் தரவுகளும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தையவை.
  • 25 நாடுகள் தங்கள் உலகளாவிய MPI மதிப்பை 15 ஆண்டுகளுக்குள் பாதியாகக் குறைத்துள்ளன, இது அந்த அளவிலான முன்னேற்றம் அடையக் கூடியது என்பதைக் காட்டுகிறது.
  • 42 நாடுகளில் கணக்கீடு செய்யப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.
  • 15 நாடுகளில், வறுமைக் குறைப்பு விகிதம் மக்கள்தொகை வளர்ச்சியால் அதிகரிக்கப் பட்டிருக்கிறது: அதாவது வறுமை விகிதம் குறைந்தாலும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பள்ளி வருகையின் பற்றாக்குறை அதிகரித்த போதிலும், கம்போடியா நாடானது 7.5 ஆண்டுகளில் (2014-2021/2022) அதன் பல பரிமாண வறுமைக் குறியீட்டை பாதியாகக் குறைத்து உள்ளது,

குறியீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்

உலகளாவியக் கண்ணோட்டம்

  • உலகளவில், 6.1 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் மக்கள் (அதாவது மொத்த மக்கள் தொகையில் 18% என்ற அளவில்)  மிகவும் ஏழ்மையில்  கடுமையான பல பரிமாண வறுமையில் 110 நாடுகளில்  வாழ்கின்றனர்.
  • துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 534 மில்லியன் ஏழைகளும், தெற்காசியாவில் 389 மில்லியன் ஏழைகளும் உள்ளனர்.
  • இந்த இரண்டு பிராந்தியங்களிலும் ஒவ்வொரு ஆறு ஏழைகளிலும் ஐந்து பேர் வசிக்கின்றனர்.
  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் MPI வகை ஏழைகளில் பாதி பேர் (566 மில்லியன்) ஆவர்.
  • குழந்தைகள் மத்தியில் வறுமை விகிதம் 27.7% ஆகவும், பெரியவர்கள் மத்தியில் அது 13.4% ஆகவும் உள்ளது.

இந்தியாவிற்கான கண்ணோட்டம்

  • இந்தியாவில் வறுமை: இந்தியாவில் இன்னும் 230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏழைகளாக உள்ளனர்.
  • இந்த வகையின் கீழ் இந்தியாவில் 18.7% மக்கள்தொகை  உள்ளது.

வறுமைக் குறைப்பில் இந்தியாவின் முன்னேற்றம்

  • 25 நாடுகளில் இந்தியா உட்பட கம்போடியா, சீனா, காங்கோ, ஹோண்டுராஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, செர்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் 15 ஆண்டுகளுக்குள் அவர்களின் உலகளாவிய MPI மதிப்புகளைப் பாதியாகக் குறைத்துள்ள.
  • 2005-06 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 415 மில்லியன் இந்தியர்கள் வறுமையிலிருந்துத் தப்பி உள்ளனர்.
  • 2005/2006 ஆம் ஆண்டில் 55.1% ஆக இருந்த வறுமையின் நிகழ்வு 2019/2021 ஆம் ஆண்டில் 16.4% ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.
  • 2005/2006 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏறத்தாழ 645 மில்லியன் மக்கள் பல பரிமாண வறுமையை அனுபவித்தனர், இது 2015/2016 ஆம் ஆண்டில் 370 மில்லியனாகவும் மேலும் 2019/2021 ஆம் ஆண்டில் 230 மில்லியனாகவும் குறைந்துள்ளது.
  • பற்றாக்குறை குறிகாட்டிகளில் முன்னேற்றம்: உடல்நலம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று இழப்புக் குறிகாட்டிகளிலும் இந்தியா கணிசமாக முன்னேறியது.
  • பிராந்தியங்கள் மற்றும் சமூக-பொருளாதாரக் குழுக்களில் வறுமையில் சரிவு சமமாக உள்ளது.
  • விளிம்பு நிலை சாதிக் குழுக்களில் உள்ள குழந்தைகள் மற்றும் மக்கள் உட்பட ஏழ்மையான மாநிலங்களும் சமூகக் குழுக்களும் மிக விரைவான மற்றும் முழுமையான முன்னேற்றத்தைக் கொண்டிருந்தன.
  • 2005/2006 ஆம் ஆண்டில் பல பரிமாண ஏழைகள் மற்றும் ஊட்டச்சத்து இல்லாதவர்களின் சதவீதம் 44.3% என்ற அளவிலிருந்து 2019/2021 ஆம் ஆண்டில் 11.8% ஆக குறைந்துள்ளது, மேலும் குழந்தை இறப்பு 4.5% என்ற அளவிலிருந்து 1.5% ஆக குறைந்தது.

பரிந்துரைகள்

  • வறுமையின் தேசிய வரையறைகளைப் பிரதிபலிக்கும் சூழல் சார்ந்த பல பரிமாண வறுமைக் குறியீடுகளின் தேவை உள்ளது.
  • உலகளாவிய MPI என்பது ஒரு தரப்படுத்தப்பட்ட வழிமுறையை வழங்கும் அதே வேளையில், தேசிய வரையறைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் என்று குறிப்பிட்ட வறுமை பற்றிய ஒரு விரிவான புரிதலை வழங்குகின்றன.
  • வறுமையைத் திறம்பட மதிப்பிடுவதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் இந்த சூழல் சார்ந்த குறியீடுகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்