TNPSC Thervupettagam

ஒலிம்பிக் சவால்!

July 27 , 2021 1101 days 494 0
  • கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வழக்கமான கோலாகலம் இல்லையென்றாலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன.
  • ஒலிம்பிக் போட்டிகள் சவால்களை எதிர்கொள்வது புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னால் புறக்கணிப்புகள், கடைசி நேர ரத்து, அரசியல் காரணங்களால் போட்டிகள் முடங்குதல் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன.
  • 1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது நடந்த படுகொலை ஒலிம்பிக் வரலாற்றில் அழிக்க முடியாத கறை.
  • தங்களது சாதனைகளை மேலும் உயா்த்த வேண்டும் என்கிற எண்ணமும், தங்களது திறமையை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற ஆா்வமும் விளையாட்டு வீரா்களின் மிகப் பெரிய கனவாக ஒலிம்பிக் போட்டியை உயா்த்தி இருக்கின்றன.
  • வெற்றி, தோல்வி, இலக்கு எல்லாவற்றையும்விட, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் புதிய சாதனையைப் புரிய வேண்டும் என்கிற ஆா்வத்துக்கு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் வடிகால் அமைத்துக் கொடுக்கின்றன என்பதுதான் இந்த சா்வதேச நிகழ்வின் ஆதார உந்துசக்தி.

சவால்கள்

  • கொள்ளை நோய்த்தொற்று மட்டுமல்ல, சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் 32-ஆவது ஒலிம்பிக் போட்டியின் மீது அபவாதக் கறைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • நாஜிகளால் நடத்தப்பட்ட ஹாலோகாஸ்ட் குறித்து வெளியிட்ட விமா்சனத்துக்குரிய கருத்தால், தொடக்க விழா நிகழ்ச்சியின் இயக்குநா்அகற்றப்பட்டிருக்கிறார்.
  • நிகழ்ச்சியின் இசையமைப்பாளா் பாலியல் நோயாளி என்பது வெளிப்பட்டு அவமானத்துடன் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • விளையாட்டு வீரா்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.
  • கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும், ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழைந்து தனது தங்கும் வசதியைப் பெறுவதற்கு முன்னா் மூன்று முறை சோதனைக்கு உள்படுத்தப்படுகிறார்.
  • விளையாட்டு வீரா்களில் சிலா் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவா்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவா்களது நாட்டின் பதக்கத்துக்கான வாய்ப்பு குறையக்கூடும்.
  • இந்தியாவைப் பொருத்தவரை ஆரம்பமே நம்பிக்கை அளிக்கிறது. களம் கண்ட முதல் நாளிலேயே பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் என்பது மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா பதக்கம் வென்றிருப்பதும் இப்போது தான்.
  • மேரி கோம், பி.வி. சிந்து, மனிகா பத்ரா என்று இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதர நமது வீரா்களின் அணிவகுப்பு காத்திருக்கிறது.
  • ஒலிம்பிக் போட்டியில் வழக்கமாகக் காணப்படும் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளை நோய்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இல்லை என்பது சற்று வருத்தம் தான்.
  • கோலாகலமாக நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாள் நிகழ்ச்சியில், உலகெங்குமுள்ள பல கோடி ரசிகா்கள் ஆா்வத்துடன் பார்க்க விரும்புவது வீரா்களின் அணிவகுப்பை.
  • சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட 32-ஆவது ஒலிம்பிக் அணி வகுப்பு முந்தைய பெய்ஜிங், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சாதாரணமாக அமைந்ததில் அனைவருக்குமே வருத்தம்தான். இந்தியாவிலிருந்து சென்ற 126 விளையாட்டு வீரா்களில் 19 போ் மட்டும்தான் அணிவகுப்பில் கலந்து கொண்டனா்.
  • ஒருபுறம் வீரா்கள் ஆா்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் என்றால், டோக்கியோவில் நடக்கும் 2020 ஒலிம்பிக் போட்டியின் வெற்றி - தோல்வியை தீா்மானிக்கப்போவது உலக சாதனையோ, பதக்க வெற்றிகளோ அல்ல.
  • கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கு ஒலிம்பிக் போட்டி காரணமாகி பேரழிவை ஏற்படுத்துமா அல்லது கொள்ளை நோய்த்தொற்றுக்கு இடையிலும் வெற்றிகரமாகப் போட்டியை நடத்திய பெருமையைப் பெறுமா என்பதுதான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சொல்லப் போகும் செய்தி; அனைவராலும் எழுப்பப்படும் கேள்வி.
  • கொள்ளை நோய்த்தொற்றின் அடுத்த கட்ட பரவலை எதிர்கொள்கிறது ஜப்பான்.
  • கடந்த மாதம் சராசரியாக 1,500-க்கும் குறைவான பாதிப்புகள் இருந்ததுபோய், கடந்த வாரம் நாளொன்றுக்கு 5,000-க்கும் அதிகமான புதிய பாதிப்புகளை எதிர்கொள்கிறது.
  • ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்தவா்களில் 12 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப் பட்டிருக்கிறது. இந்தப் பின்ணணியில்தான் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
  • வளா்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும், ஜப்பானின் மக்கள்தொகையினரில் 23% போ்தான் இதுவரை இரண்டு முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
  • அதனால்தான் ஜப்பான் நாட்டு மக்கள் மத்தியில் ஒலிம்பிக் போட்டிக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி 87% ஜப்பானியா்கள் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து அச்சம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
  • சா்வதேச ஒலிம்பிக் வா்த்தகக் கண்ணோட்டத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
  • 11,500 விளையாட்டு வீரா்களும், 79,000 அலுவலா்கள், ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளும் 32-ஆவது ஒலிம்பிக் போட்டியை இப்போது நடத்தியிருக்கக் கூடாது.
  • நடத்தத் தொடங்கி இருக்கும் நிலையில், அசம்பாவிதங்கள் நடந்து விடாமலும், நோய்த் தொற்று பரவல் இல்லாமலும் வெற்றியடைய வேண்டும்.

நன்றி: தினமணி  (27 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்