TNPSC Thervupettagam

ஒலிம்பிக் திருவிழா: இவர்களையும் கொண்டாடுவோம்!

July 30 , 2021 1098 days 497 0
  • ஒலிம்பிக்கில் இந்தியா அதிகப் பதக்கம் வெல்ல முடியாதது விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம்.
  • பதக்கங்கள் வெல்வதைத் தாண்டி, ஒலிம்பிக் போட்டிகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைய சில நல்ல அம்சங்கள் உள்ளன.
  • ஹரியாணாவைச் சேர்ந்த அசோக் குமார் மல்யுத்தப் போட்டிக்கான நடுவராகவும், குஜராத்தைச் சேர்ந்த தீபக் ஜிம்னாசியப் போட்டிநடுவராகவும் இந்த ஒலிம்பிக் போட்டியில் செயல்பட்டிருக்கிறார்கள்.
  • நடப்பு ஒலிம்பிக் ஜிம்னாசியப் போட்டிகளில் இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்த பிரணதி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறினார்.
  • 2016 ஒலிம்பிக்கில் பின்னப் புள்ளிகளில் வெண்கலப் பதக்கத்தை தீபா கர்மாகர் தவற விட்டார். அதேநேரம், ஒலிம்பிக் ஜிம்னாசியப் போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் என்கிற பெருமையை தீபக் பெற்றுள்ளார்.
  • முன்னாள் ஜிம்னாசிய வீரரான இவர், அந்தப் போட்டிகளில் பெரிதாகச் சோபிக்க முடியாத நிலையில், இளம் வயதிலேயே நடுவராகிவிட்டார்.
  • 21 வயதில் நடுவரான அவர், 33 வயதில் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு நடுவராகியுள்ளார். முன்னதாக காமன்வெல்த் போட்டிகள், ஆசியப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் நடுவராகச் செயல்பட்டுள்ளார்.
  • மல்யுத்தத்தின் தாய்நிலமாகக் கருதப்படுகிற ஹரியாணாவைச் சேர்ந்த அசோக்குமார், இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர்.
  • பணிக் காலத்தில் மல்யுத்தப் போட்டிகளால் ஈர்க்கப்பட்டு, சர்வதேச நடுவராகும் அளவுக்கு வளர்ந்தார். முன்னதாக, இந்திய மல்யுத்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
  • ஒலிம்பிக்கில் இந்தியா சோபித்த துறைகளில் ஒன்று மல்யுத்தம். ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட ஐந்து பதக்கங்கள் இதுவரை கிடைத்துள்ளன.
  • மதிப்புமிக்க உலகளாவிய போட்டிகளுக்கு நடுவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது சாதாரண காரியமல்ல. அந்த உயரத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களே எட்டுகிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 07– 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்