TNPSC Thervupettagam

ஒலிம்பிக் திருவிழா- ‘குட்டி ஜமைக்கா’ திருச்சி

August 6 , 2021 1092 days 485 0
  • 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றிருப்பவர்களில் கிட்டத் தட்ட 10% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
  • இந்தியா பங்கேற்கும் 18 விளையாட்டுப் பிரிவுகளில் பாய்மரப் படகு, வாள்வீச்சு, டேபிள் டென்னிஸ், தடகளம் ஆகிய நான்கு பிரிவுகளில் தமிழ்நாட்டு வீரர்/ வீராங்கனைகள் பங்கேற்றார்கள்.
  • தேசியத் தடகள அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பேரில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர்.
  • இந்த ஐவரில் மூவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
  • பெருநகரங்களில் செலவு அதிகம் பிடிக்கும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தப் படுகிறது.
  • அவற்றுக்கான பயிற்சி, பயணச் செலவு போன்றவற்றில் ஒரு பகுதியையாவது சமாளிக்கக் கூடிய நிலையில் இருப்பவர்களே மாநில, தேசிய அளவில் பரிமளிக்க முடிகிறது.
  • பெருமளவு செலவுசெய்ய இயலாத நிலையில் உள்ள எளிய மக்கள், தடகளப் போட்டிகளில் தான் பங்கேற்க முடிகிறது.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவருமே வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
  • இந்த ஒலிம்பிக்கில் முதன்முறையாக 2 ஆண்கள், 2 பெண்கள் பங்கேற்கும் 4 x 400 கலப்புத் தொடரோட்டப் போட்டி நடத்தப்பட்டது.
  • இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா. இவருடைய தந்தை வெங்கடேசன் கட்டிடத் தொழிலாளி.
  • குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், வீட்டு வேலை செய்யும் தாயின் வளர்ப்பில் உருவானவர்.
  • 2021 பெடரேஷன் கோப்பையின் இரண்டு போட்டிகளில் டுட்டி சந்த், ஹிமா தாஸை வீழ்த்தியவர்.
  • 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா புரிந்த சாதனையை முறியடித்தவர்.
  • லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், இரண்டாவது முறையாக ஒலிம்பிக் 4x400 ஆண்கள் தொடரோட்டப் போட்டியில் பங்கேற்கிறார்.
  • 2018 ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டியின் கலப்புத் தொடரோட்டத்தில் தங்கம், ஆண்கள் தொடரோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் இவர். இவரது தந்தை பள்ளி வாகன ஓட்டுநர்.
  • ஓட்டத்தில் உலக சாதனை படைத்த ஹுசைன் போல்ட், ஜமைக்கா போன்ற சிறிய நாட்டிலிருந்து உருவானதுபோல், தமிழகத்தின் குட்டி ஜமைக்காவாக திருச்சி உருவாகி வருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்