TNPSC Thervupettagam

ஒலிம்பிக் வரலாறு மற்றும் சமீபத்திய ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்திறன்

August 18 , 2024 147 days 858 0

ஒலிம்பிக் வரலாறு மற்றும் சமீபத்திய ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்திறன்

(For English version to this please click here)

ஒலிம்பிக் போட்டிகளின் தோற்றம்

  • பண்டைய  கால ஆரம்பம்
  • ஒலிம்பிக் விளையாட்டுகள் பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பியாவில் உள்ள வானத்தின் கிரேக்க கடவுளான ஜீயஸின் நினைவாக ஒரு சமயத் திருவிழாவின் ஒரு பகுதியாக உருவானது.

நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளின் மறுமலர்ச்சி

  • நவீன ஒலிம்பிக்
  • நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புத்துயிர் பெற்றன.
  • முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்ஸில் நடைபெற்றது.
  • பியர், பரோன் டி கூபெர்டின் என்பவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் வடிவமைப்பாளராகக் கருதப் படுகிறார்.

நிர்வாகம் மற்றும் அமைப்பு

  • சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC)
  • அடித்தளம் மற்றும் பங்கு
  • 1894 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட IOC சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
  • இது ஒலிம்பிக் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும், தேசிய ஒலிம்பிக் குழுக்களை (என்ஓசி) நிர்வகிப்பதற்கும் பொறுப்பான ஒரு அரசு சாரா விளையாட்டு அமைப்பாகும்.

  • ஐ.நா.வின் அங்கீகாரம்
  • 2009 ஆம் ஆண்டு, ஐ. நா பொதுச் சபையானது, IOC அமைப்பிற்கு நிரந்தரப் பார்வையாளர் அந்தஸ்தை வழங்கியது.
  • IOC அமர்வு
  • IOC அமர்வு என்பது IOC உறுப்பினர்களின் வருடாந்திர கூட்டமாகும், அங்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உண்டு என்பதோடு அதன் முடிவுகள் இறுதியானவை.

ஒலிம்பிக் விளையாட்டுகளின் முறை மற்றும் கொடியேற்றும் நிகழ்வு

  • திட்டமிடல் மற்றும் கொடியேற்றும் நிகழ்வு
  • 1948 ஆம் ஆண்டு முதல், ஒலிம்பிக் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  • ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பொறுப்பு என்பது ஒரு நகரத்திற்கு வழங்கப்படுகிறது, ஒரு நாட்டிற்கு அல்ல, மேலும் நடத்தும் நகரத்தின் தேர்வு IOC அமைப்பால் மட்டுமே தீர்மானிக்கப் படுகிறது.
  • 1994 ஆம் ஆண்டு முதல், நான்காண்டு ஒலிம்பியாட் போட்டியின் போது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மாறி மாறி நடைபெறுகின்றன.

பரிணாமம் மற்றும் நீட்டிப்புகள்

  • கூடுதல் ஒலிம்பிக் நிகழ்வுகள்
  • ஒலிம்பிக் இயக்கம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக உருவாகியுள்ளது:
  • பனி மற்றும் பனி சார்ந்த விளையாட்டுகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்.
  • மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு.
  • 14 வயது முதல் 18 வயது வரையிலான விளையாட்டு வீரர்களுக்கான இளைஞர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு.
  • கண்டங்களுக்கான விளையாட்டுகள் (முழு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் பசிபிக்).
  • உலக விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் நடைபெறுவதில்லை.
  • பல்வேறு தடகள குழுக்களுக்கான காது கேளாதோர் ஒலிம்பிக் மற்றும் சிறப்பு ஒலிம்பிக்.

ஒலிம்பிக் சின்னங்கள் மற்றும் குறிக்கோள்

  • ஒலிம்பிக் சின்னம்
  • ஐந்து பின்னிப் பிணைந்த வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் வளையங்கள் மக்கள் வசிக்கும் ஐந்து கண்டங்களின் ஒற்றுமையைக் குறிக்கின்றன: ஆப்பிரிக்கா, அமெரிக்கா (ஒரு கண்டமாகக் கருதப்படுகிறது), ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா.

  • ஒலிம்பிக் கொடி 1914 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் முதன்முதலில் பறக்க விடப்பட்டது.

ஒலிம்பிக் பொன்மொழி

  • "Citius, Altius, Fortius" என்ற பொன்மொழிக்கு "வேகமான, உயர்ந்த, வலிமையான" என்று பொருள்.

ஒலிம்பிக் விளையாட்டுத் திட்டம்

  • கோடை கால ஒலிம்பிக்
  • கோடை கால ஒலிம்பிக் திட்டத்தில் 26 விளையாட்டுகள் உள்ளன.

  • குளிர் கால ஒலிம்பிக்
  • குளிர் கால ஒலிம்பிக் திட்டம் 15 விளையாட்டுகளைக் கொண்டுள்ளது.

  • ஒட்டு மொத்த திட்டம்
  • ஒலிம்பிக் விளையாட்டுத் திட்டம் 35 விளையாட்டுகள், 30 துறைகள் மற்றும் 408 நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

சமீபத்திய ஒலிம்பிக் நிகழ்வுகள்

டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ்

  • தொடக்க விழா
  • டோக்கியோ ஒலிம்பிக் டோக்கியோவின் தேசிய மைதானத்தில் 23 ஜூலை 2021 அன்று தொடக்க விழாவுடன் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியது.
  • இதில் 15 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
  • பங்கேற்பு
  • டோக்கியோ நகரமானது கோடை கால ஒலிம்பிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடத்திய முதல் ஆசிய நகரம் என்ற பெருமையைப் பெற்றது.
  • இதில் 33 விளையாட்டுகளில், 339 போட்டிகளில், 206 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
  • புதிய விளையாட்டுகளில் 3×3 கூடைப்பந்து, மேடிசன் சைக்கிள் ஓட்டுதல், ஃப்ரீஸ்டைல் ​​BMX, கராத்தே, அலைச் சறுக்கு விளையாட்டு, மலையேறுதல் விளையாட்டு மற்றும் பனிச் சறுக்கு விளையாட்டு ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் மென் பந்தாட்டம் மற்றும் பேஸ்பால் (அடிப் பந்தாட்டம்) ஆகியவை 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடைபெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் சின்னம் மற்றும் குறிக்கோள் 2020

  • சின்னம்
  • டோக்கியோ ஒலிம்பிக் 2020 சின்னம் மிரைடோவா ஆகும், இது ஜப்பானிய வார்த்தைகளான 'மிராய்' (எதிர்காலம்) மற்றும் 'டோவா' (முடிவின்மை) ஆகிய வார்த்தைகளின் கலவையாகும்.
  • ரையோ தனிகுசி என்பவர் வடிவமைத்த, மிரைடோவா என்பது பழமை மற்றும் புதுமை ஆகிய இரண்டையும் குறிக்கிறது என்பதோடு இது 'இணக்கத்திலிருந்து புதுமை' என்பதை குறிக்கிறது.

பொன்மொழி

  • டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு வேண்டி, கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த "வேகமான, உயர்ந்த, வலிமையான - ஒன்றாக" என்று திருத்தப் பட்டது.

இந்தியாவின் பங்கேற்பு

  • டோக்கியோவில் நடந்த 2020 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்ட இந்தியாவானது 119 விளையாட்டு வீரர்களைக் கொண்ட மிகப்பெரியக் குழுவை அனுப்பியது.
  • இதன் மூலம் இந்தியா 25வது முறையாக கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியாவின் சாதனைகள்

ஒட்டு மொத்தப் பதக்க எண்ணிக்கை

  • டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியா தனது அதிகபட்சப் பதக்கங்கள் என்ற  எண்ணிக்கையை எட்டியது, மொத்தம் 7 பதக்கங்கள்: 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம்.

குறிப்பிடத்தக்க தனிப்பட்ட நிகழ்ச்சிகள்

  • மீராபாய் சானு: 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார், அது இந்தப் பிரிவில் தொடர்ந்து இந்தியாவுக்கான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றதைக் குறிக்கிறது.
  • லோவ்லினா போர்கோஹைன்: வெல்டர்வெயிட் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  • நீரஜ் சோப்ரா: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார், தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் மற்றும் ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார்.
  • பி.வி. சிந்து: பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார், இந்தியாவுக்காக இந்தப் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆனார்.
  • ஸ்ரீ ரவி தஹியா: 57 கிலோ ஆண்கள் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • பஜ்ரங் புனியா: 65 கிலோ ஆண்கள் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  • ஹாக்கி: ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது, இதன் மூலம் 1980 ஒலிம்பிக்கிலிருந்து 41 ஆண்டுகள் என்ற பதக்கமில்லாத காலம் முடிவுக்கு வந்தது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் 2020 இந்தியாவின் வெற்றி

  • ஒட்டு மொத்தச் சாதனை: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில், இந்தியா 19 பதக்கங்களுடன் ஒரு புதிய சாதனையைப் படைத்தது, இதன் மூலம் முந்தைய அனைத்துப் பாராலிம்பிக்களிலும் வென்ற மொத்தமாகப் பெற்ற 12 பதக்கங்களை இந்தியா கணிசமாக முறியடித்தது.
  • தரவரிசை: பாரா ஒலிம்பிக் பதக்க அட்டவணையில் இந்தியா தனது மிக உயர்ந்தத் தர வரிசையை அடைந்து, 24வது இடத்தைப் பிடித்ததன் மூலம் 1972 ஆம் ஆண்டில் ஒப்பிடும் போது 25வது இடத்திலிருந்து இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
  • பங்கேற்பு: இந்தியாவிலிருந்து 54 பாரா-தடகள வீரர்கள் 9 வெவ்வேறு விளையாட்டுத் துறைகளில் போட்டியிட்டனர்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024 சிறப்பம்சங்கள்

நிகழ்வு கண்ணோட்டம்

  • அதிகாரப்பூர்வ பெயர்: XXXIII ஒலிம்பியாட் விளையாட்டுகள்
  • பதிப்பு: 33வது கோடை கால ஒலிம்பிக்
  • தொடக்க விழா: ஜூலை 26, 2024
  • நிறைவு விழா: ஆகஸ்ட் 11, 2024
  • பொன்மொழி: கேம்ஸ் வைட் ஓபன்
  • மொத்த நிகழ்வுகள்: 329 நிகழ்வுகள்
  • விளையாட்டுகளின் எண்ணிக்கை: 4 கூடுதல் விளையாட்டுகள் உட்பட மொத்தமாக 32 விளையாட்டுகள்
  • விளையாட்டு வீரர்கள்: தோராயமாக 10,500
  • விளையாட்டு வீரர்கள்: 200 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் (NOCs) மற்றும் IOC அகதிகள் ஒலிம்பிக் குழு
  • நடத்திய நகரம்: பாரீஸ், பிரான்ஸ்

இந்தியாவின் பங்கேற்பு

  • பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் 117 தடகள வீரர்களுடன் இந்தியா போட்டியிட்டது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024 சின்னம்

  • வடிவமைப்பு கருத்துரு
  • பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிக்கான சின்னம் தனித்துவமான மூன்று சின்னங்களை ஒருங்கிணைக்கிறது, அவை: தங்கப் பதக்கம், ஒலிம்பிக் சுடர் மற்றும் பிரான்சின் உருவமான மரியன்னே.
  • இந்த வடிவமைப்பானது பெரும் சாதனை, பகிரப்பட்ட ஆற்றல் மற்றும் பிரெஞ்சு குடியரசின் ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

சின்னத்தின் விளக்கம்

  • தங்கப் பதக்கம்: சாதனையைக் குறிக்கிறது.
  • சுடர்: மக்களிடையே பகிர்ந்து கொள்ளப் படும் ஆற்றலைக் குறிக்கிறது.
  • மரியன்னே: பிரான்ஸ் மற்றும் அதன் மதிப்புகளை உள்ளடக்கியது.

வரலாற்றுக் குறிப்பு

  • இந்தச் சின்னம் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இரண்டிற்கும் முதன்முறையாக பயன்படுத்தப் படுவதோடு இது ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024 சின்னம்

சின்னம் வடிவமைப்பு

  • பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வச் சின்னம் ஃபிரிஜியன் தொப்பிகளால் ஈர்க்கப்பட்ட 'பிரைஜ்' ஆகும், சுதந்திரத்தைக் குறிக்கிறது இது பிரெஞ்சு குடியரசின் உருவக உருவங்களாகும்.
  • இந்தச் சின்னமானது புரட்சி மற்றும் சுதந்திரத்தின் உணர்வைப் பிரதிபலிப்பதோடு, அவை பிரான்சின் வளமான வரலாற்றை நினைவுபடுத்துகிறது.

  • தோற்றம்
  • பிரான்சின் மூவர்ணக் கொடியின் நிறங்களான நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் ஃபிரிஜ் சின்னம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது அதன் நெஞ்சில் ஒலிம்பிக் சின்னத்தினைக் கொண்டுள்ளதோடு "தனியாக நாங்கள் வேகமாகச் செல்கிறோம், ஆனால் நாங்கள் ஒன்றாக மேலும் செல்கிறோம்" என்ற பொன் மொழியை ஊக்குவிக்கிறது

பாரீஸ் ஒலிம்பிக் 2024 முழக்கம்

  • பொன்மொழி
  • பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான பொன்மொழி "கேம்ஸ் வைட் ஓபன்" என்பதாகும்.
  • இந்தச் சொற்றொடர் தைரியம், படைப்பாற்றல் மற்றும் பாரம்பரிய அமைப்புகளில் இருந்து விலகுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறதோடு, உலகெங்கிலும் உள்ள மக்களை உள்ளடக்கிய, பொறுப்பான மற்றும் சமமான ஒலிம்பிக்கை அனுபவிக்க அழைக்கிறது.

  • நோக்கம்
  • இந்தப் பொன்மொழியானது பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே ஒற்றுமை மற்றும் கூட்டுப் பெருமையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு இதன் உள்ளடக்கம் மற்றும் புதுமைக்கான விளையாட்டுகளின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடியை ஏந்தியவர்கள்

  • தொடக்க விழா
  • புசர்லா வெங்கட சிந்து மற்றும் அச்சந்த ஷரத் கமல் ஆகியோர் தொடக்க விழாவின் போது இந்தியாவின் கொடி ஏந்தியவர்களாக வழி நடத்தினார்கள், மேலும் செயின் நதியில் நடந்த நாடுகளின் அணிவகுப்பிலும் இந்திய அணியை அவர்கள் வழி நடத்தினர்.
  • நிறைவு விழா
  • பி.ஆர்.ஸ்ரீஜேஷ் மற்றும் மனு பாக்கர் ஆகியோர் நிறைவு விழாவிற்கு கொடி ஏந்தியவர்களாக, விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் உணர்வைப் பிரதிநிதித்துவப் படுத்தினர்.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்திறன்

  • ஒட்டு மொத்த முடிவுகள்
  • இந்தியா 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட மொத்தம் 6 பதக்கங்களுடன் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களில் 71வது இடத்தைப் பிடித்தது.
  • டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்குப் பிறகு, இந்தியா இரண்டாவது முறையாக அதிகப் பதக்கம் பெற்ற நிகழ்வு இதுவாகும்.

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்

  • மனு பாக்கர்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார், சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • அவர் பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழுவின் கலப்புப் பிரிவுப் போட்டியில் மற்றொரு பதக்கத்தையும் வென்றார்.
  • ஸ்வப்னில் குசலே: ஆடவருக்கான 50 மீ ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்து, இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் பதக்கப் பட்டியலில் அவர் ஒரு பதக்கத்தைச் சேர்த்தார்.
  • ஆண்கள் பீல்ட் ஹாக்கி அணி: ஸ்பெயினைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது, இதன் மூலம் ஆடவர் ஹாக்கியில் இந்தியா இரண்டாவது ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தை அடைந்தது.
  • நீரஜ் சோப்ரா: 2020 ஒலிம்பிக்கில் அவர் தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, தற்போது ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார், மேலும் இந்தியாவுக்காக பல போட்டிகளில் தனிநபர் பதக்கம் வென்ற ஐந்தாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டையும் வென்ற முதல் இந்தியர் ஆனார்.
  • அமன் செஹ்ராவத்: ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார், மேலும் இவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளம் இந்தியர் ஆனார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்