TNPSC Thervupettagam

ஒலிம்பிக் வரலாற்றுத் தருணங்கள்

July 24 , 2021 1104 days 473 0
  • உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் உச்ச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக், எப்போதுமே ஆச்சரியத்துக்குக் குறைவு வைத்ததில்லை. நவீன ஒலிம்பிக்கின் 125 ஆண்டு வரலாற்றில் அப்படிப்பட்ட தருணங்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றில் சில:
  • பண்டைய ஒலிம்பிக்: கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய ஒலிம்பிக், கிரேக்கத் தலைமைக் கடவுள் ஸியூஸைக் கௌரவப்படுத்தும் வகையில் ஒலிம்பியாவில் நடத்தப் பட்டது.
  • முதல் சாம்பியன்கள்: 1896-ல் தொடங்கிய நவீன ஒலிம்பிக்கின் முதல் சாம்பியன் அமெரிக்காவின் ஜேம்ஸ் கானல்லி (மும்முறை தாண்டுதல்); பெண்கள் அனுமதிக்கப்பட்ட 1900 பாரிஸ் ஒலிம்பிக் படகோட்டும் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஹெலன் தி போர்டேல்ஸ் முதல் பெண் சாம்பியன் ஆனார்.
  • ஓவன்ஸும் ஹிட்லரும்: 1936-ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை, தான் வலியுறுத்திய கொள்கைகளுக்கு ஆதரவாக முன்னிறுத்த முயன்றார் ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லர்.
  • அதேநேரம், ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் தடகளப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
  • அரசியல் உணர்வு: 1968-ல் மெக்ஸிகோ ஒலிம்பிக்கின் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்ற அமெரிக்கர்கள் டாமி ஸ்மித்தும் ஜான் கார்லோஸும் பதக்கமளிப்பு விழாவில் ‘கறுப்பின விடுதலை இயக்க’த்தை ஆதரிக்கும் வகையில் கறுப்புக் கையுறை அணிந்து முஷ்டியை உயர்த்தி நின்றனர்.
  • பத்துக்குப் பத்து: 1976 மான்ட்ரீல் ஒலிம்பிக்கில் ருமானியாவின் 14 வயது ஜிம்னாசிய வீராங்கனை நாடியா கொமனேச் முதன்முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்தார்.
  • ‘புதிய ஜெஸ்ஸி ஓவன்ஸ்’: 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் கார்ல் லூயிஸ் தடகளத்தில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
  • ஒளியேற்றினார்: 1996 அட்லான்டா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் கௌரவம், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான முகம்மது அலிக்கு வழங்கப்பட்டது.
  • ஒற்றுமை உணர்வு: 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய, தென்கொரியப் பிரதிநிதிகள் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒருங்கிணைந்த கொடியை ஏந்திவந்தனர்.
  • மின்னல் மனிதன்: 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத் தொலைவை 9.69 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார் ஜமைக்காவின் உசைன் போல்ட். ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.
  • அதிக ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள்: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 28 பதக்கங்கள் (23 தங்கம்); சோவியத் ரஷ்யாவின் ஜிம்னாசிய வீராங்கனை லரிசா லடினினா 18 பதக்கங்கள் (9 தங்கம்).
  • இந்தியத் ‘தங்க’ங்கள்: இந்தியா சார்பில் தனிநபராகத் தங்கம் வென்ற ஒரே வீரர் அபிநவ் பிந்த்ரா (2008 பீஜிங் ஒலிம்பிக்), தனிநபராக வெள்ளி வென்ற ஒரே வீராங்கனை பி.வி.சிந்து (2016 ரியோ ஒலிம்பிக்).
  • 2021 பாராலிம்பிக் போட்டியின் சின்னம் சாமியட்டி

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்