TNPSC Thervupettagam

கடற்படைக்கு வரலாற்றுத் தருணம்!

August 12 , 2021 1086 days 476 0
  • இந்தியா தனது சுதந்திர தின பவள விழா ஆண்டை நெருங்கும் வேளையில் மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையொன்றை நிகழ்த்தியிருக்கிறது.
  • இந்திய கடற்படைக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட போர்க்கப்பல் தனது முதல் சுற்று சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.
  • அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஆறு நாடுகளுக்கு மட்டும்தான் தாங்களே வடிவமைத்து விமான தளங்களுடன் கூடிய போர்க்கப்பல்களை வடிவமைத்து கட்டமைக்கும் வல்லமை இருந்து வந்தது.
  • இப்போது 76% உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரித்து, ஒரு போர்க்கப்பலை உருவாக்கி வெற்றிகரமாக அதன் சோதனை ஓட்டத்திலும் இறங்கியிருப்பதன் மூலம் இந்தியாவின் சா்வதேச வல்லமை உறுதிப்பட்டிருக்கிறது.

இந்திய கடற்படையின் வரலாற்றுச் சாதனை

  • இந்திய கடற்படைக்கு இது ஒரு வரலாற்றுத் தருணம். இதற்கு முன்னாலும் இந்திய கடற்படையிடம் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இருந்தன என்றாலும், அவை எதுவும் இந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்டவை அல்ல.
  • 1961-இல் இந்திய கடற்படையில் இணைந்த ஐஎன்எஸ் விக்ராந்த்தும், 1982-இல் இணைந்த ஐஎன்எஸ் விராத்தும் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள்.
  • அதற்குப் பிறகு இந்திய கடற்படை வாங்கிய ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ரஷியாவால் உருவாக்கப்பட்டது.
  • ஆனால், இப்போதைய ஐஎன்எஸ் விக்ராந்த் அப்படியல்ல. 76% இந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்ட, நாமே தயாரித்திருக்கும் போர்க்கப்பல்.
  • இந்தக் கப்பலை வடிவமைத்ததிலும், கட்டுமானம் செய்ததிலும் இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்ககமும், அரசு நிறுவனமான கொச்சி கப்பல் கட்டுமானத் தளமும் பாராட்டப்பட வேண்டியவை.
  • காலதாமதம், அதிகரித்துவிட்ட முதலீடு என்று எத்தனையோ தடைகளையும், பிரச்னைகளையும் தாண்டி வியக்க வைக்கும் பிரம்மாண்டமான போர்க்கப்பல் உருவாகியிருக்கிறது.
  • கொச்சின் கப்பல் கட்டுமானத் தளம் பல வா்த்தகக் கப்பல்களைத் தயாரித்திருப்பதற்கும் இப்போதைய ஐஎன்எஸ் விக்ராந்த் உருவாக்கப்பட்டிருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
  • கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஐஎன்எஸ் விராத்தின் பராமரிப்புப் பணிகளை தொடா்ந்து மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த அனுபவம் கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்துக்கு இதை உருவாக்குவதில் கைகொடுத்திருக்கிறது என்று கூறலாம்.
  • 1980 முதலே நமக்கென்று நாமே போர்க்கப்பல் தயாரிக்க வேண்டும் என்கிற கனவு இந்திய கடற்படைக்கு இருந்து வந்தது.
  • ஆனால், 2002-இல் வாஜ்பாய் ஆட்சியில்தான் அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கென்று இந்தியாவில் தயாரிக்கப்படும் போர்க்கப்பலுக்கு அனுமதி வழங்கியது.
  • 2009-இல் மன்மோகன் சிங் அரசால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2014-இல் காலதாமதத்துக்கு ஏற்றவாறு அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, இப்போது ரூ.20,000 கோடி செலவில் ஐஎன்எஸ் விக்ராந்த் தனது வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியது.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி இந்த போர்க்கப்பல் பல அம்சங்களில் மேம்பாடு உடையது.
  • இதன் தயாரிப்பின் காரணமாக அரசு நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா, தரமான இரும்பை உருவாக்கும் திறன் பெற்றிருக்கிறது.
  • இதன் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில் நுட்பத்தை டிஃபன்ஸ் மெட்டலா்ஜிக்கல் ஆய்வுக் கூடமும் பெற்றிருக்கிறது.
  • கொச்சி கப்பல் கட்டுமானத் தளம், போர்க்கப்பல்களை உருவாக்கும் தொழில் நுட்ப மேம்பாட்டை அடைந்திருக்கிறது.
  • 40,000 டன் எடையுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், 222 மீட்டா் நீளமும், 62 மீட்டா் அகலமும், 59 மீட்டா் உயரமும் கொண்ட பிரம்மாண்டம்.
  • இதில் காணப்படும் எட்டு டீசல் அல்டா்னேட்டா்களின் மூலம் உருவாக்கப்படும் 24 மெகாவாட் மின்சாரத்தால் ஒரு நகரத்திற்கே ஒளியூட்ட முடியும்.
  • இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட கேளிள்களின் நீளம் 2,000 கி.மீ. இதற்குத் தேவைபட்ட சிறிய, பெரிய குழாய்களின் மொத்த நீளம் 120 கி.மீ.
  • ஐஎன்எஸ் விக்ராந்த் 12 அடுக்குகள் கொண்டது. அதில் ஐந்து அடுக்குகள் கப்பலுக்கு மேலே உயா்ந்து நிற்கின்றன.
  • ஏறத்தாழ 1,700 பேருக்கான வசதிகள், கடற்படை வீரா்களாக மகளிரும் பங்கு பெறுவதால் அவா்களுக்கான வசதிகளும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் 2,300 அறைகள் உள்ளன.
  • 30 விமானங்கள், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் பைட்டா் ஜெட்டுகள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இந்த போர்க்கப்பல் உள்ளடக்கியுள்ளது.
  • அதில் விக்ரமாதித்யா போலவே, எம்ஐஜி 29 கே விமானங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. கமோவ் 31 ஹெலிகாப்டா்கள், புதிதாக வாங்க இருக்கும் அமெரிக்காவின் சிகாக் ஹெலிகாப்டா்கள் ஆகியவையும் இடம்பெறும்.
  • 18 கடல் மைல் வேகத்தில் 7,500 கடல் மைல்கள் பயணிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த்.
  • இந்திய கடற்படைக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறைக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம்.
  • கப்பலிலுள்ள உதிரி பாகங்களை வழங்கியிருப்பதில் நூற்றுக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் உள்பட 550 நிறுவனங்கள் பங்கு பெற்றிருக்கின்றன.
  • 2012 வரை ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கூட இல்லாமல் இருந்த சீனா, இப்போது இரண்டாவது கப்பலை தயாரித்துவிட்டது.
  • சீனாவிடம் ஐந்து விமானம் தாங்கிய போர்க்கப்பல்கள் இருக்கின்றன. அதனால், காலதாமத்தைத் தவிர்த்து அடுத்த விமானம் தாங்கிய போர்க்கப்பலுக்கு நாம் தயாராக வேண்டும்.

நன்றி: தினமணி  (12 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்