TNPSC Thervupettagam

கரோனா நிவாரணங்களைத் தீர்மானிப்பது எது?

May 29 , 2020 1693 days 756 0

சீனாவும் இத்தாலியும்

  • கரோனா பாதிப்புக்கு முதலில் ஆளான நாடு சீனா. நோய் பற்றிய அறிவிப்பு வெளியானபோதே, முதல் கட்டத்தில் 17,400 கோடி டாலர் ரொக்கப் புழக்கத்துக்காக விடுவிக்கப்பட்டது.
  • பிப்ரவரி 4 அன்று 7,100 கோடி டாலர்களும் மார்ச் 5 அன்று 1,593 கோடி டாலர்களும், மார்ச் 13 அன்று 7,900 கோடி டாலர்களும் ஒதுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நகரங்களில் மக்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது.
  • அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டன. நோய் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அனைவருக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
  • சீன தொழில் நிறுவனங்கள் கடன் பெற வசதியாக மத்திய வங்கியின் ரொக்கக் கையிருப்பு 7,880 கோடி டாலர்கள் குறைக்கப்பட்டது.
  • இத்தாலியில் கரோனா பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் அதிகம். முதல் கட்டமாக 2,500 கோடி யூரோக்களை நிவாரணத் தொகையாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.
  • இதில் வேலைவாய்ப்புக்கு ஒதுக்கியிருப்பது 1,000 கோடி யூரோ. சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த 350 கோடி யூரோ. பொது ஊரடங்கின்போது பணிபுரிபவர்களுக்கென்று தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிறு, நடுத்தரத் தொழில்களுக்குத் தேவைப்படும் கடன்தொகைக்கு அரசே பிணைநிற்கிறது. கடன் தவணைகளை வசூலிப்பதை நிறுத்திவைத்துள்ளது. 50 லட்சம் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 600 யூரோ நிதியுதவி தரப்படுகிறது.
  • சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளோருக்கும் பருவகால வேலைகளைச் செய்பவர்களுக்கும்கூட இந்த நிதியுதவி உண்டு. சின்னக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள செவிலியர்களை அமர்த்திக்கொள்ளும் பெற்றோருக்கு மாதம்தோறும் 600 யூரோ தரப்படும்.

மத்திய ஆசிய நாடுகள்

  • ஏழை நாடான உஸ்பெகிஸ்தான் 100 கோடி டாலர்களைச் சிறப்பு நிதியாக அறிவித்தது. தனியார் துறைக்குக் கடன் வழங்க 300 கோடி டாலர்களை ஒதுக்கியிருக்கிறது.
  • 50 கோடி டாலர் மதிப்புள்ள கடன்களுக்குத் தவணை நீட்டிப்பு வழங்கியிருக்கிறது. வரிச் சலுகைகள், வட்டி வீதம் குறைப்பு, சமூகநலத் துறை மற்றும் சுகாதாரத்துக்குக் கூடுதல் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன.
  • வளரும் நாடான கஜகஸ்தானில் கரோனா பாதிப்பு அதிகமில்லை. முன்னெச்சரிக்கையாக அடித்தளக் கட்டமைப்புத் துறைகளை வலுப்படுத்த 74 கோடி டாலர்களை அரசு ஒதுக்கியது.
  • பள்ளிகளுக்கு மூன்று வாரம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. கரோனாவுக்காகத் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டால் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பாக அதைக் கருத ஆணையிடப்பட்டிருக்கிறது.

தென்கிழக்காசிய நாடுகள்

  • இந்தோனேசியா மக்களுடைய நுகர்வுச் செலவை அதிகப்படுத்த நேரடியாக 72 கோடி டாலர்களை அளித்தது. 800 கோடி டாலர்களை ஊக்குவிப்புத் தொகையாக வழங்க முடிவுசெய்திருக்கிறது.
  • பாதிக்கப்பட்ட தொழில்பிரிவுகளுக்கு 22.9 லட்சம் கோடி ருபய்யா (இந்தோனேசிய செலாவணி) கடனாகத் தரப்படும். அடுத்த ஆறு மாதங்களுக்கு நிறுவன வரியில் 30% குறைப்பு. தொழிலாளர்களுக்கு வருமான வரிச் சலுகை. சமூகநலத் துறை, ஊரக வளர்ச்சிக்கும் வீட்டுச் செலவுக்கும் நேரடி நிதியுதவி.
  • மலேசியா 660 கோடி டாலர் மதிப்புக்கு நிதி ஊக்குவிப்புகளை வழங்குகிறது. சுற்றுலா முகமைகள், ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள், பேரங்காடிகளின் மின்சாரக் கட்டணத்தில் 15% அடுத்த ஆறு மாதங்களுக்குக் குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மாதம்தோறும் 600 ரிங்கிட்டுகள் உதவித்தொகையாக ஊரடங்கு காலம் முழுக்க வழங்கப்படும்.
  • மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறைப் பணியாளர்களுக்கும் கரோனா ஆபத்து நீங்கும் வரையில் மாதம்தோறும் 400 ரிங்கிட்டுகள் கூடுதலாகத் தரப்படும்.
  • நமது பக்கத்து நாடான வங்கதேசம் 72,750 கோடி டாகாவை நிதி ஊக்குவிப்பாக முதல் கட்டத்திலேயே அறிவித்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் தருவதற்காக மட்டும் 5,000 கோடி டாகா தரப்பட்டுள்ளது.
  • ஏப்ரல், மே, ஜூன் மாத ஊதியம் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியுதவியை 2% வட்டி கணக்கிட்டு இரண்டரை ஆண்டுகளில் (30 தவணை) தொழிலதிபர்களிடமிருந்து அரசு வசூலித்துக்கொள்ளும்.

நன்றி: தி இந்து (29-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்