TNPSC Thervupettagam

கல்விக் கொள்கை: கடந்து வந்த பாதை

August 18 , 2020 1614 days 884 0
  • சுதந்திர இந்தியாவின் முதன்மையான கவனங்களில் ஒன்றாகக் கல்வித் துறையும் இருந்தது. நாட்டின் முதலாவது கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கல்வித் திட்டங்களை ஒருங்கிணைத்தார்.
  • ஜவாஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் ஐஐடி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக் குழு, என்சிஇஆர்டி என்று இந்தியாவின் நவீன கல்வி வளர்ச்சிக்கு அடித்தளங்கள் இடப்பட்டன.
  • 1964-ல் அமைக்கப்பட்ட கோத்தாரி தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய கல்வி ஆணையம் தன்னுடைய பரிந்துரைகளை 1966-ல் அளித்தது.
  • 19 உறுப்பினர்கள், 20 ஆலோசகர்களை உள்ளடக்கியதாக இந்த ஆணையம் அமைந்திருந்தது. 9,000 நேர்முகங்கள் மற்றும் 2,400 கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து, தன்னுடைய பரிந்துரையை கல்வியமைச்சர் எம்.சி.சாக்லாவிடம் வழங்கியது.
  • எம்.சி.சாக்லா பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவரும்கூட. கோத்தாரி ஆணைய அறிக்கையின் முதல் வாசகம் ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறதுஎன்று தொடங்கியது.
  • 1968-ல் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டின் முதலாவது தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டார்.
  • அரசமைப்புச் சட்டத்தின்படி பதினான்கு வயது வரைக்கும் அடிப்படைக் கல்வி அளிக்கப்பட வேண்டும், தேசிய வருமானத்தில் 6% கல்வித் துறைக்குச் செலவழிக்கப்பட வேண்டும் ஆகியவை இந்தக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்.
  • 1986-ல் ராஜீவ் காந்தி ஆட்சியில் நாட்டின் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று இந்தக் கல்விக் கொள்கை வலியுறுத்தியது.
  • பின்தங்கிய வகுப்பினருக்கான பிரத்யேகக் கல்வி நிலையங்களை உருவாக்கவும் இந்தக் கொள்கை காரணமாக அமைந்தது. திறந்தவெளிப் பல்கலைக்கழக முறையையும் இந்தக் கல்விக் கொள்கை ஊக்குவித்தது.
  • 1986 கல்விக் கொகையானது 1992-ல் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் சற்றே மாறுதலுக்கு உள்ளானது. 2005-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கல்விக் கொள்கையில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
  • 2020 ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை-2020 ஆனது, 2019-ல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிட்ட வரைவின்படி அமைந்தது. 10 2 முறைக்கு மாறாக 5 3 3 4 முறை உள்ளிட்ட முந்தைய கல்விக் கொள்கையிலிருந்து முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.

நன்றி: தி இந்து (18-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்