TNPSC Thervupettagam

காலநிலை மாற்றமும் தீவிர பாதிப்படையும் பெண்களும்

October 16 , 2024 92 days 230 0

காலநிலை மாற்றமும் தீவிர பாதிப்படையும் பெண்களும்

  • காலநிலை மாற்றத்​தினால் தொடர்ச்​சியாக நிகழ்ந்​து​வரும் தீவிர வானிலை நிகழ்வுகள், வெப்ப அலை, காற்று மாசு போன்றவை சர்வதேச அளவில் சுகாதார நெருக்​கடியை ஏற்படுத்​தி​யுள்ளன. குறிப்பாக வயது, பாலினம், பொருளா​தாரம் சார்ந்து காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்​திவருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்​கிறது.
  • காலநிலை மாற்றத்தின் விளைவால், வளரும் நாடுகளில் விளிம்​புநிலை மக்களின் வாழ்வா​தா​ரத்​துக்குக் கூடுதல் நெருக்​கடிகள் ஏற்படு​வ​தாகவும் அதில் கூறப்​பட்​டுள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் (COP28), 2050க்குள் காலநிலை மாற்றத்​தினால் 15.8 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்​படு​வார்கள்; அதில் பெரும்​பாலானவர்கள் பெண்களாக இருப்​பார்கள் எனக் கணிக்​கப்​பட்​டிருக்​கிறது. அந்த வகையில், ஆண்களுடன் ஒப்பிடு​கையில் காலநிலை மாற்றத்​தினால் பெண்கள் அதிகமான பாதிப்பை எதிர்​கொண்​டுள்​ளனர்.

அல்லலுறும் பெண்கள்:

  • காலநிலை மாற்றத்​தினால் ஏற்படும் சுற்றுச்​சூழல் பிரச்​சினை​களால் முதன்​மை​யாகப் பாதிக்​கப்​படு​பவர்கள் பெண்கள்​தான். உலகளவில் தங்கள் பொருளா​தாரத் தேவைகளுக்​காக விவசாயம் போன்ற இயற்கை வளம் சார்ந்த தொழில்​களையே பெண்கள் பெரும்​பாலும் நம்பி உள்ளதே இதற்குக் காரணம்.
  • வெள்ளம், வறட்சி​யினால் விவசாயம் பாதிக்​கப்​படும்போது அதைச் சார்ந்​துள்ள பெண்களும் பாதிப்பை எதிர்​கொள்​கிறார்கள். விவசாயம் மட்டுமல்​லாமல் சமூகம், பொருளா​தாரம், பாலினம், வாழ்வா​தாரம், உடல்நலம், குடும்பம், கல்வி போன்ற பல்வேறு காரணிகள் சார்ந்தும் பெண்கள் பாதிக்​கப்​படு​கிறார்கள்.
  • இன்றைக்கும் பெரும்​பாலான நாடுகளில் குடும்பத்​துக்காக உணவு, தண்ணீர், எரிபொருளை ஏற்பாடு​செய்​வது-பாது​காப்பது பெண்களின் பொறுப்​பாகவே உள்ளது. அதுவும் குறைந்த - நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் பெண்கள், தங்கள் குடும்பத்தின் வறுமையைப் போக்கு​வதற்​காகக் கடினமாக உழைக்​கவும் வேண்டியிருக்கிறது.
  • இயற்கைப் பேரிடர்​களால் அப்பெண்​களின் தொழில் பாதிக்​கப்​படும்​போது, அவர்கள் கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாகிறார்கள். இதனால் பிழைப்புத் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயரும் சூழலுக்கும் தள்ளப்​படு​கிறார்கள். கடந்த சில ஆண்டு​களில் காலநிலை மாற்றத்​தினால் இடம்பெயர்ந்​தவர்​களில் 80% பேர் பெண்களே என ஐ.நா. அறிக்கை சுட்டிக்​காட்டு​கிறது.
  • பொருளா​தாரத் தேவைக்காக இடம்பெயரும்போது குழந்தை​களின் கல்வி பாதிக்​கப்​படு​கிறது; குறிப்பாக, ஆண் குழந்தை​களை​விடப் பெண் குழந்தைகள் அதிகமாகப் பள்ளி இடைநிற்றலுக்கு உள்ளாவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (United Nations High Commissioner for Refugees) தெரிவிக்​கிறது.

விளிம்பு நிலைக்குத் தள்ளப்​படும் பெண்கள்:

  • உலகளவில் உணவு உற்பத்​தியில் 50 முதல் 80% வரை பெண்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால், நில உடைமை​யாளர்களாக 10 சதவீதத்​துக்கும் குறைவான எண்ணிக்கையிலான பெண்களே இருப்​ப​தாகத் தரவுகள் கூறுகின்றன. ‘தேசியக் குடும்ப நல ஆய்வு-5’ சார்ந்த அறிக்கை, இந்தியாவில் பெண்களைவிட ஆண்கள் அதிகம் சொத்து வைத்திருப்​ப​தாகக் குறிப்​பிடு​கிறது.
  • அந்த அறிக்கை​யின்படி ஆண்களில் 62.5%, பெண்களில் 42.3% பேர் சொந்தமாக வீடு வைத்துள்ளனர்; 43.9% ஆண்களும், 31.7% பெண்களும் தங்கள் பெயரிலோ அல்லது மற்றொரு நபருடன் கூட்டாகவோ நிலத்தை உடைமையாக வைத்துள்ளனர். இதன் காரணமாகக் காலநிலை மாற்றத்தின் விளைவு​களால் ஆண்களை​விடக் கூடுதலான பெண்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்​படும் சாத்தி​யமும் அதிகரிக்​கிறது.

தண்ணீரைத் தேடி:

  • காலநிலை மாற்றத்​தினால் நன்னீரில் கடல் நீர் கலக்கும் நிகழ்வு அதிகமாகி​யுள்ளது. அதுவும் கடலோர மாவட்​டங்​களில் வறட்சிக் காலங்​களில் தண்ணீருக்காக நெடுந்​தொலைவு நடந்து செல்லும் பெண்களுக்குக் கருச்​சிதைவு, கரு உருவாவதில் தாமதம் போன்ற பாதிப்புகள் ஏற்படு​கின்றன. வறட்சிமிக்க பகுதி​களில் வசிக்கும் பெண்கள் தண்ணீரைத் தேடியே பெரும்​பாலான நேரத்தைச் செலவிடு​வதால் மனதளவிலும், உடலளவிலும் நெருக்​கடிக்கு உள்ளாகின்​றனர்.
  • இந்தியா​வில், ராஜஸ்தான் போன்ற மாநிலங்​களில் காலநிலை மாற்றத்​தினால் தொடர்ச்​சியாக உருவாகும் உணவுப் பஞ்சத்தால் மக்களின் வாழ்வா​தாரம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது. இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்​திக்​கொள்ளும் நபர்கள், ஏழ்மையான குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்களைக் கடத்துதல், பாலியல் வன்கொடுமை செய்தல் போன்ற குற்றங்களை இழைக்​கின்​றனர்.
  • மறுபக்கம், காலநிலை மாற்றப் பாதிப்​பானது குடும்​பங்​களில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தீவிரமடைய வைப்பதுடன், குழந்தைத் திருமணங்களை அதிகரிக்கச்செய்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்​கின்றன. இவ்வாறு, காலநிலை மாற்ற​மானது சுற்றுச்​சூழல் நெருக்​கடியாக மட்டும் அல்லாமல், சமூக நெருக்​கடி​யாகவும் உருமாறி​யுள்ளது.

திட்ட​மிடல் வேண்டும்:

  • காலநிலை மாற்றத்​தினால் புவியின் ஆண்டு சராசரி வெப்பநிலை இயல்பைவிட 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்​துள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் இந்த வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸாக மாறக்​கூடும் என்று அறிவிய​லா​ளர்கள் எச்சரித்து​வரு​கின்​றனர்.
  • இதனால், புவியில் உயிரினங்கள் வாழ முடியாத சூழல் உருவாகலாம்; இதைக் கருத்தில் கொண்டே 2015இல் பாரிஸ் உடன்படிக்கையில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்​படுத்த உலக நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகளின் மோதல் போக்கு, போர்கள் போன்ற​வற்றால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உரிய வகையில் எடுக்​கப்​பட​வில்லை.
  • காலநிலை மாற்றத்தைக் கட்டுப்​படுத்தும் திட்டங்களை உலக நாடுகள் ஒருங்​கிணைந்து முன்னெடுத்து, விளிம்​புநிலை மக்களின் துயரைப் போக்குவது காலத்தின் அவசியத் தேவை!

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்