கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் முதலீட்டு வாய்ப்புகள்
- இந்திய கிராமங்களின் சூழல் தற்போது வேகமாக மாறி வருகிறது. இனி இந்திய கிராமங்கள் விவசாயம் சார்ந்த பொருளாதாரம் மட்டுமானதாக இருக்காது. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம் என பல்வேறு துறைகளில் நமது கிராமங்கள் வளர்ச்சி காண தொடங்கியுள்ளன.
- இன்று 99% கிராமங்கள் சாலை, பாலம், மின்சாரம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. நகரங்களைப் போலவே கிராமங்களிலும் செல்போன் பயன்பாடு உச்சத்தில் உள்ளது. கல்வி, மருத்துவ வசதிகள் மேம்பட்டு வருகின்றன. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. சராசரி தனிநபர் வருமானம் கிராமங்களில் 2,000 டாலரை (ரூ.1.70 லட்சம்) தாண்டியுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் நுகர்வு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
- இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். அதேவேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமங்களின் பங்களிப்பு 46 சதவீதமாக உள்ளது. இதுபோன்ற பல சாதகமான அம்சங்கள் சரியான எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
- கிராமங்களை மேம்படுத்துவதற்காக அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது தற்போது நேர்மறை விளைவுகளை உண்டாக்கி வருகிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் தேவையை பெரிய நிறுவனங்களும் தற்போது உணரத் தொடங்கியுள்ளன.
- இதனால், முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் இனி நாம் கிராமப்புறங்களை புறக்கணிக்க முடியாது. கரோனா தொற்றுக்குப் பிறகு, நகர்ப்புறப் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைந்து வருகிறது. ஆனால், கிராமப்புறங்கள் மெதுவாக மீட்சி காண்கிறது. இதனால், இங்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. கிராமப்புற செலவினங்களில் உணவின் பங்கு 46 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அவர்களுக்கு விருப்பமான ஏனைய செலவினங்கள் அதிகரித்திருப்பதை மறைமுகமாக பிரதிபலிக்கிறது.
- இந்திய கிராமப்புற வளர்ச்சி கட்டமைப்பில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. இதற்காக, அவர்கள், கிராமப்புற இந்தியாவில் இருந்து வெளிப்படும் வாய்ப்புகளை மையமாகக் கொண்ட மியூச்சுவல் பண்ட் திட்டங்களை கவனமுடன் பரிசீலிக்கலாம்.
- நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்த கிராமங்கள் தங்களது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளதால் இத்தகைய முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மதிப்பை அதிகரிக்கும்.
- இதனைக் கருத்தில் கொண்டே, ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் பண்ட், 'ரூரல் ஆப்பர்சூனிட்டி பண்டை' உருவாக்கி உள்ளது. கிராமப்புற மற்றும் அதனுடன் தொடர்புடைய கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த ஓபன் எண்டட் ஈக்விட்டி திட்டம் ஜனவரி 9-ல் தொடங்கி உள்ளது.
- இதில் வரும் 23-ம் தேதி வரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிலிருந்து பயனடையும் துறைகள் மற்றும் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்தும் இந்த பண்ட் எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 01 – 2025)