TNPSC Thervupettagam

சச்சி வாசகன், ஊர்சுற்றி, எழுத்தாளன்

October 5 , 2020 1567 days 717 0
  • கல்குதிரைஇதழ் சார்பில் வெளியிடப்பட்ட தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில்தான் முதன்முறையாக கி.அ.சச்சிதானந்தத்தின் பெயரைப் பார்த்தேன்.
  • நெய்வேலியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த வேர்கள்’, தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய கரமசோவ் சகோதரர்கள்நாவலை கி.அ.சச்சிதானந்தம் மொழிபெயர்ப்பில் புத்தகமாகக் கொண்டுவரும் திட்டத்தின் விளம்பரம் அது.
  • அந்த நாவல் முழுக்க மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் ஏனோ அந்த வெளியீடு முழுமையாகக் கைவிடப்பட்டது.
  • புதுமைப்பித்தனின் கதைகளுக்கே முறையாகப் பதிப்பு இல்லாத அந்தக் காலகட்டத்தில் மௌனி கதைகள், கி.அ.சச்சிதானந்தத்தின் பீக்காக்பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தின் வழியாகத்தான் 1990-களில் அறிமுகமானது.
  • பி.ஆர்.ராஜம் அய்யரின் ரேம்பிள்ஸ் இன் வேதாந்தாமொழிபெயர்ப்பைக் கொண்டுவந்து பெரும் பொருள் நஷ்டத்துக்கு ஆளானவர்.
  • மௌனியை மூன்று மணி நேரத்துக்கு நேர்காணல் கண்டு ஒரு காணொளி ஆவணத்தையும், கு.அழகிரிசாமியின் புதல்வரும் விளம்பரப் பட இயக்குநருமான சாரங்கனுடன் சேர்ந்து எடுத்திருக்கிறார்.
  • கி.அ.சச்சிதானந்தம் ஏஜிஎஸ்அலுவலகத்தில் பணியாற்றியபோது, ஆய்வுக்குச் செல்லும் ஊர்களிலெல்லாம், கிடைக்காமல் இருந்த மௌனியின் கதைகளைச் சேர்த்து இந்தத் தலைமுறைக்குக் கொடுத்ததிலும் அவருக்குப் பங்குண்டு.
  • மௌனி, சி.சு.செல்லப்பா, பிரமிள், வெங்கட் சாமிநாதன், ‘க்ரியாராமகிருஷ்ணன், ராஜமார்த்தாண்டன், சி.மோகன், ‘தமிழினிவசந்தகுமார், ‘சந்தியாநடராஜன் தொடங்கி இயக்குநர் மிஷ்கின் வரை பெரும் நண்பர் வட்டத்தைக் கொண்டிருந்தவர்.
  • சென்னையின் பிரதான நூலகங்கள், தனிநபர், நிறுவனங்களின் நூல் சேகரிப்புகள், பழைய நூல் கடைகளில் அடிக்கடி பார்க்க முடியும்.
  • முழுக்க நரைத்துவிட்ட, அலையும் வெள்ளிச் சிகையுடன் ஜோல்னா பையோடு போகும் உருவத்தைப் பின்னால் இருந்தே சச்சி என்று தெரிந்தவர்களால் கண்டுகொள்ள முடியும்.
  • கோபாலபுரத்தில் இருக்கும் அவரது பூர்வீக வீடு பழைய சென்னையின் சரித்திரத்தோடு இணைந்தது.
  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் முதலில் வாடகைக்கு இருந்த இல்லம் இவருடையது.
  • இலக்கியம், கலைகள், தத்துவம் எனப் பல துறைகளில் ஈடுபாடு கொண்ட கி.அ.சச்சிதானந்தம், சாமுவேல் பெக்கட்டின் கோடாவுக்காகக் காத்திருத்தல்’, ஆனந்த குமாரசாமியின் சிவானந்த நடனம்உள்ளிட்ட நிறைய மொழிபெயர்ப்புகளும் செய்தவர். உயிரியக்கம்’, ‘அம்மாவின் அத்தைஎன்ற இரண்டு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன.
  • கி.அ.சச்சிதானந்தம் மிகப் பெரிய ஊர்சுற்றியும்கூட. இந்தியா முழுவதும் இலக்கற்று அலைந்திருக்கிறார். அந்தக் காலத்திலேயே லடாக்குக்குச் சென்ற தமிழர் அவர்.

நன்றி: தி இந்து (05-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்