TNPSC Thervupettagam

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (UAPA)

May 31 , 2024 224 days 610 0

(For English version to this please click here)

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (UAPA)

அறிமுகம்

  • இந்திய அரசியலமைப்பின் 19(1) பிரிவின் கீழ், உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சுதந்திரங்களின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்க 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தச் சுதந்திர உரிமைகளில் பின்வருவன அடங்கும்:
  • சுதந்திரமானப் பேச்சுரிமை: பொது மக்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்தலாம்.
  • அமைதியான முறையில் கூடும் உரிமை: பொது மக்கள் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்காக ஒன்று கூடலாம்.
  • சங்கங்களை உருவாக்குவதற்கான உரிமை: பொது மக்கள் குழுக்களையும், நிறுவனங்களையும் உருவாக்கலாம்.
  • இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
  • சட்டவிரோதச் செயல்பாடுகளை எதிர்த்துப் போராடுதல்: இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பிற்கு சவால் விடும் நடவடிக்கைகளைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கண்காணிக்கிறது.
  • பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்: இது பயங்கரவாத நடவடிக்கைகளைச் சமாளிப்பதற்கான சட்டக் கட்டமைப்பினை வழங்குகிறது.

முதலில் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துதல்:

  • முதலில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமானது, நாட்டிற்கு எதிராக கருதப்படும் சட்ட விரோதமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

குறிப்பிட்ட பயங்கரவாதச் சட்டங்களை ரத்து செய்தல்:

  • காலப்போக்கில், குறிப்பாக பயங்கரவாதத்தில் கவனம் செலுத்தும் சட்டங்கள், பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (TADA) மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA) போன்றவை சட்டரீதியான பல்வேறு சவால்களை எதிர்கொண்டதால் அவை ரத்து செய்யப் பட்டன.

முக்கியமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மாற்றம்:

  • இதன் விளைவாக, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமானது இந்தியாவின் முக்கியப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக உருவானது.

விரிவான அணுகுமுறை:

  • இந்த மாற்றமானது சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டையும் ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கையாள்வதற்கான ஒரு விரிவான அணுகுமுறையை உறுதி செய்தது.

சட்டவிரோத நடவடிக்கைகளின் வரையறை மற்றும் தண்டனை

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் (UAPA), "சட்டவிரோதமானச் செயல்பாடு" என்பது செயல்கள், வார்த்தைகள் (பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட), அடையாளங்கள் அல்லது தெளிவாகப் புலப்படும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் மூலம் கீழ்க்கண்ட எந்தவொரு செயலையும் வரையறுக்கச் செய்றது:
  • இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுத்தல் அல்லது பிரிவினையைக் கொண்டு வருதல் ஆகும்.
  • இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதாகும்.
  • நாட்டின் மீது வெறுப்பைத் தூண்டும் செயல்முறைகளாகும்.

தண்டனையின் நோக்கம்:

  • சட்டத்திற்குப் புறம்பான முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், அத்தகைய நடவடிக்கைகளுக்கான ஆணையம், நிதி மற்றும் ஆதரவு ஆகியவற்றை இச்சட்டம் தண்டிக்கின்றது.

சட்டவிரோத நிறுவனங்களை அடையாளம் காணுதல்:

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், சட்டத்தின் மூலம் கோடிட்டுக் காட்டப் பட்டுள்ள நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டால், இவை "சட்டவிரோத நிறுவனங்கள்" என்று முத்திரை குத்தப்படலாம்.

மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள்:

  • இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அல்லது தனிநபர்கள் அல்லது குழுக்களிடையே விட்டுக் கொடுத்தல் அல்லது பிரிவினையைத் தூண்டும் செயல்களினால் ஏற்படும் ஆபத்தினை மதிப்பீடு செய்வதாகும்.

அரசு அதிகாரமளித்தல்:

  • இந்தப் பதவியானது, அத்தகைய அமைப்புகளின் உறுப்பினர்களைத் தடை செய்தல் மற்றும் வழக்குத் தொடருதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க, அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளைச் சேர்த்தல்

  • 2004 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் குறிப்பாக பயங்கரவாத நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் விதிகளை உள்ளடக்கியதாக திருத்தப்பட்டது.
  • இந்த சட்டத் திருத்தத்தின் கீழ், அது லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற 34 பயங்கரவாத அமைப்புகளை கொண்டு வந்தது.
  • இது பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தது மட்டுமில்லாமல், அவர்களின் செயல்பாடுகளையும் குற்றமாக்கியது.

  • மத்திய அரசு ஒரு அமைப்பைக் கீழ்க்கண்டவாறு இருந்தால் அதனைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கலாம் என்று இந்தச் சட்டம் கோடிட்டுக் காட்டுகிறது:
  • பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் அல்லது பங்கேற்கிறார் என்றும்
  • பயங்கரவாதத்திற்கு தயாராகிறவர் என்றும்.
  • பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறவர் என்றும்.
  • மற்றபடி பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.

2019 ஆம் ஆண்டு திருத்தம்

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத் திருத்தம், 2019 ஆம் ஆண்டின் கீழ், தனி நபர்களைப் பயங்கரவாதிகள் என அறிவிக்கும் அதிகாரத்தை உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கியது.

பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றம் அடைதல்:

  • இந்த மாற்றமானது பயங்கரவாதச் செயல்களைப் பரப்புவதில், தனிப்பட்டப் பங்களிப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தின் வளர்ச்சி நிலையை ஆராய்கிறது.

தனிநபர்களை அடையாளம் கண்டு வழக்கு தொடுத்தல்:

  • இது பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதோடு இது அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளையும் ஊக்குவிக்கிறது.

துடிப்பான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்:

  • பயங்கரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ளும் அரசாங்கத்தின் திறனை, தனிப்பட்ட குற்றவாளிகளை குறி வைப்பதன் மூலம் பலப்படுத்துகிறது.

திட்டமுறையின் முக்கியக் கூறு:

  • இந்த ஏற்பாடானது தனிநபர்களைப் பொறுப்பு கூற வைப்பதற்கு அவசியமானது என்பதோடு இது பயங்கரவாத எதிர்ப்பு திட்டமுறையின் ஒரு முக்கியப் பகுதியாகும்.

அதிகார வரம்பு மற்றும் பயன்படும் தன்மை

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமானது, நாட்டிற்குள் அல்லது வெளியே சட்டவிரோத நடவடிக்கைகள் குற்றத்தைச் செய்யும் எந்தவொரு நபரையும் உள்ளடக்கியதாகும் என்ற வகையில் இந்தியாவின் முழுப் பகுதிக்கும் பொருந்தும்.
  • இதன் அதிகார வரம்பானது, குற்றம் நடக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், இந்தியக் குடி மக்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
  • இச்சட்டத்தின் விதிகளுக்கு அரசு ஊழியர்களும் உட்பட்டவர்கள் ஆவர்.
  • கூடுதலாக, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்களைக் கொண்டிருப்பவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் அதிகார வரம்பிற்குள் வருவார்கள்.
  • சட்டத்தின் பரந்த பொருந்தக் கூடிய தன்மையானது, இந்தியாவிற்கு எதிரான சட்டவிரோத அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நபர்களுக்கும் அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களது பொறுப்பு கூறலை உறுதி செய்கிறது.
  • மேலும் இது அந்தச் சட்டத்தின் கீழ் பொறுப்பு கூறலுக்கான உலகளாவிய தரநிலையை நிறுவுகிறது.

அமலாக்கம் மற்றும் தேசியப் புலனாய்வுத் துறையின் பங்கு

  • இந்தியாவின் மத்தியப் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த சட்ட அமலாக்கத் துறையின் முகவராக தேசியப் புலனாய்வுத் துறை (NIA) செயல்படுகிறது, இது தேசியப் புலனாய்வுத் துறை சட்டம் 2008 என்ற சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • தேசியப் புலனாய்வுத் துறையானது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரிப்பதற்கும், சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாகும்.
  • இத்துறையானதும் பயங்கரவாதம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இது தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு மாநில மற்றும் மத்திய அதிகாரிகளை ஒருங்கிணைக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள்

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமானது (UAPA), சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்குத் தீர்வு காண்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு, இது ஒரு விரிவான சட்டக் கட்டமைப்பினை வழங்குகிறது.

சட்டவிரோத செயல்பாட்டை வரையறுத்தல்

  • சட்ட விரோதமான செயல்கள் என்பவை பிரிவினையைத் தூண்டுவது அல்லது தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைப்பது உட்பட, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைக் குறைவான மதிப்பீட்டிற்கு உட்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என வரையறுக்கப்படுகிறது.

பயங்கரவாத அமைப்புகளை அடையாளம் காணுதல்

  • மத்திய அரசானது கீழ்க்கண்டச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளையும், தனிநபர்களையும் பயங்கரவாதிகளாக அறிவிக்க இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது:
  • பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல் அல்லது பங்கேற்பது.
  • பயங்கரவாதத்திற்குத் தயாராவது.
  • பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது.
  • இவையல்லாமல் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள்.

கடுமையான விளைவுகள்

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமானது, அதன் விதிகளின் கீழ் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
  • மத்திய அரசானது அதிகாரப்பூர்வ அரசிதழ் மூலம் இவ்வாறான நடவடிக்கைகளை சட்ட விரோதமானது என அறிவிக்கலாம்.

பரந்த அதிகார வரம்பு

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமானது, அதன் நிலையான அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக, இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் செய்யப்படும் குற்றங்களை இந்தியர் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளடக்குகிறது.

சொத்து பறிமுதல் நெறிமுறைகள்

  • காவல்துறையின் தலைமை இயக்குநர் (DGP) அல்லது தேசியப் புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநரின் முன் அனுமதியுடன், பயங்கரவாதத்துடன் தொடர்புடையச் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், இதன் மூலம் அதன் செயல்முறையைச் சீரமைத்து அதன் செயல்திறனை மேம்படுத்தலாம்.

மேம்படுத்தப்பட்ட புலனாய்வு அதிகாரங்கள்

  • தேசியப் புலனாய்வுத் துறையில் உள்ள  துணை கண்காணிப்பாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் அந்த வழக்குகளை விசாரிக்க அதிகாரம் பெற்றவர்களாவர் என்ற நிலையில் தேசியப் புலனாய்வுத் துறை ஒரு முக்கியப் பங்காற்றுகிறது,.
  • 2019 ஆம் ஆண்டுத் திருத்தம் இந்த அதிகாரத்தை, காவல் ஆய்வாளர் தரத்தில் உள்ள தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு நீட்டிக்கிறது.

2019 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட திருத்தத்தால் அறிமுகப் படுத்தப் பட்ட மாற்றங்கள்

  • 2019 ஆம் ஆண்டு திருத்தமானது, தனிநபர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு அரசாங்கத்திற்கு அனுமதியளிக்கிறது.  இதில் கீழ்க்கண்டச் செயல்களில் ஈடுபடுவோரும் அடங்குவர்:
  • பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது அல்லது பங்கேற்பது.
  • தீவிரவாதத் தாக்குதல்களை திட்டமிடுதல்.
  • பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்.
  • வேறு வகையில் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது.

தேசியப் புலனாய்வுத் துறையின் மூலம் நெறிப்படுத்தப்பட்ட சொத்து பறிமுதல்

  • இந்தத் திருத்தம் தேசியப் புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனருக்கு பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு ஒப்புதல் அளிக்க உதவுகிறது என்பதோடு இது பல மாநில வழக்குகளில் ஏற்படும் தாமதத்தையும் குறைக்கிறது.

விரிவாக்கப்பட்ட விசாரணை ஆணையம்

  • ஆய்வாளர் அல்லது அதற்கும் மேற்பட்ட பதவியில் உள்ள தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தற்போது வழக்குகளை விசாரிக்கவும், புலனாய்வுத் திறனை மேம்படுத்தவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.

புதிய சர்வதேச ஒப்பந்தத்தைச் சேர்த்தல்

  • அணுசக்தி பயங்கரவாதச் சட்டங்களை ஒடுக்குவதற்கான சர்வதேச மாநாடு (2005) இதில் இரண்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

  • இது சர்வதேச தரத்துடன் சட்டத்தின் சீரமைப்பை விரிவுபடுத்தியது.

கைது மற்றும் ஜாமீன் விதிகள்

  • கைது, ஜாமீன் மற்றும் ஆதாரத்தின் சுமை தொடர்பான விதிகள் மாறாமல், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பைப் பின்பற்றுகின்றன.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் அதன் 2019 திருத்தம் பற்றிய முடிவுரைகள்

தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமானது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இன்றியமையாதது, எனினும் அதன் தவறான பயன்பாடு மற்றும் அதன் மீதான தவறான குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க நியாயமான முறையில் இச்சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரம் மற்றும் பாதுகாப்பைச் சமநிலைப்படுத்துதல்

  • தனிமனிதச் சுதந்திரம் மற்றும் மாநிலப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.
  • இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, இதன் சட்ட அமலாக்க அதிகாரிகள் நேர்மையையும் நடுநிலைமையையும் செயல்படுத்த வேண்டும்.

நீதித்துறை மேற்பார்வையின் முக்கியத்துவம்

  • நீதித்துறையானது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் நியாயமானப் பயன்பாட்டை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • தேசியப் பாதுகாப்பை நிலை நிறுத்தும் போது அதன் தன்னிச்சையானத் தன்மையைச் சரி பார்க்கவும், தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நீதித்துறை சீராய்வு என்பது மிக அவசியமாகும்.
  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட விதிகளானது, நியாயமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு பாதுகாப்பாக நீதித் துறை செயல்படுகிறது.
  • நீதித்துறையானது ஜனநாயக நிர்வாகத்தில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமையியல் உரிமைகளுக்கு இடையே ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம் நிலை நிறுத்துகிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விமர்சனங்கள்

அரசியல் எதிர்ப்பு மற்றும் விமர்சனம்:

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத் திருத்த மசோதா 2019 என்பது மிகுந்த கீழ் கட்டுப்பாடு மிக்கதாக அரசியல் கட்சிகள் விமர்சித்தன.

சர்வதேச மனித உரிமைகள் பற்றிய கருத்துகள்:

  • சர்வதேச அமைப்புகளும், உள்நாட்டுக் கட்சிகளும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தினைப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்று விமர்சித்தன.
  • அவை ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பறிக்கப்படுவது குறித்து எழுப்பப்பட்ட சிக்கல்களைப் பற்றிய கருத்துகளாகும்.

சிறுபான்மையினரைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அவர்களைக் குறிவைத்து வரும் குற்றச்சாட்டுகள்:

  • இந்தச் சட்டம் அரசியல் எதிர்ப்பு மற்றும் சிறுபான்மைக் குரல்களை அடக்குவதற்கான ஒரு கருவியாக விவரிக்கப் பட்டுள்ளது.

ஊடகங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கைதுகள்:

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், பல செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டப்பட்டனர், வீட்டில் சிறை வைக்கப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
  • இதில் ஜாமீன் பெறுவதும் கடினம் என்பது கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்புகிறது.

அடிப்படை உரிமைகள் மற்றும் எதிர்ப்பின் மீதான தாக்கம்:

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத் திருத்தமானது அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது.
  • இச்சட்டத்தின் கீழ் போராட்டம் நடத்தும் பத்திரிகையாளர்கள் மற்றும் குடிமக்கள் கைது செய்யப் பட்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

முடிவுரை

  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான கட்டமைப்பை வழங்குகின்றன.
  • இருப்பினும், தெளிவற்ற வரையறைகள் மற்றும் விரிவான அரசாங்க அதிகாரங்கள் காரணமாக கவலைகளும் எழுகின்றன என்ற நிலையில் இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தி, தனிமனிதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் நீதியைப் பேணுவதற்கும் கவனமான மேற்பார்வை இன்றியமையாததாகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்