TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 02

June 19 , 2024 11 days 1724 0

(For English version to this please click here)

6." நீயே உனக்கு ராஜா திட்டம்" திட்டம்

நோக்கம்:

  • "நீயே உனக்கு ராஜா திட்டம்" திட்டத்தின் வழியாகத் தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளுக்குப் புத்துயிர் அளித்து, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சகம்/துறை:

  • டிசம்பர் 01, 2023 அன்று அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இது செயல்படுத்தப் படுகிறது.

பயனாளிகள்:

  • இளைஞர்கள்: குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரியக் கலைகள் மற்றும் கைவினைகளில் ஆர்வம் உள்ளவர்கள் இதன் பயனளிகள் ஆவர் .

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • பாரம்பரிய கலைகளின் மறுமலர்ச்சி: அழிந்து வரும் நிலையில் உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்களைப் மீட்டெடுத்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • தொழில் முனைவோர் ஊக்குவிப்பு: கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை அந்தந்த கைவினைத் தொழிலில் தொழில்முனைவோராக  ஊக்குவிக்கிறது.
  • திறன் பயிற்சி திட்டங்கள்: மரவேலை, தஞ்சாவூர் பொம்மைகள் மற்றும் ஓவியம், பனை ஓலை கலை, கடல் ஓடு கலை, களிமண் மற்றும் காகித கலை, மட்பாண்டங்கள், கைத்தறி சாயமிடுதல், பத்தமடை பாய் தயாரித்தல் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.
  • வேலை வாய்ப்புகள்: பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆணைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்பதோடு பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் நிலைத் தன்மையையும் வளர்க்க இது உதவுகிறது.

நிதி உதவி:

  • பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ₹12,500 மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டுப் பயணத்தை ஆதரிக்க பல்வேறு மானியங்கள் வழங்கப் படுகிறது.

செயல்படுத்தல் விவரங்கள்:

  • தொடக்க விழா: பாரம்பரிய கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மீதான திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் இத்திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் உதயநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • கூட்டாண்மை: திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ஜான்சன் எலக்ட்ரிக், போஸ் லிமிடெட், என்எல்சி மற்றும் நெட்டூர் தொழில்நுட்பப் பயிற்சி அறக்கட்டளை போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் பயிற்சி குறித்த ஒரு துல்லியமான வழிகாட்டுதலை வழங்குவதற்காக "இளையா" என்ற AI சாட்பாட் மற்றும் ஒரு பிரத்தியேக உதவி அமைப்பின் மூலம் "நான் முதல்வன்" இணையதளத்தை இதற்காகப் பயன்படுத்துகிறது.

 

7."இமைகள் திட்டம்"

துவங்கப்பட்ட நாள்:

  • ஜூன் 23, 2023.

நோக்கம்:

  • "இமைகள்" திட்டம் தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலத்திற்குள் ஒரு விரிவான செயல்பாட்டு கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் பெண் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சகம்/துறை:

  • தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் (ஐஜி) கண்ணன் தலைமையில் செயல்படுத்தப்பட்டது.

பயனாளிகள்:

  • பெண் குழந்தைகள்: குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் விரிவாக்கப் பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • செயல்பாட்டு அமைப்பு: இது பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தரச் செயல்பாட்டு அமைப்பை நிறுவியுள்ளது.
  • ஒத்துழைப்பு: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வழக்குகளுக்கு ஒருங்கிணைந்த பதில்களை உறுதிப்படுத்தவும், மற்ற அரசு துறைகளுடன் இணைந்து ஈடுபடுகிறது.
  • சட்ட ஆதரவு: விரைவான நீதிக்காக 60 நாட்களுக்குள் வழக்குகளின் முறையான பதிவு, செயலாக்க விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகைத் தாக்கல் ஆகியவற்றை  இது உறுதி செய்கிறது.
  • பாதிக்கப்பட்ட ஆதரவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அளிக்கிறது, அவர்களின் உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துகிறது.
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து சமூகங்களுக்குக் விழிப்புணர்வு கற்பிக்க, பள்ளி மற்றும் கல்லூரி உரையாடல்கள், தெரு நாடகங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மூலம் விழிப்புணர்வு முயற்சிகளை முன்னெடுக்கின்றன.
  • மருத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள்: சிறப்பு மருத்துவர்களால் விரைவான மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதாக உறுதியளிக்கப் படுகிறது.

செயல்படுத்தல் விவரங்கள்:

  • பதவியேற்பு: பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு அவர்களால் இது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
  • பொது ஈடுபாடு: சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகள் மூலம் பெண் குழந்தைகளின் பாதுகாவலர்களாக  இத்திட்டம் (இமைகள்) காவல்துறையின் பங்கை வலியுறுத்துகிறது.
  • விரிவான ஆதரவு: உடனடி சட்ட மற்றும் மருத்துவப் பதில்களில் மட்டுமல்ல, நீண்டகால மறுவாழ்வு மற்றும் உளவியல் ஆதரவிலும் கவனம் செலுத்துகிறது.

 

8.மாதிரி பள்ளி திட்டம்

தேதி:

  • ஆகஸ்ட் 15, 2018

நோக்கம்:

  • தமிழ்நாட்டில் மாதிரிப் பள்ளித் திட்டம் மாநிலம் முழுவதும் 32 மாதிரிப் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் கல்வித் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பள்ளிகள், நவீன வசதிகள் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளை உள்ளடக்கி, கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அளவுகோலாக செயல்படும் நோக்கத்தைக் கொண்டு ள்ளது.

அமைச்சகம்/துறை:

  • மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டது.

பயனாளிகள்:

  • மாணவர்கள்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், மேம்பட்ட கல்வி வசதிகள் மற்றும் கற்பித்தலின் தரம் ஆகியவற்றால் பயனடைகின்றனர்.
  • ஆசிரியர்கள்: தொழில்முறை மேம்பாடு மற்றும் நவீன கற்பித்தல் வளங்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • நவீன வசதிகள்: ஒவ்வொரு மாதிரிப் பள்ளியிலும் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
  • புதுமையான கற்பித்தல் முறைகள்: கற்றல் விளைவுகளை மேம்படுத்த புதிய கற்பித்தல் அணுகுமுறைகளை பின்பற்றுவதை இது வலியுறுத்துகிறது.
  • பாடத்திட்ட மாற்றங்கள்: தேசியக் கல்வித் தரங்கள் மற்றும் சமகாலத் தேவைகளுடன் சீரமைக்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
  • பொதுத் தேர்வு சீர்திருத்தங்கள்: தேர்வு அழுத்தத்தைக் குறைக்க பிளஸ் 1 (11ஆம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மற்றும் தரவரிசை முறைகளை ரத்து செய்துள்ளது.
  • பள்ளி இணைப்பு: நிர்வாகத்தைச் சீரமைக்கவும் வளங்களை மேம்படுத்தவும் பல்வேறு பள்ளிக்கூடங்களை ஒருங்கிணைக்க செய்கிறது.
  • மாவட்ட அளவிலான விரிவு: ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மாதிரிப் பள்ளியையாவது உறுதிசெய்து, உயர்தரக் கல்விக்கான சமமான அணுகலை ஊக்குவிக்கிறது.

செயல்படுத்தல் விவரங்கள்:

  • உருமாற்றம்: சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, முன்மாதிரி பள்ளியாக மாற்றப்பட்ட முதல் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு, இந்த முன்முயற்சியானது தொடங்கப் பட்டது.

 

9.நீங்கள் நலமா திட்டம்

தேதி:

  • மார்ச் 06, 2024.

நோக்கம்:

  • மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட நீங்கள் நலமா திட்டம் என்பது தீவிரமாக கருத்து சேகரிப்பதன் மூலம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை இந்நலத் திட்டம் குறைக்கிறது.
  • அரசின் முன்முயற்சிகள் சரியான பயனாளிகளைத் திறம்பட சென்றடைவதையும், அரசுச் சேவைகளின் ஒட்டுமொத்தத் தரத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதில் இது கவனம் செலுத்துகிறது.

அமைச்சகம்/துறை:

  • தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் இந்தத் திட்டமானது, மாநிலம் முழுவதும் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளை உள்ளடக்கி உள்ளது.

பயனாளிகள்:

  • பொதுமக்கள்: "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்", "புதுமை பெண் திட்டம்", "நான் முதல்வன் திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகளாக  உள்ள தமிழக குடிமக்கள்.

அரசாங்கத் துறைகள்:

  • சேவை வளங்களை மேம்படுத்தவும், திட்டங்களின் செயல்திறனை உறுதிப்படுத்தவும் மதிப்புமிக்க கருத்துக்களைப் பெறுகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • கருத்து சேகரிப்பு: கருத்துகளையும், ஆலோசனைகளையும் சேகரிக்க முதலமைச்சரிடமிருந்து தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் பயனாளிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது.
  • வெளிப்படைத்தன்மை: "நீங்கள் நலமா" என்ற பிரத்தியேக இணையதளத்தை நிறுவுகிறது, அங்கு கருத்து மற்றும் பதிலளிப்புகள் பதிவேற்றப்பட்டு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மக்கள் ஈடுபாட்டை மேம்படுத்துகிறது.
  • சேவைகளை மேம்படுத்துதல்: சரியான நடவடிக்கைகளை எடுக்கவும், நலன்புரி பலன்கள் அணுகக் கூடியதாகவும், பயன்பாட்டை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய கருத்துக்களைப் பயன்படுத்துகிறது.
  • விரிவான தகவல்: பொது விழிப்புணர்வு மற்றும் அணுகலுக்காக இணையதளத்தில் அனைத்து அரசு திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.

செயல்படுத்தல் விவரங்கள்:

  • துவக்கம்: 6 மார்ச் 2024 அன்று முதல்வரால் தனது முகாம் அலுவலகத்திலிருந்து இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது என்பதோடு, இது ஆட்சி மற்றும் குடிமக்கள் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • திறனாய்வு அடிப்படையில் அமைப்பு: தொடக்கத்தில் முக்கிய நலத்திட்டங்களின் பயனாளிகளிடமிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதில் கவனம் செலுத்துகிறது, படிப்படியாக மற்ற அரசு சேவைகளை உள்ளடக்கியதாக விரிவடைகிறது.
  • பொது பங்கேற்பு:  இணையதளம் மூலம் தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வதில் பொதுமக்கள் துடிப்பாக பங்கேற்பதை இது  ஊக்குவிக்கிறது.

தாக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்:

  • மேம்படுத்தப்பட்ட நிர்வாகம்: நிகழ் நேரக் கருத்துகள் அடிப்படையில் சேவை வழங்கலில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொடர்ச்சியான மேம்பாடு: நலத்திட்டங்கள் மற்றும் பொதுச் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக என்று, தொடர்ந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் உருவாகும் திட்டங்களில் இது கவனம் செலுத்துகிறது.

 

10.தொல்குடி திட்டம்

  • இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாமக்கல்லில் தொடக்கப்பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை.

நோக்கம்:

  • தொல்குடி திட்டத்தின் நோக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், கல்வி மற்றும் பயிற்சினால் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பழங்குடியினச் சமூகங்களை மேம்படுத்துவதாகும்.

பயனாளிகள்:

  • இத்திட்டத்தின் முதன்மைப் பயனாளிகள் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மாணவர்கள் மற்றும் சமூகங்கள் ஆகும்.

தகுதி:

  • சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சி பெறும் பழங்குடியின மாணவர்கள்.
  • பொறியியல், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் உயர்கல்வியைத் தொடர இலக்கு கொண்ட  பழங்குடி மாணவர்கள்.
  • சிறப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டில் படிக்க விரும்பும் பழங்குடி மாணவர்கள்.

 

11.விரிவாக்கப்பட்ட விடியல் பயண திட்டம்

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இது நீட்டிக்கப் பட்டது.

நோக்கம்:

  • பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத்தை வழங்குதல், அதன் மூலம் அவர்களின் பங்களிப்பு மற்றும் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது.

பயனாளிகள்:

  • நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு, கருமந்துறை ஆகிய மலைப்பகுதிகளில், கல்லுாரி மாணவியர் உட்பட, பெண்கள் அனைவரும் இதன் பயனாளிகள் ஆவர்.

தகுதி:

  • குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள்.
  • இப்பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவிகள்.
  • இத்திட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள 65 கிராமங்களும், கருமந்துறை மலைப் பகுதியில் உள்ள 98 கிராமங்களும் அடங்குகிறது.

 

12.புன்னகைத் திட்டம்

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு சுகாதாரத்துறை
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

நோக்கம்:

  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் துவங்கப் பட்டது.
  • பல் சிகிச்சை அளித்து, வாய்வழி நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களின் பல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

பயனாளிகள்:

  • தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகள், குறிப்பாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதன் பயனாளிகள் ஆவர்.

தகுதி:

  • ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள்.
  • தமிழகத்தில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவார்கள்.
  • இத்திட்டம் பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகள் போன்ற பொதுவான வாய் சம்பந்தமான சுகாதாரப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்