TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 03

June 20 , 2024 204 days 4432 0

(For English version to this please click here)

13.'நட்புடன் உங்களோடு மனநல சேவை'

துவக்கப்பட்ட நாள்:

  • அக்டோபர் 27, 2022.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் துறை, தமிழ்நாடு.

நோக்கம்:

  • பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்குத் தீர்வுகளை வழங்குதல் மற்றும் தேர்வுக்கு முன்னும் பின்னும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதாகும்.

பயனாளிகள்:

  • மன அழுத்தத்தை அனுபவிக்கும் நபர்கள் ஆவர்.
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னும் பின்னும் வழிகாட்டுதல் தேவைப் படும் நபர்கள் ஆவர்.

தகுதி:

  • இத்திட்டம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
  • ஆரம்பத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது முக்கிய அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டது.
  • இரண்டு மனநல மருத்துவர்கள், நான்கு உளவியலாளர்கள் மற்றும் 20 ஆலோசகர்களால் ஆலோசனை வழங்கப்படுகிறது.
  • மனநல ஆலோசனைக்கு 14416 என்ற இலவச எண் உள்ளது.

 

14.தான்சீட் திட்டம் (தமிழ்நாடு அரசின் புதுமை அடிப்படையிலான தொடக்க விதை நிதித் திட்டம்)

துவக்கப்பட்ட நாள்:

  • டிசம்பர் 30, 2022.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு புத்தொழில் மற்றும்  புத்தாக்கக் கொள்கையானது (ஸ்டார்டப் TN) தான்சீட் திட்டத்திற்குப் பொறுப்பான தலைமை முகமை ஆகும்.

நோக்கம்:

  • TANSEED திட்டம், புதுமையான தீர்வுகளை வடிவமைக்கவும், கணிசமான சந்தை மதிப்பீடுகளை உருவாக்கவும், குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அதன் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரவும், புத்தொழில் நிறுவனங்களுக்கு மானிய நிதியை வழங்குவதன் மூலம் ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் பசுமைத் தொழில்நுட்பம், கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மைப் பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

பயனாளிகள்:

  • தான்சீட் திட்டத்தின் பயனாளிகள் புத்தொழில் நிறுவனங்கள், குறிப்பாக பசுமை தொழில் நுட்பம், கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மைப் பங்குதாரர்களாக கொண்டவர்கள் ஆவார்கள்.

தகுதி:

  • புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • புத்தொழில் நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான (DPIIT) சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  • புத்தொழில் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதிக்குள் www.startuptn.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கு நிதியைப் பெறும் என்ற நிலையில், அவற்றின் கவனம் செலுத்தும் பகுதிகளின் அடிப்படையில் தொகைகள் மாறுபடுகிறது.
  •  பசுமைத் தொழில்நுட்பம், கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மைப் பங்குதாரர்களாக கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 15 லட்சம் வழங்கப் படுகிறது.
  • மற்ற துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ருபாய் 10 லட்சம் வழங்கப்படுகிறது.

 

15.ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம்

தேதி:

  • இத்திட்டத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் ஜூன் 14, 2024 அன்று தொடங்கப்பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் (ஐசிடிஎஸ்) மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பான தலைமை முகமைகளாகும்.

நோக்கம்:

  • 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பதே ‘ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் நோக்கம் என்பதோடு இது தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படுபவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமாகவும் உள்ளது.
  • இத்திட்டம் குழந்தைகளின் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.

பயனாளிகள்:

  • இத்திட்டத்தின் பயனாளிகள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தீவிரமான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆவர். மருத்துவ உதவி மற்றும் ஊட்டச்சத்து உதவி தேவைப் படுபவர்களும் இதில் அடங்குவார்கள்.

தகுதி:

  • 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
  • ஐசிடிஎஸ் மற்றும் சுகாதாரத் துறையால் நடத்தப்படும் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மூலம் குழந்தைகள் தீவிரமான அல்லது மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட வேண்டும்.
  • இத்திட்டத்தின் வழிகாட்டுதல்களின் படி மருத்துவ உதவி அல்லது ஊட்டச்சத்து ஆதரவு தேவைப் படும் குழந்தைகள் ஆவர்.
  • இந்த முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாத காலம் நடத்தப்பட்டு, சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் விவரங்கள், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பயன்படுத்திப் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் கண்காணிக்கப் படுகிறது.

 

16.கள ஆய்வில் முதலமைச்சர்

துவங்கப்பட்ட நாள்:

  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று வேலூர் மாவட்டம்.

நோக்கம்

  • அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் குடிமக்கள் திருப்தியுடன் வந்து விட்டு வெளியேறுவதை உறுதி செய்வதே "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் நோக்கமாகும்.
  • பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகப் பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மதிப்பாய்வு செய்வதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை

  • இத்திட்டத்தை முதல்வர் அலுவலகம் முக்கிய அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் மேற்பார்வையிடுகிறது.

பயனாளிகள்

  • தமிழக குடிமக்கள், குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளவர்கள், அரசின் திட்டங்களை மேம்படுத்தி செயல் படுத்துவதன் மூலம் பயனடைவார்கள்.

தகுதி

  • இந்த முயற்சியின் மூலம் மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசுச் சேவைகள் மற்றும் திட்டங்களில் இருந்து தமிழகத்தின் அனைத்து குடிமக்களும் மறைமுகமாக பயனடைய தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இந்தத் திட்டம், குடிமக்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் தமிழக அரசின் பெரும் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

 

17.உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

துவங்கப்பட்ட நாள்:

  • ஜனவரி 31, 2023

அமைச்சகம் / தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் திறம்படச் சென்றடைவதை உறுதி செய்வது, தொடர்ந்து களப் பார்வையிட்டு பொது மக்களின் குறைகளை நேரடியாக நிவர்த்தி செய்வது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

பயனாளிகள்:

  • தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள்.
  • அரசுச் சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பயன்படுத்தும் நபர்கள்.

தகுதி:

  • பொது நலம் மற்றும் அரசுச் சேவைகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதால், தமிழகத்தின் அனைத்து குடிமக்களும் இத்திட்டத்தில் பயனடைவார்கள்.

குறிக்கோள்:

  • அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சென்றடைவதை உறுதி செய்வதாகும்.
  • நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைப் பேணுதவதாகும்.
  • பொதுமக்கள் குறைகளை நேரிடையாக நிவர்த்தி செய்யவும், தீர்க்கவும் இத்திட்டம் உதவுகிறது.
  • அரசு நலத் திட்டங்களின் பலன்கள் சமூகத்தின் அனைத்து இடங்களிலும் சென்றடைவதை உறுதி செய்து, தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றுவது ஆகும்.

திட்ட விவரங்கள் மற்றும் செயல்படுத்தல்:

  • தொடர்ச்சியான வருகை மற்றும் அதன் கால நேரம்:
  • ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் ஒரு தாலுகாவில் மாதம் ஒருமுறை 24 மணி நேரம், காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்குவார்கள்.
  • இந்த வருகைகள் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை (சென்னை மாவட்டம் தவிர்த்து) நடைபெறுகிறது.

கள ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகள்:

  • காலை நேர ஆய்வுகள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடைபெறுகிறது.
  •  பிற்பகல் ஆய்வுக் கூட்டம்: பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, அதிகாரிகள் காலை ஆய்வுகளில் இருந்து கருத்துகளைப் பற்றி விவாதிப்பார்கள்.
  •  பொது தொடர்புகள்: மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை, அதிகாரிகள் பொதுமக்களுடன் உரையாடி அவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவார்கள்.
  • மாலை நேர ஆய்வுகள்: சமூக நலத்துறையால் நடத்தப்படும் வசதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் நடைபெறுகிறது.

அடுத்த நாள் நடவடிக்கைகள்

  • காலை நேர ஆய்வு: தலைமை அலுவலகத்திற்குத் திரும்பும் முன் பல்வேறு கிராமங்களில் அடிப்படைக் குடிமை வசதிகளை ஆய்வு செய்தல் மற்றும் முதல்வரின் காலை உணவுத் திட்டமானது ஆய்வு செய்தல்.

வருகைக்கு முந்தைய ஏற்பாடுகள்:

  • திட்டமிடப்பட்ட வருகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று அந்த தாலுகாவில் உள்ள அனைத்து ஃபிர்காக்களுக்கும் பொது மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற அனுப்பப்படும்.

ஆண்டு நாட்காட்டி:

  • மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுகாக்களுக்கும் ஒரே மாதிரியான அமைப்பை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் ஒரு நாட்காட்டி தயாரிக்க வேண்டும்.

பொது விழிப்புணர்வு:

  • அதிகபட்சம் பொது மக்கள் இதைப் பற்றி அறிந்திருப்பதையும், தங்கள் குறைகளைத் தெரிவிக்க வாய்ப்பைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய இந்தத் திட்டம் போதுமான அளவில் விளம்பரப்படுத்தப் படுகிறது.

 

18.மக்களுடன் முதல்வர்

துவங்கப்பட்ட நாள்:

  • டிசம்பர் 18, 2023

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வருவாய், வணிகம் மற்றும் தொழில்கள், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு, ஆதி திராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அறிவிக்கப்பட்ட சமூக நலன், காவல்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாடு, ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், போக்குவரத்து, சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் போன்றவை ஆகும்.

நோக்கம்:

  • குடிமக்களின் கவலைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த "மக்களுடன் முதல்வர்" என்ற முயற்சியின் கீழ் நலவாழ்வு முகாம்கள் நடைபெறுகிறது.

பயனாளிகள்:

  • பொதுப் பணித்துறை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்ப் பாதுகாப்பு, நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி போன்ற துறைகளுக்கான தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் தேர்வுகள் மூலம் 1,598 இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகுதி:

  • வேலை வாய்ப்புகளை வழங்குவதையும் இளைஞர்களின் வேலையின்மையை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு துறைகளுக்கான தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆவர்.

 

19.எங்கள் பள்ளி மலரும் பள்ளி

  • பள்ளிகளில் மாணவர் குழுக்களை அமைத்து தூய்மை மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கில், கல்வித் துறையின் கீழ், "நமது பள்ளி மலரும் பள்ளி" என்ற முயற்சி தமிழகத்தில் தொடங்கப் பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு

நோக்கம்:

  • பள்ளிகளைத் தூய்மையான மற்றும் மாணவர்களுக்கு உகந்த சூழலாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • இம்முயற்சியால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் பெறுவார்கள்.

தகுதி:

  • தூய்மையைப் பராமரித்தல், சுகாதாரத்தை உறுதி செய்தல், வளாகத்தைப் பசுமையாக்குதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள நீர் ஆதாரங்களின் தூய்மையைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பள்ளிகளுக்குள் குழுக்களை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் முயற்சியாகும்.
  • இந்தக் குழுக்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக் குழுக்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட உள்ளது.
  • பள்ளி வளாகத்தின் தூய்மை மற்றும் பராமரிப்புத் தரத்தை மேம்படுத்தவும், கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உறுதி செய்யவும் இந்த முயற்சி முக்கியமானது ஆகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்