TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 06

July 4 , 2024 190 days 2789 0

(For English version to this please click here)

31.தமிழ்ப் புதல்வன் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • ஆகஸ்ட் 2024.

நோக்கம்:

  • அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு நிதியுதவி அளித்து அவர்களின் கல்வியை மேம்படுத்துகிறது.

பயனாளிகள்:

  • அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இதன் பயனாளிகள் ஆவர்கள்.

தகுதி:

  • அரசுப் பள்ளிகளில் மாணவர்களாக இருக்க வேண்டும்.
  • 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதில் அடங்குவர்.

கூடுதல் தகவல்:

  • தகுதியுடைய ஒவ்வொரு மாணவரும், அவர்களது வங்கிக் கணக்குகளில் 1,000 ரூபாய் தொகையை நேரடியாக மாதந்தோறும் பெறுவார்கள்.
  • பாடப்புத்தகங்கள், பொது அறிவுப் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை வாங்க இந்த நிதியானது பயன்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டம் இளைஞர்களுக்கு அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான வளங்களை வழங்குவதன் மூலம், அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது மேலும் அவர்களை மாநிலம் மற்றும் தேசத்தின் எதிர்கால தூண்களாக மாற்ற இத்திட்டம் உதவுகிறது.
  • இது மாணவர்கள் பலன்களைப் பெறவும், உயர் கல்வியைத் தொடரவும் உதவுகிறது.

32.தோழி பெண்கள் தங்கும் விடுதி

தொடங்கப்பட்ட தினம்:

  • ஜனவரி 4, 2024.

நோக்கம்:

  • பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவான தங்குமிட வசதிகளை வழங்குகிறது.

பயனாளிகள்:

  • பணி புரியும் பெண்கள் வேலை, பயிற்சி அல்லது பணி சார்ந்த வருகைகளுக்காக வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்குச் செல்பவர்கள் இத்திட்டதின் பயனாளிகள் ஆவர்கள்.

தகுதி:

  • பணிபுரியும் பெண்கள் மற்றும் வேலை தொடர்பான பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு மாவட்டங்களில் தங்குமிடம் தேவைப்படும் பெண்கள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • இந்த விடுதிகளுக்கு "தோழி" என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  • பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் தங்கும் வசதியை வழங்கும் வகையில் இவ்விடுதிகள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • அறைகள் தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் பதிவு செய்யப் படுகிறது.

இடங்கள்:

  • தமிழகம் முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மொத்தம் 11 தங்கும் விடுதிகள் நிறுவப்பட்டுள்ளது.

வசதிகள்:

  • இதில் சாப்பாட்டு அறை, ஓய்வறை, குழந்தைகள் காப்பகம், அருகலை, குளிரூட்டி, மின்தூக்கி, சலைவை இயந்திரம், இஸ்திரிப் பலகை, இஸ்திரிப்பெட்டி, குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சேமிப்பு அறை, நுண்ணலை அடுப்பு, நீர் குளிர்விப்பானுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் உள்ளன.
  • பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபடுகிறார்கள்.
  • இங்கு பணிபுரியும் பெண்களின் குடும்பங்கள்/உறவினர்களுக்குத் தங்குமிடம் வழங்கப் படுவதில்லை.

33.இன்னுயிர் காப்போம்: 48 மணி நேர உயிர் காக்கும் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • டிசம்பர் 18, 2021.

அமைச்சகம்/தலைமை முகமை:

  • போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையகம்.

நோக்கம்:

  • சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அளிப்பதன் மூலம் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைக்கப்படுகிறது.

பயனாளிகள்:

  • தமிழ்நாட்டிற்குள் அனைத்து சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் இருப்பிட நிலை அல்லது வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்துகிறது.

தகுதி:

  • தமிழகத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அரசு செலவில் அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம் - 48 மணி நேர உயிர் காக்கும் திட்டம்" என்ற திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகளை உள்ளடக்கிய 609 அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள், சரியான நேரத்தில் மற்றும் சரியான மருத்துவச் சேவையை உறுதி செய்கிறது.
  • சாலை விபத்துக்குப் பிறகு முதல் 48 மணி நேரம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் உடல்நலக் காப்பீட்டு அட்டை உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள், பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட அனைவருக்கும் இந்த காலக்கட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்தத் திட்டமானது 81 தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சைப் பொதிகளை உள்ளடக்கிய வகையில் இதன் உச்ச வரம்பு ரூ. 1 லட்சம் ஒரு நபருக்கு ஆகும்.
  • பாதிக்கப்பட்டவர் அனுமதிக்கப்படும் மருத்துவமனையில் முதல் 48 மணிநேரம் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
  • பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது 48 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டால், பின்வரும் வழிகாட்டுதல்கள் பொருந்தும்:
  • பாதிக்கப்பட்டவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டால், அதே மருத்துவமனையில் சிகிச்சையானது அவருக்குத் தொடரப்படுகிறது.
  • பாதிக்கப்பட்டவர் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளியாக இல்லாமலோ அல்லது சிகிச்சை அளிக்கப் படாமலோ இருந்தால், இங்கு நோயாளி நிலைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இலவசச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள்.
  • பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல விருப்பமில்லாமல் இருந்தாலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ அல்லது தாங்கள் விரும்பும் வேறு மருத்துவமனையிலோ சிகிச்சையைத் தொடர விரும்பினால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் சிகிச்சையைத் தொடரலாம்.
  • இன்னுயிர் காப்போம் - 48 மணி நேர உயிர் காக்கும் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் விவரங்கள் மாவட்ட வாரியாகப் பட்டியலிடப்பட்டு இணைய தளங்களில் பொது அணுகலை (https://cmchistn.com) வழங்குகிறது.

34.மக்களைத் தேடி மருத்துவம்

தொடங்கப்பட்ட தினம்:

  • ஆகஸ்ட் 5, 2021.

அமைச்சகம்/தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதன்பயனாளிகள் ஆவர்.

தகுதி:

  • நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்த நிலையில், தமிழ்நாட்டில் வசிக்கும் மற்றும் மருத்துவச் சேவைகள் தேவைப்படும் அனைத்து நபர்களும் இதன் பயனாளிகள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட"மக்களைத் தேடி மருத்துவம்" என்ற இத்திட்டம், குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இப்பணிக்காக சிறப்புத் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 4500 வழங்கப் படுகிறது என்ற வகையில் அவர்கள் களத்தில் ஓய்வின்றி உழைக்கிறார்கள்.
  • இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தச் சுகாதாரப் பணியாளர்கள் தினமும் 10 வீடுகளுக்குச் சென்று, சுமார் 20 பேரைச் சந்தித்து, அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளை ஆவணப்படுத்தி, தேவையான மருந்துகளையும், சிகிச்சைகளையும் அளித்து வருகிறார்கள்.
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்தம் வீடுகளுக்கு சென்று மருந்துகளை வழங்குதல், நோயிற்கானச் சிகிச்சை மற்றும் பாரம்பரிய சிகிச்சைச் சேவைகளை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய-டயாலிசிஸ் பைகளை விநியோகித்தல் மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை பரிந்துரைத்தல் ஆகியவை இந்தச் சேவைகளில் அடங்குகிறது.
  • இந்த முயற்சியில் பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், நோயிற்கான சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், பாரம்பரியச் சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நடுத்தர அளவிலான சுகாதார வழங்குநர்கள்பங்கு பெறுகிறார்கள்.
  • முதற்கட்டமாக, சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய பெருநகரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை உள்ளடக்கிய 50 மண்டலங்களில் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

35.கனவு இல்லம்

தொடங்கப்பட்ட தினம்:

  • பிப்ரவரி 19, 2024.

அமைச்சகம்/தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, வீடு இல்லாத அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வீடற்ற தனிநபர்கள் இத்திட்டத்தின் பயனாளிகள் ஆவர்கள்.

தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடியிருப்பாளர்களாகவும், மாநிலத்தின் கிராமப் புறங்களில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

கூடுதல் தகவல்:

  • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட இந்தத் திட்டம், குடிசைகள் இல்லாத மாநிலத்தை அடைய 2010 ஆம் ஆண்டு “கலைஞர் வீட்டு வசதித் திட்டம்” என்று புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

பலன்கள்:

  • தமிழக பட்ஜெட்டில் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை, தொலைபேசி எண், தேர்தல் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் தற்போதைய வசிப்பிட முகவரி ஆகியவை ஆகும்.

36.புதுமைப் பெண் திட்ட விவரங்கள்

தொடங்கப்பட்ட தினம்:

  • செப்டம்பர் 5, 2022.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • தமிழக அரசு நடத்தும் அரசுப் பள்ளிகளில் (5 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) சேரும் பெண் மாணவர்களுக்கு, அவர்கள் டிப்ளமோ அல்லது இளங்கலைப் படிப்பை முடிக்கும் வரை மாதந் தோறும் ₹1,000 உதவித் தொகையை வழங்குகிறது.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் மாணவர்களுக்கு உயர்தர முதுநிலைக் கல்விக்கான அணுகலை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பயனாளிகள்:

  • தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதன் பயனாளிகள் ஆவர்.

பலன்கள்:

  •  ஒரு மாணவருக்கு மாதம் ₹1,000 வழங்கப் படுகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளம்:

  • https://www.pudhumaipenn.tn.gov.in/.

அம்சங்கள் & கூடுதல் தகவல்:

  • இந்தத் திட்டம் பெண் மாணவிகளை அவர்களின் கல்வியை முடிக்க ஊக்குவிக்கவும், இளவயதுத் திருமணங்களை தடுக்கவும் இந்த நிதி உதவியை வழங்குகிறது.
  • கல்வியைத் தொடரும் பெண் மாணவிகளின் படிக்கும் துறையைப் பொருட்படுத்தாமல், மாதந் தோறும் ₹1,000 வழங்கப்படுகிறது.
  • இத்திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பெண் கல்வியைத் தடுக்கும் விதமாக அமையும் சமூகத் தடைகளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெறும் இலக்குடன் ஆண்டுக்கு ₹698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளிக்கு வழக்கமான வருகையை உறுதி செய்வதற்காக, நிதி நேரடியாக மாணவியர்தம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
  • ஆரம்ப கட்டத்தில், 613 மாணவர்களுக்கு நிதிப் பரிவர்த்தனைகளுக்காக பற்று அட்டை வழங்கப் பட்டது.
  • திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 6,500 மாணவர்கள் பல்வேறு கல்வித் துறைகளில் இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது பயனடைந்து வருகின்றனர்.

37."பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்"

தொடங்கப்பட்ட தினம்:

  • செப்டம்பர் 5, 2022.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு .

நோக்கம்:

  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 26,000 புதிய வகுப்பறைகள் கட்டப் பட்டுள்ளது.

பயனாளிகள்:

  • தமிழகம் முழுவதும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆவர்.

தகுதி:

  • தமிழகத்தில் உள்ள அரசுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • புதிய வகுப்பறைகள் கட்டுவதன் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • தமிழகத்தில் 196 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 36 மாவட்டங்களை மையமாக வைத்து முதற் கட்டமாக ₹784 கோடி செலவில் 5,351 வகுப்பறைகளானது கட்டப்படவுள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்