TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 08

July 9 , 2024 186 days 1551 0

(For English version to this please click here)

43. முதல்வரின் புத்தாய்வுத் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • செப்டம்பர் 29, 2022.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மைக் கழகத்துடன் இணைந்து சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை இத்திட்டதைச் செயல்படுத்துகிறது.

நோக்கம்:

  • இளம் தொழில் வல்லுநர்களின் திறமைகள் மற்றும் திறன்களைப் பயன்படுத்தித் தமிழகத்தில் நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துதல், மேலும் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவது இதன் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • இதன் மூலம் ஆண்டுதோறும் 30 இளம் வல்லுநர்கள் ஆய்வுதவித் தொகைக்காகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

தகுதி:

  • இவர்கள் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தின் போது 22 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.
  • தமிழில் புலமை கட்டாயம் இருக்க வேண்டும்.
  • ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில்முறைப் படிப்புகளில் முதல் வகுப்பு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை அறிவியல்).
  • கலை அல்லது அறிவியல் படிப்புகளில் முதல் வகுப்பு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகவல்:

  • பணிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும்.
  • மாத சம்பளம் ரூ. 65,000 உடன், கூடுதலாக மாதாந்திர உதவித் தொகை ரூ. 10,000 ஆனது பயணம், அலைபேசி மற்றும் தகவல் தரவு உபயோகத்திற்காக வழங்கப்படுகிறது.
  • இப்பயிற்சியானது, சென்னையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் 30 நாட்கள் வகுப்பறை பயிற்றுவிப்பை உள்ளடக்கியது என்பதோடு இப்பயிற்சியானது மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் கள நிபுணர்களால் ஒருங்கிணைக்கப் படுகிறது.

44. டால்பின் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • 06.11. 2023.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • மத்திய அரசின் வனத்துறையின் மேற்பார்வையில் தமிழக அரசானது இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

நோக்கம்:

  • டால்பின் திட்டம் தமிழ்நாட்டின் கடலோர வாழ்விடங்களில் உள்ள டால்பின்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் உள்ள கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறிப்பாக, மன்னார் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியில் 9 வகையான டால்பின்கள் காணப்படுகின்றன.
  • டால்பின்கள் கடல் சூழலில், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பயனாளிகள்:

  • கடலோரப் பகுதிகளில் உள்ள டால்பின்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களாகும்.
  • இத்திட்டம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் கடல்வாழ்ப் பல்லுயிர்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனளிக்கிறது.

கூடுதல் தகவல்:

  • டால்பின் திட்டமானது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • பாதுகாப்பு முயற்சிகள், கடல் மாசுபாட்டைக் கண்காணித்தல், நிலையான மீன்பிடி நடைமுறைகளை ஊக்குவித்தல், காலநிலை மாற்றத்தைத் தழுவுதல், ஒலி மாசுபாட்டைத் தணித்தல் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் டால்பின்களின் நலனுக்கும், உயிர் வாழ்வதற்கும் பங்களிக்கிறது.
  • நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைக் குழுக்களைப் பயன்படுத்தி மீனவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
  • நீர் வளத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் வீடு, கல்வித் தரத்தை மேம்படுத்துதல், சுகாதார வழிகாட்டுதல், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, விவசாய உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கான இணைப்புகளை உருவாக்குதல், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, பெருநிறுவனக் கடன் வழங்குதல், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் தரவு நிர்வாகம் போன்றவை இத்திட்டத்தால் மேம்படுகிறது.

45. குட்டிக் காவலர் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • அக்டோபர் 12, 2022.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம், சாலைப் பாதுகாப்பு பற்றி கற்பித்து அவர்களைச் சாலைப் பாதுகாப்புத் தூதுவர்களாக மாற்றுவதாகும்.

பயனாளிகள் :

  • இளம் பள்ளி குழந்தைகள் ஆவர்.

தகுதி:

  • இந்த திட்டத்தில் இளம் பள்ளி குழந்தைகள் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • குழந்தைகளுக்கான சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி வருமாறு: நான் இன்று முதல் குட்டி காவலராக பொறுப்பேற்கிறேன்.
  • எனது பயணத்தின் போது சாலை விதிகளை கவனமாகப் பின்பற்றுவதாகவும், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிப்பதாகவும் உறுதி அளிக்கிறேன்.
  • ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
  • இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது இருக்கைப் பட்டையை அணிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவேன்.
  • இந்த சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு, அதை முழு மனதுடன் பின்பற்ற உறுதியளிக்கிறேன்."
  • சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆசிய சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  • இதற்கானச் சான்றிதழ் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டது.
  • உலகிலேயே இந்தியாவில்தான் அதிக சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்ற நிலையில் நாட்டிலேயே சாலை விபத்துகள் ஏற்படும் முதல் மூன்று மாநிலங்களில், தமிழ்நாடும் உள்ளது.
  • தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன.

46. சிங்கார சென்னை 2.0 திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • ஆகஸ்ட் 24, 2021.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகும்.

நோக்கம்:

  • சென்னை நகரின் தூய்மை, பசுமை, நீர் மேலாண்மை, பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டு மொத்த நல்வாழ்வை பல இலக்குத் திட்டங்கள் மூலம் மேம்படுத்துதல் ஆகும்.

பயனாளிகள்:

  • சென்னை நகரின் குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகள் ஆவர்.

கூடுதல் தகவல்:

  • சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகளை அங்கீகரிக்கவும், கண்காணிக்கவும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றினை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய நிர்வாக இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
  • தமிழக முதல்வரின் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி பகுதியில் 11 புதிய பூங்காக்கள், 2 விளையாட்டு மைதானங்கள், 10 கடற்பாசிப் பூங்காக்கள், 2 கல்லறைகள், 16 பள்ளிக் கட்டிடங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க விக்டோரியா பொது கூடம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுப் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
  • தூய்மை சென்னை: உயிரியல் முறைகள் மூலம் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுதல், நிலத்தைச் சீரமைத்தல், நுண் உரம் தயாரிக்கும் மையங்களை வலுப்படுத்துதல், கட்டிடம் மற்றும் கட்டட இடிப்புக் குப்பைகளை நவீன முறையில் அகற்றுதல், குடிசைப் பகுதிகளில் உள்ள அதிகப்படியான குப்பைகளை அகற்றுதல், இறைச்சிக் கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களை நவீனப்படுத்துதல் போன்ற செயல்முறைகளை உள்ளடக்கியதாகும்.
  • பசுமை சென்னை: நகரம் முழுவதும் பெரிய அளவில் மரக் கன்றுகளானது நடப்படுகிறது.
  • நீர் வளம் நிறைந்த சென்னை: குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துதல், நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களைச் சீரமைத்தல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அவற்றைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த இடங்களாக மாற்றுவதாகும்.
  • அழகிய சென்னை: பாரம்பரியக் கட்டிடங்களை அலங்கார விளக்குகளுடன் புதுப்பித்தல், பாலங்களின் கீழ் பகுதிகள், சாலை சந்திப்புகள் மற்றும் சாலை இடைவெளிகளை அழகுபடுத்துதல் போன்ற செயல்முறைகளை உள்ளடக்கியதாகும்.
  • உள்கட்டமைப்பு மேம்பாடு: புதிய சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் போன்ற நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகும்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கும், பாதசாரிகளுக்கும் ஏற்ற நடைபாதைகளை உருவாக்குவதாகும்.
  • ஆரோக்கியமான சென்னை: நகரம் முழுவதும் பொதுக் கழிப்பறைகள் அமைத்தல், பொதுக் கழிப்பறைகளைப் பராமரித்தல் மற்றும் தரமாக மேம்படுத்துதல், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை உருவாக்குதல், மோட்டார் அல்லாத வாகனங்களின் மூலம் போக்குவரத்தை மேம்படுத்துதல், ஒவ்வொரு வீட்டையும் கழிவுநீர் அமைப்புடன் இணைக்க விரிவாக்கப்பட்டப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளை நிறுவுதல் போன்ற பணிகளை இது உள்ளடக்கியதாகும்.
  • கல்வி மேம்பாடு: சென்னைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வீட்டில் படிக்க போதிய இடவசதியின்றி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கற்றல் மையங்கள் அமைத்தல், நவீன நூலகங்களை நிறுவுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகும்.

47. அயோத்திதாசர் பண்டிதர் வீட்டு வசதித் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • 02-09-2023.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த வேண்டும்.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் ஒட்டு மொத்த உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான விடுதி வசதிகளை வழங்குதல் வேண்டும்.

பயனாளிகள்:

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினச் சமூகங்கள்.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்.

தகுதி:

  • நியமிக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிச் சமூகங்கள்.

கூடுதல் தகவல்:

  • உயர் கல்விக்கு விடுதிகள் தேவைப் படும் நிலையில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்.
  • இத்திட்டம் 1000 கோடி ரூபாய் செலவில் ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
  • மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளில் நான்கு புதிய தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

48. அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • மே 30, 2023.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ்(MSME), தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • பட்டியலிடப்பட்டச் சமூகத்தினர் (SCs), பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (STs), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) மத்தியில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும்.
  • ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு நிதி உதவி மற்றும் வணிக மேம்பாட்டு ஆதரவை வழங்குவதாகும்.
  • வணிகம் மற்றும் சேவையின் பல்வேறு துறைகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பதாகும்.

பயனாளிகள்:

  • தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தினர் (SCs), பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (STs), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) ஆகிய சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்கள் ஆவர்.
  • புதிய முயற்சிகளை நிறுவ அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவுபடுத்த விரும்பும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆவர்.

தகுதி:

  • வயது 18 முதல் 55 வயது வரை.
  • குறிப்பிட்ட கல்வித் தகுதி தேவையில்லை.
  • தகுதியான கூட்டாண்மை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வரையறுக்கப்பட்டப் பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் இந்நிறுவனங்களைப் போல் உள்ள பிற நிறுவனங்களும் இதில் அடங்குகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • நிதி உதவி என்பது வங்கிகளிடமிருந்து 65% நிதியுதவி மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் 35% பங்குகளுடன் கூடிய கடனைக் கொண்டுள்ளது என்பதோடு இக்கடனில் 6% மானியமும் அடங்கும்.
  • பயனாளிகளுக்கு இலவச தொழில்முனைவு மற்றும் திட்டம் சார்ந்த பயிற்சியை இது வழங்குகிறது.
  • இக்கடன்கள் விவசாய உபகரணங்கள், குளிர்பதன கிடங்கு, திருமண மண்டபங்கள், பெட்ரோல் பம்புகள், எரிவாயு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வகையான வாகனங்களைப் பெறுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.
  • இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல், தொழில்முனைவு மூலம் விளிம்புநிலைச் சமூகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

49. ஸ்டார்ட்அப் தமிழா

தொடங்கப்பட்ட தினம்:

  • நவம்பர் 24, 2023.

ஸ்டார்ட்அப் தமிழா

  • ஸ்டார்ட்அப் தமிழா என்பது புத்தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் முதலீடுகள் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டின் முக்கிய தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும், முதல் புத்தொழில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும்.

நிகழ்ச்சி இலக்குகள்:

  • தொழில்முனைவோரை ஒரு வெகுஜன இயக்கமாக முன்னெடுக்க தமிழக மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • வேலை தேடுவதில் இருந்து வேலை உருவாக்கும் மனநிலைக்கு மாற்ற வேண்டும்.
  • முதலீட்டாளர்கள் மற்றும் அதிக நிகர மதிப்பு செல்வம் கொண்ட தனி நபர்களுக்கான சொத்துப் பிரிவாக தொடக்க முதலீடுகளை ஊக்குவிக்கிறது.
  • நம் மாநிலத்தை 1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களிப்பது மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் மூலம் வளர்ச்சியை தீவிரமாக ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.
  • சமூகம், பெண்கள், கிராமப்புறங்களில் கவனம் செலுத்தும் முதலீட்டின் தாக்கம் மற்றும் மாற்றத்தை முன்னிலைப் படுத்துவதாகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்