TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் – 11

July 12 , 2024 6 days 988 0

(For English version to this please click here)

61. 'இ-முன்னேற்றம்' மற்றும் 'ஐடி நண்பன்' இணையதளங்கள்

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை.

நோக்கம்:

  • முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைச் சேகரிப்பது இதன் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • தமிழக அரசு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள்.

தகுதி:

  • தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துக் குடியிருப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள்.

கூடுதல் தகவல்கள்:

  • முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட ‘இ-முன்னேற்றம்’ மற்றும் ‘ஐடி நண்பன்’ இணையதளங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

மின் முன்னேற்றம்:

  • 1 லட்சம் கோடி மதிப்பிலான 200 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றத்தை தமிழக தலைமைச் செயலர் தலைமையிலான உயர்மட்டக் குழு கண்காணிக்கும் வகையில் 'இ-முன்னேற்றம்' இணையதளம் உருவாக்கப்பட்டது.
  • இணையதளத்தில் திட்ட விளக்கங்கள், ஒப்பந்தத் தேதிகள், தொடக்க தேதிகள், இருப்பிடங்கள், நிதி நிலைமை, மாதாந்திர அளவிலான முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
  • இது பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அனுமதிக்கிறது.

ஐடி நண்பன்:

  • தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிக்கல்களுக்கான கருத்துத் தளமாக 'ஐடி நண்பன்' இணைய தளம் செயல்படுகிறது.
  • இந்த இணைய தளங்களில் தகவல் தொழில்நுட்பக் குழுக்கள், தங்கள் உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்க இது உதவுகிறது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவுகள் மற்றும் ஒப்பந்த விவரங்களை இதன் மூலம் பயனர்கள் பார்க்கலாம்.
  • மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் தீர்வுகளுடன், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் மற்றும் தற்போதையக் கொள்கைகள் குறித்த கருத்துக்களை நன்கு இடுகையிடும் ஒரு வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.
  • இது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், வர்த்தக வளர்ச்சியை எளிதாக்கவும் வேண்டி வடிவமைக்கப் பட்டுள்ளது.

தமிழ் மென்பொருள்:

  • தமிழ் இணையக் கல்விக் கழகம், முன்னர் வெளியிடப்பட்ட இரண்டு தமிழ் மென்பொருள் கருவிகளை மேம்படுத்தியுள்ளது:
  • 'கணினி விசைப்பலகை' மற்றும் 'தமிழ்நாடு யூனிகோட் மாற்றி' ஆகியவை, 'கீழடி-தமிழ்நாடு விசைப்பலகை' மற்றும் 'தமிழி-தமிழ்நாடு யூனிகோட் மாற்றி' என பெயர்மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
  • இந்த மென்பொருள் கருவிகள் தமிழ் இணையக் கல்விக் கழக இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

62. கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • 07-02-2024.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

நோக்கம்:

  • கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்தி, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், தயார் செய்யவும், இலவச விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறது.

பயனாளிகள்:

  • தமிழக மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்.

தகுதி:

  • பயனாளி மாவட்டம்/மாநில/தேசிய அளவில் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.
  • விளையாட்டு வீரர் தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • பயனாளி கிராமப்புறத்தில் வசிக்கும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.

கூடுதல் தகவல்கள்:

  • பின்வரும் விளையாட்டுகளுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்:
  • மட்டைப் பந்தாட்டம்
  • கால் பந்தாட்டம்
  • கைப் பந்தாட்டம்
  • சிலம்பம்
  • எறி பந்தாட்டம்
  • கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் பற்றிய தகவல்களுக்கு, கிராமப் பஞ்சாயத்து அலுவலகம் அல்லது தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மாவட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
  • கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்  கீழ், தமிழகத்தில் உள்ள 12,000 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 33 உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய உபகரணப் பெட்டியானது வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் கிடைக்கிறது.
  • இந்தப் படிவத்தின் மூலம் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இலவச விளையாட்டுக் கருவிகளைப் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

63. மக்களை தேடி ஆய்வக சேவைத் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • பிப்ரவரி 05, 2024.

நோக்கம்:

  • சமூக சுகாதார ஆய்வக சேவை’ திட்டத்தை அறிமுகப்படுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 63 வகையான மாதிரிகளைப் பரிசோதனை செய்து முடிவுகளைப் பெற என்று பொது மக்களை அனுமதிப்பதன் மூலம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்தப் பரிசோதனைக்காக என்று மக்கள் செல்வதைக் குறைக்கிறது.

பயனாளிகள்: 

  • ஆய்வகச் சோதனைகள் மற்றும் சேவைகள் தேவைப்படும் தமிழ்நாட்டின் குடியிருப்பாளர்கள்.

தகுதி: 

  • ஆய்வகப் பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் தமிழக மக்கள்.

கூடுதல் தகவல்கள்: 

  • நாகர்கோவில் நகராட்சியின் தொல்லவிளையில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இத்திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.
  • தமிழ்நாட்டில் 2,686 ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளன என்ற நிலையில் அவை ஒவ்வொன்றிலும் 29 வகையான ஆய்வக வசதிகள் உள்ளன.
  • தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரிவானப் பரிசோதனை சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

64. திறனறி தேர்வுத் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • 18 ஏப்ரல் 2024.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • அரசுப் பள்ளி மாணவர்களை மின்னணு அறிவியலில் பணி புரிய ஊக்குவிக்கவும், அவர்களின் கல்விக்கு நிதி உதவி செய்வதும் இதன் நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • தமிழ்நாட்டின் மாணவர்கள் - மின்னணு அறிவியலில் ஆர்வம் உள்ள, அதிலும் குறிப்பாக கிராமப் புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்.

தகுதி:

  • மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • தொலைதூர அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் குறைக்கடத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.
  • தற்போது 10 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • இத்திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் போது அறிமுகப்படுத்தினார்.
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 100,000 மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ₹1,000, ஆண்டுதோறும் ₹12,000 பெறுகிறார்கள்.
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு இணையான வாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட அறிவுறுத்தல்களைப் பெறுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டம் குறிப்பாக பெண் மாணவர்களை உயர்கல்வி பெற ஊக்குவிக்கிறது.
  • இத்திட்டம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்குவதற்காக, தமிழகம் முழுவதும் அதனைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்:

  • தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்று.
  • அரசுப் பள்ளியில் சேர்த்ததற்கான கல்விச் சான்று.
  • கல்வி ஆவணங்கள்.
  • மின்னணு அறிவியல் அல்லது அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஆர்வம் அல்லது ஈடுபாடு கொண்டிருப்பதற்கான சான்று.

கூடுதல் தகவல்கள்:

  • கிராமப்புறங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மின்னணு அறிவியல் துறையில் பணியினை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்காகவும், அவர்கள் கல்வி கற்பதற்காகவும், திறனறி தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம், மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடனான ஒரு கூட்டு முயற்சியாகும் என்பதோடு இது மாணவர்களுக்கு கல்வி ஆதரவை வழங்குவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியுதவி, மாணவர்கள் தங்கள் படிப்பிலும், எதிர்கால வாழ்க்கையிலும் சிறந்து விளங்க தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்து, எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர உதவுகிறது.

65. வேர்களைத் தேடி திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • டிசம்பர் 27, 2023.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புலம்பெயர் தமிழர்கள் நலத்துறை, தமிழ்நாடு அரசு.

நோக்கம்:

  • புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களை தமிழ்நாட்டின் கலாச்சார வேர்களுடன் மீண்டும் இணைக்கவும், தமிழ்நாட்டிற்கும், உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளையும், புரிந்துணர்வையும் மேம்படுத்துவது இதன் நோக்கம் ஆகும்.

பயனாளிகள்:

  • வெளிநாட்டில் வாழும் 18 முதல் 30 வயதுடைய தமிழ் வம்சாவளி இளைஞர்கள்.

தகுதி:

  • வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளி இளைஞர்கள்.
  • வயது 18 முதல் 30 வயது வரை.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் தமிழ் இளைஞர்களுக்காக, தமிழ்நாடு கலாச்சாரச் சுற்றுலா நடத்தப்படுகிறது.
  • பங்கேற்பாளர்கள் தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கலாச்சார ரீதியான வளமான இடங்களைப் பார்வையிடுகிறார்கள்.
  • சுற்றுலா மற்றும் தங்குமிடச் செலவுகளை ஈடுகட்ட தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது.
  • இத்திட்டத்தின் முதல் பயணம் மாமல்லபுரத்தில் இருந்து தொடங்கியது என்ற நிலையில், இதன் பங்கேற்பாளர்கள் தஞ்சை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிக் கோட்டை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்றனர்.
  • பங்கேற்பாளர்கள் தமிழ் கட்டிடக்கலை, சிற்பம், இசை, நடனம், ஓவியம், சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் தமிழ் இலக்கியம் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுகிறார்கள்.
  • இத்திட்டத்தில் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி அமர்வுகள் உள்ளன.

கூடுதல் தகவல்கள்:

  • வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கவும், கல்வி அல்லது வேலைக்காக தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு வழிகாட்டவும் தமிழக அரசு இத்திட்டத்தை அறிவித்தது.
  • இத்திட்டத்தைத் தமிழகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
  • ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து மொத்தம் 58 தமிழ் இளைஞர்கள் முதல் சுற்றுப்பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  • வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் "அயலகத் தமிழர் நலன்" தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் திட்டம் தமிழ் பாரம்பரியத்துடன் ஆழமான தொடர்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் பங்கேற்பாளர்கள் அந்தந்த நாடுகளில் தமிழ் கலாச்சாரத்திற்கான கலாச்சாரத் தூதர்களாக செயல்பட அவர்களை ஊக்குவிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்