(For English version to this please click here)
சரத்து 370 மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமைகளைத் திரும்ப பெறுதல்
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென இனி தனி அரசியலமைப்பு, கொடி அல்லது கீதம் ஆகியவை இருக்காது.
- ஜம்மு காஷ்மீர் குடிமக்களுக்குக்கென ஏற்கனவே வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை இனி வழங்கப் படாது.
- இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக புதிய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் காணப் படும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் ஜம்மு காஷ்மீர் குடிமக்களுக்கு இனி கிடைக்கும்.
- நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கப் பயன்படுத்தக்கூடிய இந்திய அரசியலமைப்பின் சரத்து 360, இப்போது இம்மாநிலத்திற்கும் பொருந்தும்.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இனி இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் பொருந்தும்.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
- ஜம்மு காஷ்மீரின் ரன்பீர் தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக இந்திய தண்டனைச் சட்டமும் அமலுக்கு வரும்.
- சரத்து 370 இன் விதிகளிலிருந்து உருவான சரத்து 35Aவும் செல்லாது.

வழக்கொழியச் செய்ததற்கு ஆதரவான வாதங்கள்
தற்காலிக இயல்பு
- இந்த சட்டப்பிரிவு தொடர்பான முன்னேற்பாடானது தற்காலிகமானது.
- இந்தச் சரத்தினை ரத்து செய்தது தான் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதற்கான இறுதிப் படியாகும்.
சரத்து 14
- மாநிலத்திற்கு வெளியே திருமணம் செய்யும் பெண்களுக்கு எதிராக சரத்து 35A பாகுபாடு காட்டுகிறது.
- அம்மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மட்டுமே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலத்தினை வாங்க முடியும்.
- இதன் மூலம் அது சமத்துவத்திற்கான உரிமையை மீறுகிறது (விதி 14).
உள்ளடக்கியத் தன்மை
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென தனியான கொடியோ அல்லது அரசியலமைப்போ காணப்படாது.
- இதிலிருந்து இம்மாநிலமானது இனி இந்தியாவிலிருந்து ஒரு தனி மாநிலமாக காணப்படாது மாறாக அது இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக காணப்படும் என்று அர்த்தமாகும்.
மறுசீரமைப்பிற்கான வாக்குறுதி
- இது எளிதில் ஊறுபாடு கொள்ளத் தக்க எல்லையினைக் கொண்ட மாநிலமாக இருப்பதன் காரணமாக ஒரு தற்காலிகக் காலத்திற்கு இம்மாநிலமானது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.
- இம்மாநிலத்தில் இயல்பு நிலை ஏற்பட்டவுடன் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப் படும்.

சிறப்பு நிலையினை ஒழித்ததற்கு எதிரான வாதங்கள்
தனித்துவமான இயல்பு
- இம்மாநிலம் தனித்துவமான உறவினை மத்திய அரசுடன் கொண்டிருந்தது.
- இந்திய அரசின் ஆதிக்கத்தின் கீழான கட்டுப்பாட்டின் கீழ், இம்மாநில அரசின் உள் இறையாண்மையை ஜம்மு காஷ்மீர் மகாராஜா விட்டுக்கொடுக்கவில்லை.
வண்ணமயமான சட்டத்தின் கோட்பாட்டை மீறுதல்
- ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சபையினை அம்மாநிலச் சட்ட மன்றத்திற்குப் பதிலாக என்று உள்ளீடாக மாற்றுவதன் மூலம் சரத்து 370 ஐ மறைமுகமாக குடியரசுத் தலைவர் திருத்தினார்.
- வண்ணமயமான சட்டக் கோட்பாடு என்பது நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாகவும் செய்ய முடியாது என்பதைக் குறிக்கிறது.
மக்களாட்சியினை மீறல்
- அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தினை நீக்குவது குறித்து, அதன் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் அல்லது சட்டமன்றம் அல்லது வாக்கெடுப்பு மூலம் மக்களின் விருப்பத்தை அறியாதது எனபது ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் அடிப்படை உரிமைகளின் அடிப்படைக் கொள்கையை மீறுகிறது.

வழக் கொழித்தலுக்கான நேரம்
- 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறப் படுகிறது ஏனெனில் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்த போது ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சரத்து 3
- மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது சரத்தினை மத்திய அரசின் இந்த முடிவானது மீறுவதாகவும் கூறப்படுகிறது.
- புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள மாநிலத்தின் எல்லைகளை மாற்றுவதற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது விதியானது பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
- இதன் படி ஒரு மசோதா "எந்தவொரு மாநிலத்தின் பகுதி, எல்லைகள் அல்லது பெயரைப் பாதிக்கிறது" எனும் சூழ்நிலையில் ஒரு மாநிலத்தின் மறுசீரமைப்பை முன்மொழியும் எந்தவொரு மசோதாவையும் அதன் சட்டமன்றத்திற்குக் குடியரசுத் தலைவர் அனுப்புவது கட்டாயமாகும்.
அரசியலமைப்பு சவால்கள்
- குடியரசுத் தலைவரின் உத்தரவானது சரத்து 370 உட்பிரிவு (3) இன் படி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்வதனைக் கோரியது.
- அத்தகைய ஒரு மாற்றத்தினைச் செய்வதற்கு ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையினை குடியரசுத் தலைவர் கோருவார்.
- இருப்பினும், 2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் உத்தரவானது, பின்வரும் விதிமுறைகளை மாற்றியமைத்து சரத்து 367க்கு ஒரு துணைப் பிரிவைச் சேர்க்கிறது:
- "ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசியலமைப்பு சபை" என்பது "ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டமன்றம்" என்று பொருள்படும்.
- “ஜம்மு காஷ்மீர் மாநில அரசு” என்பது “ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மற்றும் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி செயல்படுவது” என்று பொருள்படும்.

- பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அல்லது சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வராமல் 370வது சரத்தின் கீழ் சுயாட்சியை நீர்த்துப் போகச் செய்ய அரசாங்கம் முயன்றது.
- குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலம் மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 35A சரத்தினைச் சேர்த்தது என்ற அடிப்படையில் இந்த விதியும் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டது.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தினை யூனியன் பிரதேசமாக மாற்றுவது சரத்து 3 என்ற விதியினை மீறுவதாகும், ஏனெனில் இந்த மசோதாவானது அந்த மாநிலச் சட்டமன்றத்தால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை.
- மாநில மறுசீரமைப்பு மசோதா தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவிற்கு மாநில அரசின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.
- இருப்பினும், ஜம்மு காஷ்மீர் தற்போது ஆளுநர் ஆட்சியின் கீழ் இருப்பதால், ஆளுநரின் ஒப்புதலே அந்த அரசாங்கத்தின் ஒப்புதலாகக் கருதப் படுகிறது.

கூட்டாட்சித் தொடர்பான பிரச்சினைகள்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தத்தம் என்பது இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கை போன்றது, இதன் மூலம் அவ்விரண்டு நாடுகளும் ஒன்றாக முடிவு செய்தது என்று அர்த்தமாகும்.
- 2017 ஆம் ஆண்டு சந்தோஷ் குமார் எதிர் ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்கள் வழக்கில், வரலாற்றுக் காரணங்களால் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- 2016 ஆம் ஆண்டு எஸ்பிஐ எதிர் ஜாபர் உல்லா நேரு வழக்கில், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் இல்லாமல் 370வது சரத்தினை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சரத்து 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் அமைதி மற்றும் பாதுகாப்பின் அறிகுறிகள்
கல் வீசுதல் மற்றும் போர்க்குணம் குறைப்பு
- தேசியப் புலனாய்வு முகமை (NIA) போன்ற மத்திய அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் பலவேறு நடவடிக்கைகள் அதிகரிப்பின் காரணமாக அவை கல் வீச்சு தொடர்பான வழக்குகள் குறைய வழி வகுத்தன.
- 2019 ஆம் ஆண்டில் 618 ஆக இருந்த கல் வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கையானது, 2020 ஆம் ஆண்டு 222 ஆக குறைந்துள்ளது.
- பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதால் ஏற்பட்ட காயங்களானது 2019 ஆம் ஆண்டு 64 ஆக இருந்தது, இது 2021 ஆம் ஆண்டு 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குடிமக்களுக்கு ஏற்படும் காயங்களின் குறைப்பு
- பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் தடியடி நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் காயங்களானது 339 (2019) என்ற அளவிலிருந்து 25 (2021) ஆக குறைக்கப் பட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் 20 சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பவங்கள் மட்டுமே பதிவாகியதில் இருந்து, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையானது ஜம்மு காஷ்மீரில் மேம்பட்டுள்ளது.
போராளிக் குழுக்களின் கைது
- போராளிக் குழுக்களின் கைது நடவடிக்கைகளானது, 2019 ஆம் ஆண்டு 82 என்ற அளவில் இருந்து 2021 ஆம் ஆண்டு 178 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் பயங்கரவாதச் செயல்களின் எண்ணிக்கையானது 32% ஆக சரிந்துள்ளது.

ரத்து செய்வதால் ஏற்படும் நன்மைகள்
ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாடு
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தினை இந்திய ஒன்றியத்துடன் முழுமையாக இணைக்கப் படுவதற்கு 370வது சரத்து தடையாக இருந்தது.
- இது பிரிவினைவாத உணர்வை உருவாக்கி அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.
- ஜம்மு காஷ்மீர் மக்களுக்கென வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகளை சிறந்த முறையில் அணுக இந்த முழு ஒருங்கிணைப்பு நடவடிக்கையானது அனுமதிக்கும் என்று நம்பப் பட்டது.
தேசியப் பாதுகாப்பு
- இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஆதரிக்க பாகிஸ்தானால் 370வது சரத்து பயன்படுத்தப்பட்டது.
- இந்த ரத்து நடவடிக்கையானது, இந்திய அரசாங்கம் இந்தப் பிராந்தியத்தின் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் அனுமதிப்பதன் மூலம் தேசியப் பாதுகாப்பைப் பலப்படுத்தும்.
பாகுபாடு முடிவுக்கு வருதல்
- ஜம்மு காஷ்மீரில் பெண்கள், தலித்துகள் மற்றும் பிற விளிம்பு நிலை மக்களுக்கு 370வது சரத்தானது பாகுபாடு காட்டியது.
- இந்த ரத்து நடவைக்கையானது அவர்களை இந்தியச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்.
- அது அவர்களுக்குச் சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்குகிறது.

வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல்
- ஜம்மு காஷ்மீர் ஆட்சியமைப்பில் 370வது சரத்தானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வில் ஒரு பற்றாக்குறையை உருவாக்கியது.
- இந்த ரத்து நடவடிக்கையானது, நடுவண் ஊழல் ஒழிப்பு ஆணையம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த மாநிலத்தைக் கொண்டு வரும்.
- இது சிறந்த நிர்வாகத்திற்கும் பொறுப்புக் கூறலுக்கும் வழி வகுக்கிறது.
பொருளாதார வளம்
- ஜம்மு காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு 370வது சரத்தானது தடையாக உள்ளது.
- இந்தச் சரத்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் இப்பகுதியில் அதிக முதலீடு, சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை உருவாக்கப்படும்.
வன்முறைக் குறைப்பு
- சரத்து 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் கணிசமாக குறைந்துள்ளன.
- பயங்கரவாதச் சம்பவங்களின் எண்ணிக்கையானது 50% ஆக குறைந்துள்ளது என்பதோடு கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினரால் சுமார் 300 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வத் தரவானது குறிப்பிடுகின்றது.
- இதில் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள், சிறந்தப் புலனாய்வுச் சேகரிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கான பொதுமக்கள் ஆதரவில் சரிவு ஆகியவையும் அடங்கும்.

-------------------------------------