(For English version to this please click here)
அறிமுகம்:
- சங்க காலத்திலிருந்தே இசையும், தமிழ் நிலப்பரப்பும் பிரிக்க முடியாதவை என்ற வகையில் பழம்பெரும் நபர்கள் அதன் பரிணாமத்தை வடிவமைத்து கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்துடன் பின்னிப் பிணைத்து உள்ளனர்.
தமிழிசை மூவர் மற்றும் அவர்களின் பங்களிப்புகள்:
- முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை மற்றும் அருணாச்சலக் கவிராயர் ஆகியோர் கூட்டாக தமிழிசை மூவர் அல்லது தமிழ் மூவர் என்று அழைக்கப்படுவதோடு இவர்கள் கர்நாடக இசையின் வளர்ச்சியில் முக்கிய நபர்கள் ஆவர்.
- அவர்கள் தமிழில் பாரம்பரிய கீர்த்தனைகளை இயற்றினர் என்பதோடு அதன் பரிணாம வளர்ச்சிக்கு கணிசமாகப் பங்களித்தனர்.
- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்த இம்மூவரும், தியாகராஜர் போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுக்கு முன்பே பல கீர்த்தனைகளை இயற்றியதோடு மட்டுமல்லாமல், கர்நாடக இசை மரபை வளப்படுத்தினர்.
- முத்து தாண்டவரின் சரியான காலத்தைக் கணிக்க முடியாமல் இருந்தாலும், அவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக தமிழ் இணைய கல்விக் கழகம் தெரிவிக்கிறது.
- அருணாச்சல கவிராயர் (1711-1779) மற்றும் மாரிமுத்தா பிள்ளை (1712-1787) ஆகியோர் முத்து தாண்டவரின் காலத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு தங்கள் பங்களிப்பைத் தொடர்ந்தனர்.
அருணாசல கவிராயர்
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
- அருணாசல கவிராயர் 1711 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தில்லையாடியில் நல்லதம்பிப் பிள்ளைக்கும், வள்ளியம்மைக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார்.
- இவரது தந்தை சமணத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறியது இவருடைய வளரும் பருவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- இவரது கல்வி தர்மபுரம் மடத்தில் தொடங்கியது என்ற நிலையில் அங்கு இவர் தமிழ் கிரந்தங்கள், ஆகமங்கள் மற்றும் சமஸ்கிருதம் பயின்றார்.
குடும்ப வாழ்க்கை:
- அறிவார்ந்த எதிர்காலத்திற்கான அறிகுறிகள் இருந்த போதிலும், அருணாசல கவிராயர் திருவள்ளுவர் மற்றும் கம்பனின் ராமாயணத்தின் கொள்கைகளைப் பின்பற்றி குடும்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்.
- அவர் திருமணம் செய்த பின் ஒரு நகைக்கடையை நிறுவினார் என்பதோடு அவர் ஆழ்ந்த மத ஆய்வுகளுக்கும் நேரத்தை அனுமதித்தார்.
புதுச்சேரியில் முக்கிய கூட்டம்:
- அவர் இசைக் கலைஞர்களான வெங்கடராம ஐயர் மற்றும் கோதண்டராம ஐயர் ஆகியோரைச் சந்தித்தார் என்ற வகையில் பாண்டிச்சேரியின் அந்தப் பயணத்தின் போது ஒரு முக்கிய தருணம் அவருக்கு நிகழ்ந்தது.
- இந்தச் சந்திப்பு அவரது எதிர்கால முயற்சிகளுக்கு களம் அமைத்தது.
சீர்காழியில் குடியேற்றம்:
- சிதம்பரம் பிள்ளையின் அனுசரணையால் அருணாச்சல கவிராயர் சீர்காழியில் குடியேறி, அங்கு 'சீர்காழி அருணாசல கவிராயர்' என்ற பட்டத்தைப் பெற்றார்.
- அவர் உள்ளூர் இசைக்கலைஞர்களுடன் அறிவார்ந்த நோக்கங்களிலும், கூட்டு முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
'ராம நாடக கீர்த்தனைகள்' உருவாக்கம்:
- ஸ்ரீராமனின் வாழ்க்கையைக் கம்பன் கவிதையாக்கியதன் மூலம் ஈர்க்கப்பட்டு, அருணாசல கவிராயர் 'ராம நாடக கீர்த்தனைகள்' என்ற இசைப்பாடலை இயற்றினார்.
- அதன் எளிமை மற்றும் மெல்லிசை முறையீடு பரவலாக எதிரொலித்தது.
அரச அங்கீகாரத்தைப் பெற முயலுதல்:
- ஆரம்பகாலச் சவால்கள் இருந்தபோதிலும், அருணாசல கவிராயர் தஞ்சை மன்னர் துளஜா மகாராஜாவிடம் அங்கீகாரம் பெற்றார்.
- அவரது விடாமுயற்சி, இறுதியில் ஆனந்த ரங்கப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற நபர்களிடமிருந்து அரச அங்கீகாரம் மற்றும் ஆதரவைப் பெற வழி வகுத்தது.
மரபு மற்றும் பங்களிப்புகள்:
- அருணாசல கவிராயரின் மரபு 'ராம நாடக கீர்த்தனைகள்' என்பதைத் தாண்டி 'அஜமுகி நாடகம்', 'அனுமார் பிள்ளைத் தமிழ்', 'சீர்காழி ஸ்தலபுராணம்', 'சீர்காழி கோவை' போன்ற இலக்கியப் படைப்புகளை உள்ளடக்கியதாக விரிகிறது.
- அவர் 258 கீர்த்தனைகளை இயற்றினார், கம்ப ராமாயணத்திலிருந்த வசனங்களை எளிமை ஆக்கினார் மற்றும் தமிழ் இசை நாடகத்திற்கு முன்னோடியாக இருந்தார்.
மரியாதை மற்றும் செல்வாக்கு:
- அருணாசல கவிராயரின் பாடல்கள் இசைக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்களால் தொடர்ந்து போற்றப் பட்டு, இன்ப நலனையும் கலை உத்வேகத்தையும் வழங்குகின்றன.
- சங்கீத ராமாயணம் என்று அழைக்கப்படும் அவரது 'ராம நாடகம்' தமிழ் கலாச்சாரப் பாரம்பரியத்தில் காலத்தால் அழியாத வெளிப்பாடாக உள்ளது.
மாரிமுத்தாப் பிள்ளை
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்:
- மாரிமுத்தாப் பிள்ளை 1712 ஆம் ஆண்டு சீர்காழிக்கு அருகிலுள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் சைவக் குடும்பத்தில் பிறந்தார்.
- இவரது தந்தையான தெய்வங்கள் பெருமாள் பிள்ளை, இவரின் சிறு வயதிலிருந்தே நடராஜப் பெருமானின் மீது இவருக்கு ஆழ்ந்த பக்தியை ஏற்படுத்தினார்.
இசை மேதை:
- மாரிமுத்தாப் பிள்ளை தனது இளமைப் பருவத்தில் கூட, தமிழ்ப் பாடல்களை இயற்றுவதில் தனது அளப்பரியத் திறமையை வெளிப்படுத்தினார்.
தெய்வீகத் தலையீடு:
- மாரிமுத்தாப் பிள்ளையின் பக்தி, ஆன்மிக நிறைவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறிய தனது மகன் திரும்பி வர வேண்டும் என்று பிராத்தனை செய்ய அவரை உந்தித் தள்ளியது.
- மாரிமுத்தாப் பிள்ளை சிதம்பரத்தைப் புகழ்ந்து பிரபந்தம் இயற்றினால் அவரது மகன் திரும்பி வருவார் என்று நடராஜப் பெருமான் வாக்குறுதி அளித்தார்.
- இதன் விளைவாக புகழ்பெற்ற "புலியூர் வெண்பா" உருவானது.
இசையமைப்பு முறை மற்றும் பங்களிப்புகள்:
- மாரிமுத்தாப் பிள்ளையின் இசையமைப்பில் 17 ராகங்களில் ஏறக்குறைய 25 கீர்த்தனைகள் உள்ளன என்ற வகையில் அவை முதன்மையாக நடராஜப் பெருமானைப் போற்றுகின்றன.
- அவரது எழுத்து நடை, செம்மையும் தெளிவான தமிழும், பெரும்பாலும் அன்பான அதே சமயம் கிண்டலான தொனியையும் பயன்படுத்துகிறது.
குறிப்பிடத்தக்க படைப்புகள்:
- முக்திக்காக சிவனின் நாமத்தை உச்சரிக்கும் சக்தியை வலியுறுத்தும் "ஒருக்கால் சிவ சிதம்பரம்" மற்றும் தெய்வீகத்தைப் புகழ்ந்து இசைக்கருவிகளை வாசிக்கும் தேவர்களைச் சித்தரிக்கும் "காலைத் தூக்கி நின்றதும் தெய்வமே" ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கப் பாடல்களாகும்.
மரபு மற்றும் செல்வாக்கு:
- மாரிமுத்தாப் பிள்ளையின் இசையமைப்புகள் 50க்கும் அதிகமானவை என்றாலும், பெரும்பாலும் அவை காலப் போக்கில் இழக்கப்பட்டுவிட்டன என்பதோடு தற்போது 25 மட்டுமே எஞ்சியுள்ளன.
- சிவனின் கதைகளுடன் இணைக்கப்பட்ட இவரது பாடல்கள் பக்தி மற்றும் போற்றுதலைத் தூண்டுகின்றன.
- இவரது மரபு இவரதுச் சந்ததியினர் மூலம் வாழ்கிறது என்ற நிலையில் இவரது சில இசையமைப்புகள் டி.வி. மெய்கண்டரால் நடத்தப் பட்டன.
- மாரிமுத்தாப் பிள்ளை 1787 ஆம் ஆண்டு காலமானார், மேலும் அவர் இன்று வரை நிலைத்திருக்கும் ஒரு செழுமையான இசை மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.
முத்துத் தாண்டவர்
ஆரம்ப கால வாழ்க்கை:
- 1560 ஆம் ஆண்டு சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், கோயில் இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர்.
- இளமையில் தீராத நோயால் பாதிக்கப்பட்ட இவர், சிவபாக்யம் என்ற பெண்மணி பாடிய சிவபெருமானின் பாடல்களில் ஆறுதல் தேடினார்.
தெய்வீக தலையீடு மற்றும் மாற்றம்:
- ஒரு இரவு கோயிலுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த முத்துத் தாண்டவர், பிரம்மபுரீஸ்வரரிடம் உதவிக்காக உருக்கமாக வேண்டினார்.
- மாறுவேடத்தில் லோகநாயகி தெய்வம் என்று நம்பப்படும் ஒரு இளம் பெண், அவருக்கு உணவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார்.
- முத்துத் தாண்டவர் என மறுபெயரிடப்பட்டு, சிதம்பரத்திற்கு தனது மாற்றத்திற்கான பயணத்தை அவர் தொடங்கினார்.
சிதம்பரம் நோக்கிய பயணம் மற்றும் இசையமைப்பு முறை:
- தெய்வீக உத்வேகத்தால் வழி நடத்தப்பட்ட முத்துத் தாண்டவர், சிதம்பரம் கோவிலுக்குள் நுழையும் போது, பக்தர்களிடம் கேட்ட முதல் வார்த்தைகளை வரிகளாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடலை இயற்றினார்.
- இவருடைய இசையமைப்புகள் இவரது நன்றியையும், பக்தியையும் பிரதிபலித்தது என்ற நிலையில் இவை அடிக்கடி இவரது அனுபவங்கள் மற்றும் சந்திப்புகளையும் விவரிக்கிறது.
அதிசய நிகழ்வுகள் மற்றும் இசையமைப்பு முறைகள்:
- "அருமருந்தொன்று தனிமருந்திடு" என்ற இசையமைப்பின் மூலம் பாம்புக் கடியிலிருந்து அவர் குணமடைந்தது, மற்றும் கொள்ளிடம் நதி பிரிந்தது உட்பட, "காணாமல் விண்ணிலே காலம் கழித்தோமே" பாடலுக்கு உத்வேகம் அளித்தது வரை, பல அதிசய சம்பவங்கள் முத்து தாண்டவரின் பயணத்தைக் குறிக்கின்றன.
- அவரது பாடல்களில் நன்றியின் வெளிப்பாடுகள் முதல் ஆன்மீக வழிகாட்டுதலுக்கான வேண்டுகோள்கள் வரை இருந்தன.
மரபு மற்றும் பங்களிப்புகள்:
- முத்து தாண்டவரின் பாடல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் பாதுகாக்கப்பட்டு, அவை ராகங்களாக அமைக்கப் பட்டுள்ளன.
- இந்தக் கீர்த்தனைகள், தெளிவற்ற நிலையில் இருந்து மீட்கப்பட்டு, தொடர்ந்து பாடப்பட்டு, போற்றப் பட்டு, அவரது நீடித்த மரபுக்குச் சான்றாக விளங்குகிறது.
இசைப் புதுமைகள்:
- சீர்காழியில் பிறந்த தமிழ் கீர்த்தனைகளின் மற்றொரு முன்னோடியான முத்துத் தாண்டவர், தில்லை நடராஜரைப் போற்றும் வகையில் ஏராளமான கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
- இவரது இசையமைப்புகள் இசை மற்றும் நடனக் கச்சேரிகள் இரண்டிலும் ஒரு இடத்தைப் பெற்றன, என்ற நிலையில் குறிப்பாக தாண்டவக் கீர்த்தனைகள் எனப்படும் நடராஜப் பெருமானின் பிரபஞ்ச நடனத்தை மையமாகக் கொண்டது.
இறுதியாக ஒன்றிணைதல்:
- கி.பி 1640 ஆம் ஆண்டு, "மாணிக்க வாசகர் பேரெனக்குற்றவல்லயோ அறியேன்" என்ற பாடலைப் பாடியதால், முத்துத் தாண்டவரின் வாழ்க்கை பிரம்மபுரீஸ்வரருடன் ஒரு தெய்வீக ஐக்கியத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.
- அப்போது கருவறையிலிருந்து ஒரு பெரிய ஒளி வெளிப்பட்டது என்ற நிலையில் முத்துத் தாண்டவர் தெய்வீகத்துடன் இணைந்து பக்தி மற்றும் இசைப் புதுமையின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.
தமிழிசை மூவருக்கு மரியாதை: மணிமண்டபம் மூலம் அஞ்சலி செலுத்துதல்
- 2000 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, தமிழிசை மூவரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் சீர்காழி நகரில் மணிமண்டபம், நினைவிடம் கட்ட முன் மொழிந்தார்.
- ஆனால், இத்திட்டம் பத்தாண்டு காலம் தாமதமாகி இறுதியாக 2011 ஆம் ஆண்ட்டில் ₹1.51 கோடி செலவில் முடிக்கப்பட்டது.
- 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடக்க விழா நடத்தப் பட்டது.
- தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த நினைவிடம், மொழி மற்றும் இசையில் தமிழிசை மூவரின் சாதனைகளை எடுத்துக் காட்டுவதோடு, பொதுக் கூட்டங்களுக்கான இடத்தையும் வழங்குகிறது.
- 2022 ஆம் ஆண்டில், புதுப்பித்தல் மற்றும் பழுது பார்ப்பதற்காக மாநில அரசு ₹47.02 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
- மேலும், இந்த ஆண்டு, தமிழிசை மூவரின் பாரம்பரியத்தை மேலும் கவுரவிக்கும் வகையில், அறிஞர்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கும் வேண்டிய வசதிகளை மேம்படுத்துவதற்காக ₹3.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
-------------------------------------