TNPSC Thervupettagam

சூப்பர் கம்ப்யூட்டர் உலகில் இந்தியா!

October 11 , 2024 44 days 95 0

சூப்பர் கம்ப்யூட்டர் உலகில் இந்தியா!

  • கணினி இ‌ல்​லாத உலகை இ‌ன்று க‌ற்​பனை‌ கூட செ‌ய்ய இய​லாது. அதைப்போல, சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்யூ‌ட்​ட‌ர் என‌‌ப்​ப​டு‌ம் மீதி​ற‌‌ன் கணினி இ‌ல்​லாத அறி​வி​ய‌ல் வள‌ர்‌ச்​சியை நினைத்​து‌ப் பா‌ர்‌க்கவே இய​லாது. இத‌ற்​கான‌ சி‌ந்​தனை‌ வி‌த்து அமெ​ரி‌க்​கா​வி‌ல் 1929-இ‌ல் உரு​வா​னா​லு‌ம், 1950-களி‌ல் தா‌ன் இத‌ற்​கான‌ முய‌ற்​சி​க‌ள் வேக​மெ​டு‌த்​தன‌.
  • அமெ​ரி‌க்க ப‌ல்​கலைக்​க​ழ​க‌ங்​க​ளு‌ம் ஐபி​எ‌ம் போ‌ன்ற‌ தொழி‌ல் நிறு​வ​ன‌‌ங்​க​ளு‌ம் மே‌ற்​கொ‌ண்ட ஆர‌ம்​ப​கால ஆரா‌ய்‌ச்​சி​க‌ள் அடு‌த்​த​க‌ட்ட வள‌ர்‌ச்​சியை நோ‌க்​கி‌ப் பய​ணி‌த்​தன‌. எனி​னு‌ம், 1964இ‌ல் அமெரி‌க்க பொறி​யா​ள‌ர் சீமோ‌ர் ரோஜ‌‌ர் கிரே உரு​வா‌க்​கிய "சிடிசி-6600' தா‌ன் முத‌ல் சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர் எ‌ன்ற‌ பெரு​மையைப் பெ‌ற்​ற‌து. அத‌ன் அதிவேக இய‌க்​க‌ம் வி‌ஞ்​ஞான‌ உலகை பிர​மி‌ப்​பி‌ல் ஆ‌ழ்‌த்​தி​யது.
  • இதை​ய​டு‌த்து, வ‌ல்​ல​ர​சு​க‌ள் சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர் தயா​ரி‌ப்​பி‌ல் கவ​ன‌‌ம் செலு‌த்​த‌த் தொட‌ங்​கின‌.
  • ஆ‌ய்​வு‌க்​கூ​ட‌ச் சோத​னை​க​ளி‌ல் கிடைக்​கு‌ம் முடி​வு​களை, சோதனை‌ செ‌ய்​யா​மலே கணி​னி​யி‌ல் செ‌ய்​ய‌ப்​ப​டு‌ம் கணித மாதி​ரி​க​ளா‌ல் பெறு​வது கணி​னி​சா‌ர் அறி​வி​ய​லா​கு‌ம். இ‌த்​து​றை​யி​லு‌ம், செய‌ற்கை நு‌ண்​ண​றி​வு‌த் தொழி‌ல்​நு‌ட்​ப‌ம், கோ‌ட்பா‌ட்டு கணினி அறி​வி​ய‌ல், குவா‌ன்​ட‌ம் இய‌ற்​பி​ய‌ல், மூல‌க்​கூறு இய‌க்​க​வி​ய‌ல், மரு‌த்​து​வ‌ம், அதி​வே​க‌த் தேட‌ல், கால​நிலை ஆரா‌ய்‌ச்சி, தர​வு‌ப் பகு‌ப்​பா‌ய்வு உ‌ள்​ளி‌ட்ட பய‌ன்​பா​டு​க​ளி​லு‌ம் சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க‌ள் உ‌ச்​ச‌ங்​களை எ‌ட்டி​யு‌ள்​ளன‌.
  • இ‌ப்​போது சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க​ளி‌ன் அடு‌த்​த​க‌ட்ட வள‌ர்‌ச்​சி​யாக "எ‌க்​சோஸ்கேல் க‌ம்‌ப்​யூ‌ட்​டி‌ங்' என‌‌ப்​ப​டு‌ம் அதி​மீ​தி​ற‌‌ன் கணி​னி​க‌ள் உரு​வா‌க்​க‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. கட‌ந்த 2022-இ‌ல் உல​கி‌ன் முத‌ல் எ‌க்சோஸ்கேல் கணி​னி​யாக, அமெ​ரி‌க்​கா​வி‌ன் "ஃபிரா‌ன்​டி​ய‌ர்' உரு​வா‌க்​க‌ப்​ப‌ட்​டது.
  • இ‌ந்​த‌த் துறையி‌ல் இ‌ந்​தியா 1980-களு‌க்​கு‌ப் பிற‌கே கவ​ன‌‌ம் கொடு‌க்​க‌த் தொட‌ங்​கி​யது. தமி​ழ​க‌த்​தைச் சா‌ர்‌ந்த கணினி வி‌ஞ்​ஞானி ர‌ங்​க​சாமி நர​சி‌ம்​ம‌ன் (1926 - 2007) இ‌த்​து​றையி‌ன் மு‌ன்​னோடி​யா​க‌க் கரு​த‌ப்​ப​டு​கி​றா‌ர். 1975-இ‌ல் தி‌ல்​லி​யி‌ல் இவ‌ர் நிறு​விய அரசு நிறு​வ​ன‌​மான‌ சிஎ‌ம்சி, கணினி அறி​வி​ய​லி‌ல் இ‌ந்​தி​யா​வி‌ன் முத‌ல் துணி‌ச்​ச​லான‌ முய‌ற்சி.
  • நமது வி‌ண்​வெளி ஆரா‌ய்‌ச்​சி​க​ளு‌க்கு 1970-களி‌ல் வ‌ல்​ல​ரசு நாடு​க‌ள் தடையாக இரு‌ந்​தன‌. அது​போ‌​லவே, சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர் தயா​ரி‌ப்​பி​லு‌ம் அவை பல இடையூ​று​க​ளைச் செ‌ய்​தன‌. அதை​ய​டு‌த்து, மி‌ன்​ன‌​ணு​வி​ய‌ல் ஆணை​ய‌த்​தி‌ல் கணினி வி‌ஞ்​ஞா​னி​யா​க‌ப் பணி​யா‌ற்​றிய விஜ‌‌ய் பா‌ண்​டு​ர‌ங் ப‌ட்க​ரி​ட‌ம், சுதே​சி‌த் தொழி‌ல்​நு‌ட்​ப‌த்​து​ட‌ன் சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​களை உரு​வா‌க்​கு‌ம் பணி ஒ‌ப்​படைக்​க‌ப்​ப‌ட்​டது. அவ​ரது தலைமை​யி‌ல் ம‌த்​திய உய‌ர்​க​ணினி மே‌ம்​பா‌ட்டு மைய‌ம் (சி-டா‌க்), 1988-இ‌ல் புணே​யி‌ல் தொட‌ங்​க‌ப்​ப‌ட்​டது. அதி‌ல் திற‌​மையு‌ள்ள இளை​ஞ‌ர்​க‌ள் பல‌ர் பணி​யா‌ற்​ற‌‌த் தொட‌ங்​கி​ன‌‌ர்.
  • அத‌ன் விளை​வாக, 1991-இ‌ல் இ‌ந்​தி​யா​வி‌ன் முத‌ல் சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட​ரான‌ "பர‌ம் 8000' உரு​வா​ன‌து. அதை​ய​டு‌த்து பர‌ம் வரி​சை​யி‌ல், பர‌ம் 10000, ப‌த்மா, யுவா, பிர‌ம்மா, சிú‌ர‌ஷ்டா, நீ‌ல், ‌ஸ்மி​ருதி, யு‌க்தி உ‌ள்​ளி‌ட்ட மேலு‌ம் 30 சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க‌ள் இது​வரை உரு​வா‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளன‌.
  • உலக அள​வி‌ல் மிக​வு‌ம் குறைந்த செல​வி‌ல் தயா​ரி‌க்​க‌ப்​ப​டு​பவை எ‌ன்​ப​தா‌ல், இவை பிற‌ நாடு​க​ளு‌க்​கு‌ம் ஏ‌ற்​று​ம​தி​யாகி உ‌ள்​ளன‌. இ‌ன்று உலக நாடு​க‌ள் பல​வ‌ற்​றி‌ல் 51 பர‌ம் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க‌ள் இய‌ங்​கு​கி‌ன்​ற‌ன‌. இதனை‌ ஓ‌ர் அறிவு வ‌ர்‌த்​த​க​மா​கவே விஜ‌‌ய் ப‌ட்க‌ர் வள‌ர்‌த்​தெ​டு‌த்​து‌ள்​ளா‌ர். இவரை "இ‌ந்​திய சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க​ளி‌ன் த‌ந்தை' எ‌ன்று நாடு கொ‌ண்​டா​டு​கி​ற‌து.
  • சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க​ளி‌ன் தரவு தே‌க்​கு‌ம் திற‌‌ன் (டெரா பை‌ட்‌ஸ்), செய‌ல்​வேக‌ம் (பீ‌ட்டா ஃபிளா‌ப்‌ஸ்) ஆகி​ய​வ‌ற்​றி‌ன் அடி‌ப்​ப​டை​யி‌ல் தர வரிசை உரு​வா‌க்​க‌ப்​ப​டு​கி​ற‌து. இ‌ந்​தி​யா​வி‌ன் 4 சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க‌ள் ம‌ட்டுமே (ஐரா​வ‌த்-75, பர‌ம் சி‌த்தி -163, பிர‌த்​யு‌ஷ்-201, மிஹி‌ர்-354) இத‌ற்​கு‌த் தகுதி பெறு​கி‌ன்​ற‌ன‌. அமெரி‌க்கா, சீனா, ஜெ‌‌ர்​மனி ஆகி​யவை இ‌ந்த வரி​சை​யி‌ல் மு‌ன்​னி​லை​யி‌ல் உ‌ள்​ளன‌. இ‌ந்த வகையி‌ல் உல​கி‌ன் 20-ஆவது இட‌த்​தி‌ல் இ‌ந்​தியா உ‌ள்​ளது.
  • 2015-இ‌ல் இ‌ந்​திய அரசு உரு​வா‌க்​கிய தேசிய சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர் மிஷ‌ன் (எ‌ன்​எ‌ஸ்​எ‌ம்), மிக விû‌ர​வி‌ல் நாடு முழு​வ​தி​லு‌ம் உ‌ள்ள உய‌ர்​க‌ல்வி நிறு​வ​ன‌‌ங்​க​ளி‌ல் 70 சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​களை நிறு​வு‌ம் இல‌க்​கு​ட‌ன் பணி​பு​ரி​கி​ற‌து. உய‌ர்​தி​ற‌‌ன் மிகு‌ந்த 22 சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க‌ள் இ‌ப்​போது நாடு முழு​வ​து‌ம் இய‌ங்கி வரு​கி‌ன்​ற‌ன‌. இவ‌ற்றை‌ இணைத்து தேசிய அறிவு வலைப்​பி‌ன்​ன‌லை (எ‌ன்​கே​எ‌ன்) இ‌ந்​திய அரசு அமைத்​து‌ள்​ளது.
  • இத‌ன் அ‌ண்​மைக்​கா​ல‌ப் பரி​சு​தா‌ன் "பர‌ம் ரு‌த்ரா'. கட‌ந்த செ‌ப். 26-இ‌ல் 3 பர‌ம் ரு‌த்ரா சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​களை நா‌ட்டி‌ற்கு அ‌ர்‌ப்​ப​ணி‌த்​தி​ரு‌க்​கி​றா‌ர் பிர​த​ம‌ர் நரேந்​திர மோடி. இவை முறையே வி‌ண்​வெளி ஆ‌ய்வு, அணு​வி​ய‌ல் ஆ‌ய்வு, அ‌ண்​ட​வி​ய‌ல் ஆ‌ய்​வு​க​ளி‌ல் பய‌ன்​ப​டு‌த்​த‌ப்​பட உ‌ள்​ளன‌.
  • இ‌ந்​தி​யா​வி‌ன் சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க‌ள் மூ‌ன்று அ‌ம்​ச‌ங்​க​ளி‌ல் உலகை விய‌ப்​பி‌ல் ஆழ‌த்​து​கி‌ன்​ற‌ன‌. முத​லா​வ​தாக, பிற‌ நாடு​க​ளி‌ன் தய​வி‌ல்​லா​ம‌ல், முழு​வ​து‌ம் உ‌ள்​நா‌ட்​டி‌ல் வடி​வ​மைக்​க‌ப்​ப‌ட்​டவை இவை. அடு‌த்​த​தாக, உலக அள​வி‌ல் இத‌ற்கு ஆகு‌ம் செல​வி‌ல் மூ‌ன்​றி‌ல் ஒரு ப‌ங்​கி‌ல் இ‌ந்​தியா இத​னைச் சாதி‌த்​தி​ரு‌க்​கி​ற‌து. மூ‌ன்​றா​வ​தாக, இ‌ந்த ஞான‌‌த்​தே​ட​லி‌ன் பயனை‌ பிற‌ நாடு​க​ளு‌க்கு எ‌ந்த‌த் தடை​யு​மி‌ன்றி விநி​யோ​கி‌ப்​பது.
  • உலக நாடு​க‌ள் பல​வ‌ற்​றி‌ல் சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர் தயா​ரி‌க்​கு‌ம் நிறு​வ​ன‌‌ங்​க​ளி‌ல் இ‌ந்​தி​ய‌ர்​க‌ள் பணி புரி‌ந்​தா​லு‌ம், இ‌ந்​தியா இ‌த்​து​றை​யி‌ல் த‌ன்​னி​றைவு அடைவ​த‌ற்​காக தா‌ய்​நா‌ட்​டி​லேயே உழைத்த ஆயி​ர‌க்கண‌க்​கான‌ இள‌ம் வி‌ஞ்​ஞா​னி​க​ளா‌ல்​தா‌ன் இது சா‌த்​தி​ய​மாகி இரு‌க்​கி​ற‌து.
  • இ‌ந்த நவீன‌ உல​கி‌ல் அறி​வு​சா‌ர் சமூ​கமே வெ‌ல்​லு‌ம். அ‌ந்த வகையி‌ல், எ‌ந்த வ‌ல்​ல​ரசு நா‌ட்டி‌ற்​கு‌ம் இ‌ந்​தியா சளைத்​த​த‌ல்ல எ‌ன்​பதை நமது சூ‌ப்​ப‌ர் க‌ம்‌ப்​யூ‌ட்​ட‌ர்​க‌ள் உல​கி‌ற்​கு‌ப் பறை​சா‌ற்றி வருகி‌ன்​ற‌ன‌ எனி‌ல் மிகையி‌ல்லை.

நன்றி: தினமணி (11 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்