TNPSC Thervupettagam

டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் : இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை - பகுதி 1

October 31 , 2023 438 days 1974 0

(For English version to this please click here)

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை

  • பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக போற்றப்படும் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியாக திகழ்ந்தவர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் ஆவார்.
  • அவர் தனது 98வது வயதில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று சென்னையில் காலமானார்.
  • அவர் ஆரம்பக் கட்டத்தில் மருத்துவத்துறையில் தனது வாழ்க்கைப் பயணத்தினைத் தொடர வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார், ஆனால் 1942-43 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் விளைவாக விவசாயத்தின் மீது தனது கவனத்தைச் செலுத்தினார்.
  • இந்த சோகமான நிகழ்வானது, அவரது மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இந்திய விவசாயத் துறையினை மேம்படுத்துவதற்கான அவரது ஆர்வத்தையும் தூண்டியது.
  • 1960 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் விவசாயத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளானது இந்தியாவில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்பின் எல்லைகளை மாற்றியமைத்தது.
  • இது உணவுப் பாதுகாப்புக்கான ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப் படுத்தியது.

ஆரம்பகால வாழ்க்கையும் மற்றும் கல்வியும்

  • 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கும்பகோணத்தில் சுவாமிநாதன் பிறந்தார்.
  • இவர் அறுவை சிகிச்சை நிபுணரான மா. கொ. சாம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மாள் என்ற இணையரின் இரண்டாவது மகன் ஆவார்.
  • கும்பகோணத்திலுள்ள கத்தோலிக்க லிட்டில் ஃப்ளவர் உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்வதற்கு முன்பாக உள்ளூரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பினைத் தொடங்கினார்.
  • அவர் தனது 15வது வயதில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சியினைப் பெற்றார்.

  • இந்தியாவிற்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவர் தனது வாழ்க்கையினை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
  • 1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வங்காளப் பஞ்சத்தின் அரிசிப் பற்றாக்குறையின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் காரணமாக பிறகு, இந்தியாவில் உணவுப் பற்றாக்குறையானது ஏற்பட்டது.
  • அவர் இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்ற்றுள்ளார்.
  • அதில் ஒரு பட்டப்படிப்பானது விலங்கியல் துறையிலும் மற்றொன்று கோயம்புத்தூரில் உள்ள வேளாண் கல்லூரியில் (தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) வேளாண் துறை சார்ந்த பட்டமுமாகும்.
  • அதன் பிறகு, அவர் வேளாண் அறிவியல் துறை மற்றும் மரபியல் துறையில் தனது கல்வியினைத் தொடர்ந்தார்.
  • வேளாண் அறிவியலில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வம், சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் அவரது தந்தையின் பங்களிப்பு மற்றும் மகாத்மா காந்தியினால் இவருக்கு ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து, வேளாண் பாடத்தில் தனது உயர் படிப்பினைத் தொடர வேண்டுமென அவரைத் தூண்டியது.

ஆராய்ச்சிப் பணிகள்

  • அவர் மரபியல் மற்றும் கால்நடை இனப்பெருக்கத்தோடு இணைந்து பயிர் வகைகளை மேம்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வேளாண் துறையில் தனது ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
  • இது விவசாயிகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு உணவுப் பற்றாக்குறையையும் சமாளிக்க உதவதாக இருக்கும்.
  • 1947 ஆம் ஆண்டு அவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் குறித்து படிக்க வேண்டுமென்பதற்காக புது தில்லிக்கு வந்தடைந்தார்.
  • அவர் 1949 ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) உயிரணு மரபியல் துறையில் முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார்.
  • முதுகலைப் பட்டத்தினைப் பெற்ற பிறகு, அவர் இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல்துறை சேவைப் பணிக்கான தகுதியினைப் பெற்றார்.
  • இருப்பினும், உருளைக்கிழங்கின் மரபியலைப் பற்றிய தனது ஆராய்ச்சியினைத் தொடர வேண்டுமென்பதற்காக நெதர்லாந்தில் உள்ள வேகனிங்கன் பல்கலைக் கழகத்தில் யுனெஸ்கோ கூட்டுறவுடன் தமது கல்வியினைத் தொடர்ந்தார்.

  • பின்னர் அவர் 1952 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர விதைப் பெருக்க நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு முனைவர் பட்டத்தினையும் பெற்றார்.
  • விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆய்வினையும் மேற்கொண்டார்.
  • இருப்பினும், அவர் 1954 ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பி வந்து இங்கு பணியாற்ற முடிவு செய்தார்.
  • IARI நிறுவனத்தில் தனது ஆராய்ச்சியினைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
  • அவரது ஆய்வானது உருளைக்கிழங்கு தொடர்பாகவும் குறிப்பாக சோலனம் இனத்தின் மீதும் முக்கியத்துவமும், கவனமும் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப் பட்டது.
  • போர்க்காலங்களின் போது ஏற்பட்ட உருளைக்கிழங்கின் தேவையானது பழைய வேளாண் சுழற்சி முறைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்தியது.

  • இது மீட்கப்பட்ட விவசாய வயல்கள் போன்ற சில பகுதிகளில், தங்க நூற்புழு தொற்றுக்கு வழி வகுத்தது.
  • சுவாமிநாதன் ஒட்டுண்ணிகள் மற்றும் குளிர் நிலைகளுக்கு ஏற்ப எதிர்ப்பை செயல்படுத்தும் வகையில் மரபணுக்களை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தினார்.
  • உருளைக்கிழங்கின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஆய்வானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • அவர் கட்டாக்கில் கிருஷ்ணசுவாமி ராமையாவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இண்டிகா-ஜபோனிகா கலப்பின அரிசித் திட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளார்.
  • இந்த அனுபவமானது அவரது எதிர்கால கோதுமை தொடர்பான ஆராய்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
  • 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) உதவி உயிரணு மரபியலாளராகப் பணியாற்றினார்.
  • இந்தியாவின் வருவாயில் 70%த்தை வேளாண்மையானது வழங்கும் போது இந்தியா உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை சுவாமிநாதன் விமர்சித்துள்ளார்.

  • பின்னர் இந்தியா அதன் எதிர்காலத்தில் உணவு ஏற்றுமதியாளராக மாற வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் அதிக அளவிலான விவசாயப் பொருட்களை சரியான நேரத்தில் உற்பத்தி செய்வதற்கான தனது ஆராய்ச்சி பணியினைத் தொடர்ந்தார்.
  • 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் ஆறு தொகுதியினை கொண்ட (ஹெக்ஸாப்ளோயிட்) கோதுமையின் மரபணு உயிரியலைப் பற்றிய அடிப்படை ஆய்வுகளையும் சுவாமிநாதன் மேற்கொண்டார்.
  • சுவாமிநாதன் மற்றும் போர்லாக் ஆகியோர் இணைந்து பசுமைப் புரட்சிக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக பல வகையான அரிசி மற்றும் தானியங்களை உருவாக்கினர்.
  • சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRRI) C4 கார்பனை நிலைப்படுத்தும் திறன் கொண்ட அரிசியைப் பயிரிடுவதற்கான முயற்சிகளானது சுவாமிநாதனின் தலைமையில் தொடங்கப்பட்டன.
  • இது மேம்பட்ட ஒளிச்சேர்க்கை மற்றும் நீர்ப் பயன்பாட்டைச் செயல்படுத்துகிறது.
  • உலகின் முதல் அதிக மகசூல் தரும் பாசுமதி அரிசியை உருவாக்குவதற்கும் சுவாமிநாதன் பங்களித்துள்ளார்.

​​​​​​​

பங்களிப்புகள்

விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பு

  • விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதனின் செல்வாக்கு வெகுதூரம் பரவியுள்ளது.
  • இது இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும் பல்வேறு பங்களிப்புகளையும், பொறுப்புகளையும் அவர் வகித்ததை உள்ளடக்கியது ஆகும்.

பசுமைப் புரட்சியில் பங்களிப்பு

  • அவர் பசுமைப் புரட்சியில் முக்கியப் பங்கினை வகித்ததற்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
  • 1960 ஆம் ஆண்டுகளில் பசுமைப் புரட்சியானது தொடங்கியது.
  • இது பயிர் உற்பத்தியைக் கணிசமாக அதிகரித்ததோடு, தேசத்திற்கான உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ததால் இது இந்திய விவசாயத்தில் ஒரு மாற்றமான கட்டமாக அமைந்துள்ளது.
  • இந்திய விவசாயத்தை மாற்றியமைப்பதே சுவாமிநாதனின் நோக்கமாகும்.
  • இந்திய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக புதிய வகையிலான விதைகள், அதிக மகசூல் தரக்கூடிய பயிர் வகைகள், மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதிகள், உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விவசாய நுட்பங்கள் ஆகியவற்றை இது அறிமுகப்படுத்தி உருவாக்ப் கபட்டுள்ளது.

​​​​​​​

  • இந்தியாவில் கோதுமை உற்பத்தியானது 1947 ஆம் ஆண்டு 6 மில்லியன் டன்னிலிருந்து 1964 மற்றும் 1968 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 17 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தியதோடு, இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும் பசுமைப் புரட்சியானது குறைத்துள்ளது.
  • பயிர் வகைகளை, குறிப்பாக அரிசி மற்றும் கோதுமையை மேம்படுத்துவதில் சுவாமிநாதன் ஆர்வமாகப் பணியாற்றினார்.
  • வேளாண் செய்யும் இடங்களைக் குறைக்கவும் விளைச்சலை அதிகரிக்கவும் அரைக் குள்ள கோதுமை வகைகளை உருவாக்கவும் அவர் முன்னோடியாக இருந்தார்.
  • சுவாமிநாதன், நார்மன் போர்லாக் மற்றும் பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து 1960 ஆம் ஆண்டுகளில் பஞ்சம் போன்ற சூழ்நிலைகளில் விவசாயிகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுடன் இணைந்து ஒரு சமூகப் புரட்சியைக் கொண்டு வந்தார்.
  • இதன் காரணமாகவே எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் "பசுமைப் புரட்சியின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

​​​​​​​

  • கோதுமை வகைகளில் குள்ளத் தன்மைக் கொண்ட மரபணுக்களின் அறிமுகமானது "கோதுமைப் புரட்சிக்கு" வழி வகுத்தது.
  • பசுமைப் புரட்சியினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களை சுவாமிநாதன் அவர்கள் உணர்ந்தார்.
  • உள்ளூர் பயிர் வகைகளின் இடப்பெயர்ச்சி, மண் வளப் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் மற்றும் கண்மூடித் தனமான பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவை இச்சவால்களில் அடங்கும்.
  • நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டுவதால் ஏற்படும் ஆபத்துகளையும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு மாற்றத்திற்கான சகாப்தம்

  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் விவசாயத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க சுவாமிநாதன் பணியாற்றியுள்ளார்.
  • அதனால் பல ஆண்டுகளாக விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது.

​​​​​​​

  • 1979 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக சுவாமிநாதன் அவர்கள் பணியாற்றியுள்ளார்.
  • 1972 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநராக இருந்துள்ளார்.
  • 1980 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை, திட்டக் குழுவின் உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.
  • அங்கு அவர் வேளாண்மை மற்றும் கிராமப்புறத்தின் வளர்ச்சிகளுக்குக்கான பொறுப்பினை வகித்தார்.
  • இந்திய விவசாயத்தை மாற்றுவதையே எம்.எஸ். சுவாமிநாதன் இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

தொலைநோக்கு அணுகுமுறை

மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதிகள்

  • நீர் ஆதாரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பயிர்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்து, பாசன முறைகளை மேம்படுத்துவதற்காக அவர் உறுதியளித்து வாதிட்டார்.

உர உபயோகத்தை ஊக்குவித்தல்

  • உரங்களின் நியாயமான பயன்பாட்டிற்கான சுவாமிநாதனின் ஆதரவானது மண் வளத்தை மேம்படுத்தவும் பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் பங்களித்துள்ளது.

அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் அரிசி

  • சுவாமிநாதன் அவர்கள் நார்மன் போர்லாக் உடன் இணைந்து ஆரம்பக்காலக் கட்டப் பணியாக அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை மற்றும் அரிசி வகைகளை உருவாக்கினார்.
  • இந்தப் பயிர்களானது அதிக மகசூல் தரக்கூடியதாகவும், சிறந்த தரம் வாய்ந்ததாகவும் மற்றும் நோயற்றத் தன்மைக் கொண்டதாகவும் உள்ளது.
  • இதற்குப் பிறகு, அவர் வெவ்வேறு கலப்பினப் பயிர் விதைகளை உருவாக்கினார்.
  • அதன் ஆரம்பக்கட்ட வெற்றிகளானது மெக்சிகோவிலும் இந்திய துணைக் கண்டத்திலும் காணப்பட்டன.
  • 1967-68 ஆம் ஆண்டுகள் முதல் 1977-78 ஆம் ஆண்டுகள் வரை நீடித்த பசுமைப் புரட்சியானது இந்தியாவை உணவுப் பற்றாக்குறை என்ற தேசத்திலிருந்து உலகின் முன்னணி விவசாயத் தன்னிறைவு கொண்ட சக்திகளில் ஒன்றாக மாற்றியது.
  • அரிசி, கோதுமை, பயறு, சோளம் போன்ற உணவுகளின் உற்பத்தியை சுவாமிநாதனின் விவசாய முயற்சிகளானது அதிகரித்தன.
  • பசுமைப் புரட்சியின் போது, ​​எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் விவசாயத்திற்கான மேம்பட்ட வேளாண்  கருவிகளில் கவனம் செலுத்தினார்.
  • இயந்திர விநியோகத்தின் காரணமான தொழில்துறை வளர்ச்சியிலும் இது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் நடத்திய பொதுக் கூட்டங்களானது கிராமப்புற மக்களின் வேளாண்மை குறித்த புதிய தொழில்நுட்பம் பற்றிய எண்ணங்களை மாற்றியுள்ளன.

  • விவசாயிகள் அந்த புதிய விவசாய நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு, அதன் மூலம் புதிய தகவல்களைப் பெற்று அதனை விவசாயத்தில் செயல்படுத்தி ள்ளனர்.

பயிர் ஆராய்ச்சியில் முன்னேற்றம்

  • ப்போனிகாவிலிருந்து இண்டிகா வகைப் பயிர்களுக்குத் தேவைப்படும் உரப் பயன்பாடு குறித்த கேள்விக்கான பதிலாக, மரபணுக்களை மாற்றுவதன் மூலம் பயிர் உற்பத்தியை மேம்படுத்தி, அதன் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று கண்டறிந்துள்ளார்.
  • இந்தியாவின் காலநிலைகளுக்கு ஏற்ற உயர் விளைச்சல் தரும் குள்ளத்தன்மைக் கொண்ட கோதுமை வகைகளை உருவாக்குவதற்காக நார்மன் போர்லாக் உடன் இணைந்து பணியாற்றினார்.
  • பல்வேறு பயிர்களில் புதுமையான மரபணுப் பிறழ்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிக மகசூல் தரும் பாசுமதி அரிசி வகைகளை உருவாக்குவதிலும் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
  • 1960 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரைக் குள்ளத் தன்மைக் கொண்ட கோதுமை வகைப் பயிர்கள் விவசாயத்தில் பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளது.

​​​​​​​

  • இந்த மாற்றமானது பயிர் விளைச்சலைக் கணிசமாக அதிகரித்தது.
  • அது உணவுப் பஞ்சத்தின் அச்சுறுத்தல்களில் இருந்து தடுத்து இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்கிறது.
  • பசுமைப் புரட்சி சகாப்தத்தின் முதல் ஆண்டில் பயிர் முன் உற்பத்தி அளவை மூன்று மடங்காக உயர்த்தியதால், இந்தச் செயல்பாடுகளானது வேளாண்மையின் போக்கினை வெகுவாக மாற்றியமைத்தன.
  • கல்வியறிவின்மைத் தடைகளை மீறி இந்தப் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்த சுவாமிநாதன் அவர்கள் விவசாயிகளுக்குப் பயிற்சியினை அளித்தார்.
  • அவரது முயற்சியின் விளைவால், வெறும் நான்கு வேளாண் செய்வதற்கேற்றப் பயிரிடும் பருவங்களில் சராசரி விவசாய உற்பத்தியானது 12 மில்லியன் டன்னிலிருந்து 23 மில்லியன் டன்களாக உயர்ந்தது.

​​​​​​​

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்