TNPSC Thervupettagam

டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் : இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை - பகுதி 3

November 4 , 2023 518 days 869 0

(For English version to this please click here)

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை

விவசாயிகள் ஆணையம்

  • விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசானது ஆற்றல்மிக்க பதிலளிப்பதை உறுதி செய்வதற்காக மாநில அளவிலான விவசாயிகள் ஆணையங்களை நிறுவுதல்.

வாழ்வாதாரத்திற்கான சிறு நிதி

  • வாழ்வாதார நிதியின் மூலம் சேவை செய்வதற்கான நுண்கடன் கொள்கைகளை மறுசீரமைத்தல், ஆதரவுச் சேவைகளுடன் கடன் வழங்குதல்.

குறைந்த விலை தொழில்நுட்பங்கள்

  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க குறைந்த விலை விவசாய  மற்றும் குறைந்த ஆபத்து கொண்ட தொழில்நுட்பங்களைப் பரிந்துரைத்தல்.

சந்தை தலையீடுகளுக்கானத் திட்டங்கள்

  • உயிர் காக்கும் பயிர்களுக்குச் சந்தைத் தலையீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி, அதன் மூலம் விலையினை  நிலைப்படுத்த தேவையான நிதியினை நிறுவுதல்.

கிராம அறிவு மையங்கள்

  • விவசாயம் மற்றும் பண்ணை அல்லாத வாழ்வாதாரம் பற்றியத் தகவல்களை வழங்க கிராம அளவிலான அறிவு மையங்களை அமைத்தல்.

வருமான சமநிலை

  • விவசாயிகளின் நிகர வருமானத்தை அரசு ஊழியர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டு உறுதி செய்வதை நோக்கமாகக் கொள்தல்.

இனப் பாதுகாப்பு

  • பயன்பாட்டின் மூலம் சமூகம் சார்ந்த இனப் பாதுகாப்பினை ஊக்குவித்தல்.

ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு வகைகள்

  • ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு உகந்த அதிக ஊட்டச்சத்துக் கொண்ட பருப்பு வகைகளின் உற்பத்தியை மேம்படுத்துதல்.

பிராந்தியப் பயிர் பல்வகைப்படுத்தல்

  • விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் மண் வகைகள் மற்றும் வானிலையின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ற பயிர்களை அடையாளம் காணுதல்.

சூழலியல் ஒருங்கிணைப்பு

  • விவசாயப் புரட்சியின் செயல்திறனை மேம்படுத்த தேவையான விஞ்ஞான முறைகளுடன் சூழலியல் பரிசீலனைகளை இணைத்தல்.

காலநிலை மாற்றத்தினைத் தழுவுதல்

  • பருவநிலை மாற்றத்தைத் தழுவுதல் மற்றும் தணிப்பு ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு முன்கூட்டிய செயல்பாடுகளில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், அச்செயல்பாட்டில் விவசாயிகளை ஈடுபடுத்துதல்.

வளங்களுக்கான திறன்

  • நீண்ட கால நிலைத்தன்மைக்காக நிலம், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் நீர் உள்ளிட்ட குறைந்த வளங்களைக் கொண்டு அதிக மகசூலைப் பெற முயற்சி செய்தல்.

புதுமையான தொழில்நுட்பம்

  • வானிலை முன்னறிவிப்புகள், விதைப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் சந்தை விலை ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்க புதுமையான தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களை (ITC) அறிமுகப்படுத்துதல்.

இ-கிராந்தி சேவை

  • விவசாயிகளுக்கு விளைபொருட்களின் விலை, இணைய வங்கி மற்றும் அவர்களின் விளைபொருட்களை இணைய வழியில் வாங்க அல்லது விற்பதற்கான விருப்பம் பற்றிய தகவல்களை வழங்க இ-கிராந்தி சேவையை செயல்படுத்துதல்.

GM உணவுப் பயிர்கள்

  • விளைச்சலை அதிகரிக்க மரபணு மாற்றப்பட்ட (GM) உணவுப் பயிர்களை அறிமுகப் படுத்துதல்
  • நோய்கள் மற்றும் பூச்சிகளை எதிர்த்தல்
  • சுற்றுச்சூழல் அழுத்தங்களை நிர்வகிக்கும் போது ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்

இந்தியாவில் மக்கள்தொகை வெடிப்பைக் கட்டுப்படுத்துவதில் சுவாமிநாதன் குழுவின் பங்களிப்பு

  • சுவாமிநாதன் குழுவானது சமர்ப்பித்த வரைவுக் கொள்கையானது, ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை மற்றும் கொள்கையை செயல்படுத்த சில கட்டமைப்பு மாற்றங்களைப் பரிந்துரைத்தல்.

இந்தக் குழு பரிந்துரைத்த முக்கியமான நடவடிக்கைகள்

  • 2010 ஆம் ஆண்டிற்குள் மொத்தக் கருவுறுதல் விகிதமானது 2.1 என்ற நிலையினை அடைவதன் மூலம் மக்கள்தொகையினை நிலைப்படுத்துதல்.
  • விரைவான மற்றும் பயனுள்ள குறைந்தபட்ச தேவைக்கானத் திட்டத்தினைச் செயல்படுத்துதல்.
  • பஞ்சாயத்துகள், நகர் பாலிகாக்கள் மற்றும் மாநில சட்டமன்றங்கள் மூலம் பரவலாக்கப் பட்ட, ஜனநாயகத் திட்டமிடல் மூலம் தற்போதைய செங்குத்தாக கட்டமைக்கப் பட்ட குடும்ப நலத் திட்டத்தினை மாற்றியமைத்தல்.
  • மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் அனைத்து நிறுவனங்களையும் ஈடுபடுத்துதல்.

  • மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுவாக பயன்படுத்தும் குறிப்பிட்ட கருத்தடை முறைகளுக்கு இலக்குகளை நிர்ணயிக்கும் யோசனையைக் கைவிடுதல்
  • கருத்தடைப் பயனர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களுக்கு ரொக்கமாக அல்லது பிற வகைகளில் ஊக்கத் தொகையினை வழங்குதல்.
  • அதற்குப் பதிலாக, அரசு மற்றும் சர்வதேச நன்கொடை நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நிதியிலிருந்து மக்கள்தொகை மற்றும் சமூக மேம்பாட்டு நிதியத்தினை அமைக்கலாம்.
  • கிராமம், நகரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சமூக-மக்கள்தொகை தொடர்பான சாசனங்களைத் திறம்பட செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளை நிரப்ப இந்த நிதியானது பயன்படுத்தப்படும்.
  • நாட்டின் மக்கள் தொகைக் கொள்கையைத் திட்டமிடவும், செயல்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் மாநில மக்கள் தொகை மற்றும் சமூக மேம்பாட்டு ஆணையத்தை (PSDC) நியமித்தல்.
  • PSDC அமைப்பின் துணைக்குழுக்கள் மாநில, மாவட்டம் மற்றும் பஞ்சாயத்து மட்டங்களிலும் அமைக்கப்படுதல்.

  • இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தொழில் வல்லுநர்கள், தன்னார்வத்’ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றோர் இடம் பெற வேண்டும்.
  • குடும்பக் கட்டுப்பாடு என்பது பெண்களுக்கு மட்டுமே பொறுப்பாகிவிட்டது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • எனவே, குடும்பக் கட்டுப்பாடுக்கான முழுப் பொறுப்பையும் பெண்களின் மீது சுமத்தும் போக்கைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அதன் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
  • தேசிய மக்கள்தொகைக் கொள்கையின் அவசியமான பகுதியை உருவாக்குவதற்காக மக்கள் நலத் துறையில் குழுவால் அமைக்கப்பட்ட சில சமூக-பொருளாதார மற்றும் மருத்துவ இலக்குகள் முக்கியமானவை.
  • 18 வயதுக்குட்பட்டப் பெண் குழந்தைகளின் திருமண நிகழ்வினை பூஜ்ஜியமாகக் குறைத்தல்
  • பயிற்சி பெற்ற பணியாளர்களால் பார்க்கப்படும் பிரசவங்களின் சதவீதத்தை 100 சதவீதமாக உயர்த்துதல்
  • தாய் மற்றும் குழந்தையின் இறப்பு விகிதங்களைக் குறைத்தல்

  • காசநோய், போலியோ, டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ் மற்றும் தட்டம்மை ஆகியவற்றுக்கு எதிராக குழந்தைகளுக்கு உலகளாவியத் தடுப்பூசியினைச் செலுத்துதல்
  • அனைவருக்கும் ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வழங்குதல்
  • பிறப்பு வரம்பு முறைகள் குறித்த தகவல்களைத் தனிநபர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பங்களைத் திட்டமிடுவதில் அவர்களுக்கு முழுமையாகத் தேர்வு செய்ய உதவியாக இருக்கும்.
  • உலகளாவிய அடிப்படையில் தரமான கருத்தடைச் சேவைகளை கிடைக்கச் செய்தல் மற்றும் அதனை அணுகும்படி செய்தல்; மற்றும்
  • ஆரம்பக் கல்வியினை உலகளாவிய மயமாக்கல்.
  • ஆனால் வல்லுநர்கள் சிலர் இந்தக் குழுவின் பரிந்துரைகளை விமர்சித்து, அவற்றை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அவர்களின் முக்கிய வாதங்கள்

  • இந்த அறிக்கையானது ஆழமானப் பகுப்பாய்வு, நியாயம் மற்றும் அவசரகாலக் கொள்கைகளை கொண்டிருக்கவில்லை.
  • பரிந்துரைக்கப்பட்ட இந்த அணுகுமுறையானது முற்றிலும் நிர்வாக மயமானதோடு மற்றும் சுட்டிக் காட்டப் பட்ட உத்திகளும் "வளர்ச்சியே சிறந்த கருத்தடை" என்ற தோல்வியுற்ற பழமொழியை மீண்டும் வலியுறுத்துகிறது.
  • குறைந்தபட்சத் தேவைகளுக்கும் மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கும் எந்தவிதத்  தொடர்பும் இல்லை.
  • கடந்த நான்கு தசாப்தங்களாக எட்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் அனைத்து அரசியல் வாக்குறுதிகளுடன் பதினொரு பொதுத் தேர்தல்கள் என இவை அனைத்தும் இருந்தும் கடந்த நான்கு தசாப்தங்களாக அடைய முடியாத அனைத்து இலக்குகளையும் 2010 ஆம் ஆண்டிற்குள் எவ்வாறு அடைய முடியும்.
  • நமது மக்கள் தொகை ஏற்கனவே 975 கோடியை (1996 ஆம் ஆண்டில்) தாண்டிருக்கும் போது, ​​சுமார் 32 கோடி பேர் இன்னும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.

  • அரசியல் சார்ந்த மக்கள் தொகை ஆணையம் பயனற்றதாக இருக்கும்.
  • குடும்பக் கட்டுப்பாடு விதிகளை மீறுபவர்களுக்கு எந்தவிதமான ஊக்கத் தொகை சலுகையின்மையினையும் அளிக்க இந்தக் குழு பரிந்துரைக்கவில்லை.
  • 1992 ஆம் ஆண்டு கருணாகரன் குழுவானது, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை மிகவும் பயனுள்ளதாகவும் வேகமாகவும் செயல்படுத்த ஊக்கமளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது.
  • அத்தகைய ஒரு திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது.
  • இதன்படி, மூன்று குழந்தைகளுக்கு மேல் இருந்தால், எந்த ஒரு தனிநபரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • இருப்பினும், இந்தத் திட்டம் காகிதத்தில் மட்டுமே உள்ளது.

  • இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
  • நமது விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் நாம் ஏன் தோல்வியடைந்தோம் என்பதை இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.
  • 1951 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மக்கள்தொகை தொடர்பான திட்டங்களானது தடையின்றி நடந்து வருகின்றன.
  • நிர்வாக அமைப்பில் உள்ள குறைபாடுகள் அல்லது தவறான கொள்கைகள் அல்லது தவறான அல்லது திட்டங்களைத் தாமதமாக செயல்படுத்துதல் காரணமாக இந்தத் தோல்வி ஏற்பட்டதா? என்றும் இதில் குறிப்பிடவில்லை
  • அறிக்கையால் புறக்கணிக்கப்பட்ட அடிப்படைப் பிரச்சினை இதுதான்.
  • இந்த வகையான பகுப்பாய்வு இல்லாமல், அறிக்கையில் முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை கடைபிடிப்பது மிகவும் பொருத்தமற்றதாக இருக்கலாம்.
  • இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது அரசியல் அக்கறையின்மையே ஆகும்.

  • ஆனால் அந்த குழுவானது இந்த அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
  • அரசியல் தலைவர்கள் தைரியமாக இது போன்ற சட்டங்களை இயற்ற வேண்டும்.
  • பிரச்சினைகளின் போது தேவையான அவசர நடவடிக்கைகளில் அவை கவனம் செலுத்தலாம்.
  • இரண்டு குழந்தைகள் என்ற சிறிய குடும்ப விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு சட்டத்தின் மூலம் பதவி உயர்வுகளை மறுப்பது, தேர்ந்தெடுக்கப்பட்டப் பதவியை வகிப்பதில் இருந்து தடை செய்தல், இடஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்காமல் இருப்பது, வங்கிக் கடன்களை மறுப்பது போன்ற சில தடைகளை விதிக்கலாம்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை

  • எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) என்பது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைத் தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற NGO அறக்கட்டளை ஆகும்.
  • இது கிராமப்புறங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை  வழங்க வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்கி ஊக்குவிக்கிறது.
  • சமமான மற்றும் நிலையான சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அவர்களது அணுகுமுறைகளானது அதிகப்படுத்துகின்றன.
  • MSSRF அறக்கட்டளையின் சின்னமானது, தொடர்ச்சியையும் மாற்றத்தையும் குறிப்பதோடு, இது திறந்த நிலை கொண்ட, பல பக்கங்கள் கொண்ட  மற்றும் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் DNA மாதிரியையம் தூண்டுகிறது.

வரலாறு

  • 1988 ஆம் ஆண்டு MSSRF அறக்கட்டளையின் தலைவரான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களால் நிறுவப்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரான சி.வி. ராமன், சுவாமிநாதனை நிலையான வளர்ச்சிக்கான தனது இலக்குகளை உணர ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி மையத்தைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ள நிலையில் அதை இவர் இப்போது "எப்போதும் பசுமைப்புரட்சி" என்று கூறியுள்ளார்.
  • MSSRF அமைப்பினைத் தொடங்க சுவாமிநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு உலக உணவுப் பரிசினைப் பெற்ற பிறகு, அதற்காக வழங்கப்பட்ட US$200,000 பரிசுத் தொகையினைப் பயன்படுத்தினார்.
  • சுவாமிநாதன் அவர்கள் யுனெஸ்கோவின் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தில் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
  • அவர் இந்தியாவின் விவசாயம், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • இந்த அறக்கட்டளைக்கு 1996 ஆம் ஆண்டு ப்ளூ பிளானட் பரிசானது வழங்கப் பட்டது.

திட்டங்கள்

  • MSSRF ஆனது ஐந்து வகையான முக்கிய திட்டப் பணிகளை பல பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது. அவையாவன - கடலோர அமைப்புகள், பல்லுயிர் மற்றும் உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, பாலினம் மற்றும் மேம்பாடு மற்றும் தகவல் ஆராய்ச்சிகள் ஆகியவையாகும்.

  • விவசாயம் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் M. S சுவாமிநாதனின் பன்முகப் பங்களிப்புகளானது காணப்பட்டது.
  • இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை மட்டுமன்றி, இயற்கை வளங்களின் நிலையான நிர்வாகத்தையும் மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பினை இது எடுத்துக் காட்டுகிறது.
  • துணைக்கண்டம் முழுவதும் அரிசிப் பற்றாக்குறையை உற்றுநோக்கிய அவர், இந்தியாவிற்கு போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதில் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
  • மருத்துவம் மற்றும் பொறியியல் துறையினை மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப் பட்ட சகாப்தத்தில் அவர் வளர்ந்தாலும், அவர் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார்.

  • அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளானது விவசாய முறையை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாமல் அதே நிலத்தில் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்தது.
  • தலைமுறை தலைமுறையாக விவசாய விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை உணவுப் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் ஊக்குவிக்கும்.
  • இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விவசாய நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் அவரது தலைமைத்துவப் பொறுப்பின் மாறுபட்டப் பங்களிப்புகளானது, பயிர் மேம்பாட்டில் முன்னோடியாக இணைந்து தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகின்றன.
  • அவரது மறைவானது விவசாய ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் கண்டுபிடிப்புகளின் சகாப்தத்தினைச் சீர்குலைக்கும் வகையான முடிவாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

-------------------------------------

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top