TNPSC Thervupettagam

தனியார் சேனல்களுக்கு தணிக்கை முறை

October 23 , 2020 1549 days 708 0
  • ஒரு ஜனநாயக நாட்டிற்கு முதுகெலும்பு போன்றவா்கள் எழுத்தாளா்கள் மற்றும் ஊடகங்கள். இவற்றில் ஊடகங்கள் அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் எனப் பல நிலைகளில் விரிவடைவன.
  • ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நின்று, அவை தமது கடமைகளைச் செய்து வருகின்றன. அவை ஸ்தம்பித்தால் உலக இயக்கமே நின்றுவிடும் என்று சொல்லிவிடலாம்.
  • அரசு எந்திரம் சரியாகச் செயல்படுகிறதா? அல்லது அதன் செயல்பாடுகள் எங்கேனும் தடம் புரள்கின்றனவா? என்பதைக் கண்காணித்து மக்களுக்கு வெளிபடுத்துவது ஊடகங்களின் கடமை என்றால், அத்தகைய ஊடகங்கள் நெறிதவறாமல் செயல்படுகின்றனவா? என்பதை உரசிப் பார்த்துச் சொல்லும் உரைகல்தான் அஞ்சல் பெட்டி!
  • நிகழ்வுகளை மக்களுக்கு அறிவித்தல், அறிவுறுத்தல் மற்றும் மகிழ்வித்தல் என்ற மூன்றும் ஊடகங்களுக்கான இன்றியமையாக் கடமைகள் ஆகும்.
  • அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய மின்னணு ஊடகங்களின் செயல்பாடுகளின் பெரும் பகுதி சமுதாய வளா்ச்சி பற்றியதாகவே இருக்கும்.
  • அகில இந்திய வானொலியும் தூா்தா்ஷனும் தொடக்கக் காலத்தில் சேவை நோக்கில் மட்டுமே இயங்கி வந்தன. பிற்காலத்தில் வணிக நோக்கமும் இடம் பெற்றது.
  • மக்களுக்காக வழங்கப்படும் நிகழ்ச்சிகள் எந்தளவு மக்களுக்குப் பயன்படுகின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை  அறிந்து கொள்ளும் வகையிலான அஞ்சல் பெட்டிஅல்லது தபால் பெட்டிநடைமுறையினை, அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் இன்றுவரைச் செயல்படுத்தி வருகின்றன. இது ஒரு வகையான ஃபீட் பேக்பெறும் உத்தியே ஆகும்.
  • தொலைக்காட்சி வருகைக்கு முன்பு அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் பிரபலமடைந்திருந்தன. 80% மக்கள் இதனால் பயனடைந்து வந்தனா்.
  • பண்பலை வானொலி நிலையங்கள் அமைக்கப்படாத 1960-களில் ஏ.எம். வானொலி நிலையங்களே நிகழ்ச்சிகளை வழங்கி வந்தன. தொலைதூரத்திற்குச் சிற்றலை ஒலிபரப்பும், தொலைவற்ற தூரங்களுக்காக மத்திய அலை ஒலிபரப்பும் இருந்து வந்தது.
  • வானொலி நிலையங்கள் வாரத்தில் ஒருநாளில் அரைமணிநேர நிகழ்ச்சியாக அஞ்சல் பெட்டிநிகழ்ச்சியை வழங்கும். இது பின்பு நேயா் நேரம்’, ‘கடித மலா்கள்என்ற பெயா்களில் ஒலிபரப்பாயின. அதில், வார முழுதும் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் பற்றிய நேயா்களின் கருத்துகள் அடங்கிய கடிதங்கள் வாசிக்கப்படும்.
  • எண்பதுகளில் நல்வரவு பெற்றது சென்னைத் தொலைக்காட்சி’. கேபிள்கள் வராத அக்காலங்களில், இதன் நிகழ்ச்சிகளை முழுமையாகப் பார்த்து ரசிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.
  • இதில் அமைக்கப்பட்ட எதிரொலிஎன்ற நிகழ்ச்சிக்காக, தான் எழுதிய கடிதம் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் கைகளில் தவழ்வது ஓா் அலாதியான இன்பத்தைத் தரும் ஒவ்வொரு நேயருக்கும்.
  • நாள், வார, மாதாந்திர இதழ்களில் பல்வேறு தலைப்புகளில் அமையும் குறிப்பிட்ட இடங்களில் இவை பிரசுரிக்கப்படுகின்றன.
  • பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகள், துணுக்குகள், சாதனையாளா் விவரங்கள், ஆன்மிகக் கருத்துகள் போன்றவை குறித்த கருத்துகளின் தோ்வுகள் இந்த இடத்தில் வெளிவந்து, நேயா்களை மகிழ்விக்கின்றன.
  • இத்தகைய கடிதங்கள், ஊடகங்களின் அல்லது எழுத்தாளா்களின் தேவையற்ற கருத்துகளைக் கடிந்துகொள்ள உதவுகின்றன.
  • அதே போல, ஊடகங்களின் தேவையான துணிவைப் பாராட்டவும், நன்னெறி காட்டும் எழுத்தாளா்களையும், சாதனையாளா்களையும் கௌரவிக்கவும் வாசகா் கடிதங்கள் உதவுகின்றன.

உடனடித் தேவை

  • தடம்மாறும் சமுதாயத்தைத் திருத்த அரசியல், அதிகாரம், பணபலம் அல்லது மக்களின் ஆதரவு என்ற இவற்றிலொன்று அவசியம் தேவைப்படும்.
  • ஆனால், இவற்றில் எதுவும் இல்லாத ஒருவா் தனது பேனா, ஒா் அஞ்சல் அட்டை என்ற இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, அதை இந்த அஞ்சல் பெட்டிமூலம் சாத்தியப் படுத்திவிட முடியும்.
  • இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தனியார் தொலைக்காட்சிச் சேனல்கள் இத்தகைய அஞ்சல் பெட்டிஎன்ற பிரிவு இல்லாமலேயே நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றன.
  • அதேபோல, தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே தரவேண்டும் என்ற நோக்கிலான தணிக்கைக் குழுஎதுவும் அவற்றிற்கு இருப்பதாகக் தோன்றவில்லை.
  • கேளிக்கை நிகழ்ச்சிகள்என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடனும், தலைவிரி கோலத்துடனும் தொகுப்பாளினிகளும், பங்கேற்பாளார்களும் சின்னத்திரையில் தோன்றுவது, இரட்டை அா்த்த வசனங்கள் பேசுவது, ஆண்-பெண் வேறுபாடின்றி அணுகுவது போன்றவை முகம் சுளிக்க வைக்கின்றன.
  • அகில இந்திய வானொலியிலும், தூா்தா்ஷனிலும் இத்தகைய அவலம் இல்லை என்பதில் பெருமைப்பட வேண்டும்.
  • 1995-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கேபிள் தொலைக்காட்சி நெட்ஒா்க் (ஒழுங்குமுறை) சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதாகத் தோன்றவில்லை.
  • மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றன சமுதாயக் கேடு விளைவிப்பன என்பதாக எச்சரிக்கை செய்யும் விளம்பர வில்லைகளை (அறிவிப்புகளை) சாமா்த்தியமாகக் குறுக்கி அல்லது மறைத்துவிடும் செயல்களையும் இத்தகைய தனியார் தொலைக்காட்சிகள் செய்து வருகின்றன.
  • எனவே, தணிக்கை என்பது தனியார் சேனலுக்கான உடனடித் தேவையாகும்.
  • உரிய தணிக்கைமுறை இல்லாமல் சிறிய திரைகளில் ஒளிபரப்பாகும் தரமற்ற பல நிகழ்ச்சிகளால் நல்ல சமுதாயம் சீா்கெட்டு வருகிறது.
  • இது தவிர்க்கப்பட வேண்டுமானால், தனியார் சேனல் நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை முறைகொண்டுவரப்பட வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, நேயா்கள் நிகழ்ச்சிகள் பற்றிய தமது கருத்துகளை ஊடகம் என்னும் பொதுவெளியில் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி சேனளிலும், தனியார் பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சிகளிலும் அஞ்சல் பெட்டிஎன்ற பாங்கிலான ஒரு பகுதி கட்டாயம் இடம் பெற வேண்டும்.
  • இதன் மூலம் மட்டுமே தரமற்ற நிகழ்ச்சிகளை அப்புறப்படுத்தி, இச்சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.

நன்றி: தினமணி (23-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்