TNPSC Thervupettagam

தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் - பகுதி 2

September 11 , 2023 484 days 980 0

             (For English version to this please click here)

தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்

திட்டத்தின் பயனாளிகள்

  • தற்போதைய நிலவரப்படி, 43,190 சத்துணவு மையங்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் பயனாளிகள் உள்ளனர்.
  • இதில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் (NCLP) சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,500 மாணவர்களும் அடங்குவர்.
  • இது தவிர, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (ICDS) கூட்டுச் செயலாக்கத்தின் விளைவாக சத்தான உணவுத் திட்டத்தின் கீழ் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட 15.8 லட்சம் குழந்தைகள் சத்தான உணவைப் பெறுகின்றனர்.

தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தின் உணவுப்பட்டியல்

காலை உணவுத்திட்டத்தின் முக்கியத்துவம்

குழந்தையின் பசியைக் குறைத்தல்

  • ஒரு நாளைக்கு காலை உணவு மற்றும் மதிய உணவை வழங்குவதன் மூலம் ஒரு குழந்தைக்கு கிட்டத்தட்ட 28 கிராம் புரதம் மற்றும் 846 கலோரிகள் கிடைக்கும்.
  • இது வகுப்பறையில் பசி இல்லை என்பதை உறுதி செய்து, கற்றல் நிலையினை மேம்படுத்தும்.

ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைத்தல்

  • உலகப் பட்டினிக் குறியீட்டில் வகைப்படுத்த பட்டுள்ள எந்த நாட்டிலும் இல்லாத வகையில், 17.3% என்ற அளவில் குழந்தைகளின் உடல் எடை குறைவு சார்ந்த விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்

  • பள்ளிகளில் உணவளிக்கும் வாக்குறுதியால் பெற்றோர்கள் குறிப்பாக குறைந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வர ஊக்குவிக்கிறது.

  • உதாரணமாக, 1982 ஆம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளிகளில் தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) அதிகரித்துள்ளது.

கல்வி நிலையினை அதிகரித்தல்

  • அரசாங்கத்தின் கருத்துக்கணிப்பின்படி, 25%க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன் காலை உணவை சாப்பிடுவதில்லை.
  • பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவினை முறையாக வழங்குவதன்  மூலம் அவர்கள் தங்ககளின், கல்வியில் கவனம் செலுத்துதல், கற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதை உறுதி செய்தல் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.

பெருந்தொற்றுப் பாதிப்பைச் சமாளித்தல்

  • தொற்றுநோய் ஆண்டுகளிலிருந்து குழந்தைகளின் கற்றல் மற்றும் ஊட்டச்சத்து முடிவுகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
  • காலை உணவுத் திட்டங்கள் போன்ற புதுமையான நடவடிக்கைகள் தடைகளைக் கடக்க உதவும்.

மாநிலத்தின் பொறுப்புடைமை

  • சரத்து 38 என்பதின் கீழ் மக்கள் மற்றும் மக்கள் குழுக்களின் நலனை மேம்படுத்துவதற்கும், வருமானம், வசதி மற்றும் வாய்ப்பு வேறுபாடுகளைக் குறைப்பதற்கும் மாநிலங்கள் பொறுப்பாகும்.

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டம்

  • பள்ளியில் உணவளிப்பது மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்க ஊக்குவிப்பதோடு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையை இது குறைக்கிறது.

சமூகமயமாக்கல்

  • இது ஒரு உணவுப் பகிர்வு அனுபவத்தின் மூலம் சாதிய நிலைப்பாடுகள் மற்றும் வர்க்க வேறுபாடுகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டத்தைச் சுற்றியுள்ள சமூக அரசியல் வளர்ச்சிகள்

  • இலவசங்கள் பற்றிய அரசியல் விவாதம்
  • மனித வளர்ச்சி நலனின் வீழ்ச்சி
  • கோவிட்-19 காரணமாக கல்வி சீர்குலைவு
  • அரசியலமைப்பின் கீழ் அரசின் பொறுப்புடைமை (பிரிவு 38).
  • வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் தனிநபர்கள் மற்றும் குழுக்களிடையே வசதி, வாய்ப்புகளில் நலனை மேம்படுத்துதல்.

சவால்கள்

  • இதே போன்ற திட்டத்தில் உள்ளதைப் போன்ற சிக்கல்களில் இத்திட்டமானது இயங்கக் கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இவை பின்வருவனவற்றைக் கொண்டிருக்கலாம்:

தரமற்ற உணவு

  • மதிய உணவுத் திட்டத்தில் இது அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.
  • இந்தத் திட்டத்திலும் அதே பிரச்சினைகள் எழும் என்ற சிக்கல் உள்ளது.
  • எடுத்துக்காட்டாக எளிய சப்பாத்திகளில் உப்பு சேர்த்து பரிமாறுதல் மற்றும் உணவு விஷமுற்றதாக மாறுதல் போன்றவை அடங்கும்.

ஊழல்

  • இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் மற்றும் பொருட்கள் திருடப்படுதல் ஆகியவை பிரச்சினைகளாகவே உள்ளன.
  • உதாரணமாக, ஒடிசாவில் உள்ள பள்ளிகள் சமீபத்தில் 50 கிலோ கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு சாக்குப் பையிலும் 4-5 கிலோ தானியங்கள் பற்றாக்குறை இருப்பதாக அறிவித்தது.

கலாச்சாரக் கருத்தாய்வுகள்

  • கடுமையான மத மற்றும் ஜாதி நம்பிக்கைகள் காரணமாக, அத்தகையத் திட்டங்களில் உணவுத் தேர்வுகள் விமர்சனத்தை ஏற்படுத்தலாம்.
  • உதாரணமாக, பல மாநிலங்கள் பள்ளி மதிய உணவுக்கான பட்டியலில் முட்டைகளைச் சேர்க்கத் தயங்குகின்றன.
  • குழந்தைகள் தங்கள் சாதி நிலையின் அடிப்படையில் வெவ்வேறு வகுப்பறைகளில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம்

  • கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்தோ அல்லது கடனில் இருந்தோ குழந்தைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
  • சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள், தொழிலாளர்கள் என வகைப்படுத்தப் படாமல் கவுரவப் பணியாளர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.
  • இதனால் அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியச் சட்டம் பொருந்தாது.
  • பெரும்பாலான மதிய உணவுச் சமையல்காரர்கள் மாதத்திற்கு ரூ.2000க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
  • அதே மாதிரியான பிரச்சினை காலை உணவுத் திட்டத்திலும் எழும்.

இந்தியாவின் நலன் சார்ந்த நிலை

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீடு

  • 113 நாடுகளில் இந்தியா 71வது இடத்தில் உள்ளது

உலகளாவியப் பசிக் குறியீடு

  • 116 நாடுகளில் 101

மனித வளர்ச்சிக் குறியீடு

  • 191 நாடுகளில் 132

பள்ளிப்படிப்பு

  • 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி பள்ளிப்படிப்பு 7 (6.7) ஆண்டுகள் மட்டுமேயாகும்.

கல்வியில் ஏற்றத்தாழ்வு

  • கல்வி ஏற்றத்தாழ்வு நிலையில் மிக உயர்ந்த அளவில் இந்தியா உள்ளது.
  • Credit Suisse அறிக்கை
  • அதிகரித்து வரும் செல்வச் சமத்துவமின்மை.

வளர்ச்சிக் குன்றல்

  • இது வயதுக்கேற்ற உயரமின்மை என வரையறுக்கப்படுகிறது.
  • இது நாள்பட்ட குறை ஊட்டச்சத்தின் கீழ் அல்லது மீண்டும் மீண்டும் குறை ஊட்டச்சத்து வருவதன் விளைவாகும்.
  • 2018 ஆம் ஆண்டில் 5-9 வயதுடையக் குழந்தைகளில் சுமார் 10% வளர்ச்சி குன்றியுள்ள நிலையில், இது அகில இந்தியச் சராசரியான 22% என்பதினை விட மிகவும் குறைவாகவும், கேரளாவின் சராசரியை விட (11%) குறைவாகவும் உள்ளது.

எடை குறைவு

  • இது வயதுக்கேற்ற எடையின்மை என வரையறுக்கப்படுகிறது.
  • எடை குறைவாக இருக்கும் குழந்தை வளர்ச்சி குன்றியதாகவோ, உடல்நிலை சீரற்றதாகவோ அல்லது இரண்டையுமோ  கொண்டிருக்கலாம்.
  • கேரளாவை விட (21%) அதிக அளவில் குறைவான எடை கொண்ட குழந்தைகள் (23%) உள்ளன, ஆனால் இது தேசிய சராசரியை விட (35%) குறைவாக உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு

  • 19% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் (வயதுக்கான BMI) என்ற நிலையில், இது கேரளாவில் உள்ள 16% என்ற அளவை விட அதிகமாகவும், ஆனால் தேசிய சராசரியை விட (23%) குறைவாகவும் உள்ளது.
  • இது ஊட்டச்சத்து உட்கொள்வதில் குறைபாடுகள் அல்லது அதிகப்படியாக இருத்தலையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஏற்றத்தாழ்வு அல்லது குறைபாடுள்ள ஊட்டச்சத்துப் பயன்பாடு ஆகியவற்றையும் குறிக்கிறது.

இரத்த சோகை

  • சுமார் 10% மற்றும் 7% பேர் இரத்த சோகை மற்றும் வைட்டமின் ஏ குறைபாட்டுடனும், அதேசமயம் 41% பேர் வைட்டமின் டி குறைபாட்டுடனும்  இருக்கின்றனர்.
  • இது இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது அவற்றின் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறன் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாத நிலையில் இரத்தசோகை ஏற்படும்.

இலவசங்கள்

  • நடுத்தர காலத்திலிருந்து நீண்ட கால அளவில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை ஆதரிக்காத எந்தவொரு அரசு பொதுக் கொள்கைத் தலையீடும் இலவசம் என்று அழைக்கப் படலாம்.
  • இலவச மின்சாரம், இலவசக் குடிநீர், இலவசப் பொதுப் போக்குவரத்து, நிலுவையில் உள்ள பயன்பாட்டுக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்தல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.
  • விவசாயக் கடன் தள்ளுபடிகள் பெரும்பாலும் இலவசங்களாகக் கருதப்படுகின்றன.
  • இத்திட்டமும் இலவசமாகவே கருதப்படுகிறது.

முன்னோக்கியப் பாதை

  • தொற்றுநோயால் கல்வியில் ஏற்பட்ட  இடையூறுகளை நிவர்த்தி செய்ய புதுமையான மற்றும் பயனுள்ள நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
  • இது ஊட்டச்சத்து துறைகளுக்கு உதவுவதோடு இந்த துறைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.

முன்முயற்சிகள்

  • இல்லம் தேடி கல்வி மற்றும் எண்ணும் எழுத்தும் போன்றவை கல்வித் துறையின் சில சாதகமான முயற்சிகளாகும்.

மற்ற நாடுகளின் படிப்பினை ஆய்வுகள்

  • இலவசக் காலை உணவுத் திட்டங்கள் கல்வி நிலைகளை அதிகரிக்க உதவும்.
  • இது பள்ளி வருகையில் அதிகரிப்பு மற்றும் படிப்பில் கவனத்தை மேம்படுத்தும்.
  • அமெரிக்காவின் விவசாயத் துறையானது பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
  • இத்தகையத் திட்டங்கள் பல ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக பிரான்சில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப் பட்டன.

பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட தாக்கங்கள்

சேர்க்கை எண்ணிக்கை  உயர்வு

  • 1982 ஆம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்டப் பதிப்பிற்குப் பிறகு, 1982 ஜூலை - செப்டம்பரில் முதன்மைக் கட்டத்தில் (தரநிலை I முதல் V வரை) மொத்தப் பதிவு விகிதம் (GER) 10% அதிகரித்தது.
  • இது 1981 ஆம் ஆண்டு தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடப் படுகிறது.
  • எதிர்காலத்தில் இந்தத் திட்டமானது மேலும் இதனை அதிகரிக்கும்.

இத்திட்டம் எங்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்?

  • தமிழகத்தில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்தசோகை என்பது பெரும் உடல்நலப் பிரச்சனையாக உள்ளது.
  • இதனை 2019-21 ஆம் ஆண்டு தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வு 5 (NFHS-5) என்ற அறிக்கை கூறுகிறது.
  • 2015-16 ஆம் ஆண்டு NFHS-4 காலகட்டத்தில் 50% ஆக இருந்த குழந்தைகளின் இரத்த சோகை பாதிப்பு 57% ஆக அதிகரித்துள்ளது.
  • பள்ளிக் கல்வித் துறை, பொது சுகாதாரம் மற்றும் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இது போன்ற பல சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
  • நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ICDS மற்றும் சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்டப் பிரச்சனைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு வேண்டி ஊட்டச்சத்தின் கூறுகளை மேம்படுத்தலாம்.
  • சமீபத்திய காலை உணவுத் திட்டம் இந்த வகையிலான வழிகாட்டுதலின் ஒரு படியாகும்.
  • காலை உணவுத் திட்டமானது 1,545 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படுகிறது.
  • தமிழ்நாட்டின் செயல்திறனைக் கருத்தில் கொள்வது முக்கியம், ஏனெனில் காலை உணவுத் திட்டமானது அதன் முதல் வகையான திட்டமாக வழங்கப்படுகிறது.
  • இருப்பினும், மதிய உணவுத் திட்டத்தை நிர்வகிப்பதில் பல தசாப்தங்களாக நிபுணத்துவம் பெற்ற அரசாங்கமாக தமிழகம் உள்ளது.
  • அதன் வழியில் முந்தையத் தடைகளையும் இதற்கு முன் வைத்த தவறுகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தலாம்

  • இந்த திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவெனில் தற்போதுள்ளத் திட்டங்களுக்கு துணையாக இருப்பதால், குறைந்த செலவில் சேவையை வழங்குவதாகும்.
  • மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் ஆற்றியப் பல்வேறு பணிகளால் அவர்களின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • காலை உணவுத் திட்டமானது, மதிய உணவுத் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட உள் கட்டமைப்பை அதே வழியில் (சமையலறை மற்றும் பாத்திரங்கள் போன்றவை) கணிசமாகப் பயன்படுத்துகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்