TNPSC Thervupettagam

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 – பகுதி 2

October 13 , 2023 279 days 648 0

(For English version to this, please click here)

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை

பொதுத்துறை

  • தமிழ்நாட்டிற்குள் சுற்றுலா வளர்ச்சிக்கான சாத்தியமான வாய்ப்புகளை கண்டறிந்து உருவாக்குதல்.
  • பொது முதலீட்டின் மூலம் முக்கிய உள்கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளுதல்.
  • மாநிலத்திற்குள் நிலையான சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவையான விரிவான கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்குதல்.
  • சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், தமிழ்நாட்டின் தனித்துவமான சலுகைகளை வெளிப்படுத்தவும் இலக்கு மட்டத்தில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
  • வணிக நட்புச் சூழலை வளர்ப்பதற்கும், சுற்றுலாத் துறையில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்துதல்.

தனியார் துறை

  • தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஆதாரங்களைத் திரட்டுதல்.
  • சுற்றுலா நிலப்பரப்பை மேம்படுத்த வலுவான வணிகத் திறன் கொண்ட திட்டங்களைக் கண்டறிந்து முதலீடு செய்தல்.
  • சுற்றுலாப் பயணிகளின் பல்வேறு நலன்களைப் பூர்த்தி செய்ய புதிய மற்றும் புதுமையான சுற்றுலாத் தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை உருவாக்குதல்.
  • தடையற்ற பார்வையாளர் அனுபவத்தை உறுதி செய்வதற்கான சுற்றுலா சேவைகள் மற்றும் வசதிகளின் திறமையான செயல்பாடு மற்றும் மேலாண்மைக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுதல்.
  • சுற்றுலாப் பயணிகளுக்கு விதிவிலக்கான மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துதல், அவர்களின் திருப்தி மற்றும் மீண்டும் அவர்களின் வருகைகளை உறுதி செய்தல்.
  • தமிழ்நாட்டின் சுற்றுலா சலுகைகளைக் கூட்டாக சந்தைப்படுத்தவும், அதிக பார்வையாளர்களை ஈர்க்கவும் பொதுத் துறையுடன் ஒத்துழைத்தல்.

https://gumlet.assettype.com/dtnext/2023-01/4dfff262-ac78-4642-9dbf-83d76b11138b/img7.jpg

12 வெவ்வேறு கருப்பொருள்கள்

  • ஒட்டு மொத்தமாக, சுற்றுலாத் துறையானது தனது முயற்சிகளை 12 வெவ்வேறு கருப்பொருள்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • அவற்றில் சாகசம், கேளிக்கை, குழு (கேரவன்), கிராமப்புற மற்றும் தோட்டம், கடலோர, கலாச்சார, மருத்துவம் மற்றும் ஆரோக்கியம், மதம், சுற்றுச்சூழல், MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions), பாரம்பரியம் மற்றும் வணிகச் சுற்றுலா ஆகியவை அடங்கும்.
  • கருப்பொருள் பூங்காச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, சென்னையின் புறநகர்ப் பகுதியில் குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான கேளிக்கைப் பூங்கா ஒன்றை உருவாக்க மாநிலச் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
  • இது டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற உலகளாவிய கருப்பொருள் பூங்காக்களைப் போன்றது.
  • கேளிக்கைப் பூங்காவானது தனியார் துறைப் பங்களிப்பு மூலம் மேம்படுத்தப்படும்.

  • விரைவில், சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற நகரங்கள் நுழைவாயில் மையங்களாக உருவாக்கப்படும்.
  • மேலும் மாநிலச் சுற்றுலாத் துறையானது அதிக நகரங்கள்/நகரங்களை நுழைவாயில் மையங்களாக அறிவிக்கலாம்.
  • "ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து 5 சதவீதம் ஒதுக்கீடு முதன்மை நுழைவுவாயில் மையங்களாக சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த அர்ப்பணிக்கப்படும்" என்று அது கூறியது.
  • மாநிலமானது வளமான இயற்கை மற்றும் கலாச்சார இடங்களைக் கொண்டு உள்ளது.
  • அவை கோயில்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் முதல் மலைப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் தேசியப் பூங்காக்கள் வரை உள்ளன.
  • தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 300 சுற்றுலாத் தளங்களுக்கான கருத்தியலுக்கான பெரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறையால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத் தளங்கள், மலைகள் மற்றும் மலைப்பகுதிகள், இயற்கை பாதைகள், கடற்கரை தளங்கள் மற்றும் கோவில்களை உள்ளடக்கியது.
  • இவை மட்டுமல்லாமல், சுற்றுலாத் தளங்கள் படிப்படியாக மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்.

இணைப்பை மேம்படுத்துதல்

  • சாலை அல்லது இரயில் உள்கட்டமைப்பு மூலம் சரியாக இணைக்கப்படாத தொலைதூர இடங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்காக மாநில அரசு செயல்படும்.
  • அனைத்து முக்கியச் சுற்றுலாத் தலங்களிலும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் அணுகலை உறுதி செய்வதற்காக நடைபாதைகள், சரிவுகள், மின்தூக்கிகள் மற்றும் அணுகக்கூடிய கழிப்பறைகள் போன்ற குறிப்பிடத் தக்க இடஞ்சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்படும் .
  • மாநில/தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் ஒவ்வொரு 50-60 கி.மீ.க்கும் பொது-தனியார் கூட்டு (பிபிபி) மாதிரியின் மூலம் வழித்தட வசதிகள் உருவாக்கப்படும்.

  • இது மாநிலத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிகளுக்கு பார்வையாளர்களுக்கான மகிழ்ச்சியான  மற்றும் பொருத்தமான போக்குவரத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு ஆதரவாக மூலதனம் செய்வதற்காக மானியம், வட்டி மானியம், ஊதியம் மற்றும் தரச் சான்றிதழ் போன்ற சலுகைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
  • மூன்று பிரிவுகளின் கீழ் சுற்றுலா தொடர்பான வணிகங்கள் மற்றும் முன்முயற்சிகளின் வளர்ச்சியானது அவர்களால் ஊக்குவிக்கப்படும்.

சுற்றுலா திட்டங்கள்

  • கேளிக்கைப் பூங்காக்கள் / கருப்பொருள் பூங்காக்கள், பாரம்பரிய விடுதிகள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/முகாம்/ கூடார தங்குமிடங்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், பெருங்கடல்கள்/மீன்கள், கோல்ஃப் மைதானங்கள், தோட்டம்/ பண்ணை சுற்றுலாத் திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகசம், கடற்சார் மற்றும் குழு (கேரவன்) சுற்றுலா போன்ற சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் தொங்குபாதைகள் போன்றவை ஒற்றைச் சாளர அனுமதிக்குத் தகுதி பெறும்.
  • சென்னை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி மற்றும் சென்னை - போர்ட் பிளேர் வழித்தடத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா வசதிகளைத் தொடங்க மாநில சுற்றுலாத் துறையானது திட்டமிட்டுள்ளது.
  • இந்த இடங்களில் துறைமுக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
  • தனியார் கப்பல் செயல்பாட்டாளர்கள் இந்த நீட்டிப்புகளில் கப்பல் சேவைகளைத் தொடங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

கொள்கையின் சிறப்பம்சங்கள்

தொழில் அந்தஸ்து

  • இந்தக் கொள்கையானது இதுவரையில் தொழில்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் வழங்குகிறது.
  • இதன்மூலம், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகாலக் கோரிக்கையை சுற்றுலாக் கொள்கை பூர்த்தி செய்கிறது.

முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகள்

  • சாகசச் சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புறம் மற்றும் தோட்டச் சுற்றுலா, கடலோரச் சுற்றுலா, கலாச்சாரச் சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கியச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத் தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது.
  • நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  • இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும்.

சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி

  • அனைத்துத் தகுதியான சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஒற்றைச் சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப் படும்.

தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத் திட்டங்கள்

  • தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்குப் பூங்காக்கள், பாரம்பரிய விடுதிகள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள், முகாம்கள், கயிறு வண்டிகள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், கடல் மண்டலம், மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம், பண்ணைச் சுற்றுலாத் திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகசச் சுற்றுலா திட்டம், கடல்சார் சுற்றுலாத் திட்டம் மற்றும் குழு (கேரவன்) சுற்றுலாத் திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

ஊக்கத்தொகை

வகை A திட்டப் பணிகள்

  • (ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)
  • 25% அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
  • பெண்கள், பட்டியல் சமூகம், பழங்குடியினச் சமூகம், திருநங்கைகள், மாற்றுத் திறனாளி (திவ்யாங்) நபர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கு 5% அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
  • நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு 5% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
  • குறு நிறுவனங்களுக்கு 10% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
  • 20 நபர்களுக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • இது ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப் படும்.
  • குறு, சிறு நிறுவனங்களுக்காக என்று, புதிய மற்றும் விரிவாக்கச் சுற்றுலாத் திட்டங்களுக்கான வட்டி மானியத்தைத் திரும்பப் பெறுவதற்கும், தேசிய மற்றும் பன்னாட்டுத் தரச் சான்றிதழ்கள் பெறுவதற்கான மானியமும் வழங்கப்படும்.

வகை B திட்டப்பணிகள்

  • (ரூ.50 கோடி முதல் 200 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)
  • 5% அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
  • 20 பேருக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
  • தேசிய தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.2 லட்சம் வரையிலான மானியமும், பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.10 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
  • நிறுவனங்களில் பசுமை முன் முயற்சி திட்டங்களுக்கான ஊக்கத் தொகையாக 25 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.

வகை C திட்டப்பணிகள்

  • (ரூ.200 கோடிக்கு மேலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்) - நிறுவனங்களின் திட்டங்கள் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்
  • முக்கியச் சுற்றுலாத் தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாசத் தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும்.
  • ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் வழங்கப் படும்
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப் படும்.

செயல்பாட்டு வழிகாட்டுதல்கள்

  • தொழில் துறை மற்றும் MSME துறையால் அவ்வப்போது வெளியிடப்படும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், மாநில அரசாங்கத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் MSME கொள்கையின் கீழ் முறையே அங்கீகரிக்கப்பட்டு வழங்கப் படுவதற்கான ஊக்கத் தொகைகளுக்குப் பொருந்தும்.
  • இதர மற்றப் பொருட்களுக்கு, சுற்றுலாத் துறையால் உரிய வழிகாட்டுதல்கள் அவ்வப் போது வெளியிடப்படும்.

குறைகளைத் தீர்த்தல்

மாநில அரசு

  • இக்கொள்கை ஏற்பாட்டின் கீழ், அவ்வப்போது ஆதரவு வழிமுறைகளில் ஏதேனும் திருத்தம் செய்தல் அல்லது திரும்பப் பெறுதல் உட்பட எந்தவொரு விதியையும் (விதிகளையும்) திருத்துவதற்கு இது உரிமை கொண்டுள்ளது.
  • இது தகுதியான சுற்றுலாத் திட்டத்திற்கான அனுமதி/விநியோகம் தொடர்பான விவரங்களை மறு ஆய்வு செய்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.
  • மேலும் இது தொடர்பாக, மாநில அரசின் முடிவே இறுதியானது.
  • இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படும்போது அதற்கான விதிகளை உருவாக்க/திருத்துவதற்கு அதற்கு உரிமை உண்டு.
  • ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால், உயர்மன்றக் குழு நடைமுறையில் உள்ள கொள்கையின் படி ஒரு முடிவை எடுக்கலாம்.
  • அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது என்பதோடு அது சம்பந்தப்பட்ட அனைவரையும் கட்டுப்படுத்தும்.
  • மற்றும் அதன் இணக்கமானது சம்பந்தப்பட்ட துறை/ தரப்பினருக்குக் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
  • சுற்றுலாவானது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர்ப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு உள்ளூர் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறது.
  • இது இயற்கைச் சூழல் மற்றும் கலாச்சாரச் சொத்துக்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாத்து, வறுமை மற்றும் சமத்துவமின்மையைக் குறைக்கவும் உதவுகிறது. 

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்