தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026 (பகுதி 01)
(For English version to this please click here)
- தமிழ்நாடு பட்ஜெட்
- 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
- நிதிப் பற்றாக்குறை: 2024-25 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 3.44% என்ற விகிதத்தில் இருந்து 3.26% ஆகக் குறைந்துள்ளது.
- 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிலுவைத் தொகை ₹9,29,959 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


- மாநில வருவாய்
- வருவாய் கணிப்புகள்: 2025-26 ஆம் ஆண்டில் அரசு அதன் வருவாய் வரவுகளை ₹3,31,569 கோடியாகக் கணித்துள்ளது.
- வருவாய் ஆதாரம்: வருவாயில் 75.3% மாநிலத்தின் சொந்த மூலங்களிலிருந்தும், 24.7% மத்திய வரிகள் மற்றும் மத்திய அரசின் மானியங்களில் இருந்தும் பெறப் படுகிறது.

- மாநிலத்தின் சொந்த வரி வருவாய்
- வரி வருவாய் வளர்ச்சி: 2025-26 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரிகளின் வருவாய் 14.6% அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

- மாநிலத்தின் செலவு
- மொத்தச் செலவு: 2025-26 ஆம் ஆண்டில் மொத்தச் செலவு ₹4,39,293 கோடியாக இருக்கும் என்பதோடு இது 2024-25 ஆம் ஆண்டை விட 9.95% அதிகமாகும்.
- வருவாய் செலவு
- நலச் செலவுகள்: செலவினத்தின் பெரும்பகுதி ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

- மூலதனச் செலவு
- மூலதன முதலீடு: 2025-26 ஆம் ஆண்டில் மூலதனச் செலவு ₹57,231 கோடியாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு இது 2024-25 ஆம் ஆண்டை விட 22.4% அதிகமாகும்.

- வருவாய்ப் பற்றாக்குறை
- பற்றாக்குறைக் கணிப்புகள்: வருவாய்ப் பற்றாக்குறை 2024-25 ஆம் ஆண்டில் ₹46,467 கோடியாகவும், 2025-26 ஆம் ஆண்டில் ₹41,635 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


- நிதிப் பற்றாக்குறை
- GSDPயின் சதவீதமாக பற்றாக்குறை: நிதிப் பற்றாக்குறை 2024-25 ஆம் ஆண்டில் 3.26% ஆகவும், 2025-26 ஆம் ஆண்டில் 3.00% ஆகவும் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வளர்ச்சியானது தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது என்பது இது மாநிலத்தின் வலுவான பொருளாதாரச் செயல்திறன் மற்றும் திறமையான வரி நிர்வாகத்தைப் பிரதிபலிக்கிறது.


- 2025-26 பட்ஜெட் மதிப்பீடுகளுக்கான சிறப்பம்சங்கள்
- தமிழ் வளர்ச்சி
- வான்புகழ் கொண்ட வள்ளுவத்தின் மொழிபெயர்ப்பு: ஆண்டுதோறும் 100 நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டு, ஐந்தாண்டுகளில் 500 நூல்களுடன் வான்புகழின் பெருமையை உலகளவில் மொழிபெயர்த்துப் பரப்புவதற்கு ₹133 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ் கையெழுத்துப் பிரதிகளை எண்ணிம மயமாக்குதல்: பழங்காலத் தமிழ் பனை ஓலைச் சுவடிகள் மற்றும் அரிய வெளியீடுகளை எண்ணிம மயமாக்குவதற்கு சுமார் ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
- NRIகளுக்கான தமிழ் வகுப்புகள்: வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியத்திற்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலை வகுப்புகளுக்கு ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- உலகத் தமிழ் ஒலிம்பியாட்: செம்மொழியான தமிழ்ப் பண்பாட்டை பரப்ப ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட உள்ளது.

- அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம்: தமிழின் தொடர்ச்சியைப் பற்றி அறிய மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் 'அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம்' நிறுவப்பட உள்ளது.
- கலாச்சாரம்
- கொடுமணல் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம்: கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் ₹22 கோடியில் ‘நொய்யல் அருங்காட்சியகம்’ அமைக்கப்பட உள்ளது.
- பாண்டிய கடல் வணிக அருங்காட்சியகம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாண்டியர்களின் கடல்சார் வர்த்தக சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் ₹21 கோடியில் ‘நாவாய் அருங்காட்சியகம்’ அமைக்கப்பட உள்ளது.
- சிந்து சமவெளி கலாச்சாரக் காட்சியகம்: சிந்து சமவெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவாக சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ‘சிந்து சமவெளி கலாச்சாரக் காட்சியகம்’ நிறுவப்பட உள்ளது.
- பாரம்பரிய கட்டிடக்கலை காட்சியகம்: அருங்காட்சியக வளாகத்திற்குள் பாரம்பரியக் கட்டிடக் கலை காட்சியகத்திற்கு ₹40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- தமிழக அரசின் தொல்லியல் துறை கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது.
- எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும், அவையாவன:
- கீழடி (சிவகங்கை மாவட்டம்)
- பட்டண மருதூர் (தூத்துக்குடி மாவட்டம்)
- கரிவலம் வந்த நல்லூர் (தென்காசி மாவட்டம்)
- நாகப்பட்டினம்
- மணிக் கொல்லை (கடலூர் மாவட்டம்)
- ஆதிச்சனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
- வெள்ளலூர் (கோவை மாவட்டம்)
- தெலுங்கனூர் (சேலம் மாவட்டம்)
- ஊரக வளர்ச்சி
- கலைஞர் கனவு இல்லம் திட்டம்: 2025-26 ஆம் ஆண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட ₹3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நகராட்சி நிர்வாகம்
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
- இத்திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் ₹4,132 கோடி மதிப்பிலான பணிகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டப் பணிகளை முடிக்க 2025-26 ஆம் ஆண்டில் ₹2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மேம்பாலத் திட்டங்கள்
- வேளச்சேரி புறவழி சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை (3 கி.மீ.) இணைக்கும் மேம்பாலம் ₹310 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
- குறுக்குப் பேட்டையில் ரயில்வே மேம்பாலம் ₹70 கோடியில் ரயில்வேத் துறை அமைச்சகத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சியால் மேம்படுத்தப்பட உள்ளது.
- ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை
- 3,450 கோடி ரூபாய் செலவில் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் ஒரு உயிரி CNG ஆலை, உரம் தயாரிக்கும் ஆலை, தானியங்கி பொருள் மீட்பு வசதி மற்றும் 21 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவப்பட உள்ளது.
- தாம்பரம் மாநகராட்சியில் 15 - 18 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும், 1,500 டன் மறு சுழற்சி செய்ய முடியாத திடக்கழிவுகளைச் செயலாக்கும் திறன் கொண்ட கழிவுகளில் இருந்து எரிசக்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.
- ஆற்றங்கரை மேம்பாடு
- திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, திருநெல்வேலி மாநகராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடை பாதைகள், தெரு விளக்குகள், நவீனக் கழிப்பறைகள், சிறுவர் பூங்காக்கள் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மேம்பாட்டுப் பணிகள் ₹400 கோடியில் 2025-26 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
- சமச்சீரான வளர்ச்சி
- புதிய நகர வளர்ச்சி
- சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும்.
- உலகளாவிய நகரத் திட்டம்
- உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் ‘உலகளாவிய நகரம்’ எப்ற திட்டத்தின் முதல் கட்டம் விரைவில் TIDCO அமைப்பால் தொடங்கப்பட உள்ளது.

- பெண்கள் நலன்
- சுயஉதவி குழுக்களை (SHGs) உருவாக்குதல்
- 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களை சேர்க்கும் வகையில் உருவாக்கப்படும்.
- 2025-26 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ₹37,000 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள்
- காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை உட்பட, 10 இடங்களில், ₹77 கோடியில், பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு, அதனால் 800 பெண்கள் பயனடைவர்.

- மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நலன்
- புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெறும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ₹1,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து மேலாண்மை மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ஊர்க் காவல் படையில் சேர திருநங்கைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- மூத்த குடிமக்களின் நலன்
- அன்புச் சோலை மையங்கள்
- முதியோர்களின் நலனை உறுதி செய்ய ₹10 கோடி ஒதுக்கீட்டில் 25 'அன்புச்சோலை' மையங்கள் மாநகராட்சிகளில் ஏற்படுத்தப்பட உள்ளது.

- குழந்தைகள் நலன்
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
- 2025-26 ஆம் ஆண்டில் 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ப்பதற்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல்.
- அங்கன்வாடி மையங்கள்
- தற்போது வாடகை வளாகத்தில் இயங்கி வரும் 500 அங்கன்வாடி மையங்களுக்கு ₹83 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
- பள்ளிக் கல்வி
- சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ், மத்திய அரசு செலுத்த வேண்டிய ₹2,152 கோடியை ஈடு செய்ய மாநில அரசு தனது கருவூலத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
- நான் முதல்வன்-கல்லூரி கனவு
- 388 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 500 அரசுப் பள்ளிகளில் பட்டப் படிப்பு படிப்புகளுக்கான உதவித் தொகை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

- உயர்நிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல்
- தொலைதூரப் பகுதிகளில் உள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் ஆனது மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- புதிய நூலகங்கள்
- சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டு அரங்கு வசதிகளுடன் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.
- உயர்கல்வி
- தொழில் - கல்வி கூட்டாண்மை
- தொழில் - கல்வி கூட்டாண்மைக்கு ஆதரவாக தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிதியை அமைப்பதற்காக ₹25 கோடி ஒதுக்கீடு.
- பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
- 300 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் திறன் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், மின் நூலகங்கள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்.
- சென்னை அறிவியல் மையம்
- சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து அதிநவீன சென்னை அறிவியல் மையத்தை நிறுவுதல்.
- அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள்
- IISc மற்றும் TIFR நிறுவனங்களுடன் இணைந்து, சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இரண்டு அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்களை நிறுவ ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

- சம்பளத்துடன் கூடிய விடுப்பு (EL) அளிப்பு முறை
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு (EL) அளிப்பு முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
- பணியாளர்கள் 15 நாட்கள் வரை விடுமுறையைப் பெறுவதன் மூலம் தங்கள் EL விடுப்பைப் பணமாக்கிக் கொள்ளலாம்.
- இந்த அமைப்பு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
- நான் முதல்வன்
- உதவித் தொகை மற்றும் கடன்கள்
- புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித் தொகைக்காக ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
- 2025-26 ஆம் ஆண்டில் 1 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ₹2,500 கோடி கல்விக் கடன் அளிக்கப் பட உள்ளது.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
- பள்ளிப் பாடத் திட்டத்தில் சதுரங்கம்
- உடற்கல்விப் பாடத் திட்டத்தில் எதிர்காலச் சாம்பியன்களை வளர்ப்பதற்குச் சதுரங்கமும் இணைக்கப் படுகிறது.

- எவரெஸ்ட் சிகர ஊக்கத் தொகை
- எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு ₹10 லட்சம் ஊக்கத் தொகை அளிக்கப்பட உள்ளது.
- தொழிலாளர் நலன்
- புதிய தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITI கள்)
- திசையன்விளை, ஏம்பல், சாலவாக்கம் உள்ளிட்ட பத்து இடங்களில் ₹152 கோடி முதலீட்டில் புதிய ITI கல்வி நிறுவனங்கள் நிறுவப்படுவதால் ஆண்டுதோறும் 1,308 மாணவர்கள் பயன் அடைவார்கள்.

- கடைநிலை கிக் தொழிலாளர்களின் நலன்
- புதிய மின்சார வாகனங்களை (இ-ஸ்கூட்டர்கள்) வாங்க 2,000 இணைய அடிப்படையிலான சேவைப் பணியாளர்களுக்கு ₹20,000 மானியம் வழங்கப்பட உள்ளது.
- கிக் தொழிலாளர்களுக்கு விபத்தினால் மரணம் மற்றும் ஊனமுற்றோருக்கான காப்பீட்டுத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட உள்ளது.
-------------------------------------