தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026 (பகுதி 02)
(For English version to this please click here)
உடல்நலம் மற்றும் குடும்ப நலன்
- புற்றுநோய் பராமரிப்பு உள்கட்டமைப்பு
- காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 800 படுக்கைகள் கொண்ட மாநில அளவிலான தலைமைப் புற்றுநோய் மையமாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

- கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு
- தமிழகத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்க 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசிகள் படிப்படியாக வழங்கப்படும்.
தொழில்துறைகள்
- தமிழ்நாடு குறைகடத்தித் திட்டம் - 2030
- 500 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு குறைகடத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ₹100 கோடியில் குறைகடத்தி உற்பத்தியில்லா ஆய்வகம் ஒன்று சென்னையில் நிறுவப்பட உள்ளது.
- குறைகடத்தி & காலணிப் பூங்காக்கள்
- கோவையில் சூலூர் மற்றும் பல்லடம் அருகே தலா 100 ஏக்கர் பரப்பளவில் குறைகடத்தி உற்பத்திப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.
- மேலூர் (மதுரை) மற்றும் கடலூரில் காலணிப் பூங்காக்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் 10,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

- அறிவுசார் வழித்தடம் மற்றும் தொழில்துறை பூங்காக்கள்
- சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் தொழில்நுட்ப வழித்தடத்தைப் போன்று ‘ஓசூர் அறிவுசார் வழித் தடம்’ உருவாக்கப்படும்.
- தூத்துக்குடி, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பசுமை ஹைட்ரஜன், தானியங்கு வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறை ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு புதிய தொழில்துறை பூங்காக்கள் நிறுவப்பட உள்ளது.
- விமான நிலைய மேம்பாடு
- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சுற்றுலா மற்றும் வட்டார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சென்னையை அடுத்துள்ள பரந்தூர் விமான நிலையப் பணிகளையும் அரசு துரிதப்படுத்தி வருகிறது.

- உயிரியல் பூங்கா
- தமிழகத்தின் நிலையை வலுப்படுத்த பயோசிமிலர்ஸ் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் போன்ற வளர்ந்து வரும் துறைகளைக் கொண்டு சென்னைக்கு அருகில் ஒரு அதிநவீன உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)
- புதிய தொழிற்பேட்டைகள்
- திருமுடிவாக்கம் (காஞ்சிபுரம்) மற்றும் சாரம் (விழுப்புரம்) உள்ளிட்ட 9 இடங்களில் 398 ஏக்கர் பரப்பளவில் ₹366 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ நிறுவவுள்ளது.

- பொது வசதி மையங்கள்
- தேனி, நாமக்கல் மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் மசாலா பொருட்கள், முட்டை சார்ந்த உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் பொறியியல் பொருட்களில் ஈடுபடும் MSME களுக்கான பொது வசதி மையங்கள் ₹50 கோடியில் நிறுவப்பட உள்ளது.
புத்தொழில் நிறுவனங்களின் ஊக்குவிப்பு
- விண்வெளி தொழில்நுட்ப நிதி
- விண்வெளி - தொழில்நுட்பம் சார்ந்தப் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ₹10 கோடி விண்வெளி தொழில்நுட்ப நிதி உருவாக்கப்படும்.
- முதல்வர் படிப்பகம் (CM ஸ்பேஸ்)
- சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் தலா ₹5 கோடி செலவில் முதல்வர் ஸ்பேஸ் அமைக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம்
- AVGC - XR சிறப்பு மையம்
- இயங்கு படம், மெய் நிகர் காட்சிகள், விளையாட்டு மற்றும் நகைச்சுவை (AVGC) போன்ற தொழில் துறைகளை மேம்படுத்துவதற்காக எல்காட் சென்னையில் ₹50 கோடியில் ‘வியன் AVGC - XR மையத்தை’ அமைக்க உள்ளது.

- தொடக்கத் தரவுச் சேவையக சேவைகள் திட்டம்
- பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா ₹5 லட்சம் வரையிலான தரவு மையம் பற்றுச் சீட்டுகளை வழங்குவதற்காக எல்காட் ₹10 கோடியில் ‘தமிழ்நாடு புத்தொழில் நிறுவன தரவுச் சேவையக சேவைகள் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளது.
நீர் வளங்கள்
- விரிவான நீர்வள மேம்பாட்டுத் திட்டம்
- சென்னையின் ஆறாவது நீர்த்தேக்கம் கேளம்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் இடையே அமைக்கப் படும்.
- இந்த நீர்த்தேக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் ராஜீவ் காந்தி சாலையை ஒட்டி அமையும்.
- 350 கோடி செலவில் கோவளம் துணைப் படுகையில் நிறுவப்படும்.
- இந்த நீர்த்தேக்கம் 1.7 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் தேக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
பசுமை ஆற்றல்
- உந்தப்பட்ட நீர் சேமிப்புத் திட்டங்கள்
- மொத்தம் ₹11,721 கோடி முதலீட்டில் வெள்ளிமலையில் (வால்பாறை) 1,100 மெகாவாட் மற்றும் ஆழியாறில் 1,800 மெகாவாட் உந்தப்பட்ட நீர் சேமிப்பு அமைப்புகள் PPP முறையில் உருவாக்கப் படும்.

- ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை
- தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக தற்போதுள்ள கொள்கைகளை ஒருங்கிணைத்து சீரமைக்க ‘ஒருங்கிணைந்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை’ அறிமுகப்படுத்தப்படும்.
பருவநிலை மாற்றம்
- கடற்கரைகளுக்கான நீலக் கொடி சான்றிதழ்
- தமிழ்நாட்டில் உள்ள ஆறு கடற்கரைகள் (சென்னையில் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடியில் குலசேகரப்பட்டினம், விழுப்புரத்தில் கீழ்புதுப்பட்டு மற்றும் கடலூரில் உள்ள சாமியார்பேட்டை) 2025-26 ஆம் ஆண்டில் நீலக் கொடி சான்றிதழைப் பெறுகின்றன.
- ஊண் உண்ணும் பறவைகளின் ஆராய்ச்சி அறக்கட்டளை
- ஊண் உண்ணும் பறவைகளின் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல், பாதுகாப்பு உத்திகளை உருவாக்குதல் மற்றும் ஊண் உண்ணும் பறவைகள் (இரையின் பறவைகள்) பாதுகாப்பது குறித்து உள்ளூர் சமூகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

- பெரும் பூநாரை சரணாலயம்
- புலம்பெயர்ந்த ஈர நிலப் பறவைகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக தனுஷ்கோடியை ஒரு பெரும் பூநாரை சரணாலயமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
- மேல்செங்கத்தில் பல்லுயிர் பூங்கா
- தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அழிந்து வரும் மர இனங்களைப் பாதுகாக்க, திருவண்ணாமலையின் மேல்செங்கத்தில் 1,000 ஹெக்டேர் பரப்பளவில் பல்லுயிர்ப் பூங்கா உருவாக்கப் படும்.
- வனச் சாலைகளை மேம்படுத்துதல்
- வன நிர்வாகத்தை மேம்படுத்த 250 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் 500 கிலோமீட்டர் வனச் சாலைகள் மேம்படுத்தப்படும்.
போக்குவரத்து
- மின்சாரப் பேருந்துகள் இயக்கம்
- சுத்தமான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு முதல் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 1,125 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
- பல்வகைப் போக்குவரத்து டெர்மினல்கள்
- சென்னையில், கிண்டியிலும், வண்ணாரப்பேட்டையிலும், பயணிகளுக்கான நவீன வசதிகளுடன், தலா, 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு பல்வகைப் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில்
- கோவை & மதுரை மெட்ரோ திட்டங்கள்
- கோயம்புத்தூர் (அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை) மற்றும் மதுரை (திருமங்கலம்-ஒத்தகடை வழித்தடம்) மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் முறையே ₹10,740 கோடி மற்றும் ₹11,368 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
- சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புகள்
- கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து நிலையம் வரை விமான நிலைய மெட்ரோ பாதை நீட்டிப்பு (15.46 கி.மீ., ₹9,335 கோடி).
- ஆவடி வழியாக பட்டாபிராம் வரை கோயம்பேடு பாதை நீட்டிப்பு (21.76 கி.மீ., ₹9,744 கோடி).
- பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை பாதை நீட்டிப்பு (27.9 கி.மீ., ₹8,779 கோடி).
- தாம்பரம் - வேளச்சேரி (21 கிமீ) மற்றும் கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம் (6 கிமீ) வழித் தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- அதிவேக ரயில் மற்றும் கம்பிவட போக்குவரத்து ஆய்வுகள்
- சென்னை மெட்ரோ ரயில் கழகம் பின்வரும் வழிகளில் மணிக்கு 160 கிமீ வேக SHR (புறநகர் அதிவேக ரயில்) அமைப்பிற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ளும். அவையாவன:
- சென்னை–செங்கல்பட்டு–திண்டிவனம்–விழுப்புரம் (167 கிமீ)
- சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் (140 கிமீ)
- கோயம்புத்தூர்–திருப்பூர்–ஈரோடு–சேலம் (185 கிமீ)
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
- கிராம அறிவு மையங்கள்
- கிராமப்புறங்களில் கல்வி மற்றும் எண்ணிம அணுகலை மேம்படுத்துவதற்காக ₹117 கோடி மதிப்பீட்டில் 120 கிராம அறிவு மையங்கள் கட்டப்படும்.
- வெளிநாட்டு உயர்கல்வித் திட்டம்
- 2025-26 ஆம் நிதியாண்டில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் கல்வியைத் தொடர அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித் திட்டத்திற்கு ₹65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- பெண்கள் நில உரிமைத் திட்டம்
- 2025-26 ஆம் ஆண்டில் ₹20 கோடி ஒதுக்கப்பட்ட நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம், தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக்கி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமாக உள்ளது.
- வீடுகள், மனைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளுக்கும் பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்படும்.
- இந்தத் தள்ளுபடி பெண்களின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்யப் படும் போது பொருந்தும்.
- ₹10 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு இந்தக் கட்டணக் குறைப்பு பொருந்தும்.
- தொல்குடித் திட்டம்
- தொல்குடித் திட்டம், 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு ஆண்டுகளில், ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
- சமூக நல்லிணக்க விருது
- சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைத் தவிர்க்க, பஞ்சாயத்துகளை அங்கீகரித்து ஊக்குவிக்க, தகுதியான 10 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு சமூக நல்லிணக்கப் பஞ்சாயத்து விருதை அரசாங்கம் வழங்க உள்ளது.
- முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
- பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளைக் கொண்ட ஏறத்தாழ 50,000 ஏழ்மையான குடும்பங்களுக்கு 18 வயது வரை கல்வியைத் தொடர அவர்களுக்கு மாத உதவித் தொகையாக ₹2,000 வழங்கப்படும்.
- இந்து சமய மற்றும் அறப்பணிகள்
- 84 கோவில் குளங்கள் ₹72 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- 2025 -26 ஆம் ஆண்டுக்கு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களைத் திருப்பணி செய்ய ₹125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா
- மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற முக்கியச் சுற்றுலா மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹300 கோடி முதலீடு செய்யப்படும்.
- கால்நடை பராமரிப்பு
- கால்நடை வளத்தை மேம்படுத்த பசு வளர்ப்புக் கொள்கை வகுக்கப் படும்.
- பால் பண்ணை மேம்பாடு
- சேலம் பால் பண்ணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையம் ₹15 கோடியில் நிறுவப்படும்.
- ஈரோடு பால் பண்ணை போன்று மற்றப் பால்பண்ணைகளும் ₹10 கோடி முதலீட்டில் நவீன மயமாக்கப்படும்.
- திருவண்ணாமலையில் பட்டர் சிப்லெட் மற்றும் சிறு பை பொட்டல வசதிகள் அமைக்க ₹10 கோடி ஒதுக்கப்படும்.
- கைத்தறி
- கைத்தறி ஆதரவுத் திட்டமானது கடன் தேவைகளுக்காக வேண்டி, கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கூடுதலாக ₹10 கோடியை ஒதுக்கும்.
- பொதுப்பணித் துறை
- சென்னையில் உள்ள ஓரியண்டல் ஆராய்ச்சி மையம், தேசிங்கு ராஜா ராணி நினைவகம் போன்ற கட்டிடங்கள் உட்பட 17 பாரம்பரிய கட்டிடங்கள் ₹150 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப் படும்.

- நெடுஞ்சாலைகள்
- 2,100 கோடி செலவில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 14.2 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் TANSHA (Tamil Nadu State Highways Authority – தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்) நிறுவனத்தால் அமைக்கப்படும்.
- முன்னாள் ராணுவத்தினர் நலன்
- முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் 2025-26 ஆம் ஆண்டில் 400 முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் பயனடைவார்கள்.
-------------------------------------