PREVIOUS
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 - 25
(For English version to this please click here)
அறிமுகம்
· உலகளாவியச் சவால்கள் மற்றும் பின்னடைவு: 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு உலகளாவிய சவால்களை எதிர்கொண்டது, அதனால் பின்னடைவை வெளிப்படுத்தியது.
· உலகளாவிய இடையூறுகளின் தாக்கம்: தொற்றுநோய், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற காரணிகள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை, குறிப்பாக ஆற்றல் மற்றும் உணவுத் துறைகளை சீர்குலைத்தன.
· உலகளாவியப் பொருளாதார வளர்ச்சி: இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், உலகப் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் 3.33% உண்மையான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
· இந்தியாவின் பொருளாதாரச் செயல்திறன்: இந்தியாவின் பொருளாதாரம் 2022-23 ஆம் ஆண்டில் 7.61%, 2023-24 ஆம் ஆண்டில் 9.19% மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் 6.48% வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்துள்ளது.
· தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி: தமிழ்நாட்டின் உள்ளடக்கிய கொள்கைகள் நிலையான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது, 2021-22 ஆம் ஆண்டு முதல் வளர்ச்சி விகிதத்தை 8%க்கு மேல் பராமரிக்கிறது.
தமிழகத்தின் பொருளாதாரப் பலம்
· வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகள்: முற்போக்கான சமூகக் கொள்கைகள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் ஒரு பெரும் திறமையான தொழிலாளர் சக்தி ஆகியவை மாநிலத்தின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளன.
· தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு: 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 9.21% பங்களித்து உள்ளது.
· மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP): தற்போதைய விலையில் GSDP 2023-24 ஆம் ஆண்டில் ₹27.22 லட்சம் கோடியாக இருந்தது.
வளர்ச்சி விகிதம்
· பெயரளவு வளர்ச்சி விகிதம்: 13.71%
· உண்மையான வளர்ச்சி விகிதம்: 8.33%
துறை சார்ந்தப் பங்களிப்புகள்
· சேவைகள் துறை: மொத்த மாநில மதிப்புக் கூட்டு விகிதத்தில் (GSVA) 53.63% அளவில் பங்களிப்பை வழங்குவதில், சேவைத் துறை மிகப்பெரியப் பங்களிப்பாளராக உள்ளது.
· இரண்டாம் நிலைத் துறை: GSVAக்கு இரண்டாம் நிலைத் துறை 33.37% பங்களித்தது என்ற ஒரு நிலையில் அது 5% அதிகரித்தால் மேலும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
· முதன்மைத் துறை: GSVAக்கு முதன்மைத் துறை 13% பங்களித்தது.
முக்கியப் பொருளாதாரக் குறிகாட்டிகள்
· ஏற்றுமதி: தமிழ்நாடு தானியங்கி வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், ஜவுளி மற்றும் தோல் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது.
· உலகளாவிய சந்தை தொடர்பு: மாநிலத்தின் பொருளாதாரம் உலகளாவியச் சந்தை போக்குகளுடன் வலுவான தொடர்பைக் காட்டுகிறது.
· தனிநபர் வருமானம்: 2022-23 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹2.78 லட்சமாக இருந்தது, இது தேசிய சராசரியான ₹1.69 லட்சத்தை விட 1.6 மடங்கு அதிகம் ஆகும்.
· தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தமிழகத்தின் தொலை நோக்குப் பார்வை
· வளர்ச்சிக்கான உத்திசார் திட்டமிடல்: உத்திசார் திட்டமிடல் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதை தமிழ்நாடு மாநிலம் இலக்காகக் கொண்டுள்ளது.
· பருவநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றங்கள், தொழில்நுட்ப இடையூறுகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலப்பரப்புகளை மாற்றுவது போன்றச் சவால்களை எதிர்கொள்வது இதில் அடங்கும்.
உலகளாவிய மற்றும் மாநிலப் பணவீக்கப் போக்குகள்
உலகளாவியப் பணவீக்கம்
· புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய பணவீக்கம் 2022 ஆம் ஆண்டில் 8.6% மற்றும் 2023 ஆம் ஆண்டில் 6.7% ஆகிய அளவுகளை எட்டியது.
இந்தியாவில் பணவீக்கம்
· இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் (CPI) 2022-23 ஆம் ஆண்டில் 6.7%, 2023-24 ஆம் ஆண்டில் 5.4% மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் (ஜனவரி 2025 வரை) 4.9% ஆக இருந்தது.
தமிழ்நாட்டில் பணவீக்கம்
· தமிழ்நாட்டின் சில்லறைப் பணவீக்கம் இதே போன்ற கீழ்நோக்கிய ஒரு போக்கைப் பின்பற்றி, 2022-23 ஆம் ஆண்டில் 6%லிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 5.4% ஆகவும், மேலும் 2024-25 ஆம் ஆண்டில் (ஜனவரி 2025 நிலவரப்படி) 4.8% ஆகவும் குறைந்தது.
ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
· 2019-20 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுக்கு இடையில், தமிழ்நாட்டின் சராசரிப் பணவீக்கம் 5.7% ஆக இருந்தது, இது இந்தியாவின் சராசரியான 4.85% ஐ விட அதிகமாக இருந்தது.
· இருப்பினும், 2021-22 ஆம் ஆண்டில் இந்தப் போக்கு தலைகீழாக மாறியது, மேலும் 2023-24 ஆம் ஆண்டில், 20 முக்கிய இந்திய மாநிலங்களில் 8வது மாநிலமாக குறைந்த சில்லறைப் பணவீக்கத்தை தமிழ்நாடு பதிவு செய்தது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பணவீக்கம்
நகர்ப்புறப் பணவீக்கப் போக்குகள்
· தமிழ்நாட்டில் நகர்ப்புறப் பணவீக்கம் 2019-20 ஆம் ஆண்டில் 6% ஆக இருந்து 2024-25 ஆம் ஆண்டில் (ஜனவரி 2025 வரை) 4.5% ஆகக் குறைந்துள்ளது.
கிராமப்புறப் பணவீக்கப் போக்குகள்
· கிராமப்புறப் பணவீக்கம் 5.4% ஆக இருந்தது, இது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பண வீக்கத்தை உந்தியது.
தமிழ்நாட்டில் விவசாயத் துறை
மாநிலப் பொருளாதாரத்தில் பங்களிப்பு
· விவசாயத் துறையானது ₹1.5 லட்சம் கோடி (GSVAவின் 6%) பங்களிக்கிறது மற்றும் தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய துறையாக உள்ளது.
தமிழ்நாட்டில் பயிர்கள்
· உணவு தானியங்கள் (நெல், மக்காச்சோளம், ஜவ்வரிசி, ராகி மற்றும் தினை உட்பட) மொத்தப் பயிரிடப் பட்டப் பரப்பளவில் 62% ஆகும், அதே சமயம் உணவு அல்லாதப் பயிர்கள் (எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி) பயிரிடப்பட்டப் பரப்பளவில் 38% ஆகும்.
நெல் சாகுபடியில் வளர்ச்சி
· 2019-20 ஆம் ஆண்டில் மொத்தப் பயிரிடப்பட்டப் பகுதியில் 32.1% ஆக இருந்த நெல் சாகுபடி, 2023-24 ஆம் ஆண்டில் 34.4% ஆக அதிகரித்து, பயிர் செய்யும் முறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி
சிறந்த விவசாய உற்பத்தித் திறன்
· ஒரு பார்வையில் (2024) வேளாண் புள்ளி விவரங்களின்படி தமிழ்நாடு, எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தியில் முதலிடத்திலும், மக்காச்சோள உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், நெல் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயக் கடன்
விவசாயக் கடன் அதிகரிப்பு
· 2019-20 ஆம் ஆண்டில் 1.83 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2023-24 ஆம் ஆண்டில் ₹3.58 லட்சம் கோடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகளால் வழங்கப்பட்ட விவசாயக் கடன் படிப்படியாக அதிகரித்துள்ளது.
அரசு ஊக்கத்தொகை
· தமிழக அரசு நெல் சாகுபடியில் குவிண்டாலுக்கு ₹105 மற்றும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ₹215 கூடுதல் ஊக்கத்தொகை வழங்குகிறது.
விவசாயக் காப்பீடு
· எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து விவசாயக் காப்பீடு பாதுகாக்கிறது.
தமிழ்நாட்டில் தோட்டக்கலை மற்றும் கால்நடைகள்
தோட்டக்கலை வளர்ச்சி
· 2023-24 ஆம் ஆண்டில் தோட்டக்கலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மொத்தப் பரப்பளவு 16.3 லட்சம் ஹெக்டேரை எட்டியதன் மூலம், தோட்டக்கலை தமிழ்நாட்டின் விவசாய வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக மாறியுள்ளது.
முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி
· இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் ஆறாவது இடத்திலும் உள்ளது.
மீன் பிடித்தல் மற்றும் மீன் வளர்ப்பு
· தமிழ்நாடு 1.34 லட்சம் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து, 2023-24 ஆம் ஆண்டில் ₹6,854 கோடி அன்னியச் செலாவணியை ஈட்டியது.
தமிழ்நாட்டின் தொழிற்துறைப் பலம்
உற்பத்தித் துறை GDPக்குப் பங்களிப்பு
· இந்தியாவின் உற்பத்தி ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 11.90% பங்களிப்பதோடு, தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தேசத்திற்கு முன்னணியில் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள MSMEகள்
· மாநிலம் 2023-24 ஆம் ஆண்டில், 35.56 லட்சம் உத்யம் தளத்தில் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தொழிற்துறை மற்றும் உற்பத்தி வளர்ச்சி
உற்பத்தித் துறையில் வளர்ச்சி
· 2021-22 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கு இடையில், உற்பத்தித் துறை 8.33% ஆகவும், கட்டுமானத் துறை 9.03% ஆகவும் வளர்ந்தது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024
உத்தரவாதப் படுத்தப் பட்ட முதலீடுகள்
· உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 என்பது ₹6.64 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளைப் பெற்றுள்ளது என்பதோடு இது 14.55 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறைக் கடன் மற்றும் வெளிநாட்டு முதலீடு
தொழில்துறைக் கடன்
· 2019-20 ஆம் ஆண்டு முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை, பட்டியலிடப் பட்ட வர்த்தக வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறைக்கான மொத்தக் கடன் ₹2.5 லட்சம் கோடியிலிருந்து, ₹3.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு (FDI)
· 2019-20 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுக்கு இடையில் தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு ₹5,909 கோடியிலிருந்து ₹20,157 கோடியாக உயர்ந்துள்ளது.
சேவைத் துறை மீள்பார்வை
சேவைத் துறையில் பணியாளர்கள்
· 2023-24 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்புற பணியாளர்களில் 54.63% பேர் சேவைத் துறையில் பணி புரிந்துள்ளனர், இது தேசிய சராசரியான 58.07%க்கு அருகில் உள்ளது.
கடன்-வைப்பு விகிதம் மற்றும் நிதி வளர்ச்சி
கடன்-வைப்பு விகிதம் (CDR)
· தமிழ்நாடு CDR 2019-20 ஆம் ஆண்டில் 109.2% ஆக இருந்து, 2023-24 ஆம் ஆண்டில் 117.7% ஆக அதிகரித்துள்ளது.
· இந்தியாவின் CDR 76.5% லிருந்து 79.6% ஆக உயர்ந்துள்ளது.
தொழிலாளர் படை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR)
· 15-59 வயதுடைய தனி நபர்களுக்கான தமிழ்நாட்டின் LFPR 2019-20 ஆம் ஆண்டில் 63.3% ஆக இருந்தது, இது அகில இந்தியச் சராசரியில் 56.9% ஆக இருந்தது.
· 2023-24 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் LFPR தேசிய சராசரியான 64.3% என்ற அளவைத் தாண்டி 64.6% ஆக உயர்ந்தது.
சமூகக் குறிகாட்டிகள் மற்றும் சமூக நலத் துறைச் செலவுகள்
சமூக முன்னேற்றம்
· பல சமூகக் குறிகாட்டிகளில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது.
· சமூக முன்னேற்றக் குறியீடு (SPI) மற்றும் மொத்தப் பதிவு விகிதத்தில் (GER) முதலிடம் பெற்றுள்ளது.
· குறைவான குழந்தை இறப்பு, குறைந்தப் பிறப்பு விகிதம் மற்றும் குறைவான வறுமை நிலைகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
· நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீடு மற்றும் சுகாதாரக் குறியீட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
· முக்கிய முன்னெடுப்புகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்கள் அடங்கும்.
வறுமை குறைப்பு மற்றும் பொருளாதாரக் குறிகாட்டிகள்
வறுமை விகிதம்
· 2005-06 மற்றும் 2022-23 ஆம் ஆண்டிற்கு இடையில், தமிழ்நாட்டின் வறுமை விகிதம் (தலை கணக்கு விகிதம்) 36.54%லிருந்து 1.43% ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.
கல்வி மற்றும் எழுத்தறிவு
மாணவர் சேர்க்கை
· தற்போது, 1.29 கோடி மாணவர்கள் 58,722 பள்ளிகளில் சேர்ந்துள்ளனர், இது இந்தியாவின் மொத்த மாணவர் சேர்க்கையில் 5.24% ஆகும்.
மொத்தப் பதிவு விகிதம் (GER)
· தொடக்க நிலை: 98.4% (தேசிய அளவில்: 91.7%)
· இரண்டாம் நிலை: 97.5% (தேசிய அளவில்: 77.4%)
· உயர் நிலை: 82.9% (தேசிய அளவில்: 56.2%)
பள்ளிக் கல்வித் தரம்
· பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டில் (SEQI) கேரளாவைத் தொடர்ந்து, தமிழ்நாடு 73.4% மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சுகாதாரம் மற்றும் சமூக நலன்
சுகாதார உள்கட்டமைப்பு
· இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஆயுட்காலம் குறித்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது மற்றும் மருத்துவச் சுற்றுலாவின் முக்கிய மையமாக உள்ளது.
· மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பில் 8,713 சுகாதார துணை மையங்கள், 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 372 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்
பருவநிலை மாற்றம் குறித்த அரசின் நடவடிக்கைகள்
· தமிழ்நாடு அரசு பருவநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு மாநில செயல் திட்டத்தை (2023-30) உருவாக்கி ₹1,000 கோடி பசுமை நிதியத்தை நிறுவியுள்ளது.
· 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதி ஆயோக்கின் SDG 13 (பருவநிலை நடவடிக்கை) குறியீட்டில் தமிழ்நாடு 81 மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
-------------------------------------