TNPSC Thervupettagam

தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2025-26

March 22 , 2025 26 days 1061 0

தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2025-26

(For English version to this please click here)

அறிமுகம்

  • தமிழகத்தின் 5வது பிரத்தியேக விவசாய பட்ஜெட் ஆனது விவசாயிகளின் வருமானம், பயிர் பல்வகைப்படுத்தல், இயற்கை வேளாண்மை, இயந்திரமயமாக்கல் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • மொத்த ஒதுக்கீடு: ₹45,661 கோடி ( 2024-25 ஆம் ஆண்டு ₹42,282 கோடியிலிருந்து 8% அதிகரிப்பு).
  • SC / ST (பட்டியலிடப்பட்டச் சாதியினர் / பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர்) விவசாயிகள் மற்றும் நவீன விவசாயத் தொழில் நுட்பங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த உள்ளது.
  • இது நிலையான விவசாயம், இயந்திரமயமாக்கல் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையிலான முயற்சிகளை ஊக்குவிக்கிறது.

விவசாய வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறன்

  • இங்கு விவசாய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விவசாய உற்பத்தியில் தமிழகத்தின் வளர்ச்சியை எடுத்துரைத்தார்.
  • 2019-20 ஆம் ஆண்டில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த மொத்தச் சாகுபடிப் பரப்பளவு 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
  • இரட்டைப் பயிர் சாகுபடி பரப்பளவு 29.74 லட்சம் ஏக்கரில் இருந்து 33.60 லட்சம் ஏக்கராக விரிவடைந்தது.
  • தேசிய அளவில் ராகி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும், மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்புகளில் இரண்டாவது இடத்திலும், நிலக்கடலை மற்றும் சிறு தானியங்களில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் 16.3 லட்சம் ஹெக்டேர் சாகுபடியில் தோட்டக்கலை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஆதரவு

  • விவசாயம் மற்றும் அதைச் சார்ந்தத் துறைகளுக்கு ₹45,661 கோடி ஒதுக்கீடு.
  • உணவு மானியத்திற்காக ₹12,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது (2024-25 ஆம் ஆண்டில் ₹10,500 கோடியாக இருந்தது).
  • நெல் கொள்முதலை ஊக்குவிக்க ₹525 கோடி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு ₹8,186 கோடி ஒதுக்கீடு (₹6,962.93 கோடியில் இருந்தது).
  • விவசாயிகளின் கடன் தேவைக்காக கூட்டுறவுப் பயிர்க் கடனுக்காக ₹17,000 கோடி ஒதுக்கீடு.
  • பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 35 லட்சம் ஏக்கருக்கான பிரீமியம் மானியத்தில் மாநிலப் பங்காக ₹841 கோடி ஒதுக்கீடு.

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு

  • மத்திய அரசின் நியாயமான மற்றும் ஊதிய விலையை (FRP) விட ஒரு மெட்ரிக் டன்னுக்கு (MT) ₹349 ஊக்கத் தொகையை தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது.
  • கரும்பின் ஒரு மெட்ரிக் டன் மொத்த விலை இப்போது ₹3,500.
  • 1.3 லட்சம் கரும்பு பயிரிடும் விவசாயிகளை ஆதரிப்பதற்காக ₹297 கோடி ஒதுக்கீடு.

விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல்

  • விவசாயத் திறனை மேம்படுத்த, தமிழ்நாடு இயந்திரமயமாக்கல் மற்றும் நவீன மயமாக்கல் முன்னெடுப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:
  • வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்திற்கு ₹215.80 கோடி ஒதுக்கீடு, இதன் மூலம் 17,000 விவசாயிகள் பயனடைகின்றனர்.
  • 10.5 கோடி மானியத்துடன் 130 தனிப் பயன் பணியமர்த்தல் மையங்கள் நிறுவப்படும்.
  • சிறு, குறு விவசாயிகளுக்கு 7,900 இயந்திரக் கலப்பைகள், 6,000 இயந்திரக் களையெடுக்கும் கருவிகள் விநியோகிக்கப்பட உள்ளது.
  • கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 5,000 விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
  • மானியங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன:
  • சிறிய அளவில் நெல் நடவு செய்பவர்கள்: ₹1.5 லட்சம் முதல் ₹1.7 லட்சம் வரை.
  • இயந்திரங்களைக் கொண்டு களை எடுப்பவர்கள்: ₹63,000 முதல் ₹85,000 வரை.

சிறப்புத் திட்டங்கள் மற்றும் ஊக்கத் தொகை

  • முதலமைச்சரின் விவசாயிகள் நல சேவை மையங்கள்
  • 1,000 முதலமைச்சரின் விவசாயிகள் நல சேவை மையங்கள் அமைக்க ₹42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மையத்திற்கும் 30% மானியத்துடன் ₹10 - 20 லட்சம் செலவாகும் (ஒரு மையத்திற்கு ₹3 - 6 லட்சம்).
  • இந்த மையங்கள் விதைகள், உரங்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதல் மற்றும் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கும்.
  • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்
  • இத்திட்டத்தின் கீழ் 15 முக்கிய கூறுகளுக்கு ₹142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்
  • இத்திட்டம் ₹269 கோடி ஒதுக்கீட்டில் 2,335 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.
  • ஏற்கனவே 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • மலை உழவர் மேம்பாட்டுத் திட்டம்
  • 63,000 மலைவாழ் விவசாயிகளை ஆதரிப்பதற்காக ₹22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்காக 22.80 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
  • நிலமற்ற விவசாயிகளுக்கு நிதி உதவி
  • விபத்து மரண இழப்பீடு ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இயற்கை மரண இழப்பீடு ₹20,000 லிருந்து ₹30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இறுதிச் சடங்கு உதவித் தொகை ₹2,500 லிருந்து ₹10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • சிறந்த பயிர்களுக்கான முன்னெடுப்புகள்
  • சிறு தானியங்கள் மற்றும் மாற்றுப் பயிர்கள்
  • சிறுதானிய விவசாயத்திற்கு ₹52 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுப் பயிர் சாகுபடி திட்டங்களுக்கு ₹12 கோடி ஒதுக்கீடு (ஏக்கருக்கு ₹1 லட்சம்).
  • கோடை பயிர் திட்டம்
  • குறிக்கோள்: விவசாயத்தில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையின் தாக்கத்தைக் குறைப்பது.
  • நடைமுறைப்படுத்துதல்: விவசாயிகளுக்கு நியாயமான விலையையும், நுகர்வோருக்கு மலிவு விலையையும் உறுதி செய்ய குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவிக்கிறது.

  • பயிர் பரவல்:
  • பருப்பு வகைகள்: 71,600 ஏக்கர்.
  • எண்ணெய் வித்துக்கள்:
  • நிலக் கடலை: 74,000 ஏக்கர்.
  • செஞ்சி: 33,300 ஏக்கர்.
  • காய்கறிகள்:
  • தக்காளி, வெண்டை, வெங்காயம், பிரிஞ்சி, மிளகாய் மற்றும் கீரைகள்: 57,300 ஏக்கர்.
  • பட்ஜெட் ஒதுக்கீடு: ₹10.5 கோடி.

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியை ஊக்குவித்தல்

  • நோக்கம்: பாரம்பரிய காய்கறி வகைகளின் சாகுபடி மற்றும் நுகர்வை ஊக்குவித்தல்.
  • நடைமுறைப்படுத்துதல்: பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் சிறப்புத் திட்டம்.
  • ஊக்குவிக்கப்பட்ட வகைகள்:
  • கத்தரி: மணப்பாறை கத்தரி, சில்லுக் கொடி கத்தரி, குலசை கத்தரி, பெரிய கொல்லம்பட்டி கத்தரி.
  • தக்காளி: தருவை தக்காளி, மஞ்சள்குடம் தக்காளி.
  • வெண்டை: ஆனைக் கொம்பன் வெண்டை, சிவப்பு வெண்டை.
  • ஆவரை: சீரகு ஆவரை, முக்குத்தி ஆவரை.

மசாலா மற்றும் மசாலாப் பொருட்களுக்கான சிறப்புத் திட்டம்

  • குறிக்கோள்: பாரம்பரிய விவசாய நடைமுறைகளை மேம்படுத்தி, மசாலா மற்றும் மசாலாப் பொருட்களின் சாகுபடியை ஊக்குவித்தல்.
  • முக்கியத்துவம்: மசாலாப் பொருட்கள் நன்கு சுவைகளைச் சேர்க்கின்றன என்பதோடு அவை சுவையை அதிகரிக்கின்றன மற்றும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.
  • இலக்குப் பயிர்கள்:
  • மிளகு
  • கொத்தமல்லி
  • மிளகாய்
  • ஜாதிக் காய்
  • கிராம்பு
  • இலவங்கப் பட்டை
  • பூண்டு
  • இஞ்சி
  • மஞ்சள்

 

  • சிறப்பு கவனம்:
  • ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கருவேல மரங்களை அகற்றிய பின் மிளகாய் சாகுபடிக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
  • பரவல்: 2,500 ஏக்கரில் மிளகாய் சாகுபடி.
  • ஒட்டுமொத்த அமலாக்கம்:
  • மொத்த பரப்பளவு: 17,500 ஏக்கர்.
  • பயனாளிகள்: 23,000 விவசாயிகள்.
  • பட்ஜெட் ஒதுக்கீடு: ₹11.74 கோடி.
  • விதை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்
  • விதைப் பண்ணைகளுக்கு ₹250 கோடி ஒதுக்கீடு.
  • ஏழு மாநில விதை பதப்படுத்தும் அலகுகளுக்கு ₹15.05 கோடி.
  • 15 கோடியில் 7 அரசு விதை சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படும்.
  • விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப் பட்டு கொள்முதல் செய்யப்படும்.
  • பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி
  • பருத்திச் சாகுபடித் திட்டத்திற்கு ₹12 கோடி ஒதுக்கீடு.
  • மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ₹40.27 கோடி (1.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில், 79,000 விவசாயிகள் பயனடைகின்றனர்).

தோட்டக்கலை வளர்ச்சி

  • ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ₹1 கோடி ஒதுக்கீடு.
  • வெங்காயச் சேமிப்பு கிடங்குகளுக்கு ₹18 கோடி.
  • சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது.
  • 500 ஏக்கரில் வெண்ணெய் சாகுபடி ஊக்குவிக்கப்பட உள்ளது.
  • பலாப் பழ சாகுபடியை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு.
  • பனை வளர்ச்சி இயக்கத்திற்கு ₹1.65 கோடி ஒதுக்கீடு.

கரிம மற்றும் வேளாண் வனவியல் கொள்கைகள்

  • 37 மாவட்டங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ₹12 கோடி ஒதுக்கீடு.
  • அதிக மதிப்புள்ள மர வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் காடு வளர்ப்பு கொள்கை வெளியிடப்பட உள்ளது.
  • ஊட்டச்சத்து மற்றும் நிலையான விவசாய முயற்சிகள்
  • சத்தான வேளாண்மை இயக்கத்திற்கு ₹125 கோடி ஒதுக்கீடு.
  • 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் எலுமிச்சை மற்றும் கொய்யா செடிகள் வழங்கப் படும்.
  • 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் காய்கறி விதை பைகள் வழங்கப்படும்.
  • 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் பழ செடிகளின் பைகள் வழங்கப்படும்.
  • புரதச்சத்து நிறைந்த, காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி மையங்கள் அமைக்கப் படும்.
  • பாரம்பரியக் காய்கறிகள் சாகுபடிக்கு ₹2.40 கோடி ஒதுக்கீடு.

தொழில்நுட்பம், சந்தை இணைப்புகள் மற்றும் ஏற்றுமதிகள்

  • மின்-வாடகை செயலி மூலம் 5,000 விவசாய இயந்திர கருவிகள் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கருவிகள் வழங்குவதற்காக வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களுக்கு ₹17 கோடி ஒதுக்கீடு.
  • 56 ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனை நிலையங்கள் மின்-தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப் படும்.
  • 50 உழவர் சந்தைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ₹10 கோடி ஒதுக்கீடு.
  • நுகர்வோருக்கு நேரடி விற்பனையை எளிதாக்குவதற்காக விவசாயிகளின் சந்தைகளை மின் வணிகத் தளங்களுடன் இணைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • முந்திரி வாரியம் மற்றும் புவிசார் குறியீடு (GI) குறியிடல்
  • 10 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட உள்ளது.
  • அடுத்த நான்கு ஆண்டுகளில் 35 விவசாயப் பொருட்களுக்கான புவிசார் குறியீடுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 பொருட்கள் பதிவு செய்யப் பட உள்ளது.
  • பால் மற்றும் கால்நடை ஆதரவு
  • 5,000 பால் உற்பத்தியாளர்களை 4% வட்டி மானியத்துடன் ஆதரிக்கும் சிறு பால் திட்டம் தொடங்கப் பட உள்ளது.
  • கிராமப்புற பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாடு
  • ஒதுக்கீடு: ₹6 கோடி.
  • நோக்கம்: நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள 360 ஏழை கிராமப்புறப் பெண்களுக்கு ஆதரவு.
  • மானியம்: நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கு 50%.

கால்நடைகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்துதல்

  • ஒதுக்கீடு: ₹5.62 கோடி.
  • குறிக்கோள்: திட்டமிடப்பட்ட இனப்பெருக்கம் மூலம் மலட்டுத் தன்மையுள்ள கால்நடைகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்துதல்.
  • பரவல்: தமிழகத்தில் 2,741 கால்நடை மருந்தகங்கள் உள்ளன.

விவசாயிகளுக்குப் புல் நறுக்கும் கருவிகளை வழங்குதல்

  • ஒதுக்கீடு: ₹4.83 கோடி.
  • குறிக்கோள்: தீவன விரயத்தைக் குறைத்தல், கால்நடைகளின் செரிமானத்தை அதிகரித்தல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
  • பயனாளிகள்: சிறு மற்றும் குறு விவசாயிகள்.
  • மானியம்: 3,000 திறனால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளுக்கு 50%.

முதலமைச்சரின் சூரிய சக்தியினால் இயங்கும் நீர் இறைவை இயந்திரத் திட்டம்

  • செயல்படுத்தப்பட்ட ஆண்டு: 2025-2026.
  • பயனாளிகள்: 1,000 விவசாயிகள்.
  • நோக்கம்: சூரிய சக்தியில் இயங்கும் நீர் இறைவை இயந்திரங்களை நிறுவுவதன் மூலம் புதுப்பிக்கத் தக்க ஆற்றலை ஊக்குவித்தல்.

  • மானிய உதவி:
  • சிறு, குறு, SC மற்றும் ST விவசாயிகளுக்கு 70%.
  • மற்ற விவசாயிகளுக்கு 60%.
  • மொத்த செலவு: ₹24 கோடி.
  • கரிம உர உற்பத்தியை ஊக்குவித்தல்
  • ஒதுக்கீடு: ₹3.50 கோடி.
  • நோக்கம்: மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதை ஊக்குவித்தல்.
  • செயல்படுத்தல்: மாவட்டக் கால்நடைப் பண்ணைகள் நியாயமான விலையில் மண்புழு உரம் தயாரித்து விநியோகம் செய்கிறது.

மீள்பார்வை:

  • தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2025-26 விவசாயிகளின் வருமானம், நிலையான விவசாயம், இயந்திரமயமாக்கல் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • மொத்த ஒதுக்கீடு: ₹45,661 கோடி (இதுவரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அதிகபட்சம்).
  • பயிர் பல்வகைப்படுத்தல், புதுமை மற்றும் சிறந்த சந்தை அணுகல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
  • இயற்கை விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
  • SC / ST விவசாயிகள் மற்றும் சிறு-குறு விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

           -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்