TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் இரும்புக்காலம் - பகுதி 02

February 5 , 2025 10 hrs 0 min 75 0

தமிழ்நாட்டின் இரும்புக்காலம் - பகுதி 02

(For English version to this please click here)

தமிழகத்தின் தொன்மை இரும்பு

சமீபத்திய காலக் கணிப்பு மற்றும் ஆராய்ச்சி

  • மாங்காடு, கீழ்மண்டி, மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் உள்ள இரும்புக் காலக் கல்லறைகள், இரும்பின் அறிமுகம் குறித்து முன்பு இருந்த கருத்துகளைத் திருத்துவதற்கு வழி வகுத்தன.
  • ஆதாரங்கள்: சிவானந்தம் (2022), ராஜன் (2022, 2017), மற்றும் ஞானராஜ் (2023) ஆகியோரின் ஆராய்ச்சி தமிழ்நாட்டின் இரும்புக் காலத்தைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

தென்னிந்தியாவில் இரும்புக் காலத் தளங்கள்

  • தென்னிந்தியாவில் இரும்புக் காலத் தளங்கள்: தென்னிந்தியா அதன் குறிப்பிடத்தக்க இரும்பு காலத் தளங்களுக்கு அறியப்படுகிறது என்ற நிலையில் தமிழ்நாடும் இதற்கு விதி விலக்கு அல்ல.
  • இரும்புக் காலக் கல்லறைகளின் எண்ணிக்கை: 1362 முதுமக்கள் தாழி கல்லறைகள், 996 கெய்ன் வட்டங்கள், 225 கல் வட்டங்கள் மற்றும் 634 குடியிருப்புகள் மற்றும் புதைக்கப்பட்ட இடங்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட இரும்பு காலக் கல்லறைகள் அடையாளம் காணப் பட்டு உள்ளன.

அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள்

  • வரையறுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள்: இந்தத் தளங்களில் சில மட்டுமே தோண்டப் பட்டு உள்ளன மேலும் இந்த அகழ்வாராய்ச்சிகளில் பல சுருக்கமானவை என்பதோடு வரையறுக்கப் பட்ட தரவை மட்டுமே அவை வழங்குகின்றன.
  • சமீபத்திய இலக்கு சார்ந்த அகழ்வாராய்ச்சிகள்: தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் துறை மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப் பட்டுள்ளன.

ஆரம்பகால இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

  • ஆரம்பகால இரும்புத் தளங்களின் கண்ணோட்டம்: தமிழ்நாட்டின் ஆரம்பகால இரும்புக் கால இடங்களின் சுருக்கமான கண்ணோட்டம், இப்பகுதியின் இரும்புக் காலத்தின் தன்மையைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

மாங்காடு

இரும்பு வாள் கண்டுபிடிப்பு

  • இடம்: சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் அமைந்துள்ள மாங்காடு என்ற இடத்தில், சிதைந்த சிஸ்ட் (தாழி) புதைகுழியில் இரும்பு வாள் கண்டெடுக்கப் பட்டது.
  • மாதிரி மற்றும் காலக் கணிப்பு: வாளிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியானது கிமு 1263 என்ற ஆண்டின் வழக்கமான காலத்தை வழங்கியுள்ளது.
  • இந்த காலக் கணிப்பு NSF - அரிசோனா AMS என்ற அமைப்பிலிருந்து பெறப்பட்டது.

அளவீடு செய்யப்பட்ட காலக் கணிப்பு

  • சராசரி அளவீடு செய்யப்பட்ட மதிப்பு: சராசரி அளவீடு செய்யப்பட்ட மதிப்பு சுமார் கிமு 1510 ஆம் ஆண்டில் வைக்கப் பட்டது.

காலக் கணிப்பின் முக்கியத்துவம்

  • ஆரம்பகால இரும்பு அறிமுகம்: இந்தக் கண்டுபிடிப்பு, இரும்புத் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வில் அதிக ஆர்வத்தைத் தூண்டி, தமிழ்நாட்டில் இரும்பின் ஆரம்ப காலக் கணிப்புகளில் ஒன்றை வழங்கியுள்ளது.
  • தொடர்ந்து ஆராய்ச்சி: இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகத்திற்கான தேடல் தொடர்ந்தது என்பதோடு இப்பகுதியின் தொல்பொருள் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது.

கீழ்நமண்டி

அகழ்வாராய்ச்சிக் கண்ணோட்டம்

  • இடம்: தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள கீழ்நமண்டியில் 2023 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப் பட்டன.
  • புதைக்கப்பட்ட வகைகள்: அகழ்வாராய்ச்சியில் ஒரு குழி மற்றும் ஒரு சிஸ்ட்டில் வைக்கப்பட்ட ஒரு சர்கோபகஸ் (கல் சவப்பெட்டி) இங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

இரும்புப் பொருட்கள் மற்றும் காலக் கணிப்பு

  • இரும்புப் பொருட்கள் கண்டுபிடிப்பு: ஒரு சர்கோபகஸுடனும் அதைச் சுற்றி இரும்புப் பொருட்களுடனும், புதைக்கப்பட்ட ஒரு குழியிலிருந்து  எடுக்கப் பட்ட ஒரு வட்டவடிவ கல்லில் இருந்து மாதிரி ஒன்று சேகரிக்கப்பட்டதோடு, அதன் காலமும் கணிக்கப் பட்டது.
  • சராசரி அளவீடு செய்யப்பட்ட மதிப்பு: இந்த மாதிரியின் சராசரி அளவீடு செய்யப்பட்ட மதிப்பு சுமார் கிமு 1692 ஆகும்.

கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம்

  • முந்தைய இரும்புக் காலக் கணிப்பு: இந்த கண்டுபிடிப்பு மாங்காடு காலக் கணிப்பை விட ஒரு நூற்றாண்டு முன்னதாகவே தமிழ்நாட்டில் இரும்பு உபயோகத்தின் காலக் கணிப்பை நோக்கித் தள்ளியது.
  • முதல் சர்கோபகஸ் புதைக்கப்பட்ட காலம்: இந்த AMS 14C காலம் (கிமு 1692) தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு சர்கோபகஸ் புதைப்புக் காலம் கணிக்கப் பட்டது என்பதோடு, இது அப்பிராந்தியத்தின் புதைப்பு நடைமுறைகளுக்கு ஒரு புதிய புரிதலைச் சேர்க்கிறது.

ஆதிச்சநல்லூர்

இடம் மற்றும் கண்ணோட்டம்

  • அமைவிடம்: ஆதிச்சநல்லூர் நகரம் தாமிரபரணி ஆற்றின் வலது கரையில், ஸ்ரீவைகுண்டத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவிலும், திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 24 கிமீ தொலைவிலும், ஒரு தொன்மையானத் துறைமுக நகரமும், சங்க காலப் பாண்டியர்களின் தலைநகருமான கொற்கையில் இருந்து மேற்கே 9 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
  • தளப் பகுதி: பரம்பு (உலர்ந்த உயரமான மேடு) என குறிப்பிடப்படும் கல்லறை, திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் 125.04 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி வரலாறு

  • ஆரம்ப கண்டுபிடிப்பு: 1876 ஆம் ஆண்டில் பெர்லினின் எஃப். ஜாகோரால் கண்டுபிடிக்கப் பட்டது, இந்தத் தளம் பின்னர் 1902-04 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் ரியாவால் அகழ்வாராய்ச்சி செய்யப் பட்து பின்பு இது ஒரு முக்கியச் சின்னமான தொல்பொருள் தளமாக மாறியது.
  • மீண்டும் அகழ்வாராய்ச்சி: ASI டி.சத்தியமூர்த்தி 2004-2005 ஆம் ஆண்டில் மீண்டும் அகழாய்வு செய்தார்.
  • மேலும் அகழ்வாராய்ச்சிகள் 2021-22 ஆம் ஆண்டில்  ASI இன் அருண் ராஜ் மற்றும் 2021-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் தொடங்கப் பட்டது.

அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள்

  • மட்பாண்டங்கள்: அகழ்வாராய்ச்சியில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு மட்பாண்டங்கள், பளபளப்பான கருப்பு மட்பாண்டங்கள் மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் உட்பட நேர்த்தியாக செய்யப்பட்ட பல்வேறு மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
  • உலோகப் பொருள்கள்: கல்லறைகள், வாள்கள், கத்திகள், ஈட்டிகள், அம்புக் குறிகள், திரிசூலங்கள் மற்றும் வெண்கல ஆபரணங்கள் (வளையல்கள், மோதிரங்கள் மற்றும் அலங்கரிக்கப் பட்ட நிறுத்து அமைப்புகள்) போன்ற பல்வேறு உலோகப் பொருட்களை இது வெளிப்படுத்தியது.
  • வெண்கலம் மற்றும் இரும்புப் பொருட்கள்: அந்த இடத்தில் விலங்குகள், பறவைகள், தாய் தெய்வம் உள்ளிட்ட தனித்துவமான வெண்கலப் பொருட்கள் மற்றும் மோதிரங்கள் மற்றும் டயடெம்கள் (இருமுடிகள்) போன்ற தங்கப் பொருட்கள் ஆகியவை காணப்பட்டன.
  • மண்வெட்டி, மூன்று முட்கரண்டி ஈட்டிகள் மற்றும் தாய் தெய்வம் போன்ற இரும்புப் பொருட்களும் இருந்தன.
  • எலும்புக்கூடு எச்சங்கள்: மட்பாண்டங்கள், வெண்கலப் பொருட்கள் மற்றும் இரும்புக் கருவிகள் போன்ற பல தொடர்புடைய கலைப் பொருட்களுடன், பெரும்பாலான எலும்புக் கூடுகள் இரண்டாம் நிலை சூழலில் காணப்பட்டன.

இரும்புக் காலக் குடியிருப்பு மேடு

  • குடியிருப்பு மேட்டின் இருப்பிடம்: சுமார் 50 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இரும்புக் கால குடியிருப்பு மேடு, தொலை உணர்தல் மற்றும் GIS மூலம் இரண்டு இடங்களில் அடையாளம் காணப்பட்டது.
  • ஒன்று தற்போதைய வெள்ளூர் - ஆதிச்சநல்லூர் குளத்தில் அமைந்துள்ளது, மற்றொன்று ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ளது.
  • கூடுதலாக, இரும்புக் கருவிகள் மற்றும் ஹாப்ஸ்காட்சுகள் (சில்லு விளையாட்டு) குறிப்பாக ஏழாவது அடுக்கில் காணப் பட்டன.
  • அடுக்கு நிலைகள்: குடியிருப்பு மேட்டின் மேல் மூன்று அடுக்குகளில் தரை மட்டங்களின் மூன்று கட்டங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

AMS 14C காலக் கணிப்பு மற்றும் இரும்பு அறிமுகம்

  • கரி மாதிரி: வாழ்விட மேட்டில் 220 செ.மீ ஆழத்தில் அடுக்கு 4 என்பதில் இருந்து சேகரிக்கப்பட்ட கரி மாதிரியானது கிமு 2060 ஆம் ஆண்டின் வழக்கமான காலக் கணிப்பைக் குறிக்கிறது.
  • அளவீடு செய்யப்பட்ட தேதி: மாதிரியின் அளவீடு செய்யப்பட்ட தேதி 2517 BCE முதல் 2613 BCE வரை இருந்தது, சராசரி மதிப்பு 2517 BCE (93.9%).
  • காலக் கணிப்பின் முக்கியத்துவம்: இந்தக் காலக் கணிப்பானது தமிழ்நாட்டில், இரும்பின் அறிமுகத்தை கிமு 3 ஆம் மில்லினியத்தின் நடுப்பகுதிக்கு தள்ளியது, இது இப்பகுதியில் இரும்பின் பயன்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க ஆரம்ப காலத்தைக் குறிக்கிறது.

சிவகலை (இரும்புக் கால முதுமக்கள் தாழி புதைக்கப்பட்ட இடம்)

இடம் மற்றும் கண்ணோட்டம்: சிவகளை-பரம்பு

  • பரப்பளவு: மயானம் தோராயமாக 500 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • அமைவிடம்: சிவகளை என்ற தளம், பொருநை (தாமிரபரணி) ஆற்றின் வடக்கே 7 கி.மீ தொலைவில், தூத்துக்குடி நகரத்திலிருந்து தென் மேற்கே 31 கி.மீ தொலைவிலும், தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுக்காவில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வடகிழக்கே 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
  • இத்தலம் சிவகளை கிராமத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது என்பதோடு, இந்த மயானம் அண்டை கிராமங்களான பெட்மாநகரம் மற்றும் மூலக்கரை வரை பரவியுள்ளது.
  • அருகிலுள்ள இடங்கள்: ஒரு மைக்ரோலிதிக் (நுண்கற்கள்) தளமான சாயர்புரம் (வடக்கே சுமார் 15 கிமீ), புகழ்பெற்ற முதுமக்கள் தாழிப் புதைவிடமான ஆதிச்சநல்லூர் (மேற்கே சுமார் 15 கிமீ), மற்றும் ஆரம்ப கால வரலாற்றுப் பாண்டிய துறைமுகமான கொற்கை (கிழக்கில் சுமார் 15 கிமீ) ஆகியவை இதன் அருகிலுள்ள சில குறிப்பிடத்தக்க இடங்களாகும்.

அகழ்வாராய்ச்சி வரலாறு

  • தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சிகள்: சிவகளையின் தொல்லியல் முக்கியத்துவத்தை ஆராய 2019-2020, 2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.
  • அகழ்வாராய்ச்சிப் பகுதிகள்: எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன.
  • புதைக்கப்பட்ட இடங்கள்: சிவகளை, பெட்மாநகரம் மற்றும் ஸ்ரீமூலக்கரை ஆகிய இடங்களில் மூன்று புதைவிடங்கள் தோண்டப்பட்டன.
  • குடியிருப்புப் பகுதிகள்: வளப்பலன்பிள்ளை-திராடு, பராக்கிரமபாண்டி-திராடு, செக்கடி-திராடு, ஆவரங்காடு, பொட்டல்கோட்டை-திராடு ஆகிய இடங்களில் ஐந்து குடியிருப்பு மேடுகள் தோண்டப்பட்டன.

அகழ்வாராய்ச்சி விவரங்கள்

  • அகழ்வாராய்ச்சி நோக்கம்: பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
  • சிவகளை: 17 அகழிகள் (10x10 மீ) மற்றும் 39 நாற்கரங்கள் தோண்டப்பட்டன.
  • பெட்மாநகரம்: 8 நாற்கரங்கள் கொண்ட 3 அகழிகள்.
  • ஸ்ரீமூலக்கரை: 16 நாற்கரங்கள் கொண்ட 4 அகழிகள்.
  • தோண்டப்பட்ட மொத்த பகுதி: 24 அகழிகள் மற்றும் 63 நாற்கரங்கள்.
  • வெளிப்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழிகளின் எண்ணிக்கை: மொத்தம் 160 முதுமக்கள் தாழிகள்.

முதுமக்கள் தாழி வகைகள்:

  • சிவப்புப் மட்பாண்டங்கள்: பெரும்பாலான முது மக்கள் தாழிகள் (151) சிவப்புப் பொருட்களால் செய்யப்பட்டவை மற்றும் கால வரிசைப்படி கருப்பு-சிவப்பு மட்பாண்டங்களை விட முந்தையவை.
  • கருப்பு மற்றும் சிவப்பு கலன்கள்: கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்களில் இருந்து 9 முதுமக்கள் தாழிகள் மட்டுமே செய்யப் பட்டன.

முதுமக்கள் தாழிகளின் பண்புகள்

  • குழி ஆழம்: முதுமக்கள் தாழிகளுக்கான குழிகளின் ஆழம் 100-110 செமீ விட்டம் கொண்டு 150 செ.மீ வரை இருக்கும்.

முதுமக்கள் தாழி அளவுகள்:

  • அதிகபட்ச உயரம்: 115 செ.மீ
  • அதிகபட்ச அகலம்: 65 செ.மீ
  • தடிமன்: 4.5 செ.மீ
  • முதுமக்கள் தாழிகள் பாதுகாப்பு: சில முதுமக்கள் தாழிகள் மேலோட்டமான மண்ணின் அழுத்தம் காரணமாக விரிசல்களைக் காட்டியது, மற்றவை மண் உள்ளே ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் அப்படியே மூடிகளைக் கொண்டிருந்தன.

தோண்டப்பட்ட கல்லறைப் பொருட்கள்:

  • கிண்ணங்கள், மூடிகள், மோதிர நிறுத்து அமைப்புகள் மற்றும் பானைகள் (கிட்டத்தட்ட 750 பொருட்கள்) போன்ற பீங்கான்கள் முக்கியமாக உள்ளன.
  • முதுமக்கள் தாழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் கத்திகள், அம்புக் குறிகள், மோதிரங்கள், உளிகள், கோடாரிகள், வாள்கள் உள்ளிட்ட இரும்புப் பொருட்கள் காணப்பட்டன.

குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள்

  • சுவாரஸ்யமான முதுமக்கள் தாழிகள்: இந்த அகழியில் உள்ள மூன்றாவது முதுமக்கள் தாழி ஒரு மூடியுடன் அப்படியே இருந்தது, உள்ளே எந்த மண்ணும் ஊடுருவலும் இல்லை.
  • முதுமக்கள் தாழியின் உள்ளே எலும்புக் கூடுகள், இரும்புப் பொருட்கள், நெல்மணிகள் ஆகியவை காணப்பட்டன.
  • நெல் மாதிரி: முதுமக்கள் தாழி - 3 என்பதிலிருந்து சேகரிக்கப்பட்ட நெல் மாதிரியானது கிமு 1155 ஆம் ஆண்டின் காலத்தில் AMS 14C என்பதால் கணிக்கப்பட்டது.

பிற AMS 14C காலக் கணிப்புகள்:

  • தமிழ் - பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளுடன் கூடிய குடியிருப்புத் தளத்திலிருந்து ஒரு மாதிரி கிமு 685 ஆம் ஆண்டின் காலத்தைக் குறித்தது.
  • 2953 BCE மற்றும் 3345 BCE ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இரும்புப் பொருள்களைக் கொண்ட முதுமக்கள் தாழியில் இருந்து மற்ற மூன்று காலக் கணிப்புகள், கிமு 4 ஆம் மில்லினியத்தின் முதல் காலாண்டில் தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது.
  • சிவகளையிலிருந்து கிடைத்த கண்டுபிடிப்புகள், தமிழ்நாட்டில் இரும்பின் ஆரம்பகாலப் பயன்பாடு பற்றிய நமது புரிதலுக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகின்றன என்பதோடு கிமு 4 ஆம் மில்லினியத்தில் இரும்பு அறிமுகத்திற்கான சான்றுகளைக் காட்டுகின்றன மற்றும் இந்தப் பிராந்தியத்தில் இரும்பு காலக் கணிப்புக்கான நேரடிக் கால வரிசைக்கான கட்டமைப்பையும் வழங்குகின்றன.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்