TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் சின்னங்கள்

December 19 , 2023 365 days 24947 0

(For English version to this please click here)

தமிழ்நாட்டின் சின்னங்கள்

  • ஆரம்பக் கால பிரிட்டிஷ் குடியேற்றங்கள் அமைந்திருந்த பழைய மராஸ் மாகாணத்தில் தமிழ்நாடு மாநிலமானது அமைந்துள்ளது.
  • 1901 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாநிலமானது மறுசீரமைக்கப் பட்டு தற்போதைய தமிழ்நாடு மாநிலமானது பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.
  • ஒவ்வொரு மாநிலமும் அதற்கான தனித்துவமான அதிகாரப்பூர்வ மாநிலச் சின்னங்களைக் கொண்டுள்ளது.
  • பறவைகள், விலங்குகள், பாடல்கள், மரங்கள், விளையாட்டுகள் போன்றவை இதில் அடங்கும்.
  • அந்த சின்னங்கள் அனைத்தும் மாநிலத்தின் பிம்பத்தினைச் சித்தரிப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • அவை ஒற்றுமை, ஒன்றிணைந்துப் பணியாற்றுதல், மாநிலத்தின் சின்னங்கள் மனிதர்களிடையே செயல்படும் வலிமை மற்றும் மாநிலத்தில் உள்ள குழுக்களைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் குறிக்கின்றன.
  • 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலமானது உருவாக்கப்பட்டது.

மாநில அரசின் சின்னம்

  • 1949 ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியின் முதலமைச்சர் பதவிக் காலத்தில், தமிழ்நாட்டின் சின்னமானது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 1949 ஆம் ஆண்டு மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட கலைஞர் R. கிருஷ்ணா ராவ் என்பவரால் மாநிலச் சின்னமானது வடிவமைக்கப் பட்டது.
  • கிருஷ்ணா ராவ் மாநிலத்திற்கு அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக விருதுகளும், பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • இவர் சென்னையிலுள்ள அரசு நுண்கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் படித்து வந்தார்.
  • பின்னர் கல்லூரியின் அவர் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
  • 1948 ஆம் ஆண்டு ராவ் அக்கல்லூரியில் பயன்பாட்டுக் கலைப் பேராசிரியராக இருந்த போது இச்சின்னத்தை வடிவமைக்கப்பதற்காக அணுகினார்.
  • இது மணி வடிவ தாமரை அடித்தளம் எதுவும் இல்லாமல் அசோகரின் சிங்கத் தலைநகரைக் கொண்டும், இருபுறமும் இந்திய தேசியக் கொடியால் சூழப்பட்டுள்ளது.

  • அசோகரின் சிங்கத்தலைநகருக்குப் பின்னால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் அடிப்படையில் ஒரு கோபுரம் அல்லது இந்து கோயில் கோபுரத்தின் வரைபடமானது உள்ளது.
  • அந்த முத்திரையினைச் சுற்றி தமிழ் வரிவடிவக் கல்வெட்டின் மேல் தமிழ் நாடு அரசு என்றும் ("Tamil Nadu Arasu" which translates to "Government of Tamil Nadu") கீழ் பக்கத்தில் வாய்மையே வெல்லும் ("Vaymaiye Vellum") என்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • இது சமஸ்கிருதத்தில் "சத்யமேவ ஜெயதே" என்றும் பொதுவாக அறியப் படுவதோடு "வாய்மையே வெல்லும்" என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • அரச முத்திரையில் இந்தியக் கொடி மற்றும் இந்து கோவில் கோபுரம் கொண்ட ஒரே மாநில சின்னமானது இதுவேயாகும்.

மாநில முழக்கம் - வாய்மையே வெல்லும்

  • இது இந்துக்களின் புனிதமான நூலான வேதங்களின் இறுதிப் பகுதியான முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் ஆகும்.
  • இது இந்தியக் குடியரசின் தேசிய முழக்கமான சத்யமேவ ஜெயதே என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட தமிழ் மொழி பெயர்ப்பாகும்.
  • 1969 ஆம் ஆண்டில் அண்ணா துரை முதலமைச்சராக இருந்த போது, தமிழ்நாடு அரசாங்கம் இதனை தமிழில் மாற்றியது.

மாநில அரசு கீதம்

  • தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டின் மாநில கீதம் ஆகும்.
  • இது மனோன்மணியம் சுந்தரனாரால் எழுதப் பட்டு அதற்கு MS விஸ்வநாதனால் இசைக்கப் பட்டது.
  • அரசின் அதிகாரபூர்வ விழாக்களில் மாநில கீதத்தினைப் பாடவோ அல்லது இசைக்கவோ தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது,
  • மேலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களால் நடத்தப்படும் விழாக்களானது இந்தப் பாடலுடன் தொடங்கி இந்தியத் தேசிய கீதத்துடன் நிறைவடைய வேண்டும்.
  • தமிழ் நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் தினமும் காலையில் நடைபெறும் கூட்டத்தின் போது இப்பாடல் பாடப் படுகிறது.
  • இது 1970 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில அரசின் கீதமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

மாநில தினம் - தமிழ்நாடு தினம்

  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு மாநிலமானது, உருவானதை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு தினமானது தமிழ்நாடு மாநிலத்தில் கொண்டாடப் படுகிறது.
  • 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, மதராஸ் மாநிலமானது அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில், அப்போதையத் தமிழக முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசானது, 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதையத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசானது, 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப் படும் என்று அறிவித்தது.

மாநில மொழி - தமிழ்

  • இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும்.
  • உலகிலேயே மிக நீண்ட காலமாக நீடித்து நிலைத்து இருக்கின்ற செம்மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.
  • 1578 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய கிறிஸ்தவச் சமயப் பரப்பாளர்கள் தம்பிரான் வணக்கம் என்ற பழைய தமிழ் எழுத்துக்களில் ஒரு தமிழ் வழிபாட்டுப் புத்தகத்தினை வெளியிட்டனர், இதன் மூலம் தமிழ் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட முதல் இந்திய மொழியாக மாறியது.
  • 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

மாநில விலங்கு - நீலகிரி வரையாடு

  • இதன் அறிவியல் பெயர் ஹெமிடிராகஸ் ஹய்லோசிரியஸ் ஆகும்.
  • நீலகிரி வரையாடு என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மலைகள், மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் மட்டுமே காணப்படுகின்ற, குளம்புகளைக் கொண்ட ஒரு விலங்கு ஆகும்.
  • இது நீலகிரிட்ராகஸ் இனத்திலுள்ள ஒரே இனம் என்பதோடு மட்டுமல்லாமல் இது ஓவிஸ் இனத்தின் செம்மறி ஆடுகளுடன் நெருங்கிய தொடர்புடையது ஆகும்.
  • நீலகிரி வரையாடு என்பது குட்டையான, கரடுமுரடான ரோமங்கள் மற்றும் மிருதுவான மேனியுடன் கூடிய ஒரு ஆட்டினத்தைச் சேர்ந்தது ஆகும்.
  • ஆண் வரையாடுகள் பெண் வரையாடுகளை விட பெரியவையாகவும், முதிர்ச்சியடையும் போது கருமையான நிறத்திலும் உள்ளன.
  • இவை இரண்டிற்கும் வளைந்த கொம்புகள் உள்ளன என்பதோடு, அவற்றில் ஆண் வரையாடுகளுக்கு 40 செமீ (16 அங்குலம்) மற்றும் பெண் வரையாடுகளுக்கு 30 செமீ (12 அங்குலம்) வரையும் அவை வளரும்.
  • வயது முதிர்ந்த ஆண் வரையாடுகளின் எடை 80 முதல் 100 கிலோவும் (180 முதல் 220 பவுண்டுகள்), தோள் உயரத்தில் சுமார் 100 செமீ (39 அங்குலம்) உயரம் வரையும் இருக்கும்.
  • வயது முதிர்ந்த ஆண் வரையாடுகளின் முதுகில் வெளிர் சாம்பல் நிறப் பகுதி உருவாகிறது, இதனால் இவை எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக் கூரை (சேடில்பேக்குகள்) என்று அழைக்கப்படுகின்றன.

மாநிலப் பறவை – மரகதப் புறா

  • இதன் அறிவியல் பெயர் சால்கோபாப்ஸ் இண்டிகா ஆகும்.
  • மரகதப்புறா என்பது இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பரவலான, புலம்பெயராத வகை உயிரினமான வளர்ப்புப் புறா ஆகும்.
  • இந்தப் புறாவானது பச்சை புறா மற்றும் பச்சை இறக்கைகள் கொண்ட புறா என்ற பெயர்களாலும் அறியப் படுகிறது.
  • 1743 ஆம் ஆண்டில், ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் எட்வர்ட்ஸ் தனது அசாதாரணப் பறவைகளின் இயற்கை வரலாறு (எ நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் அன்காமன் பேர்ட்ஸ்) என்ற புத்தகத்தில் மரகதப்புறாவின் படத்தையும் அதற்கான விளக்கத்தையும் சேர்த்தார்.
  • "Green Wing'd Dove" (பச்சைச் சிறகுகள் கொண்ட புறா) என்ற ஆங்கிலப் பெயரை அதற்குப் பயன்படுத்தினார்.
  • மரகதப்புறா என்பது 23-27 செ.மீ (9.1-10.6 அங்குலம்) நீளம் கொண்ட, நடுத்தர அளவிலான ஒரு புறாவாகும்.

மாநிலப் பூச்சி - தமிழ் மறவன் பட்டாம்பூச்சி (மலைச் சிறகன்)

  • இதன் அறிவியல் பெயர் சிரோகோரா தாயிசு ஆகும்.
  • தமிழ் மறவன் என்பது இந்தியாவின் வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் இனமாகும்.
  • இது இலங்கை மற்றும் இந்தியாவின் வெப்பமண்டல வனப்பகுதிகளில் காணப் படுகிறது.

மாநில மலர் - சுடர் அல்லி

  • இதன் அறிவியல் பெயர் குளோரியோசா சூப்பர்பா ஆகும்.
  • செங்காந்தள் என்பது கொல்கிகேசியே பூக்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பூக்கும் தாவரமாகும்.
  • இந்த மூலிகையானது வற்றாத ஒரு சதைப் பற்றுள்ள வேர்த்தண்டுக் கிழங்கிலிருந்து வளர்கிறது.
  • இது 4 மீ (13 அடி) நீளத்தை எட்டும் என்பதோடு, மாற்றியமைக்கப்பட்ட இலை-முனைப் போக்குகளைப் பயன்படுத்தி ஏறும் தன்மையையும் உடையதாகும்.
  • முக்கியமாக இலைகள் மாறி மாறி அமைக்கப்பட்டிருப்பது போன்றும், சில நேரங்களில் அவை எதிர்மாறாகவும் இருப்பது போன்றும் அவை வளரலாம்.
  • அவை சற்றே ஈட்டி வடிவில் இருப்பதோடு அவை முனைகளுடன் வளரக் கூடியவை ஆகும்.
  • மேலும் அவை 13 முதல் 20 செமீ (5.1 முதல் 7.9 அங்குலம்) வரை நீளமாக இருக்கும்.

மாநிலப் பழம் - பலாப்பழம்

  • இதன் அறிவியல் பெயர் ஆர்டோகார்பஸ் ஹெட்டோரோபில்லஸ் ஆகும்.
  • பலாப்பழம் அத்தி, மல்பெரி மற்றும் ரொட்டிப்பழம் (மொரேசி) என்ற குடும்ப வகையினைச் சேர்ந்தது ஆகும்.
  • இது 55 கிலோ (120 பவுண்டுகள்) எடை, 90 செமீ (35 அங்குலம்) நீளம் மற்றும் 50 செமீ (20 அங்குலம்) விட்டம் கொண்ட மிகப்பெரிய மரத்தின் பழமாகும்.

மாநில மரம் - பனை மரம்

  • இதன் அறிவியல் பெயர் போராசஸ் ஃபிளாபெல்லிஃபர் என்பதாகும்.
  • போராசஸ் (palmyra palm) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பப்புவா நியூ கினியாவின் வெப்பமண்டலப் பகுதிகளுக்குச் சொந்தமான ஐந்து வகையான விசிறி வகை பனைகளின் ஒரு இனமாகும்.
  • இலைகள் விசிறி வடிவில், 2-3 மீ (6 அடி 7 அங்குலம் – 9 அடி 10 அங்குலம்) நீளமாகவும், இலைக் காம்பு விளிம்புகளில் முட்களுடனும் (பி. ஹெனியானஸில் முதுகெலும்புகள் இல்லை) காணப்படுகிறது.
  • பழங்கள் 150-250 மிமீ (5.9-9.8 அங்குலம்) அகலத்திலும் மற்றும் தோராயமாக கோள வடிவமாக இருப்பதோடு, மேலும் அவை ஒவ்வொன்றும் ஒன்று முதல் மூன்று பெரிய விதைகளைக் கொண்டிருக்கும்.

மாநில விளையாட்டு - கபடி

  • கபடி என்பது குழு நபர்களுடன் தொடர்புடைய ஒரு விளையாட்டாகும்.
  • இந்த விளையாட்டின் நோக்கம் யாதெனில், "ரைடர்" என்று குறிப்பிடப்படும் ஒரு வீரர், எதிரணி அணியின் அரைப் பகுதிக்குள் ஓடி சென்று அவர்களின் பல வீரர்களைத் தொட்டு விட்டு, 30 வினாடிகளில் எதிரணியின் பாதுகாவலர்களால் தொட்டு விடப் படாமல் அவர்களது சொந்தப் பகுதிக்குள் திரும்புவது ஆகும்.
  • ரைடரால் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் புள்ளிகள் அளிக்கப் படுகின்றன, அதே சமயம் எதிரணி அணி ரைடரைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு புள்ளியைப் பெறுகிறது.

மாநில நடன வடிவம் - பரதநாட்டியம்

  • பரதநாட்டியம் என்பது தமிழ்நாட்டில் தோன்றிய இந்தியப் பாரம்பரிய நடன வடிவமாகும்.
  • சங்கீத நாடக அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு இந்தியப் பாரம்பரிய நடன வடிவங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது இந்தியாவின் மிகவும் பழமையான பாரம்பரிய நடனக் கலாச்சாரமாகும்.
  • இது பொதுவாக தென்னிந்திய மதக் கருப்பொருள்களையும், ஆன்மீகக் கருத்துகளையும் குறிப்பாக சைவம் மற்றும் இந்து மதத்தின் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறது.
  • பரதநாட்டியத்தில் பல்வேறு வகையான பாணிகள் உள்ளன.
  • பாணி அல்லது பாரம்பரியம் என்பது ஒரு குரு அல்லது ஒரு வகை பள்ளிக்குக் குறிப்பிட்ட நடன நுட்பம் மற்றும் பாணியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும் என்ற நிலையில் இது பெரும்பாலும் குருவின் கிராமத்திற்கு பெயரிடப்பட்டது.

  • பரதநாட்டியப் பாணியானது அதன் நிலையான மேல் உடற்பகுதி, வளைந்த கால்கள் மற்றும் முழங்கால்கள் வளைந்த நிலையில் (அரமாண்டி) கால் வேலைப் பாடு மற்றும் கைகள், கண்கள் மற்றும் முகத்தின் தசைகளின் சைகைகளின் அடிப்படையில் சைகை மொழியின் சொற்களஞ்சியம் ஆகியவற்றால் குறிப்பிடப் படுகிறது.
  • 1932 ஆம் ஆண்டு சதிராட்டம் என்பது பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  • E. கிருஷ்ண ஐயர் மற்றும் ருக்மணி தேவி அருண்டேல் ஆகியோர் சதிராட்டம், பரத்தையர் ஆட்டம் அல்லது தேவாராட்டம் என்ற பெயர்களை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்ய முன்மொழிந்தனர்.
  • முக்கியமாக பந்தநல்லூர் நடன பாணியை மாற்றியமைப்பதில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
  • சதிராட்டமானது 19 ஆம் நூற்றாண்டு வரையில் இந்துக் கோயில்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது.
  • 1910 ஆம் ஆண்டு காலனித்துவப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அது தடை செய்யப் பட்டது.
  • பரதநாட்டியத்தின் தத்துவார்த்த அடித்தளங்கள் முதலில் தமிழில் கூத்த நூலில் காணப் படுகின்ற நிலையிலும், பின்னர் நிகழ்த்துக் கலைகளின் சமஸ்கிருத நூலான நாட்டிய சாஸ்திரத்திலும் அவை குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
  • நாட்டிய சாஸ்திரம் என்பது பண்டைய அறிஞரான பரத முனிவரால் கற்பித்துக் கூறப் பட்டது.
  • தஞ்சாவூர் நால்வரால் நவீன பரதநாட்டியத்தின் அடிப்படைக் கட்டமைப்பு  முறைப் படுத்தப் பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது.
  • தஞ்சாவூர் நால்வர் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம் மற்றும் வடிவேலு ஆகிய நான்கு சகோதரர்களாவர்.
  • இந்தச் சகோதரர்கள் ஆரம்பத்தில் தஞ்சாவூரில் மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் அரசவையில் பணியமர்த்தப் பட்டனர்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்