TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் தொழில்துறை வழித்தடங்கள்

May 2 , 2023 620 days 2146 0

இதன் ஆங்கில வடிவத்திற்கு இங்கே சொடுக்கவும்

  • தொழில்துறை வழித்தடம் என்பது அடிப்படையில் பல்மாதிரிப் போக்குவரத்துச் சேவைகள் வழியாக மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பகுதியை உள்ளடக்கிய ஒரு பாதையாகும்.
  • ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்கு  உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப் படுவது மூலம் தொழிற்சாலை  வளர்ச்சியை இது ஊக்குவிக்கும்.
  • இது தொழில்துறை உற்பத்தித் தொகுப்பு அல்லது வேறு ஒரு தொழிற்சாலையின் ஒரு பகுதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தொழில் மற்றும் உள்கட்டமைப்புக்கு இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பை வழங்குகிறது.
  • இது ஒட்டு மொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • தொழில்துறை வழித்தடங்கள் என்பது அதிவேகப் போக்குவரத்து வலையமைப்பான  ரயில் மற்றும் சாலை போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கச் செய்கின்றது.

தமிழ்நாட்டின் தொழில்துறை வழித்தடங்கள்

சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை வழித்தடம் (CKIC)

  • இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பொருளாதார வழித்தடத்தின் (ECEC) ஒரு பகுதி தான் சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை வழித்தடமாகும்.
  • இது மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு வரை நீண்டுள்ளதோடு இது இந்தியாவைத் தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் உற்பத்தி வலையமைப்புகளுடன் இணைக்கிறது.
  • தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி தொழில்துறைத் தாழ்வாரத்தில் (CKIC)  போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சியை எளிதாக்க ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) $484 மில்லியன் தொகையைக் கடனாக  (ரூ. 3,500 கோடிக்கு மேல்) வழங்குகிறது.
  • இந்த நிதியானது சுமார் 590 கிலோமீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.
  • கிழக்குக் கடற்கரைப் பொருளாதார வழித்தடத்தை (ECEC) மேம்படுத்துவதில் இந்திய அரசாங்கத்தின் கூட்டாளியாக ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) உள்ளது.
  • இதன் முக்கிய ஒரு நோக்கமாக தமிழ்நாட்டில் உள்ள தொழில் உற்பத்தி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகளைத் திறக்கும்.

  • ஏற்கனவே தமிழ்நாடு  பொருளாதார வலிமையின் அடிப்படையில் இந்தியாவில் முன்னிலையில் உள்ளதோடு மட்டுமல்லாமல் மேலும் பல முக்கியக் குறிகாட்டிகள்   முழுவதிலும் போட்டித் தன்மையுடன் முன்னிலையில் தமிழ்நாடு உள்ளது.
  • இது தமிழ்நாட்டில் உள்ள  32 மாவட்டங்களில் 23 மாவட்டங்களை இதற்குள் அடக்கும் என்பதோடு இதற்குள் மாநிலத்தின் மக்கள்தொகை 74% மற்றும் அதன் உற்பத்தி 67% அடங்கும்.
  • இந்தப் பகுதியானது  தானியங்கி வாகனம் மற்றும் ஜவுளி போன்ற முக்கியத் துறைகளின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்குகிறது.
  • இங்கு 3 பெரிய துறைமுகங்கள் மற்றும் 2 சிறிய துறைமுகங்கள் மூலம் ஆண்டுக்கு 240 மில்லியன் டன் சரக்குகளைக்  கையாளுகிறது.
  • தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு 2023 என்ற ஒரு கொள்கையுடன் சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை வழித்தட (CKIC) உள்கட்டமைப்புத் திட்டம் இணைக்கப் படும்  மற்றும்  தென் பிராந்தியத்தில் சாகர்மாலா முன்முயற்சிக்கு  ஆரம்பக் கவனம் செலுத்தப் படும்.

சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை வழித்தடத்தின் (CKIC) ஆறு முனைகள்

  • கடலூர் மற்றும் நாகப்பட்டினம்
  • அரியலூர் மற்றும் பெரம்பலூர்
  • திருச்சி-புதுக்கோட்டை-சிவகங்கை
  • மதுரை-விருதுநகர்-திண்டுக்கல்-தேனி (MVDT)
  • ராமநாதபுரம் (NIMZ) மற்றும்
  • தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி (TT)

சென்னை பெங்களூர் தொழில்துறை வழித்தடம் (CBIC)

  • தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாடு மற்றும் செயல்படுத்தும் அறக்கட்டளையின் (NICDIT) கீழ் இந்தியாவில் வரும் ஐந்து தொழில்துறை வழித்தடங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
  • இந்தத் திட்டங்களின் முதுகெலும்பாக பல்மாதிரிப் போக்குவரத்து இணைப்பு உள் கட்டமைப்பைப் பொருத்து   திட்டமிடப் பட்டுள்ளது.
  • சென்னை பெங்களூர் தொழில்துறை வழித்தடத்தின் (CBIC) கீழ் வளர்ச்சிக்காக தேர்ந்து எடுக்கப் பட்ட மூன்று முனைகள் கர்நாடகாவில் துமகுரு, ஆந்திராவில் கிருஷ்ணப் பட்டினம் மற்றும் தமிழ்நாட்டில் பொன்னேரி ஆகியவை ஆகும்.
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணப் பட்டினம் தொழில்துறைப் பகுதி மற்றும் கர்நாடகாவில் துமகுரு தொழில்துறைப் பகுதி ஆகிய பகுதிகளில் சென்னை பெங்களூர் தொழில்துறை வழித்தடத் திட்டத்தின் வளர்ச்சியைத் தொடங்கச் செய்வதற்காக  என்று ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • கிருஷ்ணப் பட்டினம் தொழில்துறை பகுதி, ஆந்திரப் பிரதேசம் - மொத்த பரப்பளவு, 11098 ஏக்கர் (மூன்று  கட்ட வளர்ச்சி)
  • துமகுரு தொழில்துறை பகுதி, கர்நாடகா - மொத்த பரப்பளவு, 8484 ஏக்கர் (மூன்று  கட்ட வளர்ச்சி) – இதன் முதல் கட்டம் - 1722 ஏக்கர் என்ற அளவிற்கு விரிவு செய்யப் பட்டுள்ளது.
  • சென்னை, ஸ்ரீபெரும்புதூர், பொன்னப்பந் தாங்கல், ராணிப்பேட்டை, வேலூர் புறநகர், சித்தூர், பங்காருபாலம், பலமனேர், பங்கார்பேட்டை, ஹோஸ்கோட் மற்றும் பெங்களூர் வழியாக இந்த வழித்தடத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் இருந்துச் சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்வதன் மூலம் தென்னிந்தியா மற்றும் கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • சமீபத்தில் இத்திட்டத்தைத் தமிழகத்தின் கோயம்புத்தூர் மற்றும்  கேரளாவின் கொச்சி  வரையிலும்    விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது.
  • ஜப்பான் சர்வதேசக் கூட்டுறவு முகமையின் (JICA) உதவியுடனும் மூன்று தென் மாநிலங்களின் அரசாங்கங்களின் ஒத்துழைப்புடனும் இந்த் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
  • இந்தப் பசுமை தொழில் நகரங்கள் மூலம் நம்பகமான தன்னிறைவு பெற்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, நம்பகமான மற்றும் தரமான சமூக உள்கட்டமைப்பை உருவாக்கச் செய்யும் என்பதோடு, சாலை மற்றும் இரயில் இணைப்புகள்  மூலம் சரக்குகள் துறைமுகங்கள் மற்றும் தளவாட மையங்களுக்கு  எடுத்துச் செல்லப்படும்.
  • தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவான வளர்ச்சி, பிராந்தியத் தொழில் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அடைவதற்கான ஒரு உத்தியாக சென்னை பெங்களூர்  தொழில்துறை வழித்தடம் (CBIC) உள்ளது.

  • இது தொழில்துறை உற்பத்தி அலகுகளுக்கு சுமூகமான அணுகலை வழங்குவதன் மூலம் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் திறமையான தொழில்துறை தளத்தை மேம்படுத்த உதவுவதோடு இது மேலும் போக்குவரத்துத் தளவாடச் செலவுகளைக் குறைக்கச் செய்வதோடு, போக்குவரத்து நேரம் மற்றும் சரக்குச் செலவையும் குறைக்க உதவுகிறது.
  • இது மூன்று மாநிலங்களில் உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளில் தனியார் முதலீடுகளை அதிகரிக்கச்  செய்கிறது.
  • மேலே உள்ள தொழில்துறை வழித்தடத்தை  நடைமுறைப் படுத்துதலில்  பல்வேறு படி நிலைகள் உள்ளன.
  • சென்னை பெங்களூர் தொழில்துறை வழித்தடத்தில் (CBIC) உருவாக்கப் படும் மூன்று முனைகளில், கிருஷ்ணப் பட்டினம் மற்றும் துமகுரு ஆகிய இரண்டு முனைகளுக்கு மட்டுமே நிலம் கிடைத்துள்ளது.
  • இந்தத் திட்டம்  2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதில் மற்ற வழித்தடங்களுக்கு / முனைகளுக்குத் திட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், நிலம் கிடைத்துத் தகுதியான ஒப்புதலுக்குப் பெற்ற பிறகு தான் காலக் கெடுவைக் கண்டறிய முடியும்.

பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் (DIC)

  • பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் என்பது பொதுத் துறை, தனியார் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME)  ஆகியவற்றின் உள்நாட்டு  பாதுகாப்பு உற்பத்தி உபகரணங்களின் மூலம் பாதுகாப்புப் துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான வழித் தடத்தை அல்லது பாதையைக் குறிக்கிறது.
  • இது பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்தப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும்.
  • இது மற்ற நாடுகளுக்கு இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவித்து, நமது இறக்குமதியைக் குறைக்கும்.
  • சுயச் சார்பு இந்தியா மற்றும் "இந்தியாவிலே தயாரிப்போம்"  என்ற  இலக்கை அடையச் செய்வதற்காக இந்திய அரசு உத்தரப் பிரதேசம் மற்றும்  தமிழ்நாடு ஆகிய  இரண்டு இடங்களில் பாதுகாப்பு தொழில்துறை வழித் தடங்களை (DIC) நிறுவியுள்ளது.
  • இது நாட்டில் சர்வதேச அளவில் போட்டியிடும் அளவிற்கு அந்த நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சியை  உருவாக்கிறது.

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் (TNDIC)

  • இந்த வழித்தடம் 2019 ஆம் ஆண்டில்  திறக்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடமானது பின்வரும் ஐந்து முனைப் புள்ளிகளைக் கொண்டுள்ளது:
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • ஓசூர்
  • சேலம்
  • திருச்சிராப்பள்ளி

http://www.tndefencecorridor.in/assets/images/resource/image-2.jpg

  • தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்தின் நோக்கமானது விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு வேண்டி, புதுமையானத் தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் சேவைகளை அளிப்பதல் ஆகியவற்றின் மூலம் உலகளாவியப் பாதுகாப்புப் பொருட்கள் உற்பத்தி இடமாக தமிழ்நாட்டை மாற்றுவது ஆகும்.
  • இது புதியப் பாதுகாப்பு பொருட்களின் உற்பத்திக்குத் தேவையான வசதிகளை உருவாக்கச் செய்யும் என்பதோடு அதற்குத் தேவையான சோதனை மற்றும் சான்றிதழ் வசதி, ஏற்றுமதிக்கு ஏற்ற  மையங்கள், தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி போன்றவற்றைக் கொண்ட தொழில்துறைத்  தொகுப்புகளை வளர  ஊக்குவிக்கிறது.
  • இறக்குமதியைக் குறைத்து மற்ற நாடுகளுக்கு இராணுவப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் 'இந்தியாவிலே தயாரிப்போம்' என்ற திட்டத்தினை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் இராணுவ உற்பத்தியில் தன்னிறைவு அடைய இது உதவும்.
  • இது ஒருங்கிணைந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டின் வாயிலாக தனியார் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான ஏற்ற சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
  • தமிழ்நாடு மாநிலம் பின்வரும் மூலோபாய நன்மைகளைக் கொண்டுள்ளதால்  இது ஒரு பாதுகாப்பு வழித் தடத்திற்குப் பொருத்தமான இடமாக அமைகிறது.
  • நான்கு பெரியத் துறைமுகங்கள் (மூன்று அரசு மற்றும் ஒரு தனியார்) மற்றும் 22 சிறிய துறைமுகங்களைக் கொண்ட ஒரு பெரிய கடற்கரைப் பகுதியைக் கொண்டு உள்ளது
  • மாநிலத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன மற்றும் தூத்துக்குடி மற்றும் சேலத்தில் ஆகிய இடங்களில் இரண்டு உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளன
  • 11,113 மெகாவாட் புதுப்பிக்கத் தக்க மின் ஆற்றல் திறன் கொண்ட  மாநிலம்
  •  14.8 Tbps அலைவரிசையை வழங்கும் மூன்று நீர்மூழ்கி கேபிள்கள் மூலம் உலகத்துடன் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இணைக்கப் பட்டுள்ளது.
  • தென் கொரிய நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) இந்தியாவில் அதிகம் பெறும் மாநிலம் மற்றும் தென் கொரிய முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக உள்ளது.

தொழில்துறை வழித்தடங்களின் சிறப்பியல்புகள்

புவியியல் கவனம்

  • நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட புவியியல் ரீதியாக செறிவூட்டப் பட்ட பகுதிகள் தான் தொழில்துறை வழித்தடங்கள் ஆகும்.
  • ஒரு பிராந்தியத்தில் தற்போதுள்ள போக்குவரத்து, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

ஒருங்கிணைந்தத் திட்டமிடல்

  • அரசு நிறுவனங்கள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளூர்ச் சமூகங்கள் போன்ற பல பங்குதாரர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்தத் திட்டமிடல் மூலம் தொழில்துறை வழித் தடங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • பொருத்தமான இடங்களை அடையாளம் காணுதல், உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் கொள்கைக் கட்டமைப்புகளை ஆகியவற்றைத் திட்டமிடல் செயல்முறை என்பது உள்ளடக்கி உள்ளது.

பல்மாதிரிப் போக்குவரத்து அமைப்பு

  • நெடுஞ்சாலைகள், இரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பல்வகை போக்குவரத்து அமைப்புகள் மூலம் தொழில்துறை வழித்தடங்கள்  இணைக்கப் பட்டுள்ளன.
  •  இந்த இணைப்பு  தளவாடச் செலவுகளைக் குறைப்பதற்கும், போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கும், மக்களின் திறமையான இயக்கத்திற்கு மிக முக்கியமானதாக உள்ளது.

தொழிற்சாலைகளின் தொகுப்புகள்

  • தொழில்துறை வழித்தடங்கள் பொதுவாக வளங்கள், மின்சாரம், நீர் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற சேவைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் தொகுப்புகளைக்  கொண்டுள்ளது.
  • தொழிற்சாலைகளின் தொகுப்புகள் என்பவை உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதோடு புதுமைகளை வளர்ப்பதன் மூலம் பேரியல் பொருளாதாரத்தினை நோக்கிச் செல்ல இது வழி வகுக்கிறது.

பசும் வழித்தட வளர்ச்சி

  • பெரும்பாலும் பசும் வழித்தட தளங்களில் புதிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்க அனுமதிக்கும் வகையிலேயே  தொழில்துறை  வழித்தடங்கள் உருவாக்கப் படுகின்றது.
  • இந்த பசும் வழித்தட மேம்பாட்டு உள்கட்டமைப்பு நவீன தொழில்துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதோடு தற்போதுள்ள உள்கட்டமைப்புகளால் அது கட்டுப்படுத்தப் படவில்லை என்பதையும் உறுதி செய்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs)

  • தொழில்துறை வழித்தடங்களில் பெரும்பாலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் (SEZs) அடங்கும். அவை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரிச் சலுகைகள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட விதிமுறைகள் வழங்குகின்றது.
  • ஏற்றுமதியை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது மற்றும்  பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) வடிவமைக்கப் பட்டுள்ளன.

தொழில்துறை வழித் தடத்தின் நன்மைகள்

பொருளாதார நன்மைகள்

  • இது தளவாட உள்கட்டமைப்பை உருவாக்கவும், முக்கியத் திறன்களில் கவனம் செலுத்தவது மூலம்  நிறுவனங்களின்  பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • இது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு பெரும் உத்வேகத்தை அளிப்பதோடு இடப் பெயர்வை மாற்றியமைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

  • இது தளவாடச் செலவுகளைக் குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கச் செய்வதன்  மூலமாக வணிக அலகுகளின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.
  • இது தனியார் துறையின்  முதலீடுகளை அதிகரிக்க உதவும்.
  • உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறையில்  நாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணலாம், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதாரச் செழுமைக்கு வழி வகுக்கும்.

சுற்றுச்சூழல் நன்மைகள்

  • இது பல்வேறு வழிகளில் சிதறிய முறையில் தொழில்கள் வளர்ச்சியடைவதையும், சில இடங்களில் தொழில்துறை அலகுகள் குவிவதையும் தடுக்கிறது.
  • இது சுற்றுச்சூழல் சுரண்டல் மற்றும் சீரழிவைத் தடுக்கும்.

https://www.iastoppers.com/ckfinder/userfiles/files/image-20201222110621-1.png

சமூகப் பொருளாதார நன்மைகள்

  • இது தொழில்துறை  வழித்தடங்களில் சுற்றி உள்ள நகரங்கள், சிறு நகரங்கள் அதைச் சார்ந்தப் பகுதிகளில் ஒரு அடுக்கு விளைவை ஏற்படுத்தும்.
  • இதன் மூலம் சிறிய நகரங்களைத் திறன்  நகரங்களாக மேம்படுத்துவதைத் தவிர, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற பிற வசதிகளும் கிடைக்கும்.
  • இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
  • இத்தகைய வழித்தடங்களில் அதிவேகச் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வலை அமைப்பு, நவீனச் சரக்குகளைக்  கையாளும் அமைப்புகளுடன் கூடிய துறைமுகங்கள், நவீன விமான நிலையங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தளவாடப் பூங்காக்கள் / பரிமாற்ற மையங்கள், அறிவுப் பூங்காக்கள், நகரங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகளைப் பெற முடியும்.

ட்

தொழில்துறை வழித்தடத்தின் சவால்கள்

மனித மூலதனம்

  • தற்போது திறமையான மனித வளங்களின் பற்றாக்குறையே மிகவும் முதன்மையான கவலைகளில் ஒன்றாக உள்ளது.

https://www.iastoppers.com/ckfinder/userfiles/files/image-20201222110621-3.png

பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சி

  • தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியத் தடையாக இருப்பது அதிநவீன மின்னணுவியல் மற்றும் அதைச் சார்ந்தப் பொருட்கள் ஆகும்.

நிலம் கையகப்படுத்தல்

  • தற்போது சட்டச்சிக்கல்  மற்றும் இழப்பீட்டுத் தொகை காரணமாக தொழில்துறை வழித் தடத்திற்காக மாநிலம் முழுவதும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை  மிகவும் மெதுவாக நடைபெறுகிறது.

பேரியல்  பொருளாதார ஸ்திரத் தன்மை

  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  நாணய அபாயங்களைத் தவிர்த்து இந்தியாவில் முதலீடு செய்ய  நிலையான மாற்று விகிதத்தைக் கொண்டிருப்பது அவசியம்.
  • இறுதியாக தமிழகத்தின் நீடித்தப் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்துறை வழித் தடங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
  • உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்துறைத் தொகுப்புகள் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்துறை வழித்தடங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மற்றும் தமிழகத்தின் ஒட்டு மொத்தப் பொருளாதார போட்டித் தன்மையை மேம்படுத்தவும் வாய்ப்பு அளிக்கிறது.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்