TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 05

August 20 , 2024 146 days 1145 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 05

(For English version to this please click here)

25. டாக்டர். திருவெங்கிமலை சேஷ சுந்தர ராஜன் (டி. எஸ். எஸ். ராஜன்)

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • 1880 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த டாக்டர் திருவேங்கிமலை சேஷ சுந்தர ராஜன் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியிலும், சென்னை ராயபுரம் மருத்துவப் பள்ளியிலும் படித்தார்.
  • இங்கிலாந்தில் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த அவர், அங்கு அவர் எம்.ஆர்.சி.எஸ். பயின்று 1911 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.

மருத்துவராக அவரின் பணி

  • ஆரம்ப காலக் கட்டத்தில் பர்மாவில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த அவர், பின்னர் 1914 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார்.
  • அவர் 1923 ஆம் ஆண்டு "ராஜன் கிளினிக்" என்ற சொந்தச் சிகிச்சையகத்தை நிறுவினார்.
  • அவரது புகழ்பெற்ற மருத்துச் சேவை பர்மா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் செய்த சேவைகளையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு

  • டாக்டர் ராஜன் 1914 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
  • ரெளலட் சட்டம் மற்றும் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்திற்கு எதிரான போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.
  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய இவர், 1934 ஆம் ஆண்டு முதல் 1936 ஆம் ஆண்டு வரை மேன்மைமிகு சட்ட சபையில் உறுப்பினராக இருந்தார்.
  • கிலாபத் கமிட்டிக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, 1932 ஆம் ஆண்டு முதல் 1935 ஆம் ஆண்டு வரை ஹரிஜன சேவக் சங்கத்தின் தமிழ்நாடு கிளைக்கும் அவர் தலைமை தாங்கினார்.

அரசியல் வாழ்க்கை

  • டாக்டர். ராஜன், 1937 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை, சி. ராஜகோபாலாச்சாரியின் கீழ் மதராஸ் பிரசிடென்சியில் பொது சுகாதாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1946 ஆம் ஆண்டில், தங்குதூரி பிரகாசம் பிரதமரான போது, ​​உணவு மற்றும் பொது சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • அவர் 1951 ஆம் ஆண்டு வரை இந்தப் பொறுப்பினைத் தொடர்ந்தார்.
  • 1948 ஆம் ஆண்டில், திருவள்ளூர் தாலுகா விவசாய மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர் ராஜன், அங்கு சி. ராஜகோபாலாச்சாரியின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

இறப்பு

  • அவருக்கு உடல்நிலை சிறிது சரியில்லாமல் இருந்த நிலையில் குடல் அழற்சிக்கான அறுவை சிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்பட்டார், ஆனால் அவர் டிசம்பர் 14, 1953 அன்று தனது 73 வயதில் காலமானார்.

26. எஸ்.பி. ஒய்.சுரேந்திரநாத் ஆர்யா

ஆரம்ப கால வாழ்க்கை

  • முதலில் எத்திராஜ் என்று பெயரிடப்பட்ட எஸ்.பி.ஒய். சுரேந்திரநாத் ஆர்யா மராஸில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் தனகோட்டி ராஜு நாயுடுவுக்குப் பிறந்தவர் ஆவார்.
  • ஆரம்பக் கல்வியை முடித்தவுடன் அவர் தீவிரவாத அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
  • 1897 ஆம் ஆண்டில் வங்காளத்திற்கு குடிபெயர்ந்த அவர், அங்கு வங்காளப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டார்.
  • அவர் மதராஸுக்குத் திரும்பியதும், வங்கப் புரட்சியாளர் சுரேந்திரநாத் பானர்ஜியின் நினைவாக "சுரேந்திரநாத்" என்ற பெயரை மாற்றிக் கொண்டார் மற்றும் "இந்தியாவினைப் பூர்வீகமாகக் கொண்டவர்" என்று பொருள்படும் வகையில், "ஆர்யா" என்ற பெயருடன் தன் பெயரை வடிவமைத்துக் கொண்டார்.

அரசியல் செயல்பாடு மற்றும் கைது

  • சென்னையில் ஆர்யா தமிழ் புரட்சியாளர் சுப்ரமணிய பாரதியுடன் நெருங்கிய உறவை வளர்த்து, சென்னை ஜனசங்கத்தை இணைந்து நிறுவினார்.
  • அவர் 1908 ஆகஸ்ட் 18 அன்று தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் இவருக்கு நாடு கடத்தப் படுதல் தண்டனை விதிக்கப்பட்டது.
  • இவரது விசாரணையின் போது, ​​ஆர்யா இந்தியாவில் வெளிநாட்டினர் வசிப்பு குறித்து வெகு ஆத்திரமூட்டும் கருத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சிறைவாசம் மற்றும் மதமாற்றம்

  • ஆர்யா 1914 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பு பெல்லாரியில் ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் அனுபவித்தார்.
  • சிறையில் இருந்த காலத்தில் அவருக்குத் தொழுநோய் ஏற்பட்டது.
  • டேனிஷ் கிறிஸ்தவ மிஷனரிகள் அவருக்குச் சிகிச்சை அளித்தனர், அதன் காரணமாக அந்த செய் நன்றியுடன், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
  • பின்னர் அமெரிக்காவில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர், 1917 ஆம் ஆண்டில் குரோவ் சிட்டி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பிற்கால வாழ்வு

  • இந்தியா திரும்பியதும், ஆர்யா டேனிஷ் மிஷன் சர்ச்சின் மதபோதகராக தன்னை இணைத்துக் கொண்டு ஸ்வீடிஷ்-அமெரிக்கப் பெண்ணான வோகெலியை மணந்தார், பின்னர் அவருடைய பெயரைத் தனது பெயருடன் சேர்த்துக் கொண்டார்.
  • 1921 ஆம் ஆண்டில் பாரதியின் தகனத்தில் கலந்து கொண்ட சிலரில் இவரும் ஒருவர், அங்கு அவர் தெலுங்கில் ஒரு புகழஞ்சலியை செலுத்தினார்.
  • ஆர்யா பின்னர் 1920 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மீண்டும் இந்து மதத்திற்கு மாறினார்.
  • அவர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து அதன் பின் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்து, பெரியார் ஈ.வே.ராமசாமியின் நெருங்கிய நண்பரானார்.

மரபு

  • எஸ்.பி.ஒய். சுரேந்திரநாத் ஆர்யாவின் வாழ்க்கை இந்தியச் சுதந்திர இயக்கம் மற்றும் பல்வேறு சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் ஆகிய இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் பங்களிப்புகளால் குறிக்கப் பட்டது.
  • ஒரு புரட்சியாளரிடமிருந்து ஒரு மத போதகராக, பின்னர் ஒரு சீர்திருத்தவாதியாக அவரது பயணம், இந்தியாவின் சமூக-அரசியல் நிலப்பரப்பில் அவரது சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக் காட்டுகிறது.

27. தியாகி சங்கரலிங்கனார்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

  • தியாகி சங்கரலிங்கனார் 1895 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாட்டில் விருதுநகர் அருகே உள்ள மண்மலை மேடு கிராமத்தில் கருப்பசாமி மற்றும் வள்ளியம்மைக்கு மகனாகப் பிறந்தார்.
  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் வெகு ஆழமாக ஈடுபாடு கொள்வதற்கு முன்பு அவர் பரமக் குடியில் காதி வணிகத்தைத் தொடங்கினார்.

சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு

  • 1917 ஆம் ஆண்டில் சங்கரலிங்கனார் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • சி.ராஜகோபாலாச்சாரியாரின் வேண்டுகோளுக்கிணங்க தனது தொழிலை விட்டுவிட்டு அவர் திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்தில் சேர்ந்தார்.
  • 1930 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி தலைமையில் அகமதாபாத்தில் இருந்து தண்டி வரை நடந்த உப்பு ஊர்வலத்தில் பங்கேற்றது மட்டுமில்லாமல், 1933 ஆம் ஆண்டு விருதுநகருக்கு விஜயம் செய்த போது அவர் காந்தியுடன் பயணித்துச் சென்றார்.

பிற்காலச் செயல்பாடுகள் மற்றும் உண்ணா விரதப் போராட்டம்

  • சங்கரலிங்கனார் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார், சுதந்திரத்திற்குப் பிறகும் கூட தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.
  • 1952 ஆம் ஆண்டில், அவர் பெண்கள் பள்ளியை நிறுவ வேண்டி தனது இரண்டு வீடுகளையும் அதற்கு நன்கொடையாக வழங்கினார் மற்றும் மாணவர்களின் உணவுக்காக பெரும் நிதியும் வழங்கினார்.
  • 1956 ஆம் ஆண்டில், மதராஸ் மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என மாற்றுவதற்கான அரசியல் போராட்டத்தின் போது, ​​சங்கரலிங்கனார் 27 ஜூலை 1956 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
  • அவரது 12 அம்ச நிகழ்ச்சி நிரலில் மதராஸ் மாநிலத்தின் பெயர் மாற்றம், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் மதுவிலக்கு போன்ற கோரிக்கைகள் அடங்கியிருந்தன.
  • சி.என்.அண்ணாதுரை, எம்.பி.சிவஞானம், ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் அவரது உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொண்ட போதிலும், சங்கரலிங்கனார் தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இறப்பு மற்றும் மரபு

  • 76 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு, சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமடைந்து, மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • அவர் 1956 அக்டோபர் 13 அன்று காலமானார்.
  • மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான அவரது இடைவிடாத செயல்பாடு இறுதியில், 1967 ஆம் ஆண்டு திமுக அரசு தமிழ்நாடு என மாற்றிய போதும் ​​மேலும் 1968 ஆம் ஆண்டு மத்திய அரசு அதை முறைப்படுத்திய போதும் நன்கு உணரப்பட்டது.
  • 2015-ம் ஆண்டு விருதுநகரில் அவரது நினைவிடத்தில் நினைவிடம் கட்டி தமிழக அரசு அவருக்கு மரியாதை செலுத்தியது.

28. சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

  • சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி 1887 ஆகஸ்ட் 19 அன்று புதுக்கோட்டை மாநிலம் திருமயத்தில் பிறந்தார்.
  • ஒரு விடாமுயற்சியுடைய மாணவராக இருந்த அவர், மகாராஜா கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார்.
  • வக்கீல் பயிற்சிக்குப் பிறகு, அவர் தனது வழிகாட்டியாக விளங்கிய பிரபல வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான எஸ். சீனிவாச ஐயங்கார் அவர்களின் ஊக்கத்தைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார்.

அரசியல் வாழ்க்கை

  • சத்தியமூர்த்தி, எஸ். சீனிவாச ஐயங்கார், சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் டி. பிரகாசம் போன்ற குறிப்பிடத்தக்க நபர்களுடன், மதராஸ் பிரசிடென்சியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் இருந்தார்.
  • அவர் தனது பேச்சாற்றலுக்காக அறியப்பட்டார் மற்றும் இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்:
  • போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள்: வங்கப் பிரிவினை, ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டங்களில் சத்திய மூர்த்தி தீவிரமாகப் பங்கேற்றார்.
  • தலைமைப் பொறுப்புகள்: சுயராஜ்ஜியக் கட்சி (1930-1934) மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (1936-1939) மாகாணப் பிரிவின் தலைவர் ஆகிய பணிகளில் அவர் நன்கு பணி ஆற்றினார்.
  • அவர் 1934 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரை மேன்மைமிகு சட்ட சபையில் உறுப்பினராக இருந்தார் என்பதோடு 1939 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டு வரை மதராஸ் மேயராகவும் பணியாற்றினார்.

பங்களிப்புகள் மற்றும் மரபு

  • வழக்கறிஞர் தொழில்:
  • சாதிப் பாகுபாட்டை எதிர்ப்பதற்காகவும், இன, வகுப்பு மற்றும் மத நல்லிணக்கத்தின் மீதான நம்பிக்கைக்காகவும் சத்தியமூர்த்தி அறியப்பட்டார்.
  • அவர் அரசியலமைப்பு அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான பெரும் ஆதரவாளராகவும் நன்கு அறியப் பட்டார்.
  • உள்கட்டமைப்பு மேம்பாடு:
  • மதராஸ் மேயராக இருந்த போது, இரண்டாம் உலகப் போரின் சமயம், ​​பூண்டி நீர்த்தேக்கத்தின் கட்டுமானத்திற்கு வழி வகுத்து, அந்த நகரத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
  • வழிகாட்டுதல்:
  • இவர் மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சராக (1954-1963) பதவியேற்ற கே. காமராஜின் வழிகாட்டியாகக் கருதப் படுகிறார்.
  • இவரது பங்களிப்பை போற்றும் வகையில், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இவரது பெயரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் என்றும் பெயரிடப் பட்டுள்ளது.
  • கலாச்சாரப் பங்களிப்புகள்:
  • சத்தியமூர்த்தி பரத நாட்டியத்தின் மறுமலர்ச்சியை ஆதரித்தார் மற்றும் மதராஸ் மியூசிக் அகாடமியை நிறுவுவதில் பெரும் பங்களித்தார்ஈடுபட்டார்.
  • ஒரு திறமையான மேடை நடிகராகவும் இருந்த அவர் தென்னிந்தியத் திரைப்பட நிறுவனம் மற்றும் அகில இந்திய இயங்கும் படத்திற்கான காங்கிரஸின் தலைவராகவும் பணியாற்றினார்.

போரட்டத்தின் போது கைதுகள் மற்றும் இறப்பு

  • சத்தியமூர்த்தி 1942 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் உட்பட அரசியல் நடவடிக்கைகளுக்காக பலமுறை கைது செய்யப்பட்டார்.
  • இவர் அமராவதி சிறையில் அடைக்கப்பட்ட போது முதுகுத் தண்டில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
  • காயங்களால்  உடல்நிலை மோசமானதால் 1943 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி இவர் இறந்தார்.

கௌரவங்கள்

  • 1987 ஆம் ஆண்டில் அவரை நினைவு கூறும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது.
  • ஏ.பி.ஜே. அப்துல் கலாம், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் வழங்கிய நிதியில் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் சத்தியமூர்த்தியின் சிலை திறக்கப்பட்டது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்