TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 10

August 31 , 2024 96 days 517 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 10

(For English version to this please click here)

49. தாண்டவராயன் பிள்ளை

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • 1700 ஆம் ஆண்டில் சிவகங்கை இராஜ்ஜியத்தில் அரளிக்கோட்டையில் (முல்லையூர்) பிறந்த இவர் காத்தவராயப் பிள்ளையின் மகன் ஆவார்.
  • இவர் கற்காத்தர் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
  • தமிழ் மீது ஆழ்ந்தப் பற்று கொண்ட அவர் கல்வி, திறன் மற்றும் ஞானத்தில் மிகச் சிறந்து விளங்கினார்.

நிர்வாகத்தில் இவரின் பங்கு மற்றும் சாதனைகள்

  • தளவாய் மற்றும் பிரதானி: சிவகங்கை சமஸ்தானத்தின் மூன்று ஆட்சியாளர்களின் கீழ், இவர் தளவாய் (இராணுவத் தலைவர்) மற்றும் பிரதானி (முதலமைச்சர்) ஆகப் பணியாற்றினார்.
  • அரசர்களுக்குச் சேவை: இவர் மன்னர் சசிவர்ண பெரிய உதயத் தேவர் (1730–1750) மற்றும் முத்து வடுகநாத தேவர் (1750–1772) மன்னரின் கீழ் பணியாற்றினார்.
  • பின்னர் இவர் ராணி வேலு நாச்சியாரின் கீழ் பணியாற்றினார்.
  • இராணுவ மற்றும் இராஜதந்திர முயற்சிகள்: பிரிட்டிஷ் படையெடுப்பாளர்களைத் தவிர்க்க ராணி வேலு நாச்சியாருக்கு இவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நிர்வாக திறன்கள் மற்றும் தனிப்பட்ட குணங்கள்:

  • நிர்வாகமும், மேம்பாடும்: இவர் சிறந்த நிர்வாகத்திற்காகப் புகழ் பெற்றவர் மற்றும் சிவகங்கை சமஸ்தானத்தின் வளர்ச்சிக்குப் பொறுப்பானவர் ஆவார்.
  • பண்புக்கூறுகள்: தொண்டு, மேன்மை, குடும்ப மரியாதை, இசையின் மீதான ஈடுபாடு மற்றும் திறன் சார்ந்த கணக்கியல் ஆகியவற்றிற்கு இவர் பெயர் பெற்றவர் ஆவார்.
  • அங்கீகாரம் மற்றும் கௌரவம்: ராஜசூலி வடுகநாதத் துரையால் இவர் பாராட்டப்பட்டு, பல்லக்கு, ஊன்றுகோல், குதிரை, நிலம் போன்றப் பரிசுகளால் கௌரவிக்கப்பட்டார்.

மரபு மற்றும் பங்களிப்புகள்

  • செல்வாக்கு: இவர் அரசத் தோட்டத்தின் செல்வத்தைப் பாதுகாத்து, மருது சகோதரர்கள் உட்பட மற்றவர்களுக்கும் அதனைக் கற்பித்து வலுவான பாசப் பிணைப்புகளை வளர்த்தார்.

முக்கிய வரலாற்றுப் பாத்திரங்கள்

  • இராணுவ ஆதரவு: இவர் அம்மைய நாயக்கனூர் போரின் போது நாயக்கர்களுக்கு தங்குமிடம் மற்றும் வேண்டிய உதவிகளை அளித்து, சசிவர்ணத் தேவர் மற்றும் மருது சகோதரர்களுடன் இணைந்து போரில் வீரத்தை வெளிப்படுத்தினார்.

கலாச்சாரத் தாக்கம்

  • இலக்கியக் குறிப்பு: தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களால் வெளியிடப்பட்ட கவிஞர் கவிராஜரின் "மான் விடு தூது" என்ற தமிழ்ப் படைப்பில் அவரது நற்பண்புகள் விரிவாக உள்ளன.

மதுரைக்கு எதிரானப் பிரச்சாரம்

  • வாரிசு மற்றும் மோதல்: 1750 ஆம் ஆண்டு சசிவர்ணத் தேவர் இறந்த பிறகு, அவரது மகன் முத்துவடுகநாத தேவர் அரசரானார்.
  • 1752 ஆண்டின் போது, ராமநாத சேதுபதி மற்றும் முத்து வடுகநாதர் ஆகியோர் மதுரையின் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • மைசூர் தளபதி மாயன்னா என்பவர் விஜயகுமார் நாயக்கரைத் தோற்கடித்து அரியணையை கைப்பற்றினார்.
  • எதிர் தாக்குதல்: ராமநாடு தலைவர் வெள்ளையன் மற்றும் சிவகங்கை அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை ஆகியோர் மாயன்னாவை எதிர்த்து வெற்றிகரமானப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, அவரைத் தோற்கடித்து, மதுரையை சரியான ஆட்சியாளர்களுக்காக மீட்டனர்.

கோவில் திருப்பணிகள்

  • குன்னக்குடி முருகன் கோவில்: தாண்டவராயப் பிள்ளை குன்னக்குடி முருகன் கோவிலின் திருப்பணிகளை மேற்பார்வையிட்டார்.
  • வையாபுரி குளம் மற்றும் நந்தவனம் வேதப் பள்ளி: அவர் வையாபுரி குளத்தை நிறுவி, நந்தவனம் வேதப் பள்ளியை நிறுவி, சமய மற்றும் கல்வி உள்கட்டமைப்புக்குப் பங்களித்தார்.
  • மேலும் சில பங்களிப்புகள்: திருப்பத்தூர் மற்றும் திருக்கோட்டியூரில் உள்ள கோவில்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு அவர் பெரும் பங்களிப்புகளை வழங்கினார்.
  • முருகக் கடவுளுக்கான தினசரிச் சடங்குகள் மற்றும் பிரசாதங்கள் செய்யப்படுவதை உறுதி செய்தது என்பது சமயக் கடமைகளில் அவரது அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

தாமரைப் பதக்க விருது

  • மரியாதை மற்றும் அங்கீகாரம்: ஏப்ரல் 28, 1747 ஆண்டில், தாண்டவராயப் பிள்ளைக்கு மன்னர் முத்து வடுகநாத தேவர் மூலம் தாமரைப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • இந்த கௌரவ விருது, சசிவர்ணத் தேவருடன் இணைந்து அவர் ஆற்றியப் பெரும் பங்களிப்பை அங்கீகரித்து, சிவகங்கை அரசின் முதல் அமைச்சராக அவரது பெரு மதிப்பிற்குரியப் பதவியை அடையாளப்படுத்துகிறது.

காளையார் கோவிலில் போர்

  • தாக்குதல் மற்றும் தற்காப்பு: 1772 ஆம் ஆண்டில், சிவகங்கை அரசு மேஜர் ஸ்மித் மற்றும் பான்ஞ்சூர் இராணுவத்தின் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டது.
  • தாண்டவராயப் பிள்ளை ஊரைக் காக்க பெரும் பாதுகாப்புகளையும், பொறிகளையும் ஏற்பாடு செய்தார்.
  • சிவகங்கையைக் கைப்பற்றுதல்: அவரது பெரும் முயற்சிகள் இருந்த போதிலும், ஜூன் 21, 1772 ஆம் ஆண்டில், ஸ்மித்தும், பான்ஞ்சூரும் சிவகங்கை மற்றும் காளையார் கோயில் பகுதியைக் கைப்பற்றினர் என்ற நிலையில் இது எதிர்தரப்பினருக்கு பெரிய இழப்பாக அமைந்தது.

இறுதி பிரச்சாரங்கள் மற்றும் இறப்பு

  • மறுசீரமைப்பு முயற்சிகள்: முத்துவடுகநாத தேவர் இறந்த பிறகு, தாண்டவராயப் பிள்ளை, மருது சகோதரர்களால் ஆதரிக்கப்பட்டு, ராணி வேலுநாச்சியாருக்கு ஆறுதல் கூறி இழந்த அந்த ராஜ்யத்தை மீட்டெடுப்பதாக உறுதியளித்தார்.
  • தாண்டவராயப் பிள்ளை கோபால நாயக்கருடன் தொடர்பு வைத்திருந்தமையால் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சியில் தஞ்சம் புகுந்தனர்.
  • உதவிக்கான வேண்டுகோள்: டிசம்பர் 1772 ஆம் ஆண்டில், தாண்டவராயப் பிள்ளை ஹைதர் அலிக்கு நவாபிடமிருந்து ஆட்சிப் பிரதேசங்களை மீட்டெடுக்க ஆதரவு கோரி ஒரு கடிதம் எழுதிய நிலையில், அதற்காக வேண்டி ஹைதர் அலி ஆயிரக்கணக்கான குதிரைகளையும் வீரர்களையும் வழங்கினார்.

இறப்பு மற்றும் மரபு:

  • தாண்டவராயப் பிள்ளை 1773 ஆம் ஆண்டில் வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவால் விருப்பாச்சியில் காலமானார்.

50. சி.பி. ராம சுவாமி ஐயர்

ஆரம்ப காலச் சட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் தொடர்புகள்

  • புகழ்பெற்ற வழக்கறிஞர்: சி.பி. ராம சுவாமி ஐயர் சென்னை மாகாணத்தில் ஒரு முக்கிய வழக்கறிஞராக இருந்தார் என்பதோடு அவருடைய சட்ட நிபுணத்துவம் மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்காக அவர் புகழ்பெற்றவராக விளங்கினார்.
  • இந்தியப் பணியாளர்கள் சங்கம்: இவர் கோபால கிருஷ்ண கோகலேவின் அபிமானி என்பதால் இவர் கோகலேவின் சீர்திருத்தக் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு, பூனாவில் உள்ள இந்தியப் பணியாளர்கள் சங்கத்தில் சேர்ந்தார்.

சட்ட மற்றும் அரசியல் சாதனைகள்

  • 1912 ஆம் ஆண்டு அன்னி பெசன்டிற்கு எதிரான உயர்மட்டக் காவல் வழக்கில், ஜிட்டு நாராயணையாவின் சார்பாகப் போராடி, நாராயணையாவின் இரண்டு மகன்களின் விடுதலையை உறுதி செய்தார்.
  • அன்னி பெசன்ட் உடனான ஒத்துழைப்பு: தன்னாட்சி இயக்கத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டு அன்னி பெசன்டின் உதவியாளராக மாறினார்.
  • அங்கு இவர் துணைத் தலைவராகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த இயக்கத்திற்காக ‘நியூ இந்தியா’ என்ற நாளிதழையும் வெளியிட்டார்.
  • கட்டுப்பாடுகளின் கீழ் திருத்துதல் பணி : 1917 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் டாக்டர். அன்னி பெசன்ட் சிறையில் அடைக்கப்பட்ட போது, ​​ ராம சுவாமி ஐயர் தேசத் துரோகச் சட்டத்தால் விதிக்கப்பட்ட அச்சிடுதல் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக தனது தோட்டத்தில் இருந்தபடி ‘நியூ இந்தியா’வைத் திருத்தி வெளியிட்டார்.

வழக்கறிஞர் பணி மற்றும் சட்டப் பாதுகாப்பு

  • கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு (1912): இவர் கலெக்டர் ஆஷ் கொலை தொடர்பான வழக்கில் வாஞ்சிநாதன் சார்பில் வாதிட்டார்.
  • சுப்பிரமண்ய பாரதிக்கு ஆதரவு: 1918 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் சென்னை மாகாணத்தில் நுழைந்த பிறகு கைது செய்யப்பட்ட சுப்ரமணிய பாரதியின் விடுதலைக்கு உதவினார்.
  • ராம சுவாமி ஐயர் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக, இந்தியப் பிரதிவாதிகளுக்கு  என்று வாதாட சட்ட உதவிக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை.

அரசியலில் பங்கு மற்றும் சட்டமன்றச் சாதனைகள்

  • இந்திய தேசிய காங்கிரஸ்: இவர் பண்டித ஜவஹர்லால் நேருவுடன் 1917-1918 காலம் வரை இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளராகப் பணியாற்றினார்.
  • இவர் காங்கிரஸ் இயக்கத்தின் ஆரம்ப காலத் தலைவராக இருந்தார்.
  • சட்டமன்ற மேலவை உறுப்பினர் (1919): சீர்திருத்தப் பட்ட அரசியலமைப்பின் கீழ், மெட்ராஸ் நகரத்திலிருந்துச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அட்வகேட்-ஜெனரல் (1920): இவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் அட்வகேட்-ஜெனரலாக நியமிக்கப் பட்டார் என்பதோடு இவர் நகர மாநகராட்சிகள் சட்டம் மற்றும் மெட்ராஸ் உள்ளூர் ஆணையச் சட்டம் அறிமுகப் படுத்தப் படுவதற்கும் காரணமாக இருந்தார்.

நிர்வாக மற்றும் இராஜதந்திரப் பங்களிப்புகள்

  • மெட்ராஸ் நிர்வாகக் குழு (1923): பொதுப்பணி, நீர்ப்பாசனம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை மேற்பார்வையிடும் மெட்ராஸ் ஆளுநரின் நிர்வாகக் குழுவிற்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார்.
  • பன்னாட்டு சங்கத்தின் பிரதிநிதி (1926-1927): ஜெனீவாவில் உள்ள பன்னாட்டுச் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாக இவர் பணியாற்றினார் மற்றும் பொது சுகாதாரக் குழுவின் அறிக்கையாளராக இருந்தார்.
  • மெட்ராஸ் இசை சங்கம் (1927): இவர் இந்திய தேசிய காங்கிரஸின் 1927 அமர்வின் போது இந்தியக் கலை மரபுகளை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் மெட்ராஸ் இசை சங்கத்தை இவர் தொடங்கினார்.

பிற்காலத்தில் இவரின் பங்கு மற்றும் சாதனைகள்

  • சட்ட உறுப்பினர் மற்றும் வட்ட மேசை மாநாடுகள் (1931-1932): இவர் இந்திய அரசாங்கத்தின் சட்ட உறுப்பினராக செயல்பட்டார் என்பதோடு லண்டனில் நடந்த முதல் மற்றும் மூன்றாவது வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார்.
  • உலகப் பொருளாதார மாநாட்டின் பிரதிநிதி (1933): உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

திருவிதாங்கூர் திவான் மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள்

  • கோயில் நுழைவுச் சட்டம் (1936): திருவிதாங்கூர் திவானாக இருந்த இவர், கோயில் நுழைவுச் சட்டத்தை அறிமுகப் படுத்தினார் என்ற நிலையில், இந்துக் கோயில்களில் அனைத்து சாதியினரும் நுழைவதை அனுமதிப்பதன் மூலம் தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முதல் அரசு நடவடிக்கையாக இச்சட்டம் அமைந்தது.
  • இந்த குறிப்பிடத் தக்கச் சீர்திருத்தத்திற்காக இவர் மகாத்மா காந்தியிடமிருந்துப் பாராட்டைப் பெற்றார்.

மரபு மற்றும் இறப்பு

  • சி.பி. ராம ஸ்வாமி ஐயர் செப்டம்பர் 26, 1966 அன்று காலமானார்.  

51. கே.ஏ. காசி விஸ்வநாத முதலியார்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • பிறப்பு மற்றும் குடும்பம்: இவர் மார்ச் 8, 1912 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில், அருணாச்சல முதலியாருக்குப் பிறந்தார்.
  • மகாத்மா காந்தி மற்றும் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) ஆகியோரின் தத்துவங்களால் ஈர்க்கப் பட்டு, சிறு வயதிலிருந்தே சமூகச் சீர்திருத்தங்களில் இவர் தீவிரமாக ஈடுபட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு

  • செயல்பாடு: இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, தீண்டாமை ஒழிப்பு மற்றும் கள் கடைகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டார்.
  • சிறைவாசம்: இவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார்.

தலைமைத்துவம் மற்றும் சமூக சேவை

  • திருச்செங்கோடு தாலுகா குழு: 1934 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை திருச்செங்கோடு தாலுகா குழுவின் தலைவராகப் பணியாற்றி அவர் சமூகச் சேவையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்.
  • நிதி திரட்டுதல்: இவர் ஹரிஜனங்கள் (பட்டியலிடப்பட்ட சாதியினர்) மற்றும் நெசவாளர்கள் சமூகத்தின் நலனுக்காக பெரும் நிதி சேகரித்து, சமூக மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
  • தலைவர்களுடனான சந்திப்புகள்: இவருக்கு காந்தி, ஜவஹர்லால் நேரு, மற்றும் சுபாஷ் சந்திர போஸ் (நேதாஜி) போன்ற முக்கியத் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, இது அவரது செயல்பாடு மற்றும் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க வழி வகுத்தது.

நெசவாளர் நலனுக்கானப் பங்களிப்புகள்

  • நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்: திருச்செங்கோட்டில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நிறுவி, 1942 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றினார் என்ற நிலையில் நெசவாளர்களின் நலனில் இந்த அமைப்பு மிகவும் முக்கியப் பங்காற்றியது.
  • காசி விஸ்வநாதன் நகர்: திருச்செங்கோட்டில் உள்ள நெசவாளர் காலனிக்கு, நெசவாளர் சமுதாய நலனுக்காக அவர் ஆற்றிய ப்பங்களிப்புகளை கவுரவிக்கும் வகையில், அதற்கு "காசி விஸ்வநாதன் நகர்' எனப் பெயரிடப்பட்டது.
  • திறப்பு விழா: நெசவாளர் காலனி திறப்பு விழாவின் போது, ​​சிறப்பு விருந்தினராக ராஜாஜி கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும், காசி விஸ்வநாத முதலியாரின் முயற்சிக்கு அங்கீகாரம் அளித்ததையும் அவர் எடுத்துரைத்தார்.
  • இறப்பு:
  • கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார் செப்டம்பர் 11, 1980 அன்று காலமானார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்