TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 12

September 8 , 2024 88 days 378 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 12

(For English version to this please click here)

59. வாட்டாக்குடி இரணியன்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • வாட்டாக்குடி இரணியன் 1920 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வட்டக்குடி கிராமத்தில் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் வெங்கடாசலம் ஆகும்.
  • இவர் வேலை நிமித்தமாக மலேசியாவிற்கு குடி பெயர்ந்தார், அங்கு அவர் தீவிர தேசியவாதச் செயலில் ஈடுபட்டதன் காரணமாக தனது பெயரை 'இரணியன்' என்ற மாற்றிக் கொண்டார்.

சுதந்திர இயக்கத்திற்கானப் பங்களிப்பு

  • இரணியன், சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் தீவிரமாக ஈடுபட்டார், பின்னர் தஞ்சைக்குத் திரும்பியதும் நிலமற்ற விவசாயிகளுக்கானப் போராளி அமைப்பாளராக மாறினார்.
  • அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் நிலப்பிரபுக்கள் உட்பட அனைத்து நிலப்பிரபுக்களையும் அவர் எதிர்த்துப் போராடினார்.

சிறைவாசம் மற்றும் மரணம்

  • மதராஸ் பிரசிடென்சியில் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையின் போது, ​​இரணியன் தலைமறைவானார், ஆனால் இறுதியில் காவல்துறையால் அவர் பிடிபட்டார்.
  • மே 1950 ஆம் ஆண்டில், அவருடன் சேர்த்து அவரது மூன்று தோழர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
  • பின்னர் தஞ்சைப் பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அவரது நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

மரணம்

  • வாட்டாக்குடி இரணியன் 1950 மே 5 அன்று காலமானார்.

60. மண்டையம் பார்த்தசாரதி திருமால் ஆச்சாரியார்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • 1887 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி, சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த மண்டையம் பார்த்த சாரதி திருமால் ஆச்சார்யா, ஒரு ஐயங்கார் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
  • அவரது தந்தை எம்.பி. நரசிம்ம ஐயங்கார், சென்னை பொதுப் பணித் துறையில் ஊழியராக இருந்தார்.

ஆரம்பகாலச் செயல்பாடு மற்றும் ‘இந்தியா’ தொடங்குதல்

  • 1906 ஆம் ஆண்டு தனது 19 வது வயதில், எம்.பி.டி. ஆச்சார்யா, சுப்ரமணிய பாரதியுடன் இணைந்து, ‘இந்தியா’ என்ற வாராந்திர தேசியப் பத்திரிக்கையை நிறுவினார்.
  • இந்தப் பத்திரிக்கை வெளியீடானது இந்திய தேசியவாத உணர்வுகளை மிக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் அதன் விமர்சனத் தலையகங்கள் மற்றும் நையாண்டி கேலிச் சித்திரங்களுக்காக அறியப்பட்டது.

பாண்டிச்சேரிக்கு இடமாற்றம்

  • பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள், அந்தப் பத்திரிகையின் தீவிர தேசியவாதச் செய்திகளால் கலவரமடைந்து எம்.பி.டி. ஆச்சார்யாவையும், பாரதியையும் பிரெஞ்சு எல்லையான பாண்டிச்சேரிக்கு இடம் பெயரச் செய்தனர்.

பாண்டிச்சேரியில் புரட்சிகர நடவடிக்கைகள்

  • எம்.பி.டி. ஆச்சார்யா பாண்டிச்சேரியிலும் தனது புரட்சிகரப் பணியைத் தொடர்ந்தார் என்ற நிலையில் அங்கும் பெரும் புரட்சிகர இலக்கிய வெளியீடுகளை இணைக்கப் பத்திரிகைகளை விரிவுபடுத்தினார்.
  • இந்தப் புரட்சிகர வெளியீடுகளைத் தேசத்துரோகம் என்று முத்திரை குத்தி அவற்றை அடக்கப் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரெஞ்சு உதவியை நாடியது.
  • பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் ஏற்பட்ட பெரும் அழுத்தத்தின் காரணமாக பிரெஞ்சு அதிகாரிகள் பாண்டிச்சேரியில் புரட்சிகர நடவடிக்கைகளைக் கண்காணிக்க, இந்திய ஏகாதிபத்திய காவல் துறையால் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு மையங்களை நிறுவ அனுமதித்தனர்.

சவால்கள் மற்றும் நாடு கடத்தல்

  • இந்த காலக் கட்டத்தில், இந்தியப் புரட்சியாளர்களை பிரிட்டிஷ் காவலில் ஒப்படைக்க பெரும் முயற்சிகளானது மேற்கொள்ளப்பட்டன.
  • எம்.பி.டி. ஆச்சார்யா, பாரதியார் மற்றும் பிற கூட்டாளிகள், எஸ்.என்.டி. ஆச்சார்யாவும் அவரது உறவினரும் ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆதரவு மற்றும் சட்டப் போராட்டங்கள்

பிரெஞ்சு சட்ட உதவி

  • எம்.பி.டி. ஆச்சார்யா மற்றும் பிற அகதிகள், பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்பைகளை எதிர் கொண்ட போதிலும் அவர்கள் பிரெஞ்சு வழக்கறிஞர்களின் ஆதரவைப் பெற்றனர்.

ஐரோப்பாவில் செயல்பாடுகள்

ஐரோப்பாவிற்குப் பயணம்

  • எம்.பி.டி. ஆச்சார்யா பாரீசில் குடியேறுவதற்கு முன், கொழும்பில் தொடங்கி மார்செய்ல்ஸ் வரை ஐரோப்பாவிற்குப் பயணம் செய்தார்.

இந்தியா ஹவுஸ் உடன் ஈடுபாடு

  • பாரீசிலிருந்து எம்.பி.டி. ஆச்சார்யா லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸுடன் தொடர்புடைய ஒரு இந்திய வழக்கறிஞரான வி.வி.எஸ். ஐயரைத் தொடர்பு கொண்டார்.
  • பிறகு எம்.பி.டி. ஆச்சார்யா லண்டனுக்கு குடி பெயர்ந்தார், அங்கு அவர் இந்தியா ஹவுஸ் மற்றும் அதன் தேசியவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, இங்கு அவர் V.D. சாவர்க்கர் போன்ற சில முக்கிய நபர்களை சந்தித்தார்.

முதலாம் உலகப் போரில் பங்கு

  • முதலாம் உலகப் போரின் போது, ​​ எம்.பி.டி. ஆச்சார்யா இந்து-ஜெர்மன் சதி மற்றும் பெர்லின் குழுவில் பணியாற்றியதோடு இந்தியப் போர்க் கைதிகளுடன் இணைந்து, இந்திய தன்னார்வப் படையை நிறுவ ஹர் தயாளுடன் இவர் பணியாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுதல்

  • முதலாம் உலகப் போருக்குப் பிறகு, எம்.பி.டி. ஆச்சார்யா சோவியத் யூனியனுக்குச் சென்றதோடு தாஷ்கண்டில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.

சர்வதேச இயக்கங்களுடனான ஈடுபாடு

  • ஐரோப்பாவுக்குத் திரும்பிய எம்.பி.டி. ஆச்சார்யா ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக்கில் பங்கேற்று சர்வதேச தீவிர இயக்கத்தில் ஈடுபட்டார்.

பிற்கால வாழ்க்கை மற்றும் மரபு

  • எம்.பி.டி. ஆச்சார்யா, மார்ச் 8, 1954 ஆம் ஆண்டில் பட்டியாவில் இறக்கும் வரையில் பல்வேறு கண்டங்களில் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.

61. கஜலு லட்சுமி நரசு செட்டி

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • கஜலு லட்சுமி நரசு செட்டி 1806 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு பணக்கார இண்டிகோ வியாபாரியான சித்துலு செட்டிக்கு மகனாகப் பிறந்தார்.
  • செழிப்பான குடும்பத்தில் வளர்ந்த கஜலு லட்சுமி நரசு செட்டி, வணிகம் மற்றும் அரசியலில் தனது எதிர்கால முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்த ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
  • தனது கல்வி படிப்பைத் தொடர்ந்து, கஜலு லட்சுமி நரசு செட்டி குடும்ப வணிகத்தில் இணைந்து வணிகராக வெற்றி பெற்றார்.
  • அவரது செல்வமும், செல்வாக்கும் அவரை அரசியல் மற்றும் சமூகக் காரணங்களில் ஈடுபட அனுமதித்தது.

அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடு

கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிர்ப்பு

  • 19 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், மதராஸ் பிரசிடென்சியில் உள்ள பொது நிறுவனங்களில் பணியாற்றியவர்களை கிறிஸ்தவ மிஷனரிகள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆதரவுடன், தீவிரமாக மதமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
  • உயர் நியமனங்களில் பூர்வீக கிறிஸ்தவர்களுக்கான இந்த விருப்பம், இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கான ஒரு உத்தியாக உணரப்பட்டது.
  • கஜலு லட்சுமி நரசு செட்டி, இந்து நலன்களின் தீவிர பாதுகாவலர் ஆவார் என்பதோடு, அவர் இந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்ற நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தார் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு பகுதிசார் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.

'தி கிரசென்ட்' பத்திரிகை நிறுவுதல்

  • 1844 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, கஜலு லட்சுமி நரசு செட்டி, சென்னை பிரசிடென்சியில் இந்தியருக்குச் சொந்தமான முதல் பத்திரிகையான ‘தி கிரசன்ட்’ என்ற ஒரு பத்திரிக்கையை நிறுவினார்.
  • இந்தச் செய்தித் தாளானது, இந்துக்களின் நிலையை நன்கு மேம்படுத்துவதையும், அரசாங்கக் கொள்கைகளால் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இருப்பினும், அதன் தொடக்கத்திலிருந்தே, ‘தி கிரசண்ட்’ பத்திரிகையானது ஆங்கிலேய அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.

சொத்து உரிமைகள் சட்டத்திற்கு எதிரான பிரச்சாரம்

  • ஆங்கிலேய அரசாங்கம் இந்து மதத்திலிருந்து மாறிய கிறிஸ்தவர்களுக்கு மூதாதையர் சொத்து உரிமைகளைத் தக்க வைக்க அனுமதிக்கும் சட்டத்தை முன்மொழிந்தது என்ற நிலையில் இது இந்து சமூகத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
  • கஜலு லட்சுமி நரசு செட்டியின் தலைமையில், மதராஸில் உள்ள இந்துக்கள் ஏப்ரல் 9, 1845 அன்று ஆளுநரிடம் ஒரு நினைவுச் சின்னத்தை அளித்து, ஒரு வேண்டுகோளையும் விடுத்தனர்.
  • அந்தக் கிளர்ச்சியாளர்களுடனான ஒரு நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஆங்கிலேய அரசாங்கம் இறுதியில் அச்சட்டத்தை திரும்பப் பெற்றது.

கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள்

கல்வியில் கிறிஸ்தவ இறையியலுக்கு எதிர்ப்பு

  • மதராஸ் அரசாங்கம் பைபிளை ஒரு நிலையான பாடப் புத்தகமாக அறிமுகப்படுத்த மிகவும் முயற்சித்தது என்பதோடு அரசாங்கப் பதவிகளுக்கு கிறிஸ்தவ இறையியல் பற்றிய அறிவும் எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறியது.
  • இந்த நடவடிக்கைகளுக்கு இந்துச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
  • அக்டோபர் 7, 1846 அன்று, பச்சையப்பா கல்லூரியில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்திற்குக் கஜலு லட்சுமி நரசு செட்டி தலைமை தாங்கியதோடு, அங்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர்களின் சபைக்கு ஒரு குறிப்பாணை அனுப்பப்பட்டது.
  • அந்தப் போராட்டம் பெரு வெற்றியடைந்ததால், கிறிஸ்தவ இறையியலைப் பாடத் திட்டத்தில் சேர்க்கும் முயற்சி கைவிடப் பட்டது.

மேலும் பல கல்விச் சீர்திருத்தங்கள்

  • 1853 ஆம் ஆண்டில், கல்விப் பாடத்திட்டத்தில் பைபிளை சேர்க்க அரசாங்கமானது மற்றொரு முயற்சியை மேற்கொண்டது.
  • கஜலு லட்சுமி நரசு செட்டி, ஜார்ஜ் மற்றும் ஜான் புரூஸ் நார்டன் ஆகியோருடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை தீவிரமாக எதிர்த்தார்.
  • அவர்களின் கூட்டு முயற்சியால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

மரபு மற்றும் இறப்பு

  • கசுலு லக்ஷ்மி நரசு செட்டியின் செயல்பாடு இந்து நலன்களைப் பாதுகாப்பதிலும், கல்வி மற்றும் சொத்து உரிமைகளில் கிறிஸ்தவ செல்வாக்கைத் திணிக்கும் காலனித்துவ முயற்சிகளை எதிர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தது.
  • தி கிரசென்ட்’ நிறுவனத்தை நிறுவுவதில் அவர் ஆற்றியப் பணி மற்றும் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களில் அவரது தலைமைத்துவம், மதராஸ் பிரசிடென்சியில் உள்ள இந்து சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

மரணம்

  • கஜலு லட்சுமி நரசு செட்டி 1868 ஆம் ஆண்டில் காலமானார்.  

62. ஆர். எஸ். வெங்கடராம ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • ஆர்.எஸ். வெங்கடராம ஐயர் 1886 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டின் மதுரையில் சுந்தர ராம ஐயருக்கு மகனாகப் பிறந்தார்.
  • இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

தேசிய இயக்கத்தில் ஆரம்ப கால ஈடுபாடு

  • வேங்கட ராம ஐயர் மாணவராக இருந்த போதும் தன்னாட்சி இயக்கத்தில் வெகு தீவிரமாகப் பங்கேற்றார்.
  • தேசியவாத நடவடிக்கைகளில் அவரது ஈடுபாடு இளம் வயதிலேயே தொடங்கியது என்பது இந்தியாவின் சுதந்திரத்திற்கான அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

சுதந்திர இயக்கத்திற்கான பங்களிப்புகள்

சொற்பொழிவு மற்றும் பிரச்சாரம்

  • பேச்சாற்றலுக்குப் புகழ் பெற்ற வெங்கடராம ஐயர், மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் தேசிய இயக்கத்தைத் திறம்படப் பிரச்சாரம் செய்த சிறப்புமிக்க பேச்சாளராகத் திகழ்ந்தார்.
  • அவரது அச்சமற்ற மற்றும் துணிச்சலான உரை அவருக்கு மக்கள் மத்தியில் "மட்டப் பாறை சிங்கம்" (சிங்கம்) என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது.

தீண்டாமை மற்றும் தடை இயக்கங்கள்

  • வேங்கட ராம ஐயர் சமூக நீதிக்காக தீவிரமாக ஈடுபட்டார் என்பதோடு மதுரையில் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் மற்றும் மதுவிலக்கு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சீர்திருத்தத்தை நன்கு மேம்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவரது செயல்பாட்டில் ஒருங்கிணைந்ததாக இருந்தன.

முக்கிய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சிறைவாசங்கள்

சூரத் காங்கிரஸ் அமர்வு (1906)

  • 1906 ஆம் ஆண்டில், வெங்கடராம ஐயர் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் மற்ற முக்கியத் தலைவர்களான சுப்ரமணிய பாரதி மற்றும் வி.ஓ. சிதம்பரம் பிள்ளையுடன் பங்கேற்றார்.

ஒத்துழையாமை இயக்கம் (1921)

  • 1921 ஆம் ஆண்டில், வெங்கடராம ஐயர் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார், இது அவரது ஒரு வருட சிறைவாசத்திற்கு வழி வகுத்தது.

உப்பு சத்தியாகிரகம் (1930)

  • ஆங்கிலேய உப்புச் சட்டங்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்திற்கான காந்தியின் அழைப்புக்கு தனது ஈடுபாட்டை வெளிக் கொணர வெங்கடராம ஐயர் 1930 ஆம் ஆண்டில் உப்பு சத்தியாக் கிரகத்தில் பங்கேற்றார்.
  • மேலும் இவர் கணிசமான ஆதரவைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கத்தில் மிகத் தீவிரமாகப் பங்கேற்றார்.

சட்டமறுப்பு இயக்கம் மற்றும் சிறைவாசம் (1931)

  • 1931 ஆம் ஆண்டு காங்கிரஸின் திண்டுக்கல் மாவட்டத் தலைவராக இருந்த அவர், சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார்.

காங்கிரஸ் மாநாடு (1937-1938)

  • 1937 ஆம் ஆண்டில் வெங்கட்டராம ஐயர் வத்தலகுண்டுவில் காங்கிரஸ் மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தார்.
  • அவர் 1938 ஆம் ஆண்டில் அவர் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, அக்காலத்து அரசியலில் தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தினார்.

மரபு மற்றும் இறப்பு

  • ஆர்.எஸ். வெங்கடராம ஐயர் மே 1957 ஆம் ஆண்டில் காலமானார்.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்