TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 15

September 19 , 2024 8 days 204 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 15

(For English version to this please click here)

78. பி. என். சீனிவாசன்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த ஆண்டு: 1929.
  • பிறந்த இடம்: பொன் விளைந்த குளத்தூர் கிராமம், செங்கல்பட்டு, தமிழ்நாடு.
  • தந்தை: பி.என். கோபாலன்

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • காந்தியக் கொள்கைகள்:
  • பி.என். சீனிவாசன் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர் என்பதோடு காந்திய விழுமியங்களை வளர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
  • 1932 ஆம் ஆண்டில் அவர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

தொழில்:

  • பி.என். சீனிவாசன் பெரம்பூரில் உள்ள இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் சேர்ந்து 1987 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அங்கேயே பணியாற்றினார்.
  • தலையங்கப் பணி: பி.என். ஸ்ரீனிவாசன், தமிழ் இதழியல் மற்றும் இலக்கியத்திற்குப் பங்களிக்கும் ‘பாரத மணி’ என்ற தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.

79. என்.எம்.ஆர். சுப்பாராமன்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • பிறந்த தேதி: 14 ஆகஸ்ட் 1905.
  • பிறந்த இடம்: மதுரை, மதராஸ் பிரசிடென்சி.
  • இவர் என்.எம்.ராயலு ஐயரின் மகன் ஆவார்.

கல்வி:

  • என்.எம்.ஆர். சுப்பாராமன் மதுரை சௌராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
  • இவர் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.

சுதந்திர இயக்கத்தின் ஈடுபாடு

  • ஆரம்ப கால ஈடுபாடு: 'மதுரை காந்தி' என்று அறியப்பட்ட அவர், மகாத்மா காந்தியை தீவிரமாகப் பின்பற்றுபவராகவும், காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார்.

முக்கியச் செயல்பாடுகள்:

  • என்.எம்.ஆர். சுப்பாராமன் 1922 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட, லண்டனில் மேற்படிப்பைத் தொடர மறுத்துவிட்டார்.
  • இவர் 1923 ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முதன்மை உறுப்பினராகவும், 1925 ஆம் ஆண்டில் அதன் தலைவராகவும் ஆனார்.
  • இவர் 1930 ஆம் ஆண்டில் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக ஊர்வலத்திற்கு 27 இளைஞர்களை தேர்வு செய்ததில் முக்கியப் பங்காற்றினார்.
  • இவர் கள்ளுக் கடை மறியல் மற்றும் பல்வேறு சத்தியாக்கிரக இயக்கங்களில் பங்கேற்றார்.
  • இவர் தனது போராட்டங்களுக்காக, தனது மனைவியுடன் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

அரசியல் மற்றும் சட்டமியற்றும் பணி

  • என்.எம்.ஆர். சுப்பாராமன் 1935 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரை மதுரை நகராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
  • இவர் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் சென்னை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • கூடுதலாக, அவர் 1962 ஆம் ஆண்டு முதல் முதல் 1967 ஆம் ஆண்டு வரை மதுரை தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமூக மற்றும் கல்விப் பங்களிப்புகள்

  • ஹரிஜன மக்கள் நலன்:
  • என்.எம்.ஆர். சுப்பாராமன் ஹரிஜன மக்களின் விடுதலையில் மிகவும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
  • இவர் தமிழ்நாடு ஹரிஜன சேவக் சங்கத்தின் மூலம் ஹரிஜன மக்கள் விடுதிகளை நிறுவுவதற்குப் பணியாற்றினார்.
  • இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைவதற்கு ஏ. வைத்திய நாத ஐயருடன் கோயில் நுழைவு மாநாட்டை ஏற்பாடு செய்தார்.
  • பூமிதான இயக்கம்: இவர் வினோபா பாவே தொடங்கிய பூமிதான இயக்கத்திற்கு 100 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கினார்.

காந்திய மரபு:

  • என்.எம்.ஆர். சுப்பாராமன் காந்திஜியின் படைப்புகளைத் தமிழில் வெளியிட்ட, காந்தி படைப்பு வெளியீடுகள் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார்.
  • இவர் இந்தியாவின் முதல் காந்தி அருங்காட்சியகத்தை மதுரையில் நிறுவுவதற்கு பெரும் பங்களித்தார்.
  • இவர் மதுரை அருகே உள்ள டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைவராக இருந்தார்.
  • மேலும் அவர் மதுரையில் காந்தி கிராமத்தில் பணியாற்றினார்.

கலாச்சார மற்றும் கல்வித் தாக்கம்

  • மதராஸ் பல்கலைக்கழகத்தின் முதல் செனட் உறுப்பினராக இருந்த என்.எம்.ஆர். சுப்பாராமன், காந்திய சிந்தனைகள் குறித்த பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகித்தார்.
  • மேலும், மதுரையில் முதல் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை நிறுவ அவர் உதவினார்.

குடும்பம்:

  • இவரது மனைவி பர்வத வர்த்தனியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.

மரபு:

  • மகாத்மா காந்தி மதுரைக்கு வருகை தந்த போது இவரது பங்களாவில் காந்தி தங்கினார்.
  • 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவரது 100வது பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் தபால் தலையை வெளியிட்டது.
  • 2007 ஆம் ஆண்டில், ஒரு மகளிர் கல்லூரிக்கு இவரது பெயரிடப்பட்டது.

இறப்பு

  • அவர் ஜனவரி 25, 1983 அன்று தனது 77 வது வயதில் காலமானார்.

80. இம்மானுவேல் தேவேந்திரர் / இம்மானுவேல் சேகரன் (1924–1957)

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: 9 அக்டோபர் 1924.
  • பிறந்த இடம்: செல்லூர், ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
  • இம்மானுவேல் தேவேந்திரர் தனது 18வது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.

இராணுவ மற்றும் அரசியல் பணி

  • ஆங்கிலேயரின் இந்திய ராணுவம்:
  • இம்மானுவேல் தேவேந்திரர் 1945 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்; இதிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதும், ராமநாதபுரம் மாவட்டம் திரும்பினார்.
  • காங்கிரஸ் பணி:
  • இம்மானுவேல் தேவேந்திரர் தனது சமூகமான பள்ளர்களின் கல்வி, உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த வேண்டி இந்திய தேசிய காங்கிரஸிற்காகப் பணியாற்றினார்.
  • அவர் சமத்துவத்தைக் கோருவதற்கான முயற்சிகளை ஒன்றிணைத்தார்.

மத மாற்றம் மற்றும் பெயர் மாற்றம்

  • அவர் இந்து மதத்திற்கு மாறினார் மற்றும் அவரது அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாக தனது பெயரை இம்மானுவேல் சேகரன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

இறப்பு

  • இம்மானுவேல் தேவேந்திரர் செப்டம்பர் 11, 1957 அன்று தனது 32 வயதில் காலமானார்.

81. கோவை சுப்ரி

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பெயர்: சுப்பிரமணியம் (கோவை சுப்ரி என்று பிரபலமாக அறியப்படுகிறார்).
  • பிறந்த தேதி: 1898
  • பிறந்த இடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு.
  • பெற்றோர்: வி.ஆர். கிருஷ்ண ஐயர் மற்றும் பார்வதி.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • கல்வி மற்றும் ஆரம்ப கால செயல்பாடு:
  • காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர இயக்கத்தில் சேர என்று சுப்ரமணியம் கல்லூரிப் படிப்பை கைவிட்டார்.
  • அவர் 1921 ஆம் ஆண்டில் டவுன் காங்கிரஸ் குழுவின் செயலாளராக ஆனார்.

சிறைவாசங்கள்:

  • 1923 ஆம் ஆண்டு நாக்பூரில் சர்தார் வல்லபாய் படேலின் தலைமையில் நடந்த கொடி சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக என்று சுப்பிரமணியம் ஓராண்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
  • அவர் பல்வேறு காரணங்களுக்காக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தார், அந்த காலக்கட்டத்தில் அவர் தனது பாடல்களைத் தொகுத்து தேசிய கீதங்கள் என்ற ஒரு நூலினை இயற்றினார்.

காதி இயக்கம்:

  • ஊத்துக்குளி அருகே உள்ள படியூரில் சுப்பிரமணியம் காதி மையத்தைத் தொடங்கி, யங் இந்தியாவில் காந்திஜியால் பாராட்டப்பட்டார்.

மொழிபெயர்ப்பாளராகப் பங்கு:

  • காந்திஜியின் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி சுற்றுப்பயணங்களின் போது சுப்பிரமணியம் காந்திஜியின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார் என்பதோடு அவர் காந்திஜியால் ‘ஒலிப்பெருக்கி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

  • சுப்பிரமணியம் 1938 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரை கோவை மாநகராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.

சட்டமன்ற வாழ்க்கை:

  • சுப்பிரமணியம் 1947 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை கோவை நகரச் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவரது மனைவி கமலா தனது ஆறு மாத மகளுடன் 1930 மற்றும் 1932 ஆம் ஆண்டில் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

இறப்பு

  • சுப்பிரமணியம் 1993 ஆம் ஆண்டில் காலமானார்.

82. கோமதி சங்கர தீட்சிதர்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: மார்ச் 1889.
  • பிறந்த இடம்: சுத்தமல்லி கிராமம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
  • பெற்றோர்: கணபதி ராம தீட்சிதர் மற்றும் மீனாட்சி அம்மாள்.

கல்வி

  • கோமதி சங்கர தீட்சிதர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஜார்ஜ் மில்லர் நடுநிலைப் பள்ளி மற்றும் அம்பாசமுத்திரத்தில் உள்ள தீர்த்த பாரதி உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • ஆரம்ப காலச் செயல்பாடு:
  • கோமதி சங்கர தீட்சிதர் 1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையால் ஏற்பட்ட கொந்தளிப்பின் போது இந்திய தேசிய இயக்கத்தில் இணைந்தார்.
  • அவர் வந்தே மாதரம் இயக்கத்தில் பங்கேற்றார், வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணித்தார், மற்றும் சுதேசப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தார்.

காதி மற்றும் சுதேசி இயக்கம்:

  • கோமதி சங்கர தீட்சிதர் கதர் பொருட்களை ஊக்குவித்தார், விசைத்தறியில் முதலீடு செய்தார் மற்றும் நெசவாளர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கு:

  • கோமதி சங்கர தீட்சிதர், ஆட்சியர் ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதன் மற்றும் பிறரின் பாதுகாவலராக இருந்தார்.
  • அவர் காந்திஜியைச் சந்தித்து அஹிம்சையைப் பின்பற்றி மிதவாத முறைகளுக்கு மாறினார்.
  • திலகர் பெயரில் கல்லிடைக்குறிச்சியில் பள்ளியைத் தொடங்கி அதில் ஆசிரியராகப் பணி ஆற்றினார்.

சிறைவாசங்கள்:

  • 1930 மற்றும் 1932 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உப்புச் சத்தியாகிரகம், மதுவிலக்கு இயக்கம் மற்றும் பிற போராட்டங்களின் போது அவர் தனது நடவடிக்கைகளுக்காக ஒரு வருடம் சிறையில் இருந்தார்.
  • 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது 18 மாதங்கள் சிறையில் இருந்தார்.

சுதந்திரத்திற்குப் பின்பு

  • சட்டமன்ற வாழ்க்கை:
  • கோமதி சங்கர தீட்சிதர் சுதந்திரத்திற்குப் பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

இறப்பு

  • கோமதி சங்கர தீட்சிதர் 1972 ஆம் ஆண்டு காலமானார்.

83. இ. கிருஷ்ண ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • பிறந்த தேதி: 9 ஆகஸ்ட் 1897
  • பிறந்த இடம்: கல்லிடைக் குறிச்சி, மதராஸ் பிரசிடென்சி.

கல்வி:

  • கிருஷ்ண ஐயர் தனது பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
  • இவர் மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
  • இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
  • 1943 ஆம் ஆண்டு வரை அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி ஆற்றினார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • கிருஷ்ண ஐயர் 1930களில் இந்தியத் தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.
  • இவர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • இவர் தனது செயல்பாட்டிற்காகப் பலமுறை சிறை சென்றவர் ஆவார்.
  • இவர் சுப்ரமணிய பாரதியின் தேசியப் பாடல்களைச் சமூகத்தில்  பரப்பினார்.

கலையுடனான தொடர்பு

  • நாடக வாழ்க்கை: கிருஷ்ண ஐயர் நாடகக் குழுவில் சேர்ந்து பெண் வேடங்களில் நடித்தார்.
  • செவ்வியல் கலைகளில் ஆர்வம்: அவர் செவ்வியல் கலைகள் மற்றும் கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

பரதநாட்டிய மறுமலர்ச்சி இயக்கம்

  • ஆரம்ப காலப் பணி: கிருஷ்ண ஐயர் சுகுண விலாச சபையில் சேர்ந்து சதிர் நடனத்தை (பரதநாட்டியத்தின் முன்னோடி) கற்றார்.
  • மெட்ராஸ் மியூசிக் அகாடமி: பரதநாட்டியத்தைப் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் ருக்மணி தேவி அருண்டேலுடன் இணைந்து இந்த அமைப்பை நிறுவினார்.
  • நடன வடிவத்தை மறுபெயரிடுதல்: நடன வடிவத்தைத் தேவதாசி அமைப்பில் இருந்து பிரித்து, அதற்கு மரியாதை அளிக்கும் வகையில் சதிரின் பெயரை பரதநாட்டியம் என்று மாற்ற அவர் முன்மொழிந்தார்.
  • முயற்சிகள்: நடனத்தில் இருந்து வெளிப்படையான பாலியல் வெளிப்பாடுகளை அகற்ற அவர் பாடுபட்டார் மற்றும் பிராமணப் பெண்களை பரதநாட்டியம் கற்க ஊக்குவித்தார்.

அரசியல் மற்றும் பொது ஈடுபாடு

  • காங்கிரஸ் கமிட்டி: கிருஷ்ண ஐயர் காங்கிரஸ் காங்கிரஸ் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
  • அவர் 1938 ஆம் ஆண்டில் மயிலாப்பூரில் இருந்து சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார்.
  • சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் (பூண்டி நீர்த்தேக்கம்) அமைப்பதற்கு அவர் பங்களித்தார்.

கலாச்சாரப் பங்களிப்புகள்

  • பரதநாட்டியம்: கிருஷ்ண ஐயர் பரதநாட்டியத்தை, அதன் தேவதாசி தோற்றம் இல்லாமல் ஒரு கலை வடிவமாக வளர்த்தார்.
  • அவர் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார் மற்றும் நடன வடிவத்தின் உயிர்வாழ்வை ஆதரித்தார்.
  • மியூசிக் அகாடமி: அவர் மதராஸ் மியூசிக் அகாடமியின் செயலாளராகப் பணியாற்றினார்.
  • கலை விமர்சகர்: அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி மற்றும் கல்கி ஆகியவற்றில் எழுதி உள்ளார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

  • அவரது நடன மற்றும் இசைக்கான பங்களிப்புகளுக்காக, இவருக்கு 1966 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • கிருஷ்ண ஐயர் 1957 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள இந்திய நுண் கலை அமைப்பிலிருந்து சங்கீத கலா சிகாமணி பட்டத்தைப் பெற்றார்.

இறப்பு

  • ஜனவரி 3, 1968 அன்று தனது 71 வது வயதில் காலமானார்.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்