TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 17

September 24 , 2024 72 days 684 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 17

(For English version to this please click here)

90. வை. மு. கோதை நாயகி அம்மாள்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி:

  • 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள நீர்வளூரில் என். எஸ். வெங்கடாச்சாரி மற்றும் பட்டம்மாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

கல்வி மற்றும் ஆரம்பகாலத் தாக்கங்கள்:

  • அவருக்கு முறையான பள்ளிப் படிப்பு இல்லை என்பதோடு அவருக்குத் தனது திருமணத்தின் போது எழுதவும், படிக்கவும் தெரியாது.
  • பின்னர், தன் மாமியாரிடம் தெலுங்கு கற்ற பின்பு, திருவாய்மொழி பாசுரங்கள் பாடி அவர் தமிழ் மொழியைப் பயின்றார்.
  • அவரது ஆரம்பக் காலத்தில், கதை சொல்லல் மற்றும் நாடகங்களை வெளிப்படுத்துவதன் மூலமாக அவர் தமிழில் புலமை பெற்று விளங்கினார்.
  • பார்த்தசாரதி அவரது கல்வியை ஆதரித்ததோடு அவரது இலக்கிய நோக்கங்களை நன்கு ஊக்குவித்தார் மேலும் இலக்கியத்தின் மீதான அவரது பற்றையும் வளர்த்தார்.

இலக்கிய வாழ்க்கை:

  • ஆரம்பகாலப் படைப்புகள்: நோபல் பத்திரிகையால் வெளியிடப்பட்ட இந்திர மோகனா (1924) என்ற தனது முதல் நாடகத்துடன் அவர் தனது படைப்பைத் தொடங்கினார் என்ற நிலையில், இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

முக்கியப் பங்களிப்புகள்:

  • அவர் 115 புத்தகங்களை எழுதியதோடு, ‘ஜெகன்மோகினி’ என்ற தமிழ் மாத இதழையும் வெளியிட்டார்.
  • இவர் துப்பறியும் நாவலை எழுதிய முதல் பெண் தமிழ் எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • அவரது குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் 'அருணோதயம்', 'வத்ச குமார்' மற்றும் 'தயாநிதி' போன்ற நாடகங்கள் அடங்கும்.
  • 1925 ஆம் ஆண்டில், அவர் ‘ஜகன் மோகினி’யின் ஆசிரியரானார்.
  • அங்கு அவர் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியதோடு சமகாலப் படைப்புகளை வெளியிட்டு, பத்திரிகையின் பிரபலத்தைப் பெரிதும் அதிகரித்தார்.

மேடைப் பேச்சு மற்றும் இசை:

  • அவர் தனது பேச்சுக்களில் கதைகளை இணைத்துக் கொண்டு அரசியல் கூட்டங்களில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் மேடைப் பேச்சுக்காக அறியப்பட்டார்.
  • காங்கிரஸ் கட்சியின் பேச்சாளராக செயல்பட்ட அவர், தனது பேச்சாற்றலால் பலரை ஊக்கப் படுத்தினார்.
  • அவர் தனது சொற்பொழிவுத் திறனுடன், செவ்வியல் கர்நாடக இசையிலும், காங்கிரஸ் கூட்டங்களிலும், அகில இந்திய வானொலியிலும் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதிலும் திறமையானவராக இருந்தார்.
  • இவர் டி.கே.பட்டம்மாளை ஊக்குவித்து மகாகவி பாரதியாரிடம் பாராட்டைப் பெற்றார்.
  • 'இசை மார்க்கம்' என்ற புத்தகத்தில் அவரது சில படைப்புகளுடன், பாரம்பரிய இசை குறித்தும் அவர் இயற்றியுள்ளார்.

சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூகச் செயல்பாடு:

  • அவர் 1925 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரி பாய் ஆகியோரைச் சந்தித்தார் என்ற நிலையில் இந்தச் சந்திப்பு அவருக்கு எளிமையான வாழ்க்கையைத் தழுவவும், காதி ஆடைகளை ஏற்றுக் கொள்ளவும் தூண்டியது.
  • 1931 ஆம் ஆண்டில், அவர் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார், இதன் விளைவாக அவருக்கு எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
  • அவர் 1932 ஆம் ஆண்டில் லோதி கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், வெளிநாட்டு ஆடைகளைப் புறக்கணித்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்ட போதும் கூட, அவரது செயல்பாடு தொடர்ந்தது.
  • சிறைவாசத்தின் போது, ​​அவர் தனது சக கைதிகளின் அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் நாவல்களை எழுதினார்.
  • அவர் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்கு ஆதரவாக மகாத்மா ஜி சேவா சங்கத்தை நிறுவினார்.
  • ஸ்ரீ வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்திற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பத்து ஏக்கர் நிலத்தையும் அவர் நன்கொடையாக வழங்கினார்.

திரைப்படத் தொழில்:

  • அவர் பத்து வருடங்கள் திரைப்பட தணிக்கை குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார் என்ற நிலையில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் திரைப்படங்களில் மீண்டும் அறிமுகப் படுத்தப் படாமல் இருப்பதை உறுதி செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றினார்.
  • அவரது பல நாவல்களான அனாதைப் பெண், சித்தி, ராஜ் மோகன் மற்றும் நளின சேகரன் உள்ளிட்டவை திரைப் படங்களாக மாற்றப் பட்டன.
  • இவரது மரணத்திற்குப் பின், இலக்கியம் மற்றும் திரைப்படம் ஆகிய இரண்டிற்கும், அவர் செய்த குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அங்கீகரித்து, இந்தப் படைப்புகளின் தழுவல்களில் எடுக்கப் பட்ட திரைப்படம் சிலவற்றிற்காக சிறந்தத் திரைப்படக் கதை எழுத்தாளருக்கான விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.

பொது மற்றும் சமூகச் சேவை:

  • அவர் மருத்துவச் சேவைகள் வழங்குவதில் திறமையானவர், எனவே அவர் அனைத்து சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தப் பெண்களுக்கும் இலவச மருத்துவச் சேவைகளை வழங்கினார்.
  • அவரது பொதுநலச் சேவையை அங்கீகரிக்கும் வகையில், அரசாங்கம் அவருக்கு பத்து ஏக்கர் நிலத்தை வழங்கியது, ஆனாலும் அவர் அதனைப் பெருந்தன்மையாக வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்திற்கு வழங்கினார்.

இறப்பு:

  • அவர் 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று காலமானார்.

91. வாஞ்சிநாத ஐயர் (சங்கர ஐயர்)

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி:

  • பிறந்த இடம்: செங்கோட்டை, தமிழ்நாடு.
  • குடும்பம்: அவர் ஸ்ரீ ரகுபதி ஐயரின் மகன்.
  • கல்வி: அவர் ஆரம்ப நிலை வரை பள்ளியில் பயின்றார்.
  • தொழில்: அவர் பள்ளிப் படிப்பு முடிந்ததும் வனத் துறையில் சேர்ந்தார்.

புரட்சிகர நடவடிக்கைகள்:

  • இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான பெரும் புரட்சிகர நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

முக்கிய நிகழ்வு:

  • ராபர்ட் ஆஷ் படுகொலை: 17 ஜூன் 1911 அன்று, தனது 25 வயதில், வாஞ்சிநாத ஐயர் ஆட்சியர் துரை என்றும் அழைக்கப்பட்ட, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான  ராபர்ட் ஆஷைக் கொலை செய்தார்.
  • ஆஷ் சென்னைக்கு செல்லும் வழியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுடப்பட்டார்.
  • பின் விளைவு: இந்தப் படுகொலையைத் தொடர்ந்து வாஞ்சிநாத ஐயர் தற்கொலை செய்து கொண்டார்.

கூட்டாளிகள் மற்றும் அமைப்பு:

  • நீலகண்டப் பிரம்மச்சாரி, மதராஸ் பிரசிடென்சி முழுவதும் புரட்சியாளர்களை பெருமளவில் ஆட் சேர்ப்பு செய்து, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரானத் தாக்குதல்களைத் திட்டமிட்டார்.
  • தொடர்புகள்: வாஞ்சிநாதரின் மைத்துனரான சங்கர் கிருஷ்ண ஐயர் என்பவர், வாஞ்சிநாதரை நீலகண்டப் பிரம்மச்சாரிக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்.
  • அமைப்பு: நீலகண்டப் பிரம்மச்சாரி, சங்கர் கிருஷ்ண ஐயர் மற்றும் இதர பிற கூட்டாளிகளுடன் சேர்ந்து, வாஞ்சிநாத ஐயர் பாரத மாதா சங்கத்தை நிறுவ உதவினார்.
  • இந்த அமைப்பு முக்கியப் பிரிட்டிஷ் பிரமுகர்களைப் படுகொலை செய்ய சதி செய்தது.

மரபு:

  • வாஞ்சி மணியாச்சி நிலையம்: ஆஷ் படுகொலை நடந்த ரயில் நிலையமானது அவரைக் கவுரவிக்கும் வகையில் வாஞ்சி மணியாச்சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

92. எஸ். சுப்ரமணிய ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி:

  • பிறப்பு: மதுரை, தமிழ்நாடு.

தொழில் மற்றும் பங்களிப்புகள்:

  • தொழில்: வழக்கறிஞர், சட்ட நிபுணர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்.
  • தலைமை நீதிபதி: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல் இந்தியர் சுப்பிரமணிய ஐயர் ஆவார்.
  • நைட்ஹூட்: அவரது சட்ட மற்றும் பொதுச் சேவைப் பங்களிப்புகளை நன்கு அங்கீகரிக்கும் வகையில், 1900 ஆம் ஆண்டில் அவருக்கு நைட்ஹூட் பட்டம் வழங்கப் பட்டது.

இந்தியத் தேசிய காங்கிரஸ் (INC):

  • சுப்ரமணிய ஐயர் இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் கட்சியின் நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கொண்டிருந்தார்.
  • விவசாயி உரிமைகள் வழக்கறிஞர்: இந்தியத் தேசிய காங்கிரஸின் 1914 ஆம் ஆண்டில் மதராஸ் அமர்வின் தலைவராக, அவர் கிராமப் பஞ்சாயத்துகளின் முக்கியத்துவத்தை எடுத்து உரைத்ததோடு அவர் ரையத் (விவசாயி) நிவாரண நிதிக்காகவும் வாதிட்டார்.

சுதேசி இயக்கம்:

  • சுப்ரமணிய ஐயர் சுதேசி இயக்கத்தின் வலுவான ஆதரவாளராக இருந்தார் என்ற நிலையில் இது உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை மிகவும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

தன்னாட்சி இயக்கம்:

  • 1916 ஆம் ஆண்டில், சுப்பிரமணிய ஐயர் மற்றும் அன்னி பெசன்ட் ஆகியோர் தன்னாட்சி இயக்கத்தை நிறுவினர் என்ற நிலையில் அதன் கௌரவத் தலைவராக அவர் பணியாற்றினார்.
  • அமெரிக்க அதிபருக்குக் கடிதம்: 1917 ஆம் ஆண்டில், சுப்பிரமணிய ஐயர், அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு இந்தியாவில் அடக்குமுறை மற்றும் தவறான ஒரு ஆட்சியைக் கோடிட்டுக் காட்டி கடிதம் எழுதினார்.
  • இந்தக் கடிதமானது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விரிவான விவாதத்தைத் தூண்டியது மற்றும் வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்டின் தனிப்பட்ட கண்டனத்திற்கும் வழி வகுத்தது.
  • நைட்ஹுட் பட்டத்தைத் துறத்தல்: வைஸ்ராயின் அவமானத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, சுப்பிரமணிய ஐயர் தனது நைட்ஹுட் பட்டத்தைத் துறந்து, "தனது குடியுரிமைகளை சட்டப் பூர்வமாகப் பயன்படுத்துவதற்கு" இந்தப் பட்டங்கள் தடையாக இருப்பதாக அறிவித்தார்.

இறப்பு:

  • சுப்ரமணிய ஐயர் 1924 ஆம் ஆண்டில் காலமானார்.

93. சர் பழமனேரி சுந்தரம் சிவ சுவாமி ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி:

  • சர் பழனேரி சுந்தரம் சிவ சுவாமி ஐயர் 1864 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி, சென்னை மாகாணத்தில் தஞ்சையில் உள்ள பழமனேரியில் பிறந்தார்.
  • அவர் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர், நிர்வாகி மற்றும் அரசியல்வாதி ஆவார்.

கல்வி மற்றும் ஆரம்ப காலத் தொழில்:

  • பள்ளிப் படிப்பிற்காக அவர் எஸ்.பி.ஜி கிளைப் பள்ளியிலும், மணம்புச் சாவடி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
  • கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார்.
  • அவர் ஜனவரி 1882 ஆம் ஆண்டில், மதராஸ் பிரசிடென்சி கல்லூரியில் சமஸ்கிருதம் மற்றும் வரலாற்றில் பட்டம் பெற்றார்.
  • பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் அவர் சட்டம் பயின்றார்.
  • அவர் 1885 ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

சட்டம் மற்றும் நிர்வாகப் பணி:

  • சிவ சுவாமி ஐயர் 1907 ஆம் ஆண்டு முதல் 1911 ஆம் ஆண்டு வரை மதராஸ் பிரசிடென்சியின் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார்.
  • அவர் 1911 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரை மதராஸ் ஆளுநரின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
  • அவர் 1916 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார்.
  • பின்னர், அவர் 13 ஏப்ரல் 1918 முதல் 8 மே 1919 வரை பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக ஆனார்.
  • அவர் 1922 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை மாநிலக் கவுன்சில் (இந்தியா) உறுப்பினராக இருந்தார்.

அரசியல் மற்றும் பொதுச் சேவை:

  • சிவ சுவாமி ஐயர் இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.
  • அவர் அதன் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பங்கு வகித்தார்.
  • அவர் அன்னி பெசன்ட் உடன் இணைந்து ஹோம் ரூல் இயக்கத்தை ஆதரித்தார்.
  • அவர் 1922 ஆம் ஆண்டில் பன்னாட்டுச் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார், அங்கு அவர் தென்னாப்பிரிக்காவின் ஜெனரல் ஸ்மட்ஸின் கட்டாய ஆணைக் கொள்கையை கண்டித்தார்.
  • அவர் சைமன் கமிஷன் இந்தியா வந்ததும் அதனை விமர்சித்தார்.
  • அவர் 1931 ஆம் ஆண்டில் இந்திய இராணுவக் கல்லூரிக் குழுவின் உறுப்பினராக இருந்தார், மேலும் அவர் உள்நாட்டு இராணுவ அகாடமிக்காக வாதிட்டார்.

குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகள் மற்றும் மரபு:

  • சிவ சுவாமி ஐயர் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் பணிபுரிந்த காலத்தில், கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் ரயத் நிவாரண நிதி போன்ற முக்கியமான பிரச்சினைகளை எடுத்து உரைத்தார்.
  • அவர் சுதேசி இயக்கத்தின் மூலம் உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் தன்னிறைவை நன்கு மேம்படுத்தினார்.
  • அவர் 1919 ஆம் ஆண்டில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை மிகவும் கடுமையாகக் கண்டித்தார்.
  • அவர் பெண் கல்விக்கான சீர்திருத்தங்களையும் ஆதரித்தார்.

கௌரவப் பட்டங்கள்:

  • சிவ சுவாமி ஐயருக்கு 1908 ஆம் ஆண்டு இந்தியப் பேரரசின் கம்பானியன் ஆப் ஆர்டர் விருது வழங்கப் பட்டது.
  • அவருக்கு 1912 ஆம் ஆண்டில், இந்தியாவின் கம்பானியன் ஆப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் விருது வழங்கப்பட்டது.
  • அவர் 1915 ஆம் ஆண்டில், இந்தியாவின் நைட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் என்ற பட்டம் பெற்றார்.

வெளியிடப்பட்டப் படைப்புகள்:

  • அவர் வெளியிடப்பட்டப் படைப்புகளில் 'பஞ்சாபில் இராணுவச் சட்ட நிர்வாகம்' (1919) மற்றும் 'சைமன் கமிஷன் அறிக்கை ஆய்வு' (1930) ஆகியவை அடங்கும்.
  • எஸ்.ஆர்.ரங்கநாதன் மற்றும் டபிள்யூ.சி.பெர்விக் சேயர்ஸ் ஆகியோருடன் இணைந்து ‘ஃபைவ் லாஸ் ஆஃப் லைப்ரரி சயின்ஸ்’ (1931) என்ற நூலினை எழுதியுள்ளார்.
  • அவர் மோகன் சிங் மேத்தாவுடன் இணைந்து ‘லார்ட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் இந்திய மாநிலங்கள்: இந்திய மாநிலங்களுடனான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உறவுகள் பற்றிய ஒரு ஆய்வு 1813-1823’ (1930) என்ற நூலையும் எழுதியுள்ளார்.
  • 1935 ஆம் ஆண்டில் அவரது படைப்பான ‘இந்து அறநெறி கொள்கைகளின் பரிணாமம்என்பது வெளியிடப் பட்டது.

மரபு:

  • அவரது நினைவாக, லேடி சிவ சுவாமி ஐயர் பெண்கள் பள்ளிக்கு அவர் பெயரிடப்பட்டது.

இறப்பு:

  • சர் பழமனேரி சுந்தரம் சிவ சுவாமி ஐயர் 1946 நவம்பர் 5 அன்று காலமானார்.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்