TNPSC Thervupettagam

தமிழ்நாட்டுக்கு வெளியே வ.உ.சி.யின் புகழைப் பரப்ப வேண்டும்: வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்

February 11 , 2024 342 days 209 0
  • ..சிதம்பரனாரைப் பற்றிய தன்னுடைய முதல் ஆக்கத்தை (‘..சி. கடிதங்கள்’) 1984இல் வெளியிட்டபோது, .இரா.வேங்கடாசலபதிக்கு வயது 17. ..சி. மீதான தீராக் காதலால், 40 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் ஆராய்ச்சியில், ..சி. இயலுக்குப் பல்வேறு நூல்கள் மூலம் பரந்த பங்களிப்பைச் சலபதி வழங்கியுள்ளார். அவற்றின் தொடர்ச்சியாக, அவர் எழுதியிருக்கும் ஆங்கில நூல், ‘Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire’. சுதேசிக் கப்பல் கம்பெனியின் வரலாற்றை இதுவரை வெளிவராத முற்றிலும் புதிய தகவல்களின் அடிப்படையில் அங்குலம் அங்குலமாக இந்நூல் பதிவுசெய்திருக்கிறது. ‘கப்பலோட்டிய தமிழன்என்கிற பதத்துக்கான உண்மையான பொருளை உலகுக்கு எடுத்துச்சொல்லும் நூலாக Swadeshi Steam அமைந்துள்ளது. சலபதியுடனான உரையாடலின் பகுதிகள்:

வ.உ.சி.யின் மறைவுக்கு 88 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் நூல் வந்துள்ளது. ‘வாழ்க்கை வரலாறு’ என்கிற பதத்தின் உண்மைப் பொருளில், வ.உ.சி. என்கிற பேராளுமைக்கு ஒரு நூல் எழுதப்படுவதற்குத் தமிழ்ச் சமூகம் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது; நாம் எங்கே தவறியிருக்கிறோம்

  • ..சி.யின் உற்ற தோழரான பரலி சு.நெல்லையப்பர் 1940இலேயே மிகச் சுருக்கமான ஒரு வரலாற்றை எழுதி 1943இல் வெளியிட்டார். இருப்பினும் .பொ.சி.தான் அவருடைய வரலாற்றை ஓரளவுக்கு விரிவாக எழுதி 1944இல் வெளியிட்டதோடு, தமிழ்நாடெங்கும் அவருடைய புகழைத் தம் பேச்சினாலும் எழுத்தினாலும் பரப்பினார். ‘கப்பலோட்டிய தமிழன்என்கிற சிறப்புப் பெயர் பரவலானதற்கு அவரே காரணம்.
  • அதே நேரம், ..சி.யின் வரலாறு விரிவாகவோ முழுமையாகவோ இன்றுவரை வரவில்லை என்பது உண்மைதான். விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் முழுமையான வரலாறுகளைத் தமிழ்ச் சமூகம் வேண்டி நிற்கவில்லை. புகழுரைகளே போதுமானவையாக இருக்கின்றன. இதன் காரணமாக விரிவான வாழ்க்கை வரலாறுகளுக்கான புத்தகச் சந்தையும் இல்லை. எனவே, எந்த எழுத்தாளரும் அந்த முயற்சியில் ஈடுபடும் சூழலும் இல்லை. கைநிறையச் சம்பளம் வாங்கும் கல்வித் துறையினர் பெரும்பாலோர் பாராமுகமாக இருக்கின்றனர். சமூக அறிவியல் துறைகள் தமிழ்நாட்டில் மிகப் பலவீனமாக இருப்பதும் ஒரு காரணம். தமிழாசிரியர்கள்தான் சில முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இப்போது நீங்கள் எழுதியிருக்கும் ‘சுதேசி ஸ்டீம்’ முழுமையான வரலாறா

  • இல்லை. இந்நூலை..சி., ..சி.யின் கப்பல் கம்பெனி ஆகிய இரண்டின் வரலாறுஎன்று ராமசந்திர குஹா குறிப்பிட்டிருந்தாலும், இது பிரிட்டிஷாருக்குப் போட்டியாக ..சி. நடத்திய நீராவிக் கப்பல் கம்பெனி முயற்சியின்மீது மட்டுமே குவிமையம் கொண்டுள்ளது. அதற்கு முன்பும் பின்புமான வாழ்க்கையை நொட்டோட்டமாக மட்டுமே சுட்டிக்காட்டுகின்றது. ..சி.யின் பெருவாழ்வு 500 பக்கங்களுக்குள் அடங்கிவிடுவதல்ல. பிற பகுதிகளையும் விரைவில் எழுத வேண்டும்.

பாரதியை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல வேண்டும் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். வ.உ.சி. நேரடியாக ஆங்கிலத்திலேயே வந்திருக்கிறார். இதன் அடுத்த கட்டம் என நீங்கள் கருதுவது என்ன

  • ..சி.யைப் பற்றி ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே உண்டு. தமிழரைப் பற்றிப் போதுமான அளவுக்கு வெளியுலகம் அறியவில்லை என்ற ஆதங்கம் நம் அனைவருக்குமே உண்டுதானே! தமிழரல்லாத என் அறிவுலக நண்பர்களிடம் ..சி.யின் கதையை இடைப்பிறவரலாகச் சொல்லும்போதெல்லாம் அவர்கள் மலைத்து நிற்பதைக் கவனித்திருக்கிறேன். எனவேதான் இந்த முறை முதலிலேயே ஆங்கிலத்தில் எழுத முடிவெடுத்தேன். கையெழுத்துப்படியைப் படித்த ராமசந்திர குஹா, நாத் ராகவன், சுனில் அம்ரித், சுனில் கில்நானி முதலான நண்பர்கள் காட்டிய உற்சாகம் மிகுந்த உத்வேகத்தைத் தந்தது. தமிழ்நாட்டுக்கு வெளியே இந்நூலை எடுத்துச்சென்று ..சி.யின் புகழைப் பரப்ப வேண்டும். ஆங்கிலத்திலேயே மேலும் இரண்டொரு நூல்களை ..சி. பற்றி எழுத எண்ணியிருக்கிறேன்.

கெடுவாய்ப்பாக வ.உ.சி.யின் வாழ்க்கை பற்றிய தகவல்கள் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கவில்லை. இத்தனை ஆண்டு காலத் தேடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வ.உசி.யின் வரலாற்றை எழுதுவதில் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்கள், சவால்கள் யாவை.

  • ஓரளவுக்கு உண்மைதான். ஆனால், தேடினால்தானே கிடைக்கும்? உரிய இடத்தில் தேட வேண்டும். உலகின் பல இடங்களில் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கைகள், அரசாணைகள், ஆளுநரின் ரகசிய கலந்தாலோசனைகள், சமகாலத்தவரின் நினைவுக் குறிப்புகள், கடிதக் கோப்புகள், பத்திரிகைச் செய்திகள் என விதவிதமான தரவுகளைத் திரட்டியுள்ளேன். உலகின் முதல் கப்பல் பதிவேட்டு நிறுவனமான லாயிட்ஸ் ரெஜிஸ்டர் ஆஃப் ஷிப்பிங்கில் தேடியதில், ..சி. வாங்கிய நீராவிக் கப்பல்கள் பற்றி ஏராளமான புதிய செய்திகளைக் கண்டெடுக்க முடிந்துள்ளது. இதுவரை இந்திய வரலாற்றாசிரியர்கள் இந்த ஆவணக் களஞ்சியத்தைப் பயன்கொண்டதில்லை என்றே கருதுகிறேன். ஆனால், துண்டுதுக்காணியாகக் கிடைத்த செய்திகளைக் கொண்டு ஒரு கோவையான சித்திரத்தை வழங்குவது பெரிய சவாலாக விளங்கியது.

‘சென்னப் பட்டணத்து உள்ளூர்க்காரர் இந்த விஷயத்தில் மிகவும் சிரத்தைக் குறைவுடன் இருப்பது பற்றிக் கல்கத்தா ‘வந்தே மாதரம்’ பத்திரிகை பரிஹஸித்துப் பழி கூறுகின்றது’ என பாரதி எழுதியிருக்கிறார். இந்தப் பின்னணியில் பிரிட்டிஷார் அல்லாமல் உள்ளிருந்தும் வ.உ.சி. எதிர்கொண்ட நெருக்கடிகள் என்னென்ன

  • இது ஒரு சிக்கலான கேள்வி. சமூகக்காரணங்கள் முதல் தனிமனித முரண்பாடுகள் வரை பலவற்றைச் சொல்லலாம். பிரிட்டிஷ்வணிக நலன்களும் அரசாட்சியும் கைகோத்துக்கொண்டது முதன்மையான காரணம். அன்றைய தமிழ்நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு முதலாளித்துவ வர்க்கம்உருவாகவில்லை. தூத்துக்குடி வணிகர்களை முதல் கட்டத்திலும், அடுத்து திருநெல்வேலி நகர வங்கிசார் வணிகர்களையும் மொத்தத்தில் நடுத்தர வர்க்கத்தையும் நம்பித் தொடங்கப்பட்ட கம்பெனி இது. எனவே, போதுமான முதலீடு திரளவில்லை. ..சி. செய்த பரப்புரையின் மூலமாகவே பாதி முதலீட்டுக்குமேல் திரட்டப்பட்டது. இதை விரிவாக்கும் முன்பே அரசாங்கத்தின் பகைமை வெளிப்பட்டுவிட்ட நிலையில்,முதலீடு செய்யப் பலர் அஞ்சினர். கப்பல் கம்பெனிமூழ்கிக் கொண்டிருந்த நிலையிலும் அதில் பெரும் முதலீட்டைச் செய்த பாண்டித்துரைத் தேவரையும் மண்டயம்குடும்பத்தினரையும் தனித்துச் சொல்ல வேண்டும்.
  • அடுத்த காரணம் உட்பகை. கப்பல் கம்பெனியின் நிர்வாகத்திலிருந்த பலர் மிதவாதப் போக்குடையவர்கள். ..சி.யின் தீவிர அரசியல் போக்கு அவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. கம்பெனியைத் தொடங்கி நிலைநிறுத்தியதும் ..சி.யைக் கழற்றிவிட அவர்கள் முயன்றனர். அடுத்ததாக, கப்பல் கம்பெனி என்பது பெரும் முதலீடு தேவைப்பட்ட, காலனியாதிக்கத்தோடு பிணைந்திருந்த சர்வதேச வணிகம். அதில் இந்தியர்களுக்கு முன் அனுவபம் இல்லை. ஆனால், கடலில் இறங்கினால்தானே நீச்சல் பயில முடியும்? அதற்கு முன்பாகவே ..சி.யின் லட்சியக் கனவு முறிக்கப்பட்டது. சுதேசிக் கப்பல் கம்பெனி என்பது தோல்வியே என்றாலும், அது ஒரு மகத்தான தோல்வி. ..சி. ஏந்தியிருந்தது யானை பிழைத்த வேல். முயல் வேட்டைக்கே அஞ்சுபவர்களுக்கு அவருடைய சாதனை புரியாது.

வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாளைவிடவும் (35ஆண்டுகள்) அதிக காலம் நீங்கள் வ.உ.சி.யுடன் செலவிட்டுள்ளீர்கள்

  • (சிரிக்கிறார்.) ..சி.யின் மகன் சுப்பிரமணியத்திடம் அப்பாவைப் பற்றி அம்மாவிடம் பேசியிருக்கிறார்களா என்று ஒருமுறை கேட்டபோது, தம்முடைய கஷ்டங்களைப் பற்றி எண்ணவே அம்மாவுக்கு நேரமில்லை; பழைய பாடுகளை எப்படிக் கேட்பது என்றார். பதின்மூன்று வயதில் திருமணம். பதினெட்டு வயதுக்குள் இரண்டு குழந்தைகள். அதற்கடுத்த ஆண்டு கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. சிறையிலிருந்த கணவருக்கான சட்டப் போராட்டங்கள். பணம் திரட்டல். செல்வாக்கான குடும்பம் வறுமையில் வீழ்ந்தது. தமது கணவர் சிறையில் இருந்தபொழுது, ‘எனது மானம் கெடாதகூலி வேலைகள் செய்யவும் தயார்என்று குமைந்த மீனாட்சிஅம்மாளின் வாழ்க்கையைத் தனியே எழுத வேண்டும்.

பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு, வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அனுபவம் எந்த அளவுக்கு உதவுகிறது?

  • ..சி. தேடலின் வழியாகத்தான் நான் ஆராய்ச்சியாளன் ஆனேன். 14 வயது முதல் அதன் மூலமாகவே எனக்கு வெளியுலகத் தொடர்பு ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிக்க வேண்டும் என்று 1984இல் கனவு கண்டேன். ஆனால் தேசிய இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம், தொழிலாளர் இயக்கம், சைவ சீர்திருத்தம், பிராமணரல்லாதார் இயக்கம் என 20ஆம் நூற்றாண்டின் அனைத்துப் பொது இயக்கங்களிலும் ..சி. தொடர்புகொண்டிருந்தார். அவற்றைப் புரிந்துகொண்டால்தான் அவருடைய வரலாற்றைப் பகுத்தாய்ந்து எழுத முடியும் என்பதை உணர்ந்தேன். அந்த முயற்சியே வரலாற்று ஆய்வுக்குள் என்னைத் தள்ளியது. ..சி.யைத் தேடித்தான் முதன்முதலாக, அக்டோபர் 1982இல் பெரியார் திடலுக்குள் நுழைந்தேன். பாரதி, பெரியார், புதுமைப்பித்தன், .வே.சா. எனத் தமிழ்ச் சான்றோர் அனைவருமே என் வாழ்க்கையில் ..சி. வழியாகத்தான் நுழைந்தனர்.
  • பெரியாரின் வாழ்வு நெடுவாழ்வு. பெரும் அரசியல் தாக்கத்தைத் தொடர்ந்து செலுத்திவருவது. பென்னம் பெரிய வரலாறாக அது நீண்டுகொண்டிருக்கிறது. எடுத்த காரியம் யாவிலும் வெற்றி அருள்வாள் தமிழன்னை என்கிற முழு நம்பிக்கை எனக்குண்டு.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்