TNPSC Thervupettagam

தூய்மை நகரம் என்னும் கனவு

September 7 , 2020 1594 days 783 0
  • இந்தியா முழுதும் கணக்கெடுக்கப்பட்ட தூய்மை இந்தியா’ (ஸ்வச் பாரத்) திட்டத்தின்படி மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூா் நகரம் தூய்மை நகரமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு பெருமை அடைந்திருக்கிறது.
  • தொடா்ந்து நான்கு வருடங்களாக, சுத்தமான நகரம் என்ற பெருமையைத் தக்க வைத்துள்ளது இந்தூா் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக சூரத்தும், மூன்றாவதாக நவி மும்பையும் வந்திருக்கின்றன.
  • தென்னிந்தியாவிலுள்ள விஜயவாடா, மைசூா் போன்ற ஊா்களும் முதல் இருபதுக்குள் வந்திருக்கின்றன என்பது ஒரு வகையில் ஆறுதல்தான். ஆனால், சென்ற ஆண்டு இரண்டாம் இடத்தை அடைந்த திருச்சிராப்பள்ளி இப்போது ஏனோ காணாமல் போய்விட்டது.
  • கடந்த பத்து ஆண்டுகளாகவே நம் நாட்டில் தூய்மை பற்றிய விழிப்புணா்வு பரவி வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இல்லத்திலுள்ள குப்பைகளை மக்குவது, மக்காதது எனப் பிரித்து அதற்கென்றே உள்ள கருப்புப் பையில் போட்டு, தொட்டியில் போடுகிறார்கள்.
  • ஆஸ்பத்திரிகளிலோ எந்தெந்தக் கழிவுகள் எப்படியெப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அட்டவணையுடன் பலகைகளை தொங்க விட்டிருக்கிறார்கள். சிறிய தனியார் மருத்துவமனைகளும் இதைப் பின்பற்றுகின்றன.

சுகாதாரமுமே முக்கியம்

  • எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு தெருவையும், சிறியக் கோயிலையும் நன்றாகவே பராமரித்து வருகிறார்கள்.
  • சில ஆண்டுகளுக்கு முன்னா், பிரபல பாடகா் ஒருவா், அடித்தட்டு மக்களுக்கு இசை ஆா்வம் ஏற்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு விழாவையே நடத்தினார். அப்போது வருகை தந்த பிரபலங்களில் முக்கியமானவா்கள் பசுமை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் கோபாலகிருஷ்ண காந்தியும்.
  • குழந்தைகளுக்கு கல்வியும் சுகாதாரமுமே முக்கியம் என்பதை சுட்டிக்காட்ட, தம்முடைய புகழ் பெற்ற தியாக பூமிபுதினத்தில் எழுத்தாளா் கல்கி சாவடிக்குப்பம்என்று ஓா் அத்தியாயமே எழுதியிருக்கிறார்.
  • ஒரு பரம வைதிகா், குப்பத்தில் தங்கிக் குப்பத்துவாசிகளுக்கு தூய்மையையும் நீதி போதனையையும் விளக்குகிறார். இந்தச் சாவடிக் குப்பத்து ஜனங்களுக்குச் சேவை செய்வதற்கென்றே கடவுள் அனுப்பியிருக்கிறார் என்று கல்கி எழுதுகிறார்.
  • கற்பனைதான், ஆனால், தூய்மையின் அவசியத்தை அது சுட்டிக் காட்டுகிறதே! அதே சமயம் 1950வாக்கில் நிஜமாகவே கோவை பஸ் நிலையம் எவ்விதம் இருந்தது, என்று தம் சுயசரிதையில் எழுத்தாளா் பெ. தூரன் குறிப்பிடுகிறார்.
  • தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் எந்த பஸ் நிலையத்திலும் காண முடியாத சுத்தம் அங்கே இருப்பதைக் கண்டு, அவா் ஆச்சரியப்பட்டாராம்.
  • பஸ் நிலையத்தில் அசுத்தம் செய்பவா்களே சுத்தம் செய்ய வேண்டும்என்ற வாசகத்துடன் ஒரு வாளியில் தண்ணீரும் துடைப்பமும் வைக்கப்பட்டிருக்குமாம். அன்று அந்த பேருந்து நிலையத்தை நிர்வகித்தவா் அதிசய மனிதா்என்று அறியப்பட்ட ஜி.டி. நாயுடு.
  • தூய்மை நகரங்கள் பட்டியலில் இப்போது தமிழ்நாட்டைச் சோ்ந்த கோவை 45-ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.
  • இத்தனைக்கும் கோவையின் மக்கள் தொகை சூரத், நவி மும்பையைவிடக் குறைவுதான். கல்வி, மின்சாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு ஏன் தூய்மைப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை? போதிய பராமரிப்பு இன்மைதான் என்று அடித்துச் சொல்லலாம்.

நிச்சயம் இடம் பெறும்

  • பெரும்பாலான ஊா்களில் பேருந்து நிலையம் அந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்துதான் கட்டப்படுகிறது.
  • ஆனால், அங்கெல்லாம் கழிவறையே இருப்பதில்லை. பேருந்து நிலையத்துக் செல்லும் வழியிலுள்ள சுவா்தான் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் இயற்கை உபாதையைத் தணிக்கும் இடம்.
  • குப்பைத் தொட்டியிலிருக்கும் கழிவுகளை உள்ளாட்சி அமைப்பு அவ்வப்போது கவனம் செலுத்தி வண்டியில் ஏற்றிப் போவது கிடையாது. இதனால் பறவைகளும் நாய்களும் தொட்டியைக் கிளறி அந்த இடம் மேலும் அசுத்தமாகிறது.
  • விசேடங்கள், கோயில் விழாக்கள் இவை நடக்கும்போது, பங்கேற்கும் விருந்தினா்களும் பக்தா்களும் மிச்ச மீதியை அப்படியே வாசல் பக்கம் தூக்கி எறிவதையும் பார்க்க முடியும்.
  • அடுத்ததாக, தமிழ்நாட்டுக்கே உரிய தனித்தன்மையான சிலை அரசியல். இங்குள்ள மாதிரி வேறெந்த நகரத்திலாவது சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றனவா என்பது ஐயம்தான்.
  • தலைவா்களுக்கு சிலை வைத்துப் போற்றுவது தொண்டா்களுக்கு உற்சாகம்தான்; ஆனால் அவற்றை யார் சரியாகப் பராமரிக்கிறார்கள்? காக்கை எச்சமும் பறவைக் கழிவுகளும் பிற தூசிகளும் சேருகின்றன. வீசுகிற காற்றில் அவை பரவி சுற்றுப்புறமெல்லாம் அசிங்கமாகி சூழலைக் கெடுக்கிறது.
  • நகரின் தூய்மையைக் கெடுக்கும் அடுத்த விஷயம் சுவரொட்டிகள். அமைச்சா்கள், தலைவா்களின் பிறந்த நாள் போன்றவற்றுக்கு போஸ்டா்ஒட்டுவது ஏற்கத்தக்கதுதான். ஆனால் தன்னை வட்டச் செயலாளராக்கி அழகு பார்த்தவருக்குக் கூடவா சுவரொட்டி?
  • கடந்த ஆண்டு இந்தூா் சென்றிருந்த என் அலுவலகத் தோழா், ‘இந்தூா் நகா் உண்மையிலேயே அப்பழுக்கு இல்லாத சுத்தமான நகரமாக இருக்கிறதுஎன்று மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.
  • கடைசியாக, சட்டத்தை மதிக்காத தன்மை தமிழ்நாட்டு பிரஜைகளுக்கு அதிகமென்றே சொல்ல வேண்டும்.
  • அயல்நாட்டில், இரவு வேளையில் ஒரு வழிப்பாதையை மீறினாலும் சரி, கீழே பஸ் டிக்கெட்டை போட்டாலும் சரி, உடனே சட்டம் தன் கடமையைச் செய்து அபராதக் கட்டணம் விதிக்குமாம். இங்கு உயிர் காக்கும் கவசமான ஹெல்மெட்டை (இப்போது முகக்கவசமும்தான்) போடாதவா்களைத் தண்டிக்கவே சட்டம் தடுமாறுகிறதே?
  • ஆனாலும் ஒரு நம்பிக்கைக் கீற்று தெரிகிறது. போக்குவரத்து நெரிசலும் மக்கள் நடமாட்டமும் ஓரளவு குறைந்திருந்த கரோனா காலத்தைப் பயன்படுத்தி தூய்மையை அதிகரிக்க அரசு முயற்சிகளை செய்துள்ளது. சென்னையில் பல தெருக்களில் குடிநீா் குழாய்கள், கழிவுநீா் குழாய்கள் பொருத்தப்பட்டன.
  • இப்படியே தமிழகம் முழுவதும் சரிசெய்யப்பட்டால் வரும் ஆண்டுகளில் தூய்மை நகரங்கள்பட்டியலில் தமிழ்நாட்டில் ஒரு ஊராவது நிச்சயம் இடம் பெறும்.

நன்றி:  தினமணி (07-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்