TNPSC Thervupettagam

தொடர்ந்து மிரட்டும் வெப்பநிலை உயர்வு

May 18 , 2024 228 days 175 0
  • கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் உலக வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. வரலாற்றிலேயே மிக வெப்பமான ஏப்ரல் மாதமாக 2024 ஏப்ரல் இருக்கிறது. கடந்த 11 மாதங்கள் இதுவரையில் பதிவான வெப்பமான மாதங்களாக இருந்துவருகின்றன. இது காலநிலை மாற்றத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
  • ஜூன் 2023 முதல் ஒவ்வொரு மாதமும், முந்தைய ஆண்டுகளின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில், வெப்பமான மாதங்களாக இருந்து வருகின்றன. 2024 ஏப்ரல் மாதத்துடன் முடிந்த 12 மாத காலத்தில் பதிவான உலகின் சராசரி வெப்பநிலை 1850-1900 தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தின் சராசரியைவிட 1.61 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
  • அதே போல பல மாதங்களாக கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் உயர்ந்துவருகிறது. இந்த மாற்றங்கள், இயற்கையான காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகள் ஒரு முக்கிய புள்ளியைத் தூண்டிவிட்டுவிட்டனவா என்பதை அறிவியலாளர்கள் ஆராய வழிவகுத்துள்ளது.
  • புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் வெளிவரும் பசுங்குடில் வாயுக்களே காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம். சமீபத்திய மாதங்களில், கிழக்கு பசிபிக் பெருங் கடலில் மேற்பரப்பு நீரை வெப்பமாக்கும் எல் நினோ நிகழ்வும் வெப்பநிலை உயர்வுக்குக் காரணம்.
  • “புவி வெப்பமடைதலை தொழிற் புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்குள் கட்டுப்படுத்தும் 2015 பாரிஸ் உடன்படிக் கையின் இலக்கை மீறும் அபாயத்தில் உலகம் உள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வைத்திருப்பது, பசுங்குடில் வாயு வெளியீட்டு அளவைக் குறைப்பது பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்” என்கிறார் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ஹேலி ஃபோலர்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்