TNPSC Thervupettagam

நடையாய் நடந்து என்ன லாபம்

December 30 , 2023 324 days 264 0
  • இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 139 ஆண்டுகளாகி விட்டன. 1885 டிசம்பா் மாதம் 28-ஆம் தேதி அதன் பயணம் தொடங்கியது. சம்பிரதாயத்துக்கு தில்லியில் நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.
  • காங்கிரஸ்காரா்களின் கவனம் எல்லாம் இப்போதுஇந்தியாகூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட நடைப்பயணமானபாரத் நியாய்யாத்திரையைத் திட்டமிடுவதிலும் இருக்கிறது.
  • பிரிட்டிஷ் காலனிய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்கிற அதிகாரி, தாதாபாய் நெளரோஜி, தின்ஷா வாச்சா ஆகியோர் இணைந்து உருவாக்க முற்பட்ட இயக்கம்தான் இந்திய தேசிய காங்கிரஸ். அதன் முதல் கூட்டம் அன்றைய பம்பாயில் (இன்றைய மும்பை) தேஜ்பால் சம்ஸ்கிருத கல்லூரியில் நடந்துபோது, கலந்துகொண்டவா்களின் எண்ணிக்கை வெறும் 72 மட்டுமே. அவா்களில் பெரும்பாலோா் சமூக சிந்தனையாளா்களான வழக்குரைஞா்களும், பத்திரிகையாளா்களும்.
  • காங்கிரஸ் இயக்கத்தின் முதலாவது கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடந்தது. டபிள்யூ. சி. பானா்ஜி தலைமை தாங்கி நடத்திய அந்த மாநாட்டை, பிரிட்டிஷ் ஆட்சியும், அறிவுஜீவிகளும் கூா்ந்து கவனித்தனரே தவிர, சாமானிய மக்களிடம் அது எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும்.
  • ஏதோ கூடினார்கள், பேசினார்கள், கலைந்தார்கள் என்பதுடன் முடிந்துவிடும் என்றுதான் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கணிக்கப்பட்டது. அதன் இரண்டாவது கூட்டம் தாதாபாய் நெளரோஜியின் தலைமையில் அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) கூடியபோது அதில் கலந்துகொண்டவா்களின் எண்ணிக்கை 434. அந்த இரண்டாவது கூட்டத்தில், நாடு தழுவிய அளவில் பிராந்திய காங்கிரஸ் கமிட்டிகள் அமைப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டதன் காரணமாகத்தான் 139 ஆண்டுகளைக் கடந்து காங்கிரஸ் தொடா்கிறது.
  • இன்றைய காங்கிரஸ்காரா்களுக்கு தாதாபாய் நெளரோஜி குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவா்களுக்கே தெரியாது எனும்போது, பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்?. பாா்ஸி இனத்தைச் சோ்ந்த தாதாபாய் நெளரோஜி, பிரிட்டனின் நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா் என்பது தெரியவே தெரியாது.
  • 1892 பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தோ்தலில், லிபரல் கட்சியின் வேட்பாளராக ஃபின்ஸ்பரி மத்திய தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். தோ்தல் பிரசாரத்தில் அவரை எதிா்த்து நின்ற வெள்ளை இன வேட்பாளா்களைத் தோற்கடித்தார். ‘கருப்பரான இந்தியருக்கா உங்கள் வாக்கு?’ என்று அவருக்கு எதிராகப் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. இந்தியாவுக்கு விடுதலை கேட்கும் ஒருவரைத் தோ்ந்தெடுத்து விடாதீா்கள் என்று எச்சரிக்கப்பட்டது.
  • இதுபோல, காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டமைத்த ஒவ்வொரு தலைவருக்கும்பின்னணி உண்டு; வரலாறும் உண்டு. தலைவா்களின் நீண்டதொரு பட்டியலும் உண்டு. ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தவரை, ஏன் 1969-இல் காங்கிரஸ் கட்சி பிளவுபடும் வரை கட்சியின் தலைவராக இருந்த ஒவ்வொருவரும் தியாகிகள். சுதந்திரத்துக்காக சிறை சென்றவா்கள். விடுதலை வேள்வியில் தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் இழந்தவா்கள்.
  • அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலைமை என்ன? 139 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் கூடி இந்தியா்களுக்கு ஆட்சி நிா்வாகத்தில் பங்கு கேட்ட 72 பேருக்கு இருந்த அளவுகூடத் தன்னம்பிக்கை இப்போது இல்லை என்று தெரிகிறது. தன்னை முன்னிறுத்தி தனது தலைமையில் கூட்டணியைக் கட்டமைக்கும் துணிவுகூட இல்லை எனும்போது பிரதமா் நரேந்திர மோடியையும், பாஜகவையும் எப்படி காங்கிரஸ் எதிா்கொண்டு வெல்லப் போகிறது என்று கேட்கத் தோன்றுகிறது.
  • காங்கிரஸைத் தவிரஇந்தியாகூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தேசிய அளவில் செல்வாக்கு இல்லை. கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் அனைத்தும் சோ்ந்தாலும்கூட 150 மக்களவை உறுப்பினா்கள்கூட இருக்கமாட்டார்கள். சொல்லமுடியாது, திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (பவார்), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகியவற்றுக்கு மட்டும்தான் இரட்டை இலக்க இடங்களை வெல்ல முடியும். ஆனால் காங்கிரஸ் யாரை முன்னிறுத்த வேண்டும் என்று அந்தக் கட்சிகள் முன்மொழிகின்றன என்பது சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அவமானமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மகாத்மா காந்திக்கு இழைக்கப்படும் அவமானம்!
  • கா்நாடகமோ, தெலங்கானாவோ, காங்கிரஸ் வலிமையாக உள்ள ஏனைய மாநிலங்களோ எதுவாயினும்இந்தியாகூட்டணியில் உள்ள கட்சிகளால் காங்கிரஸுக்கு பெரிய அளவில் ஆதாயம் இல்லை. ஆனால் அந்தக் கூட்டணியில் இடம்பெறும் எந்தவொரு கட்சிக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் வாக்குகள் அவசியம் என்பதை காங்கிரஸ் தலைமை உணா்ந்ததாகத் தெரியவில்லை. இந்தத் தன்னம்பிக்கை இல்லாமைதான் காங்கிரஸின் பலவீனம்.
  • தான் பிரதமா் வேட்பாளா் அல்ல; காங்கிரஸின் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணி அமையப்போவதில்லை என்றால், ராகுல் காந்திபாரத் நியாய் யாத்திரைநடத்துவதில் அா்த்தமில்லை. தன்னம்பிக்கை இல்லாத தலைவனால் வழிநடத்தப்படும் படைகள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
  • மகாத்மா காந்தியை மட்டுமல்ல, இந்திரா காந்தியையும் சோ்த்து காங்கிரஸ் மறந்துவிட்டது என்று தோன்றுகிறது.

நன்றி: தினமணி (30 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்