TNPSC Thervupettagam

நம்பிக்கையில்லா தீர்மானம்

August 23 , 2023 507 days 4022 0

(For English version to this, please click here)

நம்பிக்கையில்லா தீர்மானம்

  • அரசின் பெரும்பான்மை குறித்தோ, அதன் ஆட்சி செய்யும் திறனிலோ நம்பிக்கை இழக்கும் போது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது வழக்கம் ஆகும்.
  • அதாவது, இந்தத் தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் அந்த அரசைச் சவாலுக்கு உட்படுத்துவது என்று பொருள் கொள்ளலாம்.
  • நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது மக்களவையில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக அவர்களின் செயல்பாட்டை எதிர்த்து, மக்களவையின்  நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 198 என்பதின் கீழ் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும்  ஒரு முறையான கோரிக்கையாகும்.
  • இத்தீர்மானத்தின் படி, ஆளுங்கட்சியினர் தீர்மானம்  நிறைவேற்றப்பட்ட பிறகு,  தனது  பெரும்பான்மையை மக்களவையில்  நிரூபிக்கத் தவறினால், அக்கட்சி பதவி விலக நேரிடும்.
  • நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது மக்களவையில் அமைச்சரவைக்கு எதிராகப் பாயக் கூடிய எதிர்க்கட்சிகளின் கையிலுள்ள  ஒரு முக்கியமான ஆயுதமாகும்.

  • மக்களவையில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களாவது ஆதரவு தெரிவித்தால் தான், நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்குத் தகுதி பெறும்.
  • இத்தீர்மானமானது ஆளுங்கட்சியினரின் குறைபாடுகள் அல்லது அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக முழு அமைச்சரவையும்  தலைமைப் பொறுப்பினை ஆற்றத் தகுதியற்றவர்கள் என்று  தெரிவிக்கிறது.  
  • மக்களவையில் இந்தத் தீர்மானத்தினை எவ்வித முன்னறிவிப்புமின்றி  கொண்டு வர முடியும்.
  • மக்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் பிரிவு 198 என்பது, மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவை ஏற்றுக் கொள்ளும் முன்னதாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கோருவதற்கான காரணத்தைக் கூற வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடுகிறது.

  • மக்களவை என்பது அரசியலமைப்பின் சரத்து 75 என்பதின் படி, அமைச்சர்களின் மீதான முதன்மை பொறுப்பு வாய்ந்த அமைப்பாக உள்ளது.
  • பாராளுமன்ற கீழவையானதுஅதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் இந்த அமைச்சரவையை ஆதரிக்கும் வரை, அது ஆட்சி அதிகாரத்தைப் பெற்று  ஆட்சியில் தொடரும்.
  • மக்களவையில் குறைந்தது 51% உறுப்பினர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  • நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்த பின்னர் தனது பெரும்பான்மையை மெய்ப்பிக்குமாறு ஆளும்கட்சி அரசாங்கத்தை  எதிர்க்கட்சிகள் கோரலாம் அல்லது அவ்வாறு செய்ய ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை அறிமுகப் படுத்த வேண்டுமென்றும் கோரலாம்.
  • முக்கியமானப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அவ்வப்போது  நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் அறிமுகப் படுத்துகின்றன.
  • சமீபத்தில், நிதி மசோதா விவாதம்  ஏதுமின்றி, கில்லட்டின் என்ற விதிமுறையினை பயன்படுத்தி நேரடியாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • மக்களவையின் வரலாற்றில் முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
  • தோடு மட்டுமல்லாமல், மேலும் பல்வேறு முக்கிய முடிவுகளும்  நாடாளுமன்றத்தின் பரிசீலனையின்றி எடுக்கப் பட்டுள்ளன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விதிமுறைகள்

  • மக்களவை நடத்தை விதிமுறையான 198 என்பது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கான விதிமுறைகளைக் குறிப்பிடுகிறது.
  • அதன்படி மக்களவையில் எந்த உறுப்பினரும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்கலாம்.
  • ஆனால், அந்தத் தீர்மானத்துக்குக் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
  • அந்தத் தீர்மானம் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும்.
  • தீர்மானத்தைக் கொண்டு வரும் உறுப்பினரின் கையெழுத்து அதில் இருக்க வேண்டும்.
  • தீர்மானத்தை அவையின் அமர்வு நாளில் மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • காலை 10 மணிக்குள்ளாகத் தீர்மானத்தின் எழுத்துப் பூர்வ அறிவிப்பையும் அந்த உறுப்பினர் வழங்க வேண்டும்.
  • அதை அவைத் தலைவர் அவையில் வாசிப்பார்.
  • அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பிறகு, அந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்பதா, இல்லையா என்பது குறித்து அவைத் தலைவர் முடிவு செய்வார்.
  • தீர்மானத்தை அவைத் தலைவர் ஏற்றுக் கொண்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கான தேதி, நேரம் முடிவு செய்யப் படும்.

வரலாற்றுப் பின்னணி

  • மக்களவையில் இதுவரை 28 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • 1963 ஆம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு அரசுக்கு எதிராக முதல் முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.
  • இது ஜேபி கிருபாளினியால் கொண்டு வரப் பட்டது.
  • 1964-1975 காலகட்டத்தில் 15 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
  • இவற்றில் லால் பகதூர் சாஸ்திரி அரசுக்கு எதிராக 3 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுத் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இந்திரா காந்தி அரசுக்கு எதிராக 12 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டன.

  • 1977-79 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த மொரார்ஜி தேசாய் இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டார்.
  • இதில் அவர் முதல் முறை வெற்றி பெற்றார்,
  • ஆனால் இரண்டாவது முறை போதுமான ஆதரவு வாக்குகளைத் திரட்ட முடியாததால், அவர் பதவி விலக நேர்ந்தது.
  • 1981-1982 ஆம் ஆண்டு மட்டும் இந்திரா காந்தி 3 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு தோற்கடித்தார்.
  • 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஒரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு தோற்கடித்தார்.
  • 1991 முதல் 1996 வரை பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ் 3 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு தோற்கடித்தார்.
  • 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை ம் தோல்வியில் முடிந்தது.
  • 2014 முதல் தற்போது வரை பதவியில் இருக்கும் நரேந்திர மோடி முதல் முறையாக 2018 ஆம் ஆண்டும், பிறகு இரண்டாவது முறையாக 2023 ஆம் ஆண்டும் என இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டு தோற்கடித்தார்.
  • குறுகிய காலமே பிரதமர்களாக இருந்த வி.பி.சிங் (1989-90), தேவ கவுடா (1996-97), வாஜ்பாய் (1998-99) ஆகியோர் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்து அதில் தோல்வியடைந்தனர்.
  • இதனால் அவர்கள் பதவி விலகினர்.
  • 2008 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்து அதில் வெற்றி பெற்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகள்

  • மக்களவையின் நடைமுறை விதி 198 என்பதின் கீழ் இந்த நடைமுறையானது குறிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விதிமுறைகள் எதுவும் குறிப்பிடப் படவில்லை.
  • ஆனால், 75வது சரத்து எனது, அமைச்சரவைக் குழு மக்களவைக்கு கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

  • நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் மட்டுமே அதுவும் எதிர்கட்சிகளால் மட்டுமே கொண்டு வர இயலும்.
  • குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களாவது மக்களவையில் இத்தீர்மானத்தை ஆதரிக்கும் போது அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளலாம்.
  • மக்களவை நடைமுறை விதி 198(1)(a) என்பதின் படி சபாநாயகர் அழைப்பு விடுத்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை உருவாக்குவதற்கான ஒரு அறிக்கையை உறுப்பினர் தாக்கல் செய்ய வேண்டும்.
  • மக்களவை நடைமுறை விதி 198(1)(b) என்பதின் படிஅத்தகைய கோரிக்கையை விடுக்கும் உறுப்பினர், அவர் அந்தத் தீர்மானத்தை எழுத்துப் பூர்வமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றத் திட்டமிட்ட நாளில் காலை 10 மணிக்குள் முன்மொழிய வேண்டும்.
  • பின்பு முன்மொழிந்த அதே நாளில் காலை 10 மணிக்குள் மக்களவையின் பொதுச் செயலாளரிடம் இந்த கோரிக்கையை அவர் அளிக்க வேண்டும்.
  • 198(2) விதி 198(2) என்பதின் படி, அந்தத் தீர்மானம் முறையாக உள்ளது என்று சபாநாயகர் கருதினால், அவர் அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபையில் வாசித்து, அதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்களிடத்தில் அதற்கு ஆதரவு தெரிவிக்க எழுந்து நிற்குமாறு வேண்டுகோள் விடுப்பார்.
  • குறைந்த பட்சம் 50 உறுப்பினர்களாவது அந்தத் தீர்மானத்தை ஆதரித்தால், மட்டுமே அந்த மசோதாவானது அவையில் தாக்கல் செய்யப்படும்.
  • இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் இந்தத் தீர்மானமானது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  • விதி 198(3) என்பதிஇன் படி, இதற்கு அனுமதி வழங்கப்பட்டால், சபாநாயகர் இந்தத் தீர்மானத்தின் விவாதத்திற்கு வேண்டி ஒரு நாள் / ஒரு நாளின் ஒரு பகுதியை / நாட்களை ஒதுக்கலாம்.
  • அவையின் செயல்பாடுகளின் நிலையைக் கருத்தில் கொண்ட பிறகே நேரமானது ஒதுக்கீடு செய்யப்படும்.
  • விதி 198(4) என்பதின்படி, சபாநாயகர், அதற்காக ஒதுக்கப்பட்ட நாளில் நிர்ணயிக்கப் பட்ட நேரத்தில், இத்தீர்மானம் மீதான சபையின் முடிவைத் தீர்மானிக்கத் தேவையான ஒவ்வொரு கேள்வியையும் கேட்க வேண்டும்.
  • விதி 198(5) என்பதின் படி சபாநாயகர் விவாதத்திற்கான காலக்கெடுவினை நிர்ணயம் செய்யலாம்.
  • சபையில் வாக்கெடுப்புக்கு பிறகு அந்தத் தீர்மானம் வெற்றி பெற்றால், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகக் கருதப் பட்டு, அந்தச் சூழலில், அரசு பதவி விலக நேரிடும்.
  • இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டால், அரசு எந்தச் சிக்கலும் இல்லாமல் ஆட்சியைத் தொடரும்.

நம்பிக்கைத் தீர்மானம் மீதான சிறப்பு விதிகள்

  • நம்பிக்கைத் தீர்மானம் மீதான சிறப்பு விதிகள் ஏதும் அரசியலமைப்பில் குறிப்பிடப் பட வில்லை.
  • மக்களவை நடைமுறை விதி 184 என்பதின் கீழ் இது ஒரு சாதாரண தீர்மானமாக மேற்கொள்ளப்படும்.
  • பொதுத் தேர்தலிற்குப் பிறகு எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் குடியரசுத் தலைவரே பிரதமரை நியமனம் செய்யலாம்.
  • ந்தப் பிரதமர் ஒரு நம்பிக்கை தீர்மானத்தின் மூலம் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
  • எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின்  எழுத்துப் பூர்வமான ஆதரவு அடிப்படையில் அடல் பிஹாரி வாஜ்பாயை பிரதமராக, குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் நியமித்தார்.
  • ஆனால் அவர் 10 நாட்களுக்குள்ளாக மக்களவையின் நம்பிக்கையினைப் பெறுமாறு வாஜ்பாய்க்கு உத்தரவிட்டார்.
  • 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலிலிருந்து, பல முறை நம்பிக்கையில்லா தீர்மானமானது அவையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது
  • அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான இந்தப் பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
  • இருந்தாதாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில சந்தர்ப்பங்களும் உள்ளன.
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப் பற்றி விவாதிப்பதற்கும்  அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்கும் எதிர்க்கட்சிகள் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன.
  • பாராளுமன்ற நடைமுறைகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல்பாடாகும்.
  • நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களின்  செயல்பாடு என்பது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பை சுட்டிக் காட்டுகிறது.
  • ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாது என்பது விதி ஆகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்