TNPSC Thervupettagam

நவீன இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - VII

November 27 , 2019 1682 days 7323 0

பாதுகாப்புத்  தொழில்நுட்பம் - II

K வகை ஏவுகணைத் தொகுதி
  • K வகை ஏவுகணைத் தொகுதியானது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஏவுகணை (submarine-launched ballistic missile - SLBM) ஆகும்.
  • அணுசக்தித் தடுப்புத் திறன் கொண்ட இவை இலக்கை இரண்டாவது முறையாகத் திருப்பித் தாக்கும் திறன்களைக் கொண்டவையாக  உருவாக்கப் படுகின்றன.
  • இத்தொகுதியில் மூன்று வகைகள் உள்ளன: K-15 (சாகரிகா), K-4 மற்றும் K-5.
  • இவற்றில் K-15 வகையானது 750 கி.மீ. வரம்பு உடையது.
  • K-4 ஏவுகணையானது இரண்டு துணை வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று 3,500 கி.மீ வரம்பு கொண்டது. மற்றொன்று 5,000 கி.மீ வரம்பு உடையது.
  • K-5 வகை ஏவுகணையானது 6,000 கி. மீ வரம்பில் உருவாக்கப் பட்டு வருகின்றது.
  • K வகை ஏவுகணைக் தொகுதியானது அணுசக்தியால் இயங்கும் அரிஹந்த் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப் படுகின்றது.
பிரம்மோஸ் II
  • இது ஒரு அதி மீயொலி ஏவுகணை ஆகும். இது பிரம்மோஸ் தொகுதியின் இரண்டாவது ஏவுகணை ஆகும்.
  • இது 290 கி.மீ தூர வரம்பையும், மாக் 7 என்ற அளவில் வேகத்தையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இது ராம்ஜெட்டுக்குப் பதிலாக ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மூலம் இயக்கப் படும்.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defense Research and Development Organization - DRDO) “A-SAT”  என்று அழைக்கப் படுகின்ற செயற்கைக்கோள் எதிர்ப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கியது.
  • இது புவி தாழ் சுற்றுவட்டப் பாதையில் செயல்பாட்டில் உள்ள ஒரு செயற்கைக் கோளை 2019 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியன்று வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

  • இது “மிஷன் சக்தி” என்று அழைக்கப் பட்டது.
  • இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்து இத்தகைய தொழில்நுட்பம் உள்ள நான்காவது நாடாக இந்தியா ஆனது.
  • இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 300 கி.மீ தூரத்தில் சுற்றிக் கொண்டிருந்த, முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு இலக்கான இந்திய செயற்கைக் கோளான மைக்ரோசாட்-R ஐத் தாக்கி அழித்தது.
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு
  • இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பாதுகாப்பு (Ballistic Missile Defense - BMD) அமைப்பின் வளர்ச்சியானது கார்கில் போருக்குப் பிறகு 1999 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • பாகிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படும் அணுசக்தித் தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் பாதுகாப்பை அதிகரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

  • இந்தியாவின் ‘முதலில் அணு ஆயுதம் பயன்படுத்துவது  இல்லை’ என்ற கொள்கையைப் பின்பற்றுவதில் இது முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைக் கொண்டுள்ளது.
  • குறைந்த உயரம் மற்றும் அதி-உயரம் கொண்ட இடைமறிப்பு ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டு ‘இரும்பு குவிமாடம்’ அமைப்பைக் கொண்டுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பாதுகாப்பைப் பயன்படுத்த இந்தியா முயல்கின்றது.
  • இந்தியாவின் BMD அமைப்பானது, பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் (பெல், அஸ்ட்ரா மைக்ரோவேவ், எல் அண்ட் டி) உதவியுடன் DRDO அமைப்பால் உருவாக்கப் பட்டது.
  • இந்தியாவின் BMD அமைப்பானது 2 கட்டங்களாக உருவாக்கப் படுகின்றது. அவை:
    • முதல் கட்டமாக 2000 கி.மீ தூரத்திற்கு ஏவுகணையை இடைமறிக்கும் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • முதல் கட்டத்தின் ராடார் வரம்பானது  600 கி.மீ வரை இருக்கும்.
    • இரண்டாவது கட்டமானது 5000 கி.மீ தூரத்தில் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணையைக் கொண்டிருக்கும்.
    • இந்தக் கட்டத்தின் ராடார் வரம்பு 1500 கி.மீ வரை இருக்கும்.

இந்தியாவின் BMD – இரு நிலைகள்
  • இந்தியாவின் BMD அமைப்பின்  இரு நிலைகள் முறையே பிரித்வி வான் பாதுகாப்பு (Prithvi Air Defense - PAD) மற்றும் மேம்பட்ட வான் பாதுகாப்பு (Advanced Air Defense - AAD) ஆகியவை ஆகும்.
1.பிரித்வி வான் பாதுகாப்பு (Prithvi Air Defence - PAD)
  • இந்தியாவின் BMD அமைப்பானது PADஇன் வளர்ச்சியுடன் ஒரு ஊக்கத்தைப் பெற்றது.
  • பிரதியும்னா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடைமறிப்பு என்றும்  இது குறிப்பிடப் படுகின்றது.
  • அதி உயர இடைமறிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இது  வளிமண்டலத்தின் வெளிப் பகுதியிலும் இடைமறிப்புத் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த அமைப்பானது 80 கி.மீ வரையிலான அதிகபட்ச இடைமறிப்பு உயரத்தில் பரிசோதிக்கப் பட்டுள்ளது.
  • இது மாக் 5.0 வேகத்தில் 300 கி.மீ முதல் 2000 கி.மீ தூரத்திற்குள் ஏவுகணைகளைச் செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த இடைமறிப்பு ஏவுகணையானது இரண்டு கட்டங்களிலும் திட உந்துகலன்களைக் கொண்டுள்ள பிரித்வி பாதுகாப்பு வாகனம் ஆகும்.
  • PAD இல் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆனது உள்நாட்டில் உருவாக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டில் சோதனை செய்யப்பட்ட மேம்பட்ட வான் பாதுகாப்பு (Advanced Air Defense - AAD) இடைமறிப்பு ஏவுகணையின் முன்னோடியாக இருந்தது.
  • பராக் -2 ஏவுகணையானது இஸ்ரேலுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
2. மேம்பட்ட வான் பாதுகாப்பு (Advanced Air Defence - AAD)
  • இது அஸ்வின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடைமறிப்பு என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது வளிமண்டலத்தின் உள்பகுதியில் இடைமறிப்பு அமைப்பைக்  (குறைந்த உயர இடைமறிப்பு) கொண்டதாகும்.
  • இதன் இடைமறிப்பின் வரம்பு 30 கி.மீ வரை இருக்கும்.
  • இது ஒற்றைநிலை திட எரிபொருளால் உந்தப்படும் ஏவுகணையைக் கொண்டுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று, உள்நோக்கி வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான, எதிரி இலக்காக செயல்படக் கூடிய, மாற்றியமைக்கப்பட்ட ஒரு பிருத்வி - 2 ஏவுகணையை இந்த AAD வெற்றிகரமாகத் தடுத்து அழித்தது.
  • 2011 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியன்று, இந்தியாவானது  ஒடிசா கடற்கரையிலிருந்து உள்நாட்டில் உருவாக்கிய ஒரு இடைமறிப்பு ஏவுகணையை ஏவியது.
  • 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதியன்று மேம்படுத்தப்பட்ட AADயானது சோதனை செய்யப் பட்டது.
  • இதில் ஏவுகணை முதல் முறையாக ஒரு கேனிஸ்டர் (குப்பி) அமைப்பில் இருந்து ஏவப்பட்டது. மேலும் கலப்பு ராக்கெட் மோட்டார் ஒன்றும் வெற்றிகரமாகச் செலுத்தப் பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று, 1500 கி.மீ தொலைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவகப்படுத்தும்  உள்நோக்கி வரும் பல இலக்குகளில் ஒன்றைத் தாக்கி அழிக்கும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டது.

 

ராடார் (தொலை கண்டுணர்வி) அமைப்புகள்

i.ஸ்வார்ட்ஃபிஷ் ராடார்
  • ஸ்வார்ட்ஃபிஷ் என்பது BMD அமைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு நீண்ட தூரக் கண்காணிப்பு ராடார் ஆகும்.
  • இது இஸ்ரேலிய கிரீன் பைன் நீண்ட தூர ராடாரிலிருந்துப் பெறப்பட்டது.
  • இது உள்நோக்கி வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக கண்டறிந்து, அவற்றைக் கண்காணித்து தடுத்து நிறுத்தும் திறன் கொண்டது.
  • இந்த ராடார் மூலம் 600 கிமீ - 800 கிமீ வரம்பிற்குள் உள்ள ஒரு கிரிக்கெட் பந்தைப் போன்ற மிகச் சிறிய இலக்குகளைக் கூட கண்டறிய முடியும்.
  • 80 கி.மீ.க்கு மேல் உயரத்தில் வான்வழி இலக்குகளைக் கண்டறிய வளிமண்டலத்தின் வெளிப்பகுதியில் இடைமறிப்பு ஏவுகணையான PADக்கு ஸ்வார்ட்ஃபிஷ் ராடார் வழிகாட்டுகிறது.
ii. இந்திய டாப்ளர் ராடார் (INDRA)
  • இந்திய டாப்ளர் ராடார் (Indian Doppler Radar - INDRA) வரிசையின் இரு பரிமாண ராடார்கள் தொகுதியானது இந்தியாவின் DRDO அமைப்பால் இராணுவம் மற்றும் விமானப் படைக்கு உதவும் வகையில் உருவாக்கப் பட்டது.
  • INDRA-I என்பது குறைந்த உயரத்தில் உள்ள இலக்கைக் கண்டறிவதற்கான, தனியே எடுத்துச் செல்லக் கூடிய ஒரு கண்காணிப்பு ராடார் ஆகும். அதே நேரத்தில் INDRA-II ஆனது இலக்குகளை இடைமறிப்பதற்கான தரைக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கானதாகும்.
  • INDRA ராடாரானது DRDO அமைப்பால் வடிவமைக்கப்பட்ட ஒரு முதல் பெரிய ராடார் அமைப்பு ஆகும்.  மேலும் இது பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் வகையில் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப் பட்டது.
  • மேலும் இது இலங்கைக்கும் ஏற்றுமதி  செய்யப் பட்டுள்ளது.

 

iii.போர்க்களக் கண்காணிப்பு ராடார்
  • இது ஒரு மனிதனால் எடுத்துச் செல்லக் கூடிய, இரு பரிமாணம் கொண்ட, குறுகிய தூர வரம்பு கொண்ட போர்க்களப் பகுதி மற்றும் சுற்றுப்பகுதி கண்காணிப்பு ராடார் ஆகும்.
  • இந்த ரேடாரானது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள இந்தியப் படைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகின்றது.
  • இந்தோனேசியா மற்றும் சூடான் போன்ற வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை இந்த வகை ராடார்களைப் பயன்படுத்துகின்றன.

 

iv.ராஜேந்திர ராடார்
  • இது ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பின் ஒரு  முக்கியமான மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு பலசெயல்திறன் கொண்ட  ராடார் தொடர் நிலை ஆகும்.
  • இது ஒரு செயலற்ற, மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட (Passive Electronically Scanned Array - PESA) ராடார் வரிசை ஆகும். இது ஆகாஷ் ஏவுகணையை அதன் இலக்கை நோக்கி வழிநடத்தப் பயன்படுகின்றது.
  • இரு சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட இது கண்காணிப்பு, பின்தொடர்தல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளைப் பூர்த்தி செய்கின்றது.
  • இதன் மூலம் 64 இலக்குகளைக் கண்காணிக்கலாம். மேலும் இதன் மூலம்  ஒரே நேரத்தில் 4 இலக்குகளைக் குறிவைக்க இயலச் செய்ய முடியும்.
  • இதன் வரம்பு 80 கி.மீ பரப்பு வரையிலும் 18 கி.மீ உயரம் வரையிலும் நீண்டுள்ளது.
v.ரோஹிணி ராடார்
  • ரோஹிணி ராடார் என்பது S-பட்டை அலைவரிசையில் இயங்கக் கூடிய தரை அடிப்படையிலான, முப்பரிமாண, நடுத்தர தூர விமானக் கண்காணிப்பு ராடார்  ஆகும். இது மின்னணு போர் செயல்பாட்டுச் சூழலில் கூட விமான இலக்குகளைக் கண்டறிந்து அவற்றைக்  கண்காணிக்கும்.
  • இது ஒரே நேரத்தில் பல இலக்குகளைக் கையாளும் திறன் கொண்டது. மேலும் இது எரிபொருள்கள் பறக்கும் உயரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுகின்றது.
  • இந்த ராடார் ஆனது 170 கிலோமீட்டர் பரப்பு மற்றும் 15 கிலோமீட்டர் உயரம் வரையிலும் இயங்குகின்றது.
  • ரோஹிணி ராடாரின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 3,000 கி.மீ என்ற மீயொலி வேகத்தில் பயணிக்கும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற பல இலக்குகளைக் கண்காணிக்க முடியும்.
  • இரண்டாம் நிலைக் கண்காணிப்பு ராடார் ஆனது நட்பு அல்லது எதிரி நாட்டு ஏவுகணைகளை அடையாளம் காண்பதற்காக முதன்மை ராடாரான  ரோஹிணியுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இது நட்பு மற்றும் எதிரி நாட்டு விமானங்களை வேறுபடுத்துகின்றது.

 

Vi. சுவாதி ஆயுதக் கண்டுபிடிப்பு ராடார்
  • சுவாதி ஆயுதக் கண்டுபிடிப்பு ராடார் (Swathi Weapon Locating Radar - WLR) என்பது பீரங்கியில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் இந்தியா உருவாக்கிய ஒரு தொடர்நிலை ராடார் அமைப்பாகும்.
  • இந்த ராடார் ஆனது பல்வேறு முனைகளில் இருந்து வரும் பீரங்கி தாக்குதல்களின் மூலங்களைக் கண்டறிந்து அவற்றைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

  • மேலும் இது நட்பு நாட்டு ஏவுகணைகளிலிருந்து வெளிவரும் தாக்குதல்களைக் கண்டறிந்து அதைப் பின்தொடரவும் துப்பாக்கிச் சூடுகளை எதிர்த்துப் பதில் தாக்குதல் நடத்திடவும் செய்யும்.
  • சிறப்புப் பெரிய பீரங்கிச் சுற்றுகளுக்கானக் கண்டறிதல் வரம்பானது 30 கி.மீ வரை இருக்கும். மேலும் வழிகாட்டப்படாத ராக்கெட்டுகளுக்கு 40 கி.மீ வரை அந்த வரம்பு அதிகரிக்கும்.
  • இந்த ராடார் மூலம் ஒரே நேரத்தில் 7 இலக்குகளைக் கண்காணிக்க முடியும்.
  • அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஸ்கேனிங் பகுதியை விரைவாக மாற்றுவதற்காக பீரங்கிச் சுற்றுகளின் முழு வரிசையையும் 30 வினாடிகளுக்குள் 135° கோணத்தில் எந்த புறமும் சுழற்ற முடியும்.
vii.அருத்ரா நடுத்தரத் திறன் ராடார்
  • நடுத்தரத் திறன் கொண்ட ராடார் என்றும் அழைக்கப் படுகின்ற இது தானியங்கி முறையில் கண்டயும் திறன் மற்றும் போர் விமானங்கள் முதல் மெதுவாக நகரும் இலக்குகள் வரையிலான வான்வழி இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டது.
  • 100 மீட்டர் முதல் 30 கி.மீ வரையிலான உயரத்தில் 300 கி.மீ தூரத்திற்கு ஒரு சிறிய போர் விமான அளவிலான இலக்கையும் (2 சதுர மீட்டர் ராடார் குறுக்கு வெட்டு அளவில்) கண்காணிக்கும் திறனும் அருத்ராவுக்கு உள்ளது.
  • தீவிரமான தடைகள் மற்றும் குறுக்கீடுகளிலும் இந்த ராடாரால்  செயல்பட முடியும்.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்