TNPSC Thervupettagam

நவீன இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – VI

September 7 , 2019 1908 days 6261 0

பாதுகாப்பு தொழில்நுட்பம் – I    

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் ய்வு, கண்காணிப்பு, ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றிற்கான மிக உயர்ந்த அமைப்பாகும்.
  • தற்போது DRDO அமைப்பானது நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஆய்வகங்களின் ஒருங்கிணைப்பு ஆகும்.

வான் பாதுகாப்பு

  • இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது 1960களில் தொடங்கியது.
  • 1967ல் நடத்தப்பட்ட ரோகிணி – 75 ஏவுகணையின் சோதனையானது விண்வெளி ஆய்வு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் முதல் வெற்றிகரமான சோதனை ஆகும்.  
  • 1970களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகமானது (Defence Research & Development Laboratory - DRDL) டெவில் திட்டம் மற்றும் வேலியன்ட் திட்டம் எனும் இரண்டு புதிய திட்டங்களைத் துவங்கியது.
  • டெவில் திட்டமானது குறுகிய தூர வரம்பு கொண்ட நிலத்திலிருந்து வானிலக்கைத் தாக்கும் ஏவுகணையை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • வேலியன்ட் திட்டமானது நீண்ட தூரம் பாயும் (பாலிஸ்டிக்) ஏவுகணையை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • ஆனால் இரண்டு திட்டங்களும் தோல்வியடைந்ததாகக் கருதப்பட்ட.
  • வேலியண்ட் திட்டம் 1974 ஆம் ஆண்டிலும் டெவில் திட்டம் 1980 ஆம் ஆண்டிலும் நிறுத்தப்பட்டன.
  • ஏவுகணைகளை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டமானது ஒருங்கிணைந்த வழிநடத்தப்படும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம் (Integrated Guided Missile Development Program - IGMDP) என்றழைக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது 1982-83 ஆம் ஆண்டுகளில் அப்துல் கலாம் தலைமையில் தொடங்கியது.
  • DRDL ஆனது கீழ்க்காணும் பகுதியில் பல திட்டங்களை ஒரே நேரத்தில் தொடர அவர் முடிவு செய்தார்.
  • இதனால் பின்வரும் நான்கு திட்டங்களும் IGMDP-இன் கீழ் உருவாக்கப்பட்டன.
    • பிரித்வி எனும் குறியீட்டுப் பெயரிடப்பட்ட குறுகிய வரம்பு கொண்ட ஒரு நிலப் பகுதியிலிருந்து மற்றொரு நிலப் பகுதியிலிருக்கும் இலக்கைத்  தாக்கும் ஏவுகணை.
    • திரிசூல் எனும் குறியீட்டுப் பெயரிடப்பட்ட குறுகிய வரம்பு கொண்ட ஒரு நிலப் பகுதியிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் தாழ்நிலை ஏவுகணை.
    • ஆகாஷ் எனும் குறியீட்டுப் பெயரிடப்பட்ட நடுத்தர வரம்பு கொண்ட ஒரு நிலப் பகுதியிலிருந்து வானிலக்கைத் தாக்கும் ஏவுகணை.
    • நாக் எனும் குறியீட்டுப் பெயரிடப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை.
  • அக்னி ஏவுகணையானது தொடக்கத்தில் IGMDPயில் மீண்டும் உள்நுழையும் வாகன வடிவில் தொழில்நுட்ப செயல்நிலையை விளக்கும் திட்டமாகக் கருதப்பட்டது.
  • ஆனால் பின்னர் அது வெவ்வேறு தூர வரம்புகளைக் கொண்ட நீண்ட தூரம் பாயும் ஏவுகணையாக மேம்படுத்தப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு ஜனவரி 08 அன்று IGMDP ஆனது வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக DRDO முறையாக அறிவித்தது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா பல ஏவுகணை தொகுப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்கியது.

ஏவுகணைகளின் வகைப்பாடுகள்

  • ஏவப்படும் முறைகள், தாக்கும் தூரம், உந்துவிசை மற்றும் வழிநடத்தும் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஏவுகணைகள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

 

  • நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பை தாக்கும் ஏவுகணையானது நிலம் அல்லது கடலில் இருந்து ஏவப்பட்டு நிலப்பரப்பில் அல்லது கடல் பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நிலத்திலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணையானது நிலத்திலிருந்து ஏவப்பட்டு விமானங்கள் அல்லது பிற ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வானிலிருந்து நிலத்திற்குப் பாயும் ஏவுகணையானது இராணுவ விமானங்களிலிருந்து நிலத்தில் அல்லது கடற்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வானிலிருந்து வானுக்குப் பாயும் ஏவுகணையானது விமானத்திலிருந்து ஏவப்பட்டு மற்றொரு விமானத்தைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் என்பவை இராணுவ தந்திர உபாய நோக்கங்களுக்காக செயற்கைக் கோள்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விண்வெளிசார் ஆயுதங்களாகும்.
  • பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை என்பவை வழிநடத்தப்பட்டு குறிப்பாக அதிக அளவில் கவசத்தினைக் கொண்டுள்ள இராணுவ வாகனங்களைத் தாக்கி அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஏவுகணையாகும்.
  • பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணைகள் என்பவை நிலத்திலிருந்து வானுக்குப் பாயும் நீண்டதூர ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் என்பவை கப்பல்கள் மற்றும் பெரிய படகுகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வழிநடத்தப்படும் ஏவுகணைகள் ஆகும்.
  • சீர்வேக ஏவுகணைகள் என்பவை வழிநடத்தப்படும் ஏவுகணையாகும். இது நிலப்பரப்பில் உள்ள இலக்குகளுக்கு எதிராக வான்பரப்பில் நிலை கொண்டிருக்கும். மேலும் இதன் பறக்கும் பாதையானது ஏறக்குறைய நிலையான வேகத்திலேயே இருக்கும்.
  • இவை மிக நீண்டதூரங்களில் அதிக துல்லியத் தன்மையுடன் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தும் அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
  • நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்பவை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டு நீண்ட தூரம் பாயும் திறன் கொண்டவை.

இந்தியாவின் ஏவுகணைகள்

1. பிரித்வி – I

  • பிரித்வி–I ஏவுகணையானது முதன்முதலில் 1988ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • இது ஒற்றை நிலை திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையாகும்.
  • நிலத்திலிருந்து நிலத்திற்குப் பாயும் இந்த ஏவுகணையின் செயல்பாட்டு வரம்பு 150 கிமீ ஆகும்.
  • இது 1000 கிலோ கிராம் அளவுக்கு வெடிமருந்துகளை கொண்டு செல்லும் திறன் கொண்டது.
  • இது 1994 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

2. அக்னி – I

  • இது ஒரு அணுசக்தித் திறன் கொண்ட ஏவுகணையாகும்.
  • ஐந்து ஏவுகணைகளைக் கொண்அக்னி ஏவுகணை தொடரில் இது முதலாவது ஆகும்.
  • இதன் செயல்பாட்டுத் தொலைவு 700 கி.மீ. ஆகும்.

3. ஆகாஷ்

  • நிலத்திலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணையான ஆகாஷ் 30 கி. மீ தொலைவில் இடைமறிக்கும் திறன் கொண்டது ஆகும்.
  • இது பல்முனை இலக்கு ஈடுபாட்டுத் திறனைக் கொண்டுள்ளது.
  • இது இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையில் செயல்பாட்டில் உள்ளது.

4. நாக்

  • தாக்கி அழிக்கும் திறனுடைய மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான நாக், முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் சோதனை செய்யப்பட்டது.
  • இது இரு நிலை திட உந்து சக்தியைக் கொண்ட ஏவுகணையாகும்.
  • இது ஏவப்படுவதற்கு முன்னரே இலக்குகள் அடையாளம் காணப்பட்டு அதை நோக்கி செலுத்தப்படும். இதற்காக அது  ஏவுவதற்கு முன்பே குறித்தல் எனும் அமைப்பைப் பயன்படுத்துகிறது.

5.திரிஷுல்

  • இது ஒரு நிலத்திலிருந்து வானிற்குப் பாயும் குறுகிய தூர ஏவுகணையாகும்.
  • இது அறியப்பட்ட அனைத்து விமான குறுக்கீட்டு அழிப்பிகளுக்கும் (ஜாமர்) எதிரான மின்னணு நடவடிக்கைகளையும் கொண்டுள்ளது.
  • 9 கி.மீ. தொலைவு எல்லையைக் கொண்டுள்ள இது தாழ் உயரங்களில் பறந்து கப்பல்கள் மீது தாக்குதலை நடத்தும் ஏவுகணைகளிருந்துப் பாதுகாக்கும் தடுப்பானாகவும் பயன்படுகிறது.

6. அக்னி – II

  • இது ஒரு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.
  • இதன் முதல் பரிசோதனையானது 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று நடைபெற்றது.
  • நிலத்திலிருந்து நிலத்திற்குப் பாயும் இந்த ஏவுகணையானது 2000-2500 கி.மீ. தூரம் பாயும் திறனுடையது.
  • இது வழக்கமான அல்லது அணு ஆயுதங்களைக் கொண்டுச் செல்லக் கூடியது.

7. அக்னி – III

  • அக்னி – III ஏவுகணையானது அக்னி – IIஐ டுத்து உருவாக்கப்பட்ட ஒரு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.
  • அதன் முந்தைய பதிப்பு செயல்திறனை விட மேம்படுத்தப்பட்ட இது 3500 முதல் 5000 கி.மீ. தூரம் வரை செல்லக் கூடியது ஆகும்.
  • இது அண்டை நாடுகளின் மிகவும் உட்பகுதியில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கும் திறன் கொண்டது.
  • 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆயுதப் படையில் சேர்க்கப்பட்ட இது இராணுவத்தின் தாக்கும் திறனை மேம்படுத்தியுள்ளது.

 

8. அக்னி – IV

  • அக்னி – IV என்பது இரண்டு நிலைகளையுடைய நிலத்திலிருந்து நிலத்திற்குப் பாயும் வகையில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறனுடைய நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையாகும்.
  • இரண்டு நிலைகளில் உந்துவிசையுடைய இது 1000 கிலோ வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று இது அதன் முழு எல்லை வரம்பான 4000 கி.மீ. தூரத்திற்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டது.
  • பறக்கும் போது ஏற்படும் இடையூறுகளுக்கு ஏற்றவாறு தனக்குத் தானே திருத்தம் செய்து வழி நடத்தக் கூடிய நவீன அம்சங்களை இது கொண்டுள்ளது.
  • மேலும் இது இரண்டு இலக்க அளவிலான துல்லியத் தன்மையுடன் இலக்கைத் தாக்குவதை உறுதி செய்யும் பொருட்டு மிகவும் துல்லியமான ரிங் லேசர் கைரோ அடிப்படையிலான நிலைமாற்ற வழிநடத்தும் அமைப்பு (Ring laser gyro-based Inertial Navigation System-RINS) பொருத்தப்பட்டு மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்த மிக நுண்ணிய வழிநடத்தும் அமைப்பால் (Micro navigation system-MINGS) ஆதரிக்கப்படுகிறது.

9.அக்னி – V

  • இது இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்.
  • இது எளிதில் சாலை வழியாக எடுத்துச் செல்லும் திறன் மற்றும் வேகமான செயலாற்றும் திறனுடன் 5000 கி.மீ. தொலைவுக்குச் சென்று தாக்கும் திறனையும் கொண்டது.

10.பிரித்வி – II

  • ஒற்றை நிலை திரவ எரிபொருளால் இயங்கும் இது நிலத்திலிருந்து நிலத்திற்குப் பாயும் ஏவுகணையாகும்.
  • இது 500 முதல் 1000 கிலோ வரையில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறனுடையது ஆகும்.
  • இது 2003 ஆம் ஆண்டில் ஆயுதப்படையில் இணைக்கப்பட்டது.

11. பிரித்வி – III

  • இது 350 கி.மீ. எல்லை வரம்புடைய கடற்படை பதிப்பு ஏவுகணையாகும்.
  • ரண்டு நிலை எரிபொருளைக் கொண்ட இது நிலத்திலிருந்து நிலத்திற்குப் பாயும் ஏவுகணையாகும்.
  • இது 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பரிசோதிக்கப்பட்டது.

12. பிரம்மோஸ்

  • மீயொலி வேக ஏவுகணையாஇது 2001 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது.
  • நடுத்தர தூரம் செல்லும் ராம்ஜெட் மீயொலி வேக ஏவுகணையான இதை நீர்மூழ்கிக் கப்பல், கப்பல்கள், விமானம் அல்லது நிலம் ஆகியவற்றிலிருந்து ஏவ முடியும்.
  • இது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
  • இது தற்போது செயல்பாட்டில் உள்ள உலகின் அதிவேக (2.5 - 2.8 மேக்) கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.

13.K – 15 சகரிகா

  • சகரிகாவின் வெற்றிகரமான பரிசோதனையானது, இந்தியாவின் இராணுவ வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
  • இதனால் இது அணுசக்தி ஆயுத எதிர்ப்பின் மூன்றாவது கட்டமான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை திறனைப் பெற்றது ஆகும்.
  • 750 கி.மீ. தூரம் பாயும் இந்த K15 சகரிகா ஏவுகணையானது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • பின்னர் இது இந்தியாவின் அணு சக்தியால் இயங்கும் அரிஹந்த் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

14. தனுஷ்

  • பிரித்வி II ஏவுகணையின் குறுகிய தூரம் செல்லும் பதிப்பாகக் கருதப்படும் இந்த தனுஷ் ஏவுகணையானது திரவ எரிபொருளால் இயங்கும் கடல்சார் ஏவுகணையாகும்.
  • 350 கி.மீ. தூரம் பாயும் திறனுடைய இது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடியதாகும்.
  • இது 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியக் கடற்படைக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு K15 சகரிகாவின் புகழை முன்னெடுத்துச் செல்கிறது.

15.ஷவ்ரியா

  • இது ஆரம்பத்தில் K-15 சகரிகா ஏவுகணையின் நிலத்திலிருந்து நிலத்திற்குப் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை வகையாகக் கருதப்பட்டது.
  • இது நீண்ட காலங்களுக்கு நிலத்தடி உருளை சேமிப்பகங்களில் சேமிக்கப்பட்டு வாயு உருளை (Gas canisters) ஏவும் அமைப்பை செலுத்துவானாகப் பயன்படுத்தி இதனை ஏவ முடியும்.
  • அணு ஆயுத திறன் கொண்ட இந்த ஏவுகணையானது இந்தியாவின் பதிலடி கொடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. மேலும் இது ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட K-15 பாலிஸ்டிக் ஏவுகணையைச் சார்ந்திருப்பதையும் குறைக்கின்றது.

16.நிர்பய்

  • நிர்பய் ஏவுகணையானது குறை ஒலி வேக ஏவுகணையாகும். இது பிரம்மோஸின் எல்லை வரம்பிற்கு துணை புரிகிறது.
  • இது 1000 கி.மீ. தூரம் வரையிலான தூரத்தை அடைய நிலப்பரப்பை பின்பற்றி வழிசெலுத்தும் முறையைப் பயன்படுத்துகிறது.
  • மேலும் இது நிலம், நீர் மற்றும் வான்வழித் தளங்களிலிருந்து செலுத்தப்படும் திறனுடையது.

17.பிரஹார்

  • 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதன்முறையாக சோதனை செய்யப்பட்ட பிரஹார் ஏவுகணையானது 150 கி.மீ. எல்லை வரம்புடைய நிலத்திலிருந்து நிலத்திற்குப் பாயும் ஏவுகணையாகும்.
  • தனித்துவம் வாய்ந்த ஏவுகணை எனக் கூறப்படும் இந்த ஏவுகணையானது உயர் முடுக்கம் மற்றும் அதிக துல்லியத் தன்மையைக் கொண்டுள்ளது.
  • இந்த ஏவுகணையானது சாலைகளிலும் எளிதில் எடுத்து செல்லக் கூடிய ஏவும் அமைப்புகளிலிருந்து கூட ஏவப்பட  முடியும். மேலும் அதன் இலகுவான கட்டமைப்பின் காரணமாக போர்க் காலங்களில் மிகவும் எளிதாக எங்கும் எடுத்துச் செல்லக் கூடியதாகும்.

18.அஸ்திரா

  • அஸ்திரா என்பது பார்வை எல்லையைத் தாண்டிய, வானிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கக் கூடிய ஏவுகணையாகும். இது 2011 ஆம் ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • உருவ அளவு மற்றும் எடை ஆகியவற்றின் அடிப்படையில் DRDO இதுவரை உருவாக்கியதிலேயே மிகச் சிறிய ஏவுகணை இதுவேயாகும்.
  • 80 கி.மீ. தூரத்திற்குள் முன்புறத்திலிருந்து (Head-on mode) மீயொலி வேகத்தில் எதிரி நாட்டு விமானங்களை இடைமறித்து அழிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்