- கி.பி நான்காம் நூற்றாண்டில் எமிலியா ஹிலாரியா என்ற ரோமானிப் பெண் ஒருவர் மருத்துவராக இருந்திருக்கிறார். அவர் வாழ்ந்த ஆண்டுகள் கி.பி.3௦௦ முதல் 363ஆம் ஆண்டு வரை ஆகும். அவர் 63 வயது வரை வாழ்ந்துள்ளார்.
யார் அந்த எமிலியா ஹிலாரியா?
- எமிலியா ஹிலாரியா என்பவர் ஒரு காலோ-ரோமன் மருத்துவர். அவர் மருத்துவத்தில் பயிற்சி பெற்றார். மேலும் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் பற்றிய புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது முகத்தோற்றத்தில் எப்போதும் ஒரு குழந்தை தனம் கலந்த மகிழ்ச்சி நிலவியதன் காரணமாக அவர் "ஹிலேரியா" என்றும் அழைக்கப்பட்டார். எமிலியா வாழ்ந்த 3ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கௌல் (இப்போதைய பிரான்ஸ்) செழித்தோங்கி இருந்தது.
பெண் மருத்துவர் எமிலியா ஹிலாரியா பற்றி..
- எமிலியா ஹிலாரியா என்ற பெண் மருத்துவர், கவிஞர் மற்றும் சொல்லாட்சிக் கலைஞரான டெசிமஸ் மேக்னஸ் ஆசோனியஸ் என்பவரின் தாய்வழி சித்தி/அத்தை ஆவார். ஆசோனியஸ் காலோ-ரோமன் பகுதியின் செனட்டர் ஆக இருந்துள்ளார்.
- ஆசோனியஸ் பேரரசர் கிரேடியனுக்கு ஆசிரியராகவும் இருந்தார். ஆசோனியஸ், அமீலியா உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளைத் தொடராக எழுதினார். எமிலியா ஹிலாரியா மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி இன்று நமக்குத் தெரிந்த அனைத்தும் ஆசோனியல் எழுதிய பேரன்டாலியாவிலிருந்து நமக்குத் தெரிந்தவை ஆகும். எமிலியா ஹிலாரியாவின் மருமகன் ஆசோனியஸ் சுமார் கி.பி 310லிருந்து 395வரை வாழ்ந்தவர்.
- எமிலியா ஹிலாரியா கௌல் என்ற ஊரில் உள்ள மொசெல்லே என்ற ஆற்றின் அருகே வாழ்ந்த ஒரு மருத்துவர். இவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி இவரது மருமகன் ஆசோனியஸ் "பேரன்டாலியா" என்ற தலைப்பில் தொடர்ச்சியான கவிதைகளை எழுதி இருக்கிறார். அதனால் அவரது மருமகனின் கூற்றுப்படி, நமக்குத் தெரியவரும் தகவல்கள் "எமிலியா ஒரு "அர்ப்பணிப்புள்ள கன்னி". மேலும், எமிலியா ஹிலாரியா திருமணத்தை தன் தொழிலுக்குத் தடையாக நிராகரித்தார், மேலும் "ஒரு ஆண் மகனைப் போலவே உடலைக் குணப்படுத்தும் மருத்துவக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்."
எமிலியா ஹிலாரியாவின் இளமைக்காலம்
- எமிலியா ரோமானியப் பேரரசில் பிறந்தார். இது பிரான்சின் தற்போதைய மொசெல்லே பகுதியில் உள்ளது. அவரது தந்தையின் பெயர் கேசிலியஸ் அக்ரிசியஸ் அர்போரியஸ். அவரது அன்னையின் பெயர் எமிலியா கொரிந்தியா மௌரா. அவரது தந்தையின் குடும்பம், ஓரளவு பூர்வீக செல்டிக் ஏடுவான் பிரபுத்துவத்தின் வம்சாவளியைச் சேர்ந்தது, ஒருவேளை 260ஆம் ஆண்டில் அவர்கள் மத்திய கௌலில் இருந்து அங்கு குடியேறியிருக்கலாம். ஆனால் அவரது தாயார் உள்ளூர் முனிசிபல் பிரபுத்துவத்திலிருந்து வந்தவர், இருப்பினும் அவர்கள் ஏழைகள் என்று ஆசோனியஸ் சுட்டிக்காட்டுகிறார்.
எமிலியாவின் உடன் பிறப்புகள்
- எமிலியாவுக்கு ஒரு சகோதரர் இருந்தார். அவரின் பெயர் எமிலியஸ் மேக்னஸ் ஆர்போரியஸ். அவர் பேரரசர் கான்ஸ்டான்டியஸின் பெயரிடப்படாத மகனுக்கு ஆசிரியரானார். மேலும் எமிலியாவுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். ஒருவர் குழந்தைப் பருவத்தில் இறந்த எமிலியா ட்ரைடியா மற்றும் இன்னொருவர் ஆசோனியஸின் தாய் அமிலியா அயோனியா.
தாயின் பெயரைக் கொள்ளும் அசாதாரண குடும்பம்
- எமிலியா மற்றும் அவரது உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் தாயின் குடும்பப் பெயரை, காலத்தின் வழக்கமான நடைமுறைக்கு மாறாக எடுத்துக் கொண்டனர், இது அந்த நேரத்தில் அசாதாரணமானது என்று வரலாற்றாசிரியர் ஹகித் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
எமிலியா ஹிலாரியாவின் தன்மை/குணம்
- எமிலியா ஹிலாரியா என்ற சிறுபெண் ஆண் குழந்தைப் போன்ற தோற்றத்தில் இருந்ததால் அவருக்கு "ஹிலாரியஸ்" என்ற ஆண் புனைப்பெயர் அவருக்கு வழங்கப்பட்டது என்றும் கூட தகவல்கள் கிடைக்கின்றன. அவரது மருமகன், ஆசோனியஸ், எமிலியா ஹிலாரியா பற்றிக் குறிப்பிடுவதாவது: "எமிலியா ஹிலாரியா தனது குழந்தைப் பருவத்தில் அதிக ஆண்மை தன்மையுடன் தொடர்ந்து நடந்துகொண்டார். மேலும் முதிர்ந்த வயதிலும் கூட குறைவான பெண்பால் உடையணிந்ததாகவும் தெரிவித்தார். அதனாலும் கூட, இந்த பழக்கத்தினால், எமிலியா ஹிலாரியா திருமணமாகாமல் இருக்க வழிவகுத்திருக்கலாம் என்று கருதினார். மேலும் அந்த காலகட்டத்தில், கிறிஸ்தவ பெண்கள் தங்கள் பெண் தோற்றத்தை மறைக்க மதகுருமார்களால் ஊக்குவிக்கப்பட்டது என்பதும் கூட குறிப்பிடத்தக்க விஷயமே.
எமிலியா கிறித்தவரா?
- எமிலியா ஹிலாரியா ஒரு கிறித்தவரா என்பதும் கூட சரியாகத் தெரியவில்லை. "அன்புள்ள கன்னித்தன்மையின் காதல்" என்ற சொற்றொடர் இதைக் குறிக்கிறது. அவரது மருமகன் ஆசோனியஸின் மொழி மற்றும் உண்மையை விடக் கவிதை உரிமத்தைப் பற்றி நாம் அதிகம் பேசலாம். இருப்பினும், எமிலியாவுக்கான ஒரே ஆதாரமாக ஆசோனியஸ் இருப்பதால், ஆசோனியஸின் வார்த்தையை ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை, எனவே எமிலியா ஹிலாரியா ஒரு பாரம்பரிய ரோமானிய பெண் உருவத்தையும் பாத்திரத்தையும் நிராகரித்த ஒரு பெண்ணாக நம்மிடம் வருகிறார். ஆசோனியஸின் சொற்றொடரில் எமிலியா ஹிலாரியா இவ்வாறு இருந்தாள் என்பதைக் குறிக்கிறது, ஆனால் அது கவிதையாக எழுதப்பட்டதாக இருக்கலாம்.
எமிலியா ஹிலாரியா ஒரு மருத்துவர்
- கில்லியன் கிளார்க் என்ற வரலாற்றாசிரியர், எமிலியா ஹிலாரியா பற்றிக் குறிப்பிடுவதாவது.. எமிலியா ஹிலாரியா மருத்துவத்தை "முழுநேர அர்ப்பணிப்பாக" பின்பற்றினார் என்று சொற்றொடரில் பரிந்துரைக்கலாம் என்று பரிந்துரைத்தார். ஆசோனியஸ் மேலும் அவளை ஒரு நேர்மையான மற்றும் திறமையான மருத்துவர் என்று விவரித்தார், அவர் தனது மருத்துவ சகோதரருக்கு தனது சொந்த படிப்பில் உதவினார்.
- எமிலியா ஹிலாரியா, தனது தாயைப் போல அவரை நேசிப்பதாக ஆசோனியஸ் குறிப்பிடுகிறார். எமிலியா ஹிலாரியாவின் தனது 6ஆம் வயதில், கி.பி. 363இல் இறந்தார். (அவர் இறந்த தேதி எதுவும் பதிவிடப்படவில்லை). அதனால் ஆசோனியஸ் ஒரு மகனைப் போலவே எமிலியா ஹிலாரியாவின் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
- ரோமானியப் பேரரசில் பெண் மருத்துவர்கள் எமிலியா ஹிலாரியா வாழ்ந்த இந்த காலகட்டத்தில் ரோமானியப் பேரரசில் பெண் மருத்துவர்கள் வாழ்ந்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் மருத்துவ எழுத்துக்கள் பெண்களுக்குக் கிடைத்தன. ஆனால் கில்லியன் கிளார்க் குறிப்பிட்டுள்ளபடி, "ஆண்களின் நாகரீகத்தின்படி" என்ற சொற்றொடர் அவர்களின் முழுநேர அர்ப்பணிப்பைப் பரிந்துரைக்கலாம். எமிலியாவின் மைத்துனர், ஆசோனியஸின் தந்தை ஒரு மருத்துவர் என்றும், இருவருக்கும் இடையே சில தொழில்முறை மருத்துவ தொடர்பு சாத்தியம் என்றும் பேரன்டாலியா கூறுகிறது.
பிரபலமான கலாசாரத்தில்
- எமிலியா ஹிலாரியா ஜூடி சிகாகோவின் நிறுவல் பகுதியான தி டின்னர் பார்ட்டியில் இடம்பெற்றுள்ள ஒரு பெயராக உள்ளது. மேலும் இப்பெயர் து ஹெரிடேஜ் ஃப்ளோரில் உள்ள 999 பெயர்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. இவர் ஹைபேஷா என்ற பெண் விஞ்ஞானியுடன் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
நன்றி: தினமணி (19 – 06 – 2024)