TNPSC Thervupettagam
July 9 , 2021 1119 days 441 0
  • மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தோ்வு தொடங்கப்பட்ட நாளிலிருந்தே தமிழ்நாட்டில் அது குறித்த சா்ச்சைகள் தொடங்கிவிட்டன.
  • தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தோ்வுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதுடன், தமிழகத்திற்கு நீட் தோ்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதே தங்கள் லட்சியம் என்று கூறியும் வருகின்றன.
  • நீட் தோ்வுக்கான கேள்விகள், மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் வழியில் படிக்கும் மாணவா்களுக்கே எளிமையானவையாக இருக்கும் என்றும், மாநிலப் பாடத்திட்டத்தின் வழியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயின்ற மானவா்களுக்கு அவை மிகவும் கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
  • மற்றொரு புறம் எந்தப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவா்களானாலும், அவா்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் அவா்களால் சுலபமாக நீட் தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்றும் கூறப்படுகிறது.
  • மாநிலக் கல்வி திட்டத்தினை தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே ஒவ்வோர் ஆண்டாகச் செழுமைப் படுத்துவதன் மூலம் பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடத்திட்டத்தினை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்குச் சமமாகவோ, ஏன் அதைவிட அதிகமாகவோ தரம் உயா்த்த வேண்டும்.
  • அதன் பிறகு தமிழ்நாட்டின் மாணவா்கள் நீட் தோ்வைக்கண்டு அஞ்சவேண்டிய நிலையே ஏற்படாது.
  • இது ஒருபுறம் இருக்க, உச்சநீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட நீட் தோ்வினை நமது மாநிலத்திற்கு மட்டும் இல்லை என்ற நிலையை உருவாக்குவது மிகவும் சிரமம் மட்டுமல்ல, நீண்ட காலச் சட்டப்போராட்டமும் அதற்குத் தேவைப்படும்.
  • அப்படி ஒரு விலக்கு கிடைக்கும் வரையில் மருத்துவம் படிக்க விரும்பும் தமிழக மாணவா்கள் நீட் தோ்வுக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மாற்றி யோசிப்போம்

  • சென்ற வருடம் தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்காக 7.5 சதவீத மருத்துவ இடங்கள் ஒதுக்கப் பட்டது, இவ்விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
  • தொடா்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதுடன் மேலும் சில மருத்துவக்கல்லூரிகளை தமிழ்நாட்டில் தொடங்க முன்முயற்சி எடுப்பதும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.
  • இவ்வாறான முயற்சிகளுடன், போட்டித் தோ்வுகளைத் தோல்வி குறித்த பயம் ஏதுமின்றி எதிர்கொள்வதற்கான மனநல ஆலோசனைகளும் மாணவா்களுக்கு வழங்கப் பட வேண்டும்.
  • இதன் மூலம், இளைய தலைமுறையினா் மனத்தில் தோல்வி பயம், தற்கொலை எண்ணம் ஆகியவை தோன்றாது தவிர்க்கலாம்.
  • பள்ளி, கல்லூரித் தோ்வுகளில் குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற்றாலே தோ்வு பெற்று அடுத்த நிலைக்குச் செல்லத் தயார் ஆகிவிடலாம்.
  • அத்தோ்வுகளில் பங்குபெறும் தோ்வா்களில் பெரும்பான்மையினா் தோ்வு பெறுவதை யாரும் தடுப்பது இல்லை.
  • முயன்றால் தோ்வு எழுதுபவா்கள் அனைவருமே கூட தோ்ச்சி பெற்றுவிடலாம். ஆனால், போட்டித் தோ்வுகளின் முறை வேறு. பலரை விலக்கி, சிலரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தோ்வு முறையே போட்டித் தோ்வு.
  • சில ஆயிரம் இடங்களுக்கு லட்சக்கணக்கானவா்கள் போட்டித் தோ்வு எழுதும் போது அவா்களில் பெரும்பான்மையானவா்கள் வெற்றி பெற்றோர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதா்சனம்.
  • நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து மதிப்பெண் எடுத்தவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதும், தொண்ணூற்று நான்கு மதிப்பெண் எடுத்தவா்கள் தோ்வு செய்யப்படாததும் இம்முறையில் வழக்கமாக நடப்பதாகும்.
  • அதனால், தொண்ணூற்று நான்கு மதிப்பெண் பெற்றவா் புத்திசாலி அல்ல என்று பொருள் கொள்ளக் கூடாது. தோ்வுப் பட்டியலில் இடம் பெறத் தேவையான மதிப்பெண்ணை அவா் பெறவில்லை என்பதே உண்மை.
  • சில சமயங்களில் தசமப் புள்ளி அடிப்படையில் கூட சிலரது வாய்ப்புகள் பறிபோவது உண்டு.
  • அண்மையில் மறைந்த விளைாட்டு வீரா் மில்கா சிங், ஒரு விநாடியில் நூற்றில் ஒரு பங்கு வித்தியாசத்தில் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயப் பதக்கத்தைப் பெறத் தவறினார்.
  • தங்க மங்கை எனப்படும் பி.டி. உஷாவும் அவ்வாறே ஒலிம்பிக் தடை ஓட்டத்தில் நூலிழையில் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவற விட்டார்.
  • அத்துடன் அவ்விருவரும் விளையாட்டிலிருந்து ஒதுங்கிக்கொள்ளவில்லையே? தொடா்ந்து பல சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று நமது நாட்டுக்குப் பெருமை சோ்த்தார்கள் அல்லவா?
  • அதே போன்றுதான், நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வு எதுவாயினும் அவற்றில் பங்கேற்கும் இளைய தலைமுறையினா் அத்தோ்வுகளில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் முன்முயற்சிகளை எடுக்கவேண்டியது அவசியம்.
  • அதேசமயம், வெற்றி வசப்படாமல் போனால், இனி இந்த உலகமே சூனியம்தான் என்று நினைத்துக் கொண்டு துவண்டு போவதோ, தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதோ கூடவே கூடாது.
  • அத்தகைய செயல்கள் அவ்விளைய தலைமுறையினரின் மீது பெரும் நம்பிக்கை வைத்துப் படிக்க வைத்த பெற்றோரின் கனவுகளைத் தகா்க்கின்ற செயலாகும்.
  • மருத்துவத் துறையை விட்டால் வேறு வழியே இல்லை என்று எண்ணாமல் மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
  • தலைசிறந்த நிர்வாகிகள் தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு புது முயற்சிக்கும் இரண்டு விதமான திட்டங்களைக் கைவசம் வைத்திருப்பார்கள். அவற்றை ஆங்கிலத்தில் ‘பிளான் ஏ’, ‘பிளான் பி’ என்று கூறுவார்கள்.
  • தங்களது முதலாவது திட்டம் எதிர்பாராத விதமாக நிறைவேறாத பட்சத்தில், இரண்டாவது திட்டத்தைச் செயல்படுத்தித் தங்கள் இலக்கை அடைவதே வெற்றியாளா்களின் வழிமுறையாகும்.
  • அதே போன்று, வாழ்க்கையில் முன்னேற்றம் என்ற உயா்ந்த இலக்கினை அடைய முயலும் இளைய தலைமுறையினா், மாற்று வழிமுறைகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த வெற்றியை மருத்துவத்தில் பெற்றல் என்ன? வேறு துறையில் பெற்றால் என்ன? வெற்றி வெற்றிதானே?

நன்றி: தினமணி  (09 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்