TNPSC Thervupettagam

நேரு சொல்கிறார்

November 14 , 2019 1885 days 949 0
  • எதிர்காலத்தின் மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும்போய்விடும்.
  • கல்வி என்பது மனிதர்களை எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி, கூண்டுக்குள் போட்டு அடைத்து வைப்பதற்கானது அல்ல.
  • எதிர்காலம் என்பது அறிவியலுடையது; அறிவியலுடன் நட்புறவு கொள்பவர்களுடையது.
  • இந்தியத் தாய் குறித்து நான் பெருமைகொள்கிறேன். அவளுடைய தொன்மையான, மாபெரும் பாரம்பரியத்துக்காக மட்டும் அல்ல; தன் மனதின் கதவுகளையும் ஜன்னல்களையும் கூடவே ஆன்மாவையும் திறந்துவைத்திருப்பவள் அவள்.

புத்துணர்வு

  • அவற்றின் வழியாக, தூர தேசங்களிலிருந்து வீசும் புத்துணர்வுமிக்க, வலுவூட்டக்கூடிய காற்றோட்டத்தை வர அனுமதிப்பவள். இப்படியாக, தன் தொன்மை வளத்துக்கு மேலும் வளம் சேர்க்கக்கூடிய அவளுடைய மாபெரும் திறன் குறித்தும் நான் பெருமைகொள்கிறேன்.
  • ‘ஒரே உலகம்’ என்பதுதான் நமது இறுதி இலக்காக இருக்க முடியும். ஆனால், ஒன்றுக்கொன்று சண்டையிடும் அணிகள், மூன்றாம் உலகப் போருக்கான குரல்கள், அதற்கான ஏற்பாடுகள் என்றிருக்கும் இந்நிலையில், அந்த இலக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றலாம். இந்த ஆபத்துகளுக்கெல்லாம் மத்தியில் நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு அது ஒன்றாகவே இருக்க முடியும். ஏனென்றால், ‘உலக நல்லுறவு’க்கு மாற்று என்பது ‘பேரழிவு’தான்.

  • ஒரு ஜனநாயகத்தில், வெற்றி பெறுவது எப்படி என்பதையும், அதேபோல் மாண்பை இழக்காமல் தோற்பது எப்படி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றி பெறுபவர்கள் அந்த வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளக் கூடாது; தோற்பவர்கள் அதனால் துவண்டுபோய்விடவும் கூடாது.

முதலாளித்துவச் சமூகம்

  • முதலாளித்துவச் சமூகத்தில் இருக்கும் சக்திகளைத் தடுக்கவில்லையென்றால், அவை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கும், ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கும்.
  • சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்போதோ நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும்போதோ அல்லது ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருக்கும்போதோ நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது; கூடவும் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (14-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்