TNPSC Thervupettagam

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA)

June 2 , 2024 222 days 699 0

(For English version to this please click here)

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA)

  • இச்சட்டம் 2002 ஆம் ஆண்டில் சட்டத்திற்குப் புறம்பாக வரும் வருமானத்தை முறையான இலாபங்களாக மாற்றுவதை எதிர்த்து இயற்றப்பட்டது.
  • மேலும் இச்சட்டம், முறைகேடான வழிகளில் பெறப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

பணமோசடி

  • சட்டவிரோத நிதியை (கருப்புப் பணத்தை) சட்டப்பூர்வ நிதியாக (வெள்ளைப் பணம்) மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.
  • பணத்தின் சட்டவிரோத மூலத்தை மறைக்க தொடர்ச்சியான பரிவர்த்தனைகள் மற்றும் பரிமாற்றங்கள் தேவைப் படுகிறது.
  • மேலும் இது சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதி நிறுவனங்களில் பணமோசடியினால் பெறப்பட்ட நிதிகளை ஒருங்கிணைக்கிறது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் நோக்கங்கள்

  • பணமோசடியைத் தடுக்கச் செய்கிறது.
  • சட்டவிரோத நடவடிக்கைகளில் நிதிப் பரவல்களைத் தடுக்கிறது.
  • மேலும் பணமோசடி மூலம் பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்கிறது.
  • குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கிறது.
  • மேலும் இது, தீர்ப்பளிக்கும் அதிகாரிகள் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவுகிறது.
  • பணமோசடி தொடர்புடைய விஷயங்களைக் கையாள்கிறது.

பணமோசடியின் பொதுவான வடிவங்கள்

  • ஹவாலா

  • மொத்தமாக பணம் கடத்தல்
  • புனைவு செய்யப்பட்ட கடன்கள்

  • ரொக்கம் மிகுந்த வணிகங்கள்
  • சுற்று ரீதியில் பணம் திரும்பப் பெறுதல்

  • வர்த்தக அடிப்படையிலான பணமோசடி
  • ஷெல் (போலி) நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள்

  • நிலமனைப் பரிவர்த்தனைகள்

  • சூதாட்டம்
  • போலி விலைப்பட்டியல்

பணமோசடி குற்றம்

  • பணமோசடி குற்றமென்பது சட்டவிரோதமானப் பணத்தை மறைத்தல், வைத்திருத்தல், கையகப்படுத்துதல், பயன்படுத்துதல், முன்னிறுத்துதல் மற்றும் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட வருவாயைக் கறைபடியாத சொத்தாகக் கோருதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது ஆகும்.
  • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தச் செயல்முறைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள நபர்கள் பணமோசடி செய்த குற்றவாளிகள் ஆவர்.

குற்றவியல் நடவடிக்கைகளின் வருவாயைப் புரிந்து கொள்ளுதல்

  • வரையறை: இது திட்டமிடப்பட்ட குற்றத்துடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறப்பட்ட சொத்துக்களைக் குறிக்கிறது.

குற்றவியல் சட்டங்களின் அட்டவணை

  • பகுதி A, இந்தியத் தண்டனைச் சட்டமானது போதைப் பொருள் மருந்துகள் மற்றும் உளவெறிவூட்டும் பொருட்கள் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் உள்ள மீறல்களை உள்ளடக்கியது.
  • பகுதி B, பகுதி Aயில் உள்ள குற்றங்களை அடையாளம் காட்டுகிறது, ஆனால் அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் வகையில் அமைத்துள்ளது.
  • பகுதி C, எல்லை தாண்டிய குற்றச் செயல்களில் கவனம் செலுத்துகிறது, மேலும் இது உலகளாவிய பணமோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

பணமோசடியின் செயல்பாட்டு நடைமுறை

  • உள்ளீட்டுக் கட்டம்: முறையான நிதிக் கட்டமைப்பில் சட்டவிரோதமாகப் பெற்ற நிதியை முதலில் இணைக்கிறது.
  • அடுக்குக் கட்டம்: பல பரிவர்த்தனைகளில் நிதிகளைப் பரவச் செய்தல் மற்றும் கையாளுதல் செய்வதன் மூலம் அவற்றின் சட்டவிரோதமான மூலத்தை மறைக்கிறது.
  • ஒருங்கிணைப்புக் கட்டம்: நிதி அமைப்பில் பணமோசடி செய்யப்பட்ட நிதிகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல், மேலும் அவற்றை அடுத்தடுத்தப் பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதன் மூலம் அதனை முறையானதாக தோன்றச் செய்வதாகும்.

பணமோசடி மற்றும் நிதி மோசடி

வேறுபடுத்தும் காரணிகள்:

  • ஒரு குற்றத்தின் மூலம் பெறப்பட்ட தரகுத் தொகை மற்றும் சொத்துக்களைப் பெறுவது பணமோசடி செய்வதாக இருக்காது, ஆனால் அது நிதி மோசடியாக இருக்கலாம்.
  • பணமோசடி என்பது சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்தை முறையான வடிவில் பெற்றதாகக் கூறுவது அல்லது உரிமை கோருவது.

விசாரணைக்கான நம்பிக்கைக்குரிய அதிகாரிகள்:

அமலாக்க இயக்குநரகம் (ED):

  • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பணமோசடிக் குற்றங்களை விசாரிக்கும் பொறுப்புடையதாகும்.

நிதிப் புலனாய்வுப் பிரிவு – இந்தியா (FIU-IND):

  • நிதியமைச்சர் தலைமையிலான பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவிற்கு நேரடியாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
  • இது சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறுதல், செயலாக்குதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றுக்கான மத்திய நிறுவனம் ஆகும்.
  • இது பணமோசடி மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிரான தேசிய மற்றும் சர்வதேச உளவுத்துறை முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது.

திட்டமிடப்பட்ட குற்றங்களின் விசாரணை

உரிய புலனாய்வு அமைப்புகள்:

  • இதில் குற்றங்களானது குறிப்பிட்ட சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட ஆணையங்களால் விசாரிக்கப்படுகின்றன.
  • இந்த ஆணையங்களில் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள், சிபிஐ, சுங்கத் துறைகள், செபி மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளும் அடங்குகிறது.

பணமோசடியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

சொத்துப் பறிமுதல் மற்றும் இணைப்பு:

  • குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம், முடக்கப்படலாம் அல்லது இணைக்கப்படலாம்.

குற்றவாளிகளுக்கான தண்டனைகள்:

  • குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, மேலும் இது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
  • எந்த வரம்பும் இல்லாமல் அபராதமானது விதிக்கப்படுகிறது.

பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கான அடிப்படைக் காரணம்

உலகளாவிய கட்டாயம்:

  • இச்சட்டம் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் இருந்து பெறப்பட்ட வருவாயை, மோசடி செய்வதை எதிர்த்து, சர்வதேச மாநாடுகளுக்கு ஏற்ப இயற்றப் பட்டது.
  • இது சட்டவிரோத நிதிகளைத் தடுப்பதற்கும், நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்குமான உலகளாவிய முயற்சியைப் பிரதிபலிக்கிறது.

நிதியியல் செயற்படைப் பிரிவு உருவாக்கம்:

  • நிதியியல் செயற்படைப் பிரிவின் 1989 உருவாக்கத்தைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற சட்ட நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன, நிதி நிலைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உலகளாவிய பணமோசடிக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டது.

ஐநா பொதுச் சபை தீர்மானம்:

  • 1990 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபை தீர்மானம், போதைப்பொருள், பணமோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டத்தை வலியுறுத்தியது, இது இந்தியாவின் பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு உந்துதலாக இருந்தது.
  • இது சட்டவிரோத நிதிப் பரவல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்குத் தீர்வு காண்பதில் சர்வதேச ஒருமித்த கருத்தை எடுத்துக்காட்டுகிறது.

நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள்:

  • நரசிம்மம் குழுவானது குறிப்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தை வடிவமைத்தல், பணமோசடி மீதான நடவடிக்கையை வலியுறுத்தியது.
  • இந்தப் பரிந்துரைகள் நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், நிதி ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் வலுவான நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

உலகளாவியத் தரநிலைகளை கடைபிடித்தல்:

  • பணமோசடி தடுப்புச் சட்டமானது சர்வதேச சட்டத் தரங்களுடன் ஒத்துப் போகிறது, மேலும் இது உலகளாவிய பணமோசடி எதிர்ப்பு முயற்சிகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது.
  • இந்த அர்ப்பணிப்பானது நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், சர்வதேச விதிமுறைகளை நிலை நிறுத்துவதிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது.

சட்டமன்ற ஆணை மற்றும் எல்லை:

  • சட்டப்பிரிவு 253 என்பதின் கீழ் இயற்றப்பட்ட, பணமோசடி தடுப்புச் சட்டமானது, பணமோசடி தொடர்பான உலகளாவிய விதிமுறைகளுடன் ஒத்துப் போவதை உறுதி செய்து, சர்வதேச ஒப்பந்தங்களைச் செயல்படுத்த இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், நிதி அமைப்பு ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை இது அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தீர்ப்பளிக்கும் அதிகாரம்

மத்திய அரசின் நியமனம்:

  • மத்திய அரசானது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்பாடுகளை நிறைவேற்ற, அதிகாரம் பெற்ற தீர்ப்பாயத்தை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

ஆணையத்தின் அமைப்பு:

  • பின்வருவனவற்றை உள்ளடக்கிய ஒரு அமைப்பினைக் கொண்டது:
  • ஒரு தலைவர்.
  • இரண்டு கூடுதல் உறுப்பினர்கள், அவர்களில் ஒருவர் சட்டம், நிர்வாகம், நிதி அல்லது கணக்கியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

உறுப்பினர் தகுதிகள்:

  • சட்ட நிபுணத்துவம் பெற்ற நபர்கள் பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்தால் உறுப்பினர்களாக பணியாற்றலாம்:
  • மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்வதற்கு ஏற்ற தகுதிகளைப் பெற்றிருப்பவர்கள்.
  • தர அளவு I பதவியை வகிக்கும் இந்திய சட்டச் சேவையின் முன்னாள் உறுப்பினர்.

அதிகார வரம்பு:

  • தீர்ப்பளிக்கும் அதிகாரத்தின் அமைப்பானது புது தில்லி மற்றும் மத்திய அரசு மற்றும் தலைவரால் நியமிக்கப் பட்ட பிற இடங்களில் செயல்படுகிறது.

தீர்ப்பளிக்கும் அதிகாரியின் பொறுப்புகள்:

  • சந்தேகத்திற்கிடமான பணமோசடி வழக்குகளில் 180 நாட்களுக்குள் அமலாக்க இயக்குநரகம் (ED) வழங்கிய தற்காலிக இணைப்பு உத்தரவுகளை உறுதிப்படுத்துவதாகும்.
  • குற்றத்தின் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்களைச் சட்டத்திற்கு உட்பட்டு முறையாக கையாளுவதை உறுதி செய்கிறது.

உறுதிப்படுத்தம் செயல்முறை:

  • அமலாக்க இயக்குநரகமானது உறுதி செய்யப்பட்டவுடன் இணைப்பு உத்தரவு, சொத்துக்களை கையகப்படுத்த அனுமதிக்கிறது.
  • தீர்ப்பளிக்கும் அதிகாரமானது பறிமுதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் வரை குற்றம் சாட்டப் பட்டவர் சொத்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான நடவடிக்கைகள்:

  • மேல்முறையீடு செய்வதற்கான உரிமை: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் 45 நாட்களுக்குள் உறுதிப்படுத்தல் ஆணையை சவால் செய்கிறது.
  • மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் மேல்முறையீடு: மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமானது அதன் உத்தரவை உறுதி செய்தால், குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

சொத்து நிலை:

  • விசாரணை முடியும் வரை உரிமையாளரால் சொத்தை அணுக முடியாது.
  • குடியிருப்புச் சொத்தைப் பொறுத்தவரை, குற்றம் உறுதி செய்யப்பட்டவுடன் உரிமையாளர் வெளியேறிய பிறகு அதனை அமலாக்க இயக்குநரகம் உடைமையாக்குகிறது.

குற்றத்தின் வெளிப்பாடு:

  • விசாரணை நீதிமன்றம் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பறிமுதல் செய்யும் உரிமையை மத்திய அரசுக்கு மாற்ற உத்தரவிடலாம்.
  • பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கான சமீபத்தியத் திருத்தங்கள்: ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்துவதாகும்.

திருத்தங்களின் மீள்பார்வை

தொழில்முறை நிறுவனங்களைச் சேர்த்தல்:

  • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) சமீபத்தியத் திருத்தங்கள் அதன் நோக்கத்தை விரிவுபடுத்துகின்றன.
  • இவர்களில் பட்டயக் கணக்காளர்கள், நிறுவனச் செயலாளர்கள் மற்றும் செலவு மற்றும் பணிக் கணக்காளர்கள் ஆகியோருக்குப் பயிற்சி அளிப்பதும் இதில் அடங்குகிறது.
  • இந்த விரிவாக்கம், குறிப்பாக அரசு சாரா நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தும் வழிமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிதி நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள் அல்லது இடைத்தரகர்கள் இந்த நிறுவனங்களை மேற்பார்வையிடுகின்றனர்.

அரசியல் ரீதியாக வெளிப்படும் நபர்கள் (PEPs):

  • இந்தத் திருத்தங்கள் குறிப்பிடத்தக்க வகையில், அரசியல் ரீதியாக வெளிப்படும் தனிநபர்கள் பற்றிய தெளிவான வரையறையை உள்ளடக்கியது, மேலும் இது வெளிநாட்டு நாடுகளால் குறிப்பிடத் தக்க பொதுப் பங்களிப்பு அளிக்கும் நபர்களை உள்ளடக்கியது.
  • இந்த வரையறையில் மாநிலங்கள் அல்லது அரசாங்கங்களின் தலைவர்கள், மூத்த அரசியல்வாதிகள், அரசாங்கம், நீதித்துறை அல்லது இராணுவ அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மிக்க உறுப்பினர்கள் உள்ளனர்.

அறிக்கையிடல் நிறுவனங்களின் விரிவாக்கம்:

  • நிதி அமைச்சகத்தின் வங்கி அல்லாத நிறுவனங்களின் பரந்த அறிக்கையிடலை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சியானது இதன் ஒரு முக்கியமான படியாகும்.
  • பணமோசடிச் சட்டத்தின் கீழ், ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் அடையாளங்களைச் சரி பார்க்க 22 நிதி நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, இதன் மூலம் அதன் கண்காணிப்பு கட்டமைப்பை இது வலுப்படுத்துகிறது.

முன்மொழியப்பட்ட ஆதார் அங்கீகார நீட்டிப்பு:

  • கூடுதலாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை நீட்டிக்க முன்மொழிந்துள்ளது.
  • இந்தத் திட்டம், பரந்த அளவிலான தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் அங்கீகாரத்தை நடத்துவதற்கான அதிகாரத்தை வழங்குவதைப் பரிந்துரைக்கிறது, இதனால் டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பின் பயன்பாட்டை இது விரிவுபடுத்துகிறது.

குறிகோள்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களுடன் சீரமைப்பு:

  • உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள் விதிமுறைகள் / பணமோசடி எதிர்ப்பு தரநிலைகள் குறித்த சீரமைப்பு 2008 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையுடன் மேற் கொள்ளப் பட்டது.
  • இதன் நோக்கம் ஒழுங்குமுறைக் கட்டமைப்பில் நிலைத்தன்மை மற்றும் ஒத்திசைவை உறுதி செய்வதாகும்.
  • நிதியியல் செயற்படைப் பிரிவு விதிமுறைகளுக்கு ஏற்ப அரசியல் ரீதியாக வெளிப்படும் நபர்களை (PEPs) வரையறுப்பதும் இதில் அடங்குகிறது.
  • மேலும் இது சர்வதேச இணக்கத்தை மேம்படுத்துகிறது.

நிதியியல் செயற்படைப் பிரிவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல்:

  • நிதியியல் செயற்படைப் பிரிவானது, பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதியளிப்பு தரநிலைகளில் மதிப்பீடுகளை கடைபிடிப்பது கட்டாயமாகும்.
  • மேலும் சர்வதேச அளவுகோல்களுடன் இணங்குவதும் மிக முக்கியமானதாகும்.
  • இதில் திருத்தங்களானது நிதியியல் செயற்படைப் பிரிவுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
  • இந்த முயற்சியானது, உலகளாவிய நிதிச் சூழல் அமைப்பில் நாட்டின் நிலையை உயர்த்துகிறது.

மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல்:

  • இவை திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிக்கையிடல் வழிமுறைகளை மேம்படுத்துகின்றன.
  • இது பணமோசடி எதிர்ப்பு முயற்சிகளின் ஒட்டுமொத்த செயல்திறனை வலுப்படுத்தவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெருநிறுவன ஆளுகை தரநிலைகளின் உயர்வு:

  • பணமோசடி சட்டத்தில் சமீபத்திய திருத்தங்கள் மையத்தின் ஒருங்கிணைந்த முயற்சியைக் குறிக்கின்றன.
  • இது பெருநிறுவன நிர்வாகத் தரத்தை உயர்த்துவது மற்றும் நிதி ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகும்.
  • இது கணக்காளர்களுக்கான அறிக்கையிடல் நெறிமுறைகள் மற்றும் நிறுவனங்களுக்கான வெளிப்பாட்டு விதிமுறைகளை மேம்படுத்துவதாகும்.
  • திருத்தங்களானது வெளிப்படுத்தப்படாத செல்வம் உருவாக்குவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் நிதி திருப்பதைத் தடுக்கின்றன, புனைவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளைத் தடுக்கின்றன மற்றும் மோசடி அபாயங்களைக் குறைக்கின்றன.
  • இந்த முயற்சிகளானது நிதித்துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நம்பிக்கையை வளர்க்கின்றன.
  • பொருளாதார நிலைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் பரந்த இலக்குகளுக்கு பங்களிப்பு செய்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்