TNPSC Thervupettagam

பாராலிம்பிக் வரலாறு மற்றும் சமீபத்தியப் பாராலிம்பிக்கில் இந்தியாவின் செயல்திறன்

September 11 , 2024 77 days 287 0

பாராலிம்பிக் வரலாறு மற்றும் சமீபத்தியப் பாராலிம்பிக்கில் இந்தியாவின் செயல்திறன்

(For English version to this please click here)

பாராலிம்பிக் விளையாட்டுகளின் வரலாறு

  • தோற்றம் மற்றும் ஆரம்ப காலத் தொடக்கம்
  • 1948: சர் லுட்விக் குட்மேன் என்பவர் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஸ்டோக் மாண்டேவில் மருத்துவமனையில் தொடங்கி, பாராலிம்பிக் இயக்கத்தைத் தொடங்கினார்.

ஆரம்ப கால சர்வதேச விரிவாக்கம்

  • 1952: முதல் சர்வதேச விளையாட்டு ஸ்டோக் மாண்டேவில் நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் அணிகளுடன் நடைபெற்றது.
  • 1954: பிறகு இது 14 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
  • 1955: நான்காவது பாராலிம்பிக் விளையாட்டு 18 நாடுகளில் இருந்து, சுமார் 200 விளையாட்டு வீரர்களுடன் வளர்ந்தது.

பாராலிம்பிக் விளையாட்டுகளின் உருவாக்கம்

  • 1960: முதல் அதிகாரப்பூர்வ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளானது, ரோமில் எட்டு விளையாட்டுகளில் பங்கெடுத்த 23 நாடுகளைச் சேர்ந்த 400 விளையாட்டு வீரர்களுடன் நடைபெற்றது.

  • 1964: டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் பாரா பவர் லிப்டிங் மற்றும் சக்கர நாற்காலி பந்தயத்தை அறிமுகப்படுத்தியது.
  • 1968: டெல் அவிவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 750 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்பதோடு அப்போட்டி பெண்கள் சக்கர நாற்காலி கூடைப் பந்தாட்டத்தைக் கொண்டிருந்தது.
  • 1972: ஹைடெல்பெர்க்கில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு சார்ந்த துணைக் குழுக்களை உள்ளடக்கி இருந்தது.
  • 1976: டொரோண்டோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டி, உடல் உறுப்புகள் மற்றும் பார்வைக் குறைபாடுகளுடன் இருக்கும் விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்தது; ஸ்வீடனின் ஒர்ன்ஸ்கோல்ட்ஸ்விக் நகரில் முதல் குளிர்காலப் பாராலிம்பிக் போட்டி நடைபெற்றது.

வளர்ச்சி மற்றும் மேம்பாடு

  • 1980: ஆர்ன்ஹெம் போட்டி பெருமூளை வாதம் கொண்ட விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்ததோடு அவர்களுக்கென பிரத்தியேகமாக அமர்ந்தபடி விளையாடக் கூடிய கைப்பந்து விளையாட்டுப் போட்டியையும் அறிமுகம் செய்தது.
  • 1984: நியூயார்க் மற்றும் ஸ்டோக் மாண்டெவில்லில் நடைபெற்ற பாராலிம்பிக்கில், 45 நாடுகளைச் சேர்ந்த 2,900 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் என்ற நிலையில்; விளையாட்டுகளின் வகைப்பாடு அமைப்புகள் மாற்றியமைக்கப் பட்டன.
  • 1988: சியோல் நகரம் ஒலிம்பிக் போட்டிகளுடன், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியது; இதில் முஸ்தபா படிட் மற்றும் டென்னிஸ் ஓஹ்லர் ஆகியோரின் பங்கெடுப்புகள் குறிப்பிடத் தக்கவையாக இருந்தன.
  • 1989: சர்வதேச பாராலிம்பிக் குழு (IPC) நிறுவப்பட்டது.

நவீன யுகம் மற்றும் திருப்புமுனைகள்

  • 1992: பிரான்சில் குளிர் காலப் பாராலிம்பிக் நடைபெற்றது; பார்சிலோனாவில் நடந்த கோடை கால பாராலிம்பிக் போட்டி சக்கர நாற்காலி டென்னிசை அறிமுகப் படுத்தியது.
  • 1996: அட்லாண்டாவில் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்; இந்த நிகழ்வில் 104 நாடுகளில் இருந்து 3,259 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

  • 2000: சிட்னியில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 3,879 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்; மேலும் புதிய நிகழ்வுகளில் பெண்களுக்கான பாரா பவர் லிஃப்டிங் மற்றும் சக்கர நாற்காலி ரக்பி ஆகியனவும் சேர்க்கப் பட்டன.
  • 2001: இந்த ஆண்டில் ஒலிம்பிக்கிற்குப் பிறகு உடனடியாக அதே மைதானங்களில் பாராலிம்பிக் நடைபெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 2004: ஏதென்ஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டி அஜிடோஸ் சின்னத்தை அறிமுகப் படுத்தியது மற்றும் 3,808 விளையாட்டு வீரர்களைப் பதிவு செய்து ஊடகங்களில் புதியதொரு சாதனையையும் படைத்தது.

  • 2008: பெய்ஜிங்கில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 3,951 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்பதோடு அப்போட்டி பாரா ரோயிங் விளையாட்டினையும் தன் நிகழ்வில் சேர்த்த; நிலையில் அதற்கு உலகளாவியப் பார்வையாளர்கள் 3.8 பில்லியனாக இருந்தனர்.
  • 2012: லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 4,237 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
  • 2016: ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டி பாரா கேனோயிங் மற்றும் பாரா டிரையத்லான் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தியது; இதில் 160 நாடுகளைச் சேர்ந்த 4,328 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
  • 2021: டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டுகளில் பாரா பேட்மிண்டன் மற்றும் பாரா டேக்வாண்டோ ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் பங்கேற்பு மற்றும் சாதனைகள்

  • பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஈடுபாடு என்பது அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத் தக்க சாதனைகளால் குறிக்கப்பட்டுள்ளது.
  • 1968 இல் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இந்தியா அறிமுகமானதில் இருந்து, 1976 மற்றும் 1980 விளையாட்டுகளைத் தவிர்த்து, அனைத்து பாராலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் அறிமுகம் மற்றும் ஆரம்ப காலக் கட்டங்கள்

  • 1968 டெல் அவிவ் பாராலிம்பிக்ஸ்
  • 1968 ஆம் ஆண்டு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் பங்கேற்றது.
  • எட்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 10 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
  • இப்போட்டியில் பதக்கங்கள் எதுவும் வெல்லப் படவில்லை என்றாலும், இது பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

  • 1972 ஹைடெல்பெர்க் பாராலிம்பிக்ஸ்
  • 1972 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஹைடெல்பெர்க் விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது முதல் பாராலிம்பிக் வெற்றியைப் பெற்றது.
  • முரளிகாந்த் பெட்கர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​நீச்சல் போட்டியில் 37.331 வினாடிகளில் இலக்கைக் கடந்து உலக சாதனையைப் படைத்தார்.
  • இந்தச் சாதனையுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 24வது இடத்தைப் பிடித்தது.

  • 1984 பாராலிம்பிக்ஸ்
  • 1976 மற்றும் 1980 ஆண்டின் போட்டிகளில் பங்கேற்காத பிறகு, 1984 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியா பாராலிம்பிக் விளையாட்டிற்குத் திரும்பியது.
  • இந்தியா நான்கு பதக்கங்களை வென்றது: இதில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றது.
  • பீம்ராவ் கேசர்கர் மற்றும் ஜோகிந்தர் சிங் பேடி ஆகியோர் முறையே, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் L6 மற்றும் ஆண்கள் குண்டு எறிதல் L6 ஆகிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
  • கூடுதலாக, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் L6 மற்றும் ஆடவர் வட்டு எறிதல் L6 ஆகியவற்றில் இந்தியா வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • 2004 ஏதென்ஸ் பாராலிம்பிக்ஸ்
  • இந்தியாவின் வெற்றியானது 2004 ஆம் ஆண்டின் ஏதென்ஸ் விளையாட்டுப் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை உள்ளடக்கியது.
  • ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F44 / 46 போட்டியில் தேவேந்திர ஜஜாரியா தங்கமும், ஆடவர் பவர் லிஃப்டிங்கில் ராஜேந்திர சிங் ரஹேலு வெண்கலமும் வென்றனர்.

மாற்றத்தின் சகாப்தம் (2012-2020)

  • 2012 லண்டன் பாராலிம்பிக்ஸ்
  • இந்தியா 2012 லண்டன் பாராலிம்பிக்ஸில், ஆடவர் உயரம் தாண்டுதல் F42 பிரிவில் கிரிஷா என் கவுடா மூலம் தனது ஒரே வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
  • 2016 ரியோ பாராலிம்பிக்ஸ்
  • 2016 ரியோ பாராலிம்பிக்ஸ் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இந்திய நாடு இதில் நான்கு பதக்கங்களை வென்றது.
  • ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் F42 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கமும், அதே போட்டியில் வருண் சிங் பதி வெண்கலமும் வென்றனர்.
  • ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 போட்டியில் தேவேந்திர ஜஜாரியா தங்கமும், பெண்களுக்கான ஷாட் புட் F53 பிரிவில் தீபா மாலிக் வெள்ளியும் வென்றனர்.

2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ்

  • இந்தியா 2020 ஆம் ஆண்டின் டோக்கியோ பாராலிம்பிக்ஸில், மொத்தம் 19 பதக்கங்களை வென்ற நிலையில் தனது அதிகபட்ச அளவிலான பதக்க எண்ணிக்கையை எட்டியது.
  • உலக அரங்கில் இந்தியப் பாரா-தடகள வீரர்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஈர்க்கக் கூடிய சாதனையினை அது படைத்தது.

டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸ் மீள்பார்வை

  • நடைபெற்ற இடம்: டோக்கியோ, ஜப்பான்
  • தேதிகள்: ஆகஸ்ட் 24, 2021 முதல் செப்டம்பர் 5, 2021 வரை
  • குறிப்பு: முதலில் 2020 ஆம் ஆண்டில் நடைபெற திட்டமிடப்பட்டது ஆனால் பின்னர் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக விளையாட்டுகள் 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப் பட்டன.

  • சின்னம்: சோமிட்டி
  • சில சோமிட்டியின் வடிவமைப்பு என்பது பாரம்பரிய ஜப்பானியக் கூறுகளை நவீன, மாறுபடக் கூடிய தோற்றத்துடன் கலக்கிறது என்பதோடு இது நவீனப் பாரம்பரியம் மற்றும் புதுமை ஆகிய இரண்டையும் குறிக்கிறது.

குறிக்கோள்: "உணர்ச்சியால் ஒன்றுபட்டது"

  • பொருள்: "உணர்ச்சியால் ஒன்றுபட்டது" என்ற குறிக்கோள், பகிரப்பட்ட அனுபவங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டின் ஆற்றலை இதன் பொருளானது குறிக்கிறது.
  • மேலும் இது பல்வேறு பின்னணியில் உள்ள மக்களை இணைப்பதில் பாராலிம்பிக்ஸின் பங்கை வலியுறுத்துவதோடு மனித சாதனைகள் மற்றும் போட்டியின் உணர்வைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்ட உலகளாவிய சமூகத்தையும் இது வளர்க்கிறது.

  • இந்த விளையாட்டுப் போட்டிகளில் 22 விளையாட்டுகளில் 539 பதக்க நிகழ்வுகள் இடம் பெற்றன.
  • இதில் குறிப்பிடத்தக்க வகையில், பேட்மிண்டன் மற்றும் டேக்வாண்டோ போட்டியின் தொடக்கம் ஆகியன பாராலிம்பிக் போட்டியில் கால்பந்து 7-எ-சைட் மற்றும் படகோட்டம் ஆகியவற்றைப் பதிலீடு செய்தது.
  • இந்தப் பாராலிம்பிக்ஸ் போட்டியின் பதக்கப் பட்டியலில் சீனா 96 தங்கப் பதக்கங்கள் மற்றும் மொத்தம் 207 பதக்கங்களைப் பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்தது.
  • கிரேட் பிரிட்டன் நாடு 41 தங்கப் பதக்கங்களையும், 124 மொத்தப் பதக்கங்களையும் வென்று ஒன்பதாவது முறையாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • அமெரிக்கா 37 தங்கப் பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது என்பதோடு இது 2008 ஆம் ஆண்டின் விளையாட்டுகளுக்குப் பிறகு அதன் சிறந்த ஆட்டமாக இருந்தது மற்றும் மொத்தமாக அது 104 பதக்கங்களை வென்றது.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் பதக்கம் வென்றவர்களின் பட்டியல்:

  • தங்கப் பதக்கங்கள்:
  • அவனி லெகாரா - பெண்கள் R2 10 மீட்டர் ஏர் ரைபிள் நிலை SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • சுமித் ஆன்டில் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 (தடகளம்)
  • மணீஷ் நர்வால் - கலப்புப் பிரிவில் P4 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • பிரமோத் பகத் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு SL3 (பேட்மிண்டன்)
  • கிருஷ்ணா நாகர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு SH6 (பேட்மிண்டன்)
  • வெள்ளிப் பதக்கங்கள்:
  • பவினா படேல் - பெண்கள் தனிநபர் பிரிவு 4 (டேபிள் டென்னிஸ்)
  • நிஷாத் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் T47 (தடகளம்)
  • யோகேஷ் கதுனியா - ஆண்கள் வட்டு எறிதல் F56 (தடகளம்)
  • தேவேந்திர ஜஜாரியா - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 (தடகளம்)
  • மாரியப்பன் தங்கவேலு - ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்)
  • பிரவீன் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 (தடகளம்)
  • சிங்ராஜ் அதானா - கலப்பு P4 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • சுஹாஸ் லலினகெரே யதிராஜ் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு SL4 (பேட்மிண்டன்)
  • வெண்கலப் பதக்கங்கள்:
  • சுந்தர் சிங் குர்ஜார் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 (தடகளம்)
  • சிங்ராஜ் அதானா - ஆண்கள் P1 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • ஷரத் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்)
  • அவனி லெகாரா - பெண்கள் R8 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் 3 நிலைகள் SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • ஹர்விந்தர் சிங் - ஆண்கள் தனிநபர் ரிகர்வ் ஓபன் (வில் வித்தை)
  • மனோஜ் சர்க்கார் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு SL3 (பேட்மிண்டன்)

பாராலிம்பிக்ஸில் இந்தியா: பாரிஸ் 2024 vs டோக்கியோ 2020

  • 2020 ஆம் ஆண்டின் டோக்கியோ போட்டிகளுடன் ஒப்பிடச் செய்யும் போது 2024 ஆம் ஆண்டின் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் செயல்திறன் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து உள்ளது.
  • இந்தியக் குழு மொத்தம் 29 பதக்கங்களைப் பாரிஸிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து உள்ளது என்பதோடு டோக்கியோவிலிருந்து 19 பதக்கங்கள் என்ற தனது முந்தைய சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

மொத்தப் பதக்கங்கள் எண்ணிக்கை

  • பாரிஸ் 2024: 29 பதக்கங்கள் (7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம்)
  • டோக்கியோ 2020: 19 பதக்கங்கள் (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்)

2024 பாராலிம்பிக் விளையாட்டு:

  • நடைபெற்ற இடம்: பாரிஸ், பிரான்ஸ்
  • தேதிகள்: ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8, 2024 வரை
  • பதிப்பு: இது 17வது கோடைக் கால பாராலிம்பிக் விளையாட்டு ஆகும்.
  • குறிக்கோள்: கேம்ஸ் வைட் ஓபன்
  • சின்னம்: பிரான்சில் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் சின்னமான ஃபிரிஜியன் தொப்பியால் ஈர்க்கப் பட்ட குழு குறித்த  சின்னத்திற்கு "ஃப்ரிஜ்" என்று பெயரிடப் பட்டது.
  • ஃபிரிஜ் என்பது பாராலிம்பிக்கைக் குறிக்கும் உள்ளடக்கம், சுதந்திரம் மற்றும் அதிகாரம் அளிக்கும் உணர்வை உள்ளடக்கியதாகும்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடியை ஏந்தியவர்கள்

  • தொடக்க விழாவில் பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் சுமித் அன்டில் ஆகியோர் இந்தியக் கொடியினை ஏந்தியவர்களாக அணியை வழி நடத்தினார்கள்.
  • நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் ஓட்டப் பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் ஆகியோர் நாட்டின் கொடியினை ஏந்தியவர்களாக அணியை வழி நடத்தினார்கள்.

பதக்க நிலைகள் மற்றும் குறிப்பிடத் தக்கச் சாதனைகள்

  • பாராலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் சீனா 94 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 221 பதக்கங்களைப் பெற்று தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
  • கிரேட் பிரிட்டன் 49 தங்கப் பதக்கங்கள் உட்பட 124 மொத்தப் பதக்கங்களுடன் பத்தாவது முறையாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அமெரிக்கா 36 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 105 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஒரு வரலாற்றுத் தருணமாக, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் அகதிகளுக்கான பாராலிம்பிக் அணி ஆகியவை தங்களின் முதல் பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளன.
  • போட்டியை நடத்தும் நாடான பிரான்ஸ் 19 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 75 பதக்கங்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டின் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வென்றவர்களின் பட்டியல்:

  • தங்கப் பதக்கங்கள்:
  • அவனி லெகாரா - பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் நிலை SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • நிதேஷ் குமார் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு SL3 (பேட்மிண்டன்)
  • சுமித் ஆன்டில் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 (தடகளம்)
  • ஹர்விந்தர் சிங் - ஆண்கள் தனிநபர் ரிகர்வ் (வில்வித்தை)
  • தரம்பிர் - ஆண்கள் அணி ரீதியில் எறிதல் F51 (தடகளம்)
  • பிரவீன் குமார் - ஆண்கள் உயரம் தாண்டுதல் T64 (தடகளம்)
  • நவ்தீப் சிங் - ஆண்கள் ஈட்டி எறிதல் F41 (தடகளம்)
  • வெள்ளிப் பதக்கங்கள்:
  • மணீஷ் நர்வால் - ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • நிஷாத் குமார் - ஆண்கள் உயரம் தாண்டுதல் T47 (தடகளம்)
  • யோகேஷ் கதுனியா - ஆண்கள் வட்டு எறிதல் F56 (தடகளம்)
  • துளசிமதி முருகேசன் - பெண்கள் ஒற்றையர் பிரிவு SU5 (பேட்மிண்டன்)
  • சுஹாஸ் யதிராஜ் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு SL4 (பேட்மிண்டன்)
  • அஜீத் சிங் - ஆண்கள் ஈட்டி F46 (தடகளம்)
  • சச்சின் கிலாரி - ஆண்கள் குண்டு எறிதல் F46 (தடகளம்)
  • பிரணவ் சூர்மா - ஆண்கள் அணி ரீதியில் எறிதல் F51 (தடகளம்)
  • வெண்கலப் பதக்கங்கள்:
  • மோனா அகர்வால் - பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் நிலை SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • ப்ரீத்தி பால் - பெண்கள் 100 மீ T35 (தடகளம்)
  • ரூபினா பிரான்சிஸ் - பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 (துப்பாக்கி சுடுதல்)
  • ப்ரீத்தி பால் - பெண்கள் 200 மீ T35 (தடகளம்)
  • நித்யா ஸ்ரீ சிவன் - பெண்கள் ஒற்றையர் பிரிவு SH6 (பேட்மிண்டன்)
  • தீப்தி ஜீவன்ஜி - பெண்கள் 400மீ T20 (தடகளம்)
  • சுந்தர் சிங் குர்ஜார் - ஆண்கள் ஈட்டி F46 (தடகளம்)
  • மாரியப்பன் தங்கவேலு - ஆண்கள் உயரம் தாண்டுதல் T63 (தடகளம்)
  • கபில் பர்மர் - ஆண்கள் ஜூடோ - 60 கிலோ (ஜூடோ)
  • ஹோகடோ செமா - ஆண்கள் குண்டு எறிதல் F57 (தடகளம்)
  • சிம்ரன் சிங் - பெண்கள் 200 மீ T12 (தடகளம்)
  • ராகேஷ் குமார் / ஷீத்தல் தேவி - கலப்பு கூட்டு அணி ஓபன் (வில்வித்தை)
  • மனிஷா ராமதாஸ் - பெண்கள் ஒற்றையர் SU5 (பேட்மிண்டன்)

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்